இருபத்திஇரண்டுவயதில்இவனுடன்வேலைபார்த்துக் கொண்டிருந்த சுரேந்திர நாத் மறு நாள் நடக்க இருக்கிற திருமணத்திற்கு முதல் நாள் இரவே கூட்டிக் கொண்டு போயிருந்தான்.
மண்டபத்தில்அப்படிஒன்றும்கூட்டமில்லை.இவர்கள்சென்றநேரம்எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
வெளியூரில் இருந்து வந்தவர்கள்,உள்ளூர்க்கார்கள் என/மண்டபத்தில் தங்க வேண்டியவர்களும் வீட்டிற்கு போய் விட்டு வர வேண்டியவர்களுமாய் அவரவரது பாடுகளைப்பேசிக்கொண்டிருந்தார்கள்,
இவனுக்குத்தான் சென்றதும் சாப்பிடஒருமாதிரியாய் இருந்தது.நண்பன்தான் அழைத்துக்கொண்டு போனான், வா சாப்பிடப்போகலாம் என.
இல்லைஇப்போதைக்கு சாப்பாடு வேண்டாம்,நீ வேண்டுமானால் சாப்பிடு நான் அப்புறமாய் சாப்பிட்டுக்கொள்கிறேன் என்றா ன்.சரி வா எனக்குத் துணையாய் எனது பக்கத்தில் உட்கார்ந்து கொள் சாப்பிட வேண்டாம் நீ.என்ற நண்பனது பேச்சை ஏற்று அவனது பக்கத்தில் போய் அமர்ந்த போது லேசாய் பசித்தது போல் இருந்தது.சரி சாப்பிட்டுக்கொள்வோம் என நண்பனுடன் இவனும் சேர்ந்து அமர்ந்து கொண்டான் சாப்பிட/
சாப்பிடும் போதே சொன்னான் நண்பன்,சாப்பிட்டு விட்டு உனக்கு சின்னதாய் ஒரு வேலை இருக்கிறது,மண்டபத்தில் கல்யாண மேடையை மட்டுமாய் அலங்கரிக்க வேண்டும் என விரும்புகிறார்கள் கல்யாணவீட்டார்கள், உனக்குத் தான் தெரியுமே அலங்கார வேலைகள் எல்லாம்,அந்த நம்பிக்கையில் கல்யாண வீட்டாரிடம்சொல்லிவிட்டேன்நான் அலங்காரம் பண்ணித் தருகி றேன்என,பண்ணிவிடலாம்தானேஇப்பொழுது,,,,,,,எனக்கேட்டநண்பனைஏறிட்ட வனாயும்உள்ளுக்குள்ளாய்சிரித்துக்கொண்டும்இதற்காகத்தானாகூட்டிவந்தாய் தெரிந்தவர் கல்யாணத்திற்கு செல்வோம் எனச்சொல்லிஎன நினைத்ததுமாய்/
நினைத்த தை நண்பனிடம் சொல்லியும் விட்டான்.அதற்கு சமாளித்துச்சிரித்த நண்பன் இல்லை அப்படியெல்லாம்,அலங்காரம் பண்ண வருவதாய் இருந்த வர் வரவில்லையாம்,என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தார்கள் இன்று காலை யில் நாந்தான் பார்த்துக்கொள்கிறேன் நான்,என்னிடம் ஒரு பையன் இருக்கி றேன்,
கூட்டிவந்துவிடுகிறே என கூட்டி வந்தேன் உன்னை என்றான்.சரி வந்தாயிற்று சாப்பிட்டும் ஆயிற்று.கூட்டிக்கொண்டு வந்தவனுக்கு கொடுக்கிற மரியாதை யாய் இந்த வேலையை செய்யா விட்டாலும் கூட தனக்கு தெரிந்து கொள்ள வேண்டும் என ஆசையில் சாப்பிட்டுவிட்டுப்போய் அலங்காரத்தை செய்து முடித்துவிட்டுத்தான்வந்தான்,வேலை செய்ய இவனுக்குப்பிடிக்கும் அதற்காக வேலை என்கிற பெயரில் ஏமாந்து போக இவன் தயாராய் இல்லை.
ஆனால் பெருமளவிலாய் இவன் வேலை பார்க்கிறேன் என்கிற ஏமாற்றத்தான் பட்டிருக்கிறான்.அதுபோலானபொழுதுகளில்இவன்பெருமளவிலாய்சொல்லிக் கொள்வதெல்லாம்போகட்டும்அவர்கள்எங்காவதுயாராலாவதுஏமாறுவார்கள்.
வேலை தெரியாதவர்களும் வேலையைப்பற்றி அறியாதவர்களுமாய் அதைப் பற்றிய கிஞ்சித்துக்கூட பிரஞ்னை இல்லாதவர்கள் வேலை வாங்குகிற இடத்தில் இருப்பது போல் இருக்கிறது உனது இருப்பு இன்று இந்த திருமண மண்டபத்தில் என நண்பனிடம் சொன்ன போது அவன் அப்படி ஒன்றும் பெரியதாக கவலை பட்டுக்கொண்டதாய் தெரியவில்லை.
இவன் திருமணம் நடக்கிற மேடையில் அலங்காரம் செய்து கொண்டிருக்க மேடைக்கு க்கீழே நாற்காலியை போட்டு அமர்ந்து கொண்டு கால்மேல் கால் போட்டவனாய்அப்படிச்செய்,இப்படிச்செய்என்றுஉத்தரவிட்டுக்கொண்டிருந்தான் நண்பன்,
இவன் அவன் அருகில் போய் காதருகாய்ச்சொன்னான் என்ன நண்பா நெற்றி யில்ஏதோபுடைப்பாகத்தெரிகிறதேஎன,,,,,,,,,அந்தசொல்லைகேட்ட மறுகணத்தி லிருந்துதிருமணம் முடிகிற மறு நாள் வரை நண்பன் இவனிடம் ஏதும் பேசிக் கொள்ளவில்லை.திருமணம் முடிந்து வரும் போதுதான் கேட்டான்,ஏன் அப் படிச் சொன்னாய் இரவு என.பின் என்ன நண்பா அலங்கார வேலையைப் பற் றி ஒன்றும்தெரியாதநீ கால் மேல் கால் போட்டுக்கொண்டு உத்தரவிட்டு கொண்டி ருந்தது எனக்குப்பிடிக்கவில்லை,ஆதலால்தான் அப்படிச்சொன்னேன் எனச் சங்கடமாய்ச்சிரித்தான் இவன்/அப்படிச்சொன்ன அன்றிலிருந்து அது போலான போலிப்பேச்சுக்களைபேச மாட்டான் நண்பன்,தனது இருபது தாண்டிய வயதில் நடந்த இந்நிகழ்வு ஒவ்வொரு திருமணத்திற்கு செல்லும் போதுமாய் ஞாபகம் வருவது தவிர்க்க இயலாததாகவே/
5 comments:
நெற்றி புடைப்பானவர்கள் நிறைய இருக்கின்றார்கள் நண்பரே
த.ம. 1
ஹா,,,,ஹா,,,ஹா,,/
சில குணங்கள் மாறுவதில்லை...
சிலரின் குணங்கள்..
தம+1
வணகம் திண்டுக்கல் தனபாலன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
Post a Comment