17 Jul 2017

உருக்கொள்ளலின் உரு,,,,,,,

காத்திருப்பின் உருக்கொள்ளல்கள்
எரிச்சலாகவும் கோபமாவும்
சற்றே விரக்தி பெருத்து
காணப்படுகிறதாயும் ஆகிப்போகிறதாயும்/
காத்திருந்தது நண்பனுக் காயும்
காத்திருந்த  இடம் ஆற்றுப்பாலத்தின்
அருகாமையில் எனவுமாய் ஆகிப்போகிறது,
எவ்வளவு நேரம்தான் பேருந்து நிறுத்தத்தில்
நின்று கொண்டு சாலையில் விரைகிற
கனரக மற்றும் இலகுரக வாகனங்களை
வேடிக்கை பார்த்துக்கொண்டும்
சாலையை வெறித்துக்கொண்டுமாய் இருப்பது,,?
சாலை யோர டீக்கடையும்
அதன் எதிர்புற சைக்கிள் ஸ்டாண்டும்
சாலை திருப்பதில் நின்று போகிற பேருந்துகளும்
அதில் ஏறி இறங்குகிற பயணிகளும்
ஏதோ அவசரம் சுமந்து போகிறவர்களாயும்
ஏதாவது ஒரு வேலையை முன் வைத்து
நகர்கிறவர்களாகவும்/
மாலை கறுத்து இரவை அழைத்து வருகிற
நேரமான பின்பும் கூட
மாலை ஐந்து மணிக்கருகாமையாய்
நேரத்தின் தோளில் கை போட்டுக் கொண்டு
மிகச்சரியாக வந்து விடுகிறேன்
எனச்சொன்னவனை இன்னும் காணவில்லை.
காத்திருத்தலின் உருக்கொள்ளல்கள்
எரிச்சலாகவும் சற்றே கோபமாகவும்
விரக்தி பெருத்துக்காணப்படுகிறதாயும்
ஆகிபோகிறதுதான்/

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மை தான்...

Kasthuri Rengan said...

சமயத்தில் காத்திருப்புகள் கொடுமைதான்

கரந்தை ஜெயக்குமார் said...

உண்மைதான் நண்பரே

vimalanperali said...

வணக்கம் சார்,அன்பும் பிரியமும்
விளைந்து கிடக்கிற இதயங்களில்
இருந்து கிடைக்கிற கருத்து ஏற்புடைத்தே
எப்பொழுதும்/

vimalanperali said...

வணக்கம் மது சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/