முகம் பார்க்கும்
கண்ணாடியில்
பட்டுத் தெரிந்த
முகம்
எனது உடல் மற்றும்
எனது மன மொழி
சொல்லிச்செல்கிற
வார்த்தைகளை
பிரதிபிம்பப்படுத்தி
அடையாளம் கட்டிக் காட்டுவதாய்.
மண் கீறி துளிர்த்த
விதைகள்
தளிர்களாய் செடிகளாய்
கொடிகளாய் மரங்களாய்
ஆகுருதி காட்டி
அதனில் பூத்தும்
காய்த்தும் பழுத்துமாய்
காட்டும் பலன்களைப்போன்று
கண்ணாடியில் தெரிகிற
எனது பிம்பத்திலிருந்து
வெளித்தெரிகிறவனாய்
நான் மற்றும் எனது
உடல் மற்றும் மனமொழி,,/
***************************
இங்கே நீங்கள் பெரியவர்களாக
அமர்ந்து கொண்டு
சென்ற நூற்றாண்டின்கனவை கட்டிச்
சுமந்து கொண்டிருப்பதால்உங்களுடனே
அல்லது உங்களுக்கு மத்தியிலோ,
நீங்கள் இருக்கும் இடத்தில்
அமர்ந்து கொண்டோ பேச இயலாது,
ஆகவே மன்னிக்கனும் நீங்கள்,
தயவு செய்து எங்களை தனிமையில் போய்
பேச அனுமதிக்க வேண்டும்/
என்ற இளம் தலைமுறையினரை
ஏறிட்டுப்பார்க்கிறேன் ஆச்சரியம் கலந்து,,,/
***********************
இவனது இடது உள்ளங்காலின் உரு
மறைத்துக்கொள்கிறது.
கால் மேல் கால் போட்டுப்படுத்திருந்தான்.
வலது காலின் மீது இடது கால்.
அப்படிப்போட்டு அலுத்துப்போகிற நேரத்திலும்
வலிக்கிற பொழுதுகளிலும்
இடது காலின் மீது வலது கால்.
படுத்திருந்த பாயின் கோரைகள்
தன் அழகு காட்டியும் உருக்காட்டியுமாய்
விரிந்திருகிற பொழுது
படுத்திருந்த பாயிலிருந்து எழுந்து
ஜன்னலின் நிழல் நோக்கிச் செல்கிறேன்.
செல்லச்செல்லத்தான் தெரிகிறது
நிழல்கள் எப்பொழுதும் நிஜமாகி விடுவதில்லை என/
6 comments:
>>>
ஆகவே மன்னிக்கனும் நீங்கள்,
தயவு செய்து எங்களை தனிமையில் போய்
பேச அனுமதிக்க வேண்டும்/
என்ற இளம் தலைமுறையினரை..<<<
நிதர்சனமாகின்றது..
அருமை..
வணக்கம் துரை செல்வராஜீ சார்,
நன்றியும் அன்பும் கலந்த மனது
வாழ்த்துவதில் பெருமை.
நன்றி வருகைக்கு/
வழக்கம்போல அசத்தல்
அருமை...
வணக்கம் மது சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் முகமது அல்தாப் சார்,
நன்றியும் அன்பும் கலந்த கருத்துக்கு நன்றி.
Post a Comment