30 Aug 2017

கல்யாணச்சோறு,,,,,,,

சாப்பிடக்கூடாதுவயிறுமற்றும்உடல்சரியில்லாததால்எனநினைத்துப் போய் கல்யாணச்சாப்பாடு சாப்பிட்டு வந்த நாளன்றின் காட்சியாயும் சாட்சியாயும் ஆகிப்போகிறான் இவன்,

பெரிதாகஒன்றும் இல்லை உடலுக்கு ,இன்னும் சொல்லப்போனால் வயிருக்கு மட்டுமே பிரச்சனை என அருதியிட்டுச்சொல்லி விடலாம்.

இரவு சாப்பிட்டது செமிக்கவில்லையோ என்னவோ தெரியவில்லை,வாமிட் பீலீங் இருந்து கொண்டே இருக்கிறது எழுந்ததிலிருந்து/

ஏதாவது விசேசம் அல்லது வெளியூர் எனப்போகையில்தான் இதுபோலாய் ஆகிப்போகிறது. உடல்.

சரி சமாளிப்போம்.

பொதுவாகவே கல்யாணவீடுகளில் இவன் சாப்பிடுவது ரொம்பவும் அரிதான விஷயம்/அப்படியே சாப்பிட்டாலும் யாரவது நண்பர்கள் தோழர்கள் உறவுகள் என யாராவது இருக்க வேண்டும்,இவனுடன்/

அப்படி இருக்கிறவர்களில் அட வாங்க போவம் என கைபிடித்து கூட்டிக் கொ ண்டு போகிறவர்களாக அமைந்து போனால் நலம்.

இல்லையென்றால் அவர்களுக்கே தெரியாமல் நைசாக அல்லது ஏதாவது ஒரு காரணம் சொல்லி வந்து விடுவான் வீடு நோக்கி/

இது மட்டுமா,இன்னொரு கொடுமையும் நடக்கிறது சமீப காலமாக.குனிந்த தலை நிமிராமல் கல்யாணத்திற்கு போய் விட்டு மொய்யை மாற்றி எழுதி விட்டு சாப்பிடாமல் வந்து விடுகிற கதையும் நடந்து போகிறது,

போன முகூர்த்தில் ஒரு நாளின் பொழுது சென்ற கல்யாணத்தில் இப்படித் தான் ஆகிப்போனது,

ஒன்பது டூ பத்தரை முகூர்த்தம்.இவன் போனதே கொஞ்சம் தாமதம் காட்டித் தான் போனான்.பணிரெண்டு மணியை நெருக்கித்தான் போனான்,

காலையில்தாமதமாகஎழுந்ததில் பசிக்கவில்லை,இப்பொழுதெல்லாம் காலை சாப்பாடு சாப்பிட்டு ரொம்பவும்தான் நாட்களாகிபோனது.

”கல்யாணவீட்ல போயி பாத்துக்கலாம் அப்பிடியே பசிச்சாலும்” என நினைத்த வனாய் வீட்டை விட்டு கிளம்பியவனின் வைராக்கியம் கல்யாணவீட்டுக்கு போனவுடன் அமந்து போகிறதுதான்.

நல்ல கூட்டம்,அவருடன் அலுவலகத்தில் பணிபுரிந்தவர்களும் இன்னும் பிற நட்புகளும் தோழமைகளுமாய் வந்திருந்ததில் கல்யாணமண்டபம் நிரம்பி வழிந்தது.

அந்த நிரம்பலில் இவனுக்குத்தெரிந்த தோழமைகள் மிகவும் குறைவாகவே/

எதிர்ப்பட்டவருக்கு வணக்கம் சொல்லிவிட்டு மாப்பிள்ளை வீடு மொய் எங்கே என மறக்காமல் கேட்டு எழுதி விட்டு வந்த போதுதான் உறைத்தது,

ஆகா பெண் வீட்டிற்கு எழுதுவதற்குப்பதில் மாப்பிள்ளை வீட்டிற்கு மாற்றி எழுதி விட்டோமே என/

அதனால் என்ன இணையப்போகிற குடும்பங்கள்தானே ,யாருக்குப்போய் சேர்ந் தால் என்ன,,,?என்கிற மன சாமாதானத்துடனும் இவ்வளவு தத்தியாகவும் இவ்வளவு முட்டாளாவும் இருக்கிறோமே இது விஷயத்தில் என்கிற மன வருத்ததுடன் வீட்டிற்கு வந்தான்,

“கல்யாண வீட்டுக்கு போயிட்டு ஹோட்டல்ல சாப்புட்டுவர்ற ஆளு நீங்க ஒருத்தராத்தா இருப்பீங்க,இனிமே இதுக்காகவாவது நான் ஒங்க கூட வரணும் போலயிருக்கு, எல்லாத்துக்கும் ஒண்ணுன்னா நமக்கு ஒண்ணு, எனக்குன்னு வந்து வாச்சிக்கீங்க பாருங்க,

,ஆள்களும் மண்டையும்,,,,,நல்லா வளத்து வச்சிருக்காங்க புள்ளைய ,இந்த லட்சணத்துல என்னைய அங்கன கேட்டாங்க,இங்கன கேட்டாங்கன்னு வாயி காது வரைக்கும் கிழியுது/கேட்டுருந்தா போயிருக்க வேண்டியதுதான, என்ன மோ நாங்க இந்த மகராசந்தான் வேணுமின்னு ஒத்தக்கால்ல நின்னு தவம் இருந்த மாதிரியும் வக்கத்துப்போயி வழியில நின்னு இந்த மகராசன நாங்க தூக்கீட்டு வந்த மாதிரியுமில்ல பேசிறீங்க.என்னமோ போங்க இப்பிடி ஒரு அதிசயம் வாஞ்ச மனுசன் இப்பத்தான் பாக்குறேன் போங்க/

”மொதல்லஒங்கஅம்மா வரட்டும் அவுங்ககிட்ட பேசிக்கிறேன்,இப்பிடி புள்ளை யவளத்துவச்சதுக்கு ஒங்களத்தான் நாலு பேசணுன்னு அவுங்க கூட மல்லுக்கு நின்னாத்தான் சரிக்கு வருவாங்க,,,,,,,,/”இந்த லட்சணத்துல இவுகள அமெரிக்கா வுல இருக்குறவுகளும் லண்டன்ல இருக்குறவுகளும் வந்து மாப்புள பாத்துட்டு போனாகளாம்,

”அப்பிடியே கொமட்டுல நாலு இடி இடிச்சா தெரியும்,இவகள்லாம் அமெரிக்கா வுக்கும் லண்டனுக்கு போயிட்டாலும்,அப்பிடியே கூட போயிருக்கலாம் ,நானா வது நிம்மதியா வேற யெத்துக்கு வாக்கபட்டு போயிருப்பேன்.”

”வேணாம் சாமி நீங்க லண்டனுக்கும் அமெரிக்காவுக்கும் போயிட்டா அப்புறம் இப்பேர் பட்ட அருமையான மாப்புள இந்தியாவுக்கு இல்லாம போன நஷ்டம் வந்து சேந்துரும்,அப்புறம் நாடு நட்டப்பட்டுப்போகும்,நீங்க இங்கேயே இருக்கு றதுதான் நல்லது.” என்கிற மனைவியின் பேச்சிற்கு சின்னவள் அவளுடன் சரி வாயாடுவாள்.

”என்ன நடந்து போச்சின்னு இப்ப சத்தம் போட்டுக்கிட்டு இருக்கீங்க,கல்யாண விட்டுக்கு போயி சாப்புடாம வர்றது பெரிய தப்புன்னு எதும் எழுதி வச்சிரு க்கா என்ன,அவருக்கு புடிக்கலை அவரு சாப்புடல,இல்ல அவருக்கு சாப்புடப் புடிச்சமாதிரி சூழல் இருந்துக்காது வந்துருப்பாரு.இதுல என்ன பெரிசா குத்தம் கண்டு பிடிச்சி அந்த மானிக்கி அவர்ப்போயி தண்டிச்சிக்கிட்டு இருக்கீங்க,” என்பாள்,

“சொல்லுவடிசொல்லுவ நீயும் அவரு கூட சேந்த ஆளு தான,ரெண்டும் சேந்து போன வாரம் ஒரு கல்யாணவீட்டுக்குப் போயிட்டு வயித்தத்தொங்கப் போட் டுட்டு வீட்டுல வந்து வீட்டுல வந்து சாப்புட்டீங்க பாருங்க,அதுலயிருந்தே தெரியுது ஒங்க ரெண்டு பேரு வவுசியும்.அப்பிடியே அப்பனுக்கு புள்ள தப்பாம பொறந்துருக்கு,”என்கிற அவளின் பேச்சிற்கு அப்பனுக்கு புள்ள தப்பாமத்தான் பொறக்கும்,அப்பறம் எப்பிடி,,?என பதில் சொல்கிற மகள் அம்மா சும்மாயிரும் மா அப்பாவப்போட்டு வருத்து எடுக்காத” என்பாள்,

”ஆமா பெரிசா அந்த மானிக்க வறுத்து எடுத்துட்டாங்க,அவரும் அந்த மானிக் க ஒரு ரவுண்டு கருகிப்போனாரு/,போடி அங்கிட்டு ,ஏங் புருசன நான் வருத்தும் எடுப்பேன் தண்ணியில ஊற வச்சி அவிச்சும் எடுப்பேன்,ஒனக்கென்னடி போவாளா அங்கிட்டு,,,என்னமோ பேச வந்துட்டா பெரிசா என்கிற அவளின் பேச்சிற்கு சிரித்துக்கொள்வான் இவன்,

“ம்ஹீம் ஒங்களுக்கு பரிவா பேச வந்தேன் பாருங்க என்னையச்சொல்லணும் மொதல்ல,என தலையில் அடித்துக்கொள்கிற சின்னமகள் யார் பிரச்சனையில தலையிட்டாலும்இடலாமே தவிர இப்பிடி ஈருடல் ஓருயிரா இருக்குற புருசன் பொண்டாட்டிவிவகாரத்துல மட்டும் தலையிடக்கூடாதுன்னு நெனைக்கிறே ன். இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் இனிமேல் புருசன் பொண்டாட்டி இரண்டு பேர் சண்டையிட்டால் பிள்ளைகள் போய் விலக்கிவிடாதீர்கள்,அல்லதுஅதில் தலையிடாதீர்கள்,இல்லையெனில் கண்டு கொள்ளாதீர்கள் என மைக்கில் அறிவிப்பது போல் பொய்யாக பாவனை செய்து ஒரு வெற்று அறிவிப்பைக் கொடுப்பாள்.

”ஏய் என்ன நீயி பெரிய இவளாட்டம் போடி அங்கிட்டு,,,,/ஓன் சோலியப் பாத் துக்கிட்டு ஆமா, ஏங் புருசன நான் சொல்லாம யாரு சொல்லுவா,ஏண்டி அவர நான் வைவேன் அடிப்பேன் கொஞ்சுவேன் ,,என்னவேணாலும் பண்ணுவேன் அதக்கேக்க நீயி யாருடி,ஒழுக்கமா இரு,என்கிற இவனது மனைவியைப் பார் த்து ஆமாமா என்னத்த சொல்லிப்புட்டம் அந்தமானிக்க நாங்க,ஓங் புருசன நீயி வேணா மடியிலேயே முடிஞ்சு வச்சிக்க ,நான் வேணமுன்னு சொல்லல,, வீட்டுல சண்டை சத்தம் போடாம இருங்கன்னுதான் சொல்றோம்”,என்பாள் மகள்,

“மத்தபடி நீயி அவர கக்த்துல தூக்கி வச்சிட்டு சோறு கூடஊட்டு,நாங்க என்ன வேணாமுன்னா சொல்றோம் என அவள் அங்கலாய்த்துக் கொண்டிருக்கும் போதே பெரியவள் வந்து விடுவாள்,

அவள்கல்லூரியில்முதுகலையில்இந்த ஆண்டுமுடிக்கவிடிக்கிறாள், அவளுக் கென கல்லூரியில் ஒரு ஸ்டைல்,ஒரு கூட்டம், ஒரு நடப்பு என இதர இதர வாக வைத்துக்கொள்வாள்.அவளும் அவளைச் சுற்றி இருக்கிற கூட்டமும் அப்படி இருந்த போதும் கூட படிப்பை துளியும் விட்டுக் கொடுக்க மாட்டாள், எல்லாவற்றிலும் நல்ல மார்க் இல்லாவிட்டாலும் கூட நல்லமார்க் என்கிற இலக்கைகொஞ்சமும் விட்டுக்கொடுக்காத பிடிவாதக்காரியாய்த்தான் இருந்தி ருக்கிறாள்.இது நாள்வரை/

“அவள்தான் கேட்டாள் ,என்னப்பா என்ன சொல்றாங்க நம்ம பிரிய அம்மாவும் அப்பாவும்,சும்மா நம்ம முன்னாடி சண்ட போடுற மாதிரி சூ காட்டுவாங்க, ஆமா அதப்பாத்து நீயி ரொம்பத்தான பயந்து போகாத ,,இல்லைன்னா மனசு நெகிழ்ந்து போகாத,இப்பஅம்மா ஏதாவதுஒருசாக்கு வச்சிட்டுஅப்பா மண்டைய உருட்டீருப்பாங்களே, அதெல்லாம் சும்மா ஒரு சின்ன நடிப்பு,காதலிச்சி கல்யா ணம்பண்ணிக்கிட்டஅம்மாஅப்பாவக்கூட நம்பீறலாம்.இவுங்களப்போல கல்யா ணம் பண்ணிக்கிட்டு காதலிக்கிறோம்ன்னு சொல்ற அம்மா அப்பாவ மட்டும் நம்பவேக்கூடாது,அப்பாடி கொஞ்சம், அசந்து ரெண்டு பேர்ல யார்பக்கமாவது சாஞ்சி நின்னமுன்னு வச்சிக்க,அவ்வளவுதான், கொஞ்ச நேரத்துல நம்மள பைத்தியகாரனாக்கிட்டுரெண்டுபேரும்ஒண்ணுசேந்துக்கிட்டுகூடிகும்மியடிச்சி திரிவாங்க,ஆமா பாத்துக்க,,,

“இப்பப்பாருவேன், இதுவரைக்கும் நடந்த நடப்புகளுக்கும் தனக்கும் சம்பந்த மே இல்லைங்குற மாதிரி அப்பா வருவாரு பாரு,,,,என சொல்லி வாய் மூடும் முன்பாக அவர்களின் முன்னாக தோன்றுகிற இவன்,,”யார்ற அது ரெண்டு பேரு,ரெண்டும் ஒண்ணு சேந்துக்கிட்டு ஏங்பொண்டாடிய அரட்டீட்டு திரியி றீங்களாம்லடா,வெளிவட்டாரத்துல இருந்து தகவல் வந்துச்சி.அவ மேல அனா வசியமாஒருசுடுசொல்லுபட்டிச்சிபாத்துக்கங்கஎன்பவராய் வருவான் சிரித்துக் கொண்டே,,இவன்,,,,/

”அப்பிடியா நாங்க ஒண்ணும் சொல்லையேப்பா, இப்ப இங்க நடந்தது எதுவு மே ஒங்களுக்குத்தெரியாதுஇல்ல,,எங்கநெஞ்சையும்நெஞ்சுலஇருக்குறமுடியையும் தொட்டுச்சொல்லுங்கபாப்போம்.உண்மையிலேயேஅம்மாஇந்நேரம்வரைக்கும் ஒங்களப்போட்டுவறுத்துஎடுத்ததுஎதுவுமேஒங்களுக்கு தெரியாது,,,,,? என்கிற பெரியவளின்பேச்சிற்கு அப்பிடியா என்னையவாஇந்நேரம் வரைக்கும் வறுத்து எடுத்துக்கிட்டு இருந்தா,,?எனக்கெங்க தெரியுது ஏதோ காடு வா வாங்குது ,வீடு போ போங்குது .இந்த வயசுல போயி நான் என்னத்தப்பா பொ றத்தியார் பேசுறத ப்போயி கண்டுக்கப்போறேன்,”-இவன்.

”பொறத்தியாரு பேசுறத எல்லாம் கண்டுக்க வேணாம் நீங்க,நம்ம அம்மா பேசுறதக்கூடயா கண்டுக்க மாட்டீங்க,சும்மா ரூட்டக்குடுக்காதீங்கப்பா” என்ற வுடன் சிரித்து விடுவான்.

”என்னைய அவ சொல்லாமா,அவ பேசாம யாருப்பா வந்து பேசப் போறா ஒங்கஅம்மாஒங்களுக்குஅம்மாமட்டுந்தான்.எனக்குஅவ பொண்டாட்டி மட்டும் இல்ல,கிட்டத்தட்ட என்னைய இந்த அளவுக்கு ஒரு ஆளா எல்லாரும் பேசுற அளவுக்குவச்சிருக்கான்னாஅது அவளாலதான்,விருதாவ, குடிகேடியா, கிட்டத் தட்ட ஒரு ரவுடிப் பையலப்போல திரிஞ்ச என்னைய மழையில நனைஞ்சி நிக்கிறகோழிக்குஞ்ச தூக்கீட்டு வந்து தலை துவட்டி விட்டு கம்பீரமா நடமாட விட்டஒரு நல்ல காரியத்த பண்ணுனவ அவ,அவ மட்டும் இல்லைன்னா இந் நேரம் நான் தூர்ந்து போயி செத்துப்போயிருப்பேன்,இல்ல கூடாத சகவாசத் தால குடும்பத்த விட்டு பிரிஞ்சி போயி எங்கிட்டாவது போயி சீரழிஞ்சி நின்னுருப்பேன், சோத்துக்கு வக்கத்துப்போயி/

”நீபொறந்தநேரம் ஆஸ்பத்திரியில இருந்த ஒங்க அம்மாவப்போயிகூட பாக்கப் போகாம ரோட்டுவழி தண்ணியப் போட்டுட்டு சுத்திக்கிட்டு திரிஞ்சேன், அந்தப் பழக்கம் ரெண்டாவதா சின்னவ பொறந்தப்பக்கூட நிக்கல,”

“அவ தரப்புல இருந்து அவுங்க அம்மா,அப்பா என்னையப் பாத்து பேசணும்னு வந்து ஒரு நா முழுக்க காத்துக்கிட்டு கெடந்துட்டு இனிம பையன் வர மாட் டான்னுட்டு போயிட்டாங்க/“அப்புறம் ஒரு ரெண்டு நா கழிச்சி வந்து கூட்டீட்டு போயிட்டாங்க/ஒங்க ரெண்டு பேத்தையும் அம்மாவையும்/

“என்னதாரோட்டுலதண்ணியப்போட்டுட்டுவிருதாவாஅலைஞ்சாலும் வீட்டுல நேரநேரத்துக்குசோத்துக்குவந்துருவேன்,பாத்துக்கிட்டுஇருந்தவேலைகௌவர் மெண்ட் வேலைங்குறதால கையில நின்னுச்சி,இல்லைன்னா அதுவும் இல் லாமபோயிருக்கும். ரொம்ப சங்கடமா போயிருச்சி,என்ன செய்ய மாத்தையில பாதி நா வேலைக்குப்போக பாதி நா லீவு போடன்னு திரிச்சேன், வேலைக்குப் போற அன்னைக்கி தொலைஞ்சி போறான்னு மனசுக்குள்ள வஞ்சிக்கிட்டாவது யாராவது குடுக்குற பத்து அஞ்சி கடன் காசுல வண்டி ஓடிரும்,

“ஒங்கம்மாவுக்கோ குடும்பத்துக்கோ நான் எந்த வித உதவியாயும் இல்ல, அவ்வளவு ஏன் சின்ன வயசுல ஒங்களுக்கு ஏதும் வாங்கித்தந்ததாக்கூட ஞாபகம் இல்லை,

“ஒங்கம்மா வீட்டுல ரெண்டு தையல் மிசின் போட்டுருந்தா,ஒண்ணுல அவ தைச்சா,இன்னொன்னுசொல்லிக்குடுக்குறதுக்குஅவள நம்பியும் தையல் படிக்க ரெண்டு பேரு வந்தாங்க/

“அதுல கொஞ்சம் இவ தைக்கிறதுல கொஞ்சம்ன்னு வந்துக்கிட்டு இருந்த வருமானம் குடும்பத்த ஓட்ட ஓரளவுக்கு ஒதவுச்சின்னு சொல்லலாம். இருந் தாலும்கண்ணுமுழியாதகோழிக்குஞ்சுகளப்போலரெண்டுபுள்ளைங்கள வச்சிக் கிட்டுசமாளிக்கமுடியல,என்னபண்ணுவாபாவம்அவளுந்தான்,அவயெடத்துல வேற ஒருத்தி இருந்திருந்தா இந்நேரம் போலீஸுக்கு போயிரு ப்பா, இல்ல ஏதாவது பண்ணிக்கிட்டிருந்திருப்பா,

“ஆனாஇவஅப்பிடிபண்ணிக்கல,இருந்தா,சாதிச்சா,எனக்காகபொறுத்துக்கிட்டா எல்லாம்,,,/

”அந்தபொறுமைமட்டும்என்னைய எப்பிடி வணக்கி கொண்டு வரும் சொல்லு, ஒங்க ரெண்டு பேரையும் கூட்டிக்கிட்டு போயிட்டா அவுங்க அம்மா வீட்டுக்கு,

”மொதத்தடவைஅவுங்கவந்து கூட்டிக்கிட்டுப்போனாங்க,ரெண்டாவது தடவை இவளாப் போயிட்டா,,/

அம்மா வீடு ஒண்ணும் தூரமில்ல ,இந்தா இருக்கு பத்து கிலோ மீட்டர்ல, அப் படிகைக்குப்பக்கத்துல இருக்குற ஊருக்கு கல்யாணம் ஆகிவந்தநாள்ல இருந்து நாலைஞ்சு தடவை போயிருந்தா கூட பெரிய விஷயம்.,குடும்பம் வீடு புள்ள குட்டிங்கன்னு இங்கயே கெடந்தா அடைக்கொண்ட கோழியாட்டம்/

அப்பியெல்லாம் வைராக்கியமா இருந்தவ போயிட்டா ஒங்க ரெண்டு பேரை யும் தூக்கிட்டு,,/ஒரு வருசமோ ஆறு மாசமோ அங்கனயே இருந்தவ நான் சோத்துக்கு செத்துப்போயி ரோட்டுல அலையிறேன்னு கேள்விப்பட்டு வந்து ட்டா திரும்பவுமா, ஒரு நா மதியமா போத தெளியாம நா வந்தப்ப வீடே ஜொலிச்சிக்கெடக்கு,

“அவுங்க அம்மா அப்பா ஒரு புறம் இவ ஒரு புறம் புள்ளைங்க நீங்க ஒருபுறம் ன்னு வீடே ந்றஞ்சி கெடந்துச்சி/

”ஊர்ல இருந்து ஆக்கி கொண்டாந்த கறிச்சோற எடுத்து வச்சி தின்னு முடிச்ச ஒடனே அரிவாள தூக்கி முன்னாடி போட்டா,ஒங்க அம்மா,

“இனிமஎன்னாலஅங்கிட்டும்இங்குட்டுமாஅல்லாடமுடியாது,நீங்களேஎன்னை யும் ஏங் புள்ளைங்களையும் வெட்டிக்கொன்னு போட்டுட்டு ஒங்க இஷ்டத்து க்கு வாழுங்க,,,, அதுலயும் ஒங்க ஆத்தரம் தீரலைன்னா எங்க கூட வந்துருக் குறஎங்கஅம்மாஅப்பாவக்கூடவெட்டிப்போட்டிருங்க,அப்புறம்ஒங்கஇஷ்டத்துக்கு திரியலாம்ன்னு அவ சொன்ன சொல்லுஏன்நெஞ்ச தொட்டுருச்சோ என்னவோ அன்னையில இருந்து கொஞ்ச நாள்ல ஆளே மாறிப்போனேன்,

“அதுஒங்க அம்மா தூக்கிப்போட்ட அருவாளாலயா இல்ல அதப்போல கூர்மை யான சொல்லாலயா தெரியல,அந்த தெரியாததனத்தோடதான் இன்னைக்கி வரைக்குமா வாழ்ந்துக்கிட்டு திரியிறேன்,

“அன்னைக்கி மட்டும் ஒங்கம்மா வராம இன்னும்ஒரு வாரம் கழிச்சோ இல்ல, பத்து நா கழிச்சோ காலம் தாழ்த்தி வந்துருந்தான்னு வையி, செத்துப் போயி ருப்பேன் இந்நேரம்,”

அந்தளவுக்கு ஒடம்பும் கெட்டுப்போச்சி,அவ வந்த ஒங்கம் மா வந்த ஒடனே செஞ்ச மொத வேல,ஏங் குடிய நிறுத்துறக்கு மருந்து வாங்கிக்குடுத்தா,நானும் அவகிட்டதெளிவாசொல்லீட்டேன்,திடீர்ன்னு ஒரே நாள்ல என்னால அத்தனை யையும்விட்டுவந்துறமுடியாது,கொஞ்சம்நாளாகும் அதுவரைக்கும் கொஞ்சம் பொறுத்துக்கன்னு,,,,,/

அந்தபொறுத்துக்கவில்தான்ஏங்வாழ்நாளோடதெசை ஒரேயடியாய் இப்படியா மாறிப்போகும்ன்னு நெனைக்கல/

அதோட பிறதி பலனோ என்னவோ அம்பத நெருங்கப்போற இந்த வயசுலயும் ஒருத்தரு மேல ஒருத்தரு ரொம்பவும் பிரியம் காட்டி இருக்கோம். எனச் சொ ன்ன இவன் இன்னொரு உண்மையையும் பிள்ளைகளிடம் சொன்னான்,நான் மட்டும் இல்ல, எத்தனையோ கல்யாணவீடுகளுக்குப்போயிட்டு ஒங்க அம்மா வும் சாப்புடாம வந்துருக்கா,,,,,,,,ரெண்டு பேருமா சேந்து போற கல்யாணவீட்டு சாப்பாட்டுகளுக்கு டாட்டா காட்டீட்டு ஹோட்டலுக்குப்போயிருவோம் எனச் சொன்ன இவனையும் இவனது அருகில் தோள்தட்டி நின்ற மனைவியையும் ஏறிட்ட பிள்ளைகள் ஏனோ மௌனித்து நின்றார்கள்.

“டேய் சாம்பார் ஊத்துப்பா சாருக்கு வெறும் சோத்த வச்சிட்டுப் போயிட்ட அவரும்வெறும்சோறஎந்நேரம்வரைக்கும்தான்உத்துப்பாத்துக்கிட்டேஇருப்பாரு,?

பந்தியை சுற்றி வந்து மேற்பார்வைபார்த்துக்கொண்டிருந்தவர்தான் சமையல் காண்ட்ராக்டராய்இருக்கவேண்டும்போலிருக்கிறது.வயிறுபெருத்து கொஞ்சம் தண்டியாய் இருந்தார், சமையல் மாஸ்டர்களெல்லாம் இப்படி இருப்பதன் ரகசியம் என்னவெனத் தெரியவில்லை.

ஸ்வீட் மாஸ்டர் ஜெயராமை போல் இல்லாமல் கொஞ்சம் சுமார் குண்டாகத் தான் இருக்கிறார் பரவாயில்லை,

சும்மா சொல்லகூடாது, சாம்பார் நன்றாகவே இருந்தது,என்ன இதற்கு முன் சாப்பிட்டவெஜிடபிள் பிரியாணியை சாப்பிட்டிருக்கக்கூடாது,ஒரே எண்ணெய், அந்த எண்ணெய்யின் அடர்த்தி சாம்பார் ஊற்றிய சாப்பாட்டை சாப்பிடுவதை கொஞ்ச தடை செய்தது. இன்னும் இருக்கிறது,ரசம் மோர் பாயாசம்,,, இதற் கெல்லாம் வயிறு இடம் கொடுக்குமா இல்லையா தெரியவில்லை,இடம் கொடுக்கிறதோ இல்லையோ சாப்பிட வேண்டாம் ரொம்பவுமாய்.

கைநிறைந்துபிசைந்திருந்த சாம்பார் சாதத் தையும் உருளைக்கிழங்கு கூட்டை யும், முட்டைகோஸ் பொரியலையும், பட்டா ணியையும் சாப்பிட்டுக் கொண் டிருந்தான்,

இவனுக்குஎதிர்வரிசையில்சாப்பிட்டுக்கொண்டிருந்தபெண்பக்கத்தில்அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தபையனைஅதட்டிக்கொண்டிருந்தாள்பல்லைக் கடித்துக் கொண்டு,/

ஏதோகாடுவேலைக்குப்பொகிறவள்போல்புடவையைதூக்கிச்சொருகியிருந்தாள், யார்போய்சொல்வதுஅவளிடம்/அந்தக்கூட்டத்திலும்சாப்பாடுபோய்க்கொண்டி ருக்கிற பிஸியிலுமாய்/

ரொம்பநேரமாய்சாப்பிட்டுஎழுந்ததைப்போல்இருந்தது,அதுஏன்புரியவில்லை,

பத்திரிக்கை வைக்க வந்த அன்றே சொன்னார் சுந்தரம் அண்ணன்,காலையில வெள்ளனமுகூர்த்தம்ப்பா,ஏழுடூஒன்பதேமுக்காலுக்குள்ள,வந்துருங்க சீக்கிரம்,

ஒரே சாப்பாடா ஏற்பாடு பண்ணியாச்சு,விக்கிற வெலைவாசியில காலையில டிபன் போட்டுட்டு அப்புறம் அதுக்குப்பின்னாடியே கொஞ்ச நேரத்துலயே சாப்பாடு போடணும்,அது நமக்கு தாங்காது,என்றார்,

தாங்காது என்கிற ஒற்றைச்சொல் இப்பொழுது நிறைய விஷேசங்களை நிர்ண யிக்கிறது, என்கிற எண்ணத்துடன் கல்யாணத்திற்கு கிளம்பிய அன்று காலை கொஞ்சம் உடல் சோம்பேறித்தனம் காட்டியும் கொஞ்சம் ஊடல் செய்தவா றுமாய்,

அட போ அங்கிட்டு என அதையெல்லாம் தள்ளி வைத்துவிட்டுத்தான் கிளம் பினான்,.இங்கிருந்து பதினைந்து அல்லது பதினேழுகிலோ மீட்டர்கள் இருக்க லாம்.

மெல்லஊர்ந்து கொண்டுதான் போனார்கள் இருசக்கரவானத்தில்/ கொக்கலா ஞ் சேரி பார்டர் தாண்டியதும் அந்த ஊர் வந்து விட்டது போலவும் கல்யாண வீட்டில் நிற்பது போலவுமாய் ஒரு மெல்லிய எண்ணம் இவனை கவ்விக் கொண்டதாய்/

பெருமாள் கோவிலில் வைத்துதான் கல்யாணம் வைத்திருந்தார்கள், இவன் போன நேரம் கல்யாணம் முடிந்திருந்தது.

பட்டை அடித்திருந்தகோவிலின் முன்புறம் தரையில் தார்பாய் விரித்து பெண் மாப்பிள்ளையின் தலைக்குப்பின்னாய் மெல்லிய அழகில் திரைத்துணி போல் ஒன்றை கட்டி வைத்திருந்தார்கள்,அதுவும் அழகாகத்தான் இருந்தது பார்ப்ப தற்கு/

இருசக்கரவாகனத்தைஓரம்கட்டியவனாகஇதையெல்லாம்பார்த்துக்கொண்டிரு ந்தவன் கண்களில் காட்சிபட்ட உறவுகளுடமும் தெரிந்தவர்களிடமுமாய் பேசிக் கொண்டிருக்கும் போதுதான் சுந்தரம் அண்ணன் வந்து கூப்பிட்டார்.

“என்னடாஇது மொதல்ல போயி சாப்புடபோகலாம் மத்ததெல்லாம் அப்புறம் பேசிக்க,நம்ம பேசுறதுக்கு பேச்சா இல்ல இப்ப வா என/

“அவர் கை பிடித்து கூட்டிப்போன போது அதில் இருந்த வாஞ்சையும் தளர்ச்சி யுமாய் இவனை மிகவுமாய் யோச்சிக்க வைத்து விட்டது.

அந்தவாஞ்சைக்குமுன்போங்கள்அப்புறமாய்வருகிறேன்எனச்சொல்லமுடிய
வில்லை.

என்னடாஇதுவாடான்னாநீமட்டும் வந்த எப்பிடி,,?ஓங்வீட்டுக்காரிய கூப்புட்டுக் கிட்டு வா,என்றவுடன் ஞாபகம் வந்தவனாக போய்உறவுகளிடம் பேசிக் கொண் டிருந்த மனைவியை கூட்டிக்கொண்டு வருகிறான்,

என்னப்பா இது பேசிக்கிட்டு இருக்குற அவளை இப்பிடி பாதியிலேயே கூப்பு ட்டுக்கிட்டு போனா அறுந்து போன பேச்ச ஒட்ட வைக்க கஷ்டபடணும் அப்பறம்.,,,,,எனச்சொன்னஉறவுகளிடம் இருந்தும் சுந்தரம் அண்ணனின் கைபிடி த்தலும் அதில் நிறைந்து போயிருக்கிற வாஞ்சையும் வரையப்பட்டு பூத்துக் கிடக்கிறவைகளும் அப்புறமாய் கிடைக்காமல் போய் விடும் என்கிற ஆதங்கத் துடனும் ஆசையுடனுமாய்/

5 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அந்தவாஞ்சைக்குமுன்போங்கள்அப்புறமாய்வருகிறேன்எனச்சொல்லமுடியவில்லை

உண்மை உண்ம
தம +1

vimalanperali said...

வணக்கம்.சார்.அன்பும் பிரியமும்!

Nagendra Bharathi said...

அருமை

vimalanperali said...

வணக்கம் நாகேந்திர பாரதி சார்,
நன்றியும் அன்புமாய்/

kowsy said...

ஆமாம் உண்மை