ரெங்கநாதர் கோயில் வழியாகத்தான் போகவேண்டும் மணியண்ணன் டீக் கடைக்கு/
இன்று புரட்டாசி சனிக்கிழமை,அலுவலகமும் லீவுதான்,சனி ஞாயிறு இரண்டு நாட்கள் விடுமுறை.,இது போலான லீவுகள் வருகிற சமயங்களில் இவனுக் கானால்கொஞ்சம் சங்கடமாய்க்கூட போய் விடுவதுண்டு,இப்படியாய் சேர்ந் தாற்ப் போல லீவுகள் வரும் போது ஜனங்களும்தங்களது வேலைகளை அரசு அலுவலகங்களில் முடிக்க முடியாமல் சங்கடப்பட்டுப் போகிறார்கள்.
அரசாங்க காரியஸ்தர்களும் லீவு முடிந்து அலுவலகம் திறந்தவுடன் மொத் தமாய் வருகிற கூட்டத்தை சமாளிக்க முடியாமல் திணறுவதும் இவனுக்கு ஏற்புடையாதாய் ஒருநாளும் இருந்ததில்லை,
முடிந்தால் மனுப்போடலாம், லீவை மாற்றி வைக்கச்சொல்லி என்கிற எண்ண ம் இவனில் தலை தூக்குவது உண்டு.
”ஒங்கப்பாவுக்குலீவுநாளுவந்துருறக்கூடாது,விடியவிடியதூங்குவாருகாலையில வெள்ளன எந்திரிச்சோம்.ஒரு வாக்கிங்,கீக்கிங் போனோம்,வீட்டு வேலையில ரெண்டு உதவி செஞ்சோம்ன்னு கெடையாது,ராத்திரி கொட்டக்கொட்ட முழிக் க வேண்டியது ,அப்புறமா காலையில ஒன்பது பத்து மணிவரைக்குமா தூங்க வேண்டியது இதே வழக்கமா போச்சி அவருக்கும்,எனக்கும் அவரு இப்பிடி செய்யிறதபாத்துட்டு சும்மாவும் இருக்க முடியுறதில்ல,அதான் சத்தம் போடு றேன்,மனசு கேக்காம”,,,என்பாள் தலைக்கு மேல் வளர்ந்து நிற்கிற பிள்ளைகளி டமும் தனியாக இவனிடமுமாய்/
இவனுக்கும் வெகு ஆசைதான் அதிகாலையில் எழுந்து வாக்கிங்,சைக்கிளிங்க் போவது என்பது எல்லாம் இஷ்டம்தான்.ஆனால் யதார்த்தமாய் பார்க்கையில் முடியவில்லை,உடல் அப்பிய அலுவலகத்தின் அலுப்பை இது போலான விடு முறை தினங்களில் தூங்கித்தான் போக்க வேண்டியிருக்கிறது.
காலையிலேயேசொல்லிவிட்டாள்இன்றுமாலைகோயிலுக்குப்போகவேண்டும் என,
அவள் கோயிலுக்கு போக வேண்டும் எனசொல்கிற நாட்களில் அல்லது செல் கிற நாட்களில் அவளது இயக்கமே தனியாகவும் அழகாவும் றெக்கை கட்டி யுமாய் இருக்கும்,காலையில் எழுந்தவுடன் குளித்து முடித்து வாசல் தெளித்து அவள் இடுகிற கோலத்தில்பூத்திருக்கிறபுள்ளிகளுக்கும்அதைச்சுற்றிவரை கலையாய் இழுக்கப் பட்டிருக்கிற கோடுகளுக்கும் உயிர் வந்து ரத்தமும் சதையுமாய் நிற்கும்,
தவழ்ந்து வருகிற பூக்குழந்தையாய் அவள் இட்டு முடித்து விட்ட கோலத்தை நட்டுவைத்து விட்டு வருகிற அவள் அடுப்பை பற்றவைத்து விட்டு டீப்போ டுகிற மணத்தை தெருமுழுவதுமாய் பரப்பி அனுப்பி வைப்பாள்.
அதுவும் வேலை மெனக்கெட்டு வீட்டின் படியிறங்கிப் போய் தெரு முனை யிலிருக்கிற வீட்டின் கதவை தட்டி தகவல் சொல்லி விட்டு வரும்.பின் டீ டம்பளருடன் வீட்டு வராண்டா தாங்கிக்கிடக்கும் தினசரியை படித்து விட்டு வீட்டில் இருக்கும் அனைவரது மொத்த அழுக்குத்துணியையும் எடுத்து பக் கெட்டில் ஊற வைத்து விட்டு காலை உணவை தயார் செய்ய ஆயத்தமாகி விடுவாள்.
உளப்பூர்வமான அந்த ஆயத்தம் உணவின் சுவையை கூட்டி விடும்.
அந்த உணவின் சுவையின் மணம் படுத்திருக்கிற இவனை தூக்கி தட்டி எழுப்பி உட்காரவைக்கும்,
ஏன் இதுக்கு எந்திரின்னு சொன்னா எந்திரிச்சிறப்போறேன்,இதுக்குப்போயி சப்போட்டோட மணத்த காத்துல கட்டிவிட்டு அனுப்பாட்டித்தான் என்ன,,, என்பான் கேலியாக பேசியவாறே,,,?
“ஒங்களத்தான் டீகுடிச்சேன் குளிச்சேன் கெளம்புனேன்னு இல்லாம இன் னைக்கி ஒரு நாளாவது வீட்ல இருங்க ,லீவுதான இன்னைக்கி,எந்திரிச்சதே லேட்டு, இனிம எப்ப குளிச்சி எப்ப சாப்புட்டுட்டு எப்ப பஜாருக்கு போயிட்டு வந்து,,,, என்றாள் மனைவி.
எழுந்திரிக்கும் போதே பத்து மணிக்குமேல்ஆகிப்போனது.கடிகாரத்தின் கூட்டு சதி போலும் அது,இந்த சின்ன முள்ளும் பெரிய முள்ளும் விநாடி முள்ளு மாய் கைகோர்த்துக்கொண்டு செய்த சதிதான் போலும் இது,
மனைவியிடம் சொன்னால் ”அட சும்மா கெடங்க நீங்க,நீங்க லேட்டா எந்திரி ச்சிக்கிட்டு கடிகாரத்து மேல பழி போட்டீங்கன்னா எப்பிடி” என்றாள்.
முன் தினம் இரவில் கொஞ்சம் தூக்கம் வராமல் படுத்துக் கிடந்தான். இப்பொ ழுதெல்லாம் சமீப காலமாக அப்படி ஆகிப்போகிறதுதான்.தூக்கம் வருவத ற்காய் டாக்டர் மருந்து மாத்திரை ஊசி என அலைந்து அலுத்துப் போய்தான் விட்டு விட்டான்
தெரிந்தஒருவர்தான்சொன்னார்,”முடிஞ்சாநம்பிக்கைஇருந்தாஅந்தஆஸ்பத்திரி யில போயி பாருங்க,குணமாகும்,ஒடனே சட்டுன்னு கேட்டுறாது,கொஞ்ச நாளாகும்,ஏன்னா ஒங்களுக்கு வருசக்கணக்கா இருக்குதுன்னு வேற சொல் றீங்க, அதுனால குணமாக கொஞ்ச நாளாகலாம்,
”எப்பிடி சொல்றேன்னா அங்க போயி தொடர்ச்சியா வைத்தியம் பாத்துக்கிட்டு வந்துக்கிட்டுஇருக்குறதுனாலயும்,அங்கபேசுற பேச்சுலயும் இருந்து தெரிஞ்சிக் கிட்டஉண்மை.அதுனாலத்தான் இவ்வளவு ஊனி சொல்றேன்,போயிப்பாருங்க நம்பிக்கைவரும்ஒங்களுக்கே,,,,என சொல்லிய அவரது பேச்சின் நுனி பிடித்துக் கொண்டுதான் சென்றான் அந்த ஆஸ்பத்திரிக்கு.
சென்றுவிட்டான் அரை மணி நேரம் தேடியும் விசாரித்துமாய்,
ஆறாவது கேட் வழியாகப்போய்தான் போகவேண்டி இருந்தது. இடைஞ்சலா ன சந்து ,அதிலும் இவன் அவ்வழியாய் சென்ற தினத்தன்று அந்தத் தெருவி லிருந்த காளியம்மன் கோயிலில் பொங்கல் போலும் ,தெருவே ஜெகஜோதி யாய் இருந்தது,
ரயில்வே கேட்டிலிருந்து ஆரம் பித்து தெருவடைத்து சீரியல் செட் கட்டியிரு ந்தார்கள்,ரேடியோவேறு,பாட்டுக்களின்சபதம்அவ்வழியாகப்போகிறவருகிறவர்க ளின் காதில் அதிர்வை கொட்டிக்கொண்டு இருந்தது,
.தெருவின் ஓரமாக சின்னதாக இருந்த பீடத்தின் மீதிருந்த அம்மனை அலங்க ரித்து வைத்திருந்தார்கள்.
ஊதுவத்திப்புகைக்குள்ளும்மாலைகளுக்கும்,பூக்களுக்குள்ளும்,புத்தாடைகளுக் குள்ளுமாயும்கையெடுத்தும்தொட்டும் கும்பிட்ட ஜனங்களின் மரியாதைக்குள் ளுமாய் உள்வாங்கி யிருந்த அம்மன் பார்க்க அழகாக இருந்தாள். அம்மனுக் குரிய சகல மரியாதைகளும் மாலைகளும் நடந்து கொண்டிருக்க ஒருபக்கம் மைசெட்டின் அலறலும் அலங்காரமுமாக தெருவே அல்லோகல்லப்பட்டுக் கொண்டிருந்த நேரம்தான் இவன் அந்த தெருவின் வழியே போனான் ஆஸ்பத் திரி விசாரித்து.
கொஞ்சம்சிரமமாகதான் இருந்தது,முக்கிய பெயர் கொண்ட தெருதான் ,கண்டு பிடிப்பது கொஞ்சம் சிரமம்தான் போலும்,தெரியாதவர்கள் சிரமப்பட்டுப் போ வார்கள், தேவையேற்பட்டால் சிறப்புப்புலனாய்வுக்குழு அமைத்துதான் தேட வேண்டி இருக்கும் போலும்.
ஆஸ்பத்திரிபோல்இருக்கவில்லை,ஆஸ்பத்திரியின்மருந்துவாசனை,முக்கிய மாக மருத்துவமனை வாசனையும் ,அதன் அடையாளமும் காணக் கிடைக்க வில்லை.
வராண்டாவில் மீன் தொட்டி வைத்திருந்தார்கள்.அதில் நீந்தி த்திரிந்த வண்ண வண்ண மீன்கள் ஒன்றை ஒன்று முட்டிக்கொள்ளாமல் நீந்தித் தெரிந்ததாய்,,,/ நீந்தித்தெரிந்த மீன்களில் சிவப்பு வண்ணத்தை லேசாக மேனி மீது பூசிக் கொண்டிருந்த மீன் ஒன்று அனைத்து மீனின் மீதும் லேசாக பட்டும் படர்ந் தும் சற்றே உரசியும் உறவாடியும் திரிந்ததாக,,/
காட்சிப்பட்ட மீன் தொட்டி இருந்த வராண்டவைத் தாண்டி உள்ளேதான் இருந்தார் டாக்டர், அவரது உயரத்திற்கு மாநிறம் எடுப்பாக இருந்தது.அளவாக இருந்த தொப்பையும் மேட்சாக அவர் அணிந்திருந்த பேண்ட் சட்டையும் அவருக்கு எடுப்பாக இருந்தது,
எழுந்து நடக்கையில் மட்டும் கொஞ்சம் காலை தாங்கித்தாங்கி நடந்தார், டாக்டரிடம் போய் கேட்பது தப்புதான்,இருந்தாலும் மனிதாபிமான முறையில் கேட்டு வைத்தான், முன் பின் தெரியாதவர்தான்,இருந்தாலும் கேட்டு வைப் போம் என்கிற முறையில் கேட்டான்,
போனவாரம் இப்படித்தான் பஜாருக்குப் போகும் போதுமுனிசிபல் ஆபீஸ் ரோட்டில்இருக்கிற ஒரு கடையில் டீ சாப்பிட்டுக்கொண்டிருந்தான்,வடை சாப்பிட்டு முடித்து விட்டு டீக்கு சொல்லி விட்டு நிற்கும் போது டீ டீக் கடை யின் ஓனர் காலை தாங்கித்தாங்கி எழுந்து வந்தார்கல்லாவிலிருந்து,
இவனும் வாய் நிற்காமல் ”எண்ணண்னே கால்ல” எனக் கேட்டு விட்டான்.
பதிலுக்கு அவர் முறைத்துப்பார்த்தவராய் ஏதும் பேசாமல் சென்றுவிட்டார், எதிர்தாற்போல்இருக்கிறசந்தில்ஒண்ணுக்கிருக்கப்போகிறார் என டீ மாஸ்டர் சொன்னார்,”அவரு அப்பிடித்தான் புதுசா பாக்குறவுங்க கிட்டயும் பழக்கமில் லாத ஆள்ககிட்டயும் அவ்வளவா பேச்சு வார்த்தை வச்சிக்கிற மாட்டாரு. அவுருகிட்டகடன்சொல்லிடீக்குடிச்சிட்டுபோயிருவாங்கன்னுநெனைப்பு.அவருக்கு/
”அதுனாலத்தான் அப்பிடி உம்முன்னு இருக்காரு ,மத்த படி நல்ல ஆளுதான் என்றார்.அப்படி அவரு இருக்குறதும் சமயத்துல நல்லதாத்தான் தெரியுது, இல்லைண்ணா வந்து டீயையும் வடையையும் திண்ணுபுட்டு கடன் சொல் லீட்டு போயிருறானுங்க,அவனுங்கள திரும்ப கண்டுபுடிச்சி காச வாங்குறதுங் குள்ள தாவு தீந்து போகுது,அப்பிடி ஆளுகளுக்கு குடிச்சதுதல பாதி வரும் ,மீதி கணக்க தண்ணியில எழுத வேண்டியதாத்தான் ஆகிப் போகும். அதுனா லயே அவர்பாதிஅப்பிடிஇருக்காரு,வேற ஒண்ணுமில்ல,,” என அவர் அன்று சொன்ன பேச்சின் மிச்சம் இப்பொழுது ஞாபகத்தில் வந்து போகிறதாய்,,/
அது போல் இருப்பார் போலும் டாக்டர் என நினைத்த இவனது நினைப்பை பொய்யாக்கியவராய் பைக்கில் போகும் போது கீழே விழுந்து விட்டேன், என்றார் டாக்டர்/
டாக்டரிடம் கேட்கக்கூடாத கேள்வியை கேட்டு விட்டு வெற்றிகரமாய் பதில் வாங்கியவனாய் இருந்த நேரத்தில் இவரை நல்ல டாக்டரிம் காண்பிக்க வேண்டும் முதலில் என நினைத்தவனாய் காண்பித்து விட்டு வந்தான்.
அதன் பின்னான நாட்களில் தூக்கம் கொஞ்சம் பரவாயில்லை,தூக்கம் வருகி றது,ஆனாலும் சில சில நாட்களில் இது போலாய் ஆகிப்போகிறதுதான்,”ராஜ நடை நடக்க ஆசைப்பட்டு தடுக்கி விழுந்த கதையை,,,,”இது போலான தூக்கம் பறிபோன நாட்கள் ஞாபகப்படுத்தி விட்டுச்செல்லும்,
காலையில்எட்டு மணிக்கெல்லாம் விழிப்பு வந்து விட்டது.எட்டு மணி என்பது கூட அதிகம்தான்.ஏழு முப்பது அல்லது ஏழே முக்கால் இருக்கலாம், விழிப்பு வந்து விட்டாலும் கூட கண்ணை திறந்து கொண்டே படுத்துக் கொண்டிரு ந்தான்,
பாதிவிழிப்பும்பாதிதூக்கமுமாய்,எழுந்துமுகத்தைகழுவிவிட்டுடீயைக்குடித்து விட்டு வேலையைப் பார்க்கலாம்தான்.மனசு சொல்கிறது. ஆனால் உடம்பு கேட்கவில்லை. கண்ணெல்லாம் எரிந்தது,
சிறிது நாட்களாகவே இந்தப்பிரச்சனை இருக்கிறது, உடல் சூடாகிப்போனதா என்னவோ எனத்தெரியவில்லை.
முன்பெல்லாம்இந்தப்பிரச்சனை இருந்ததில்லை,காலையில் ஐந்தரை மணிக்கு படுத்து தூங்கி விட்டு ஒன்பது மணிக்கு எழுந்து வேலைக்குப்போன தினங் களில் கூட இது போல் இருந்ததில்லை.
சுப்பு அண்ணனிடம் சொன்ன போது கண்ணடித்துக் கொண்டே ”பேசாம ஒரு பாட்டில்பீர்வாங்கி சாப்புட்டுருங்க சார்,,சரியாப் போகும் சூடெல்லாம் என்றவர். ஏங்கூட வாங்க நான் வாங்கித்தர்றேன் நீங்க போயி கேட்டாத்தான் குடுக்க மாட்டேங்குறாங்கன்னு புதுசா கதை சொல்றீங்களே சார்” என்றவரைப்பார்த்து இவன் சொல்வான் ”அண்ணே சரக்கு தர மாட்டேன்னு மட்டும் சொல்லீட்டா பரவாயில்லைண்ணே,நீயெல்லாம் கடைக்குப் பக்கத்திலயே வரக்கூடாது, கடைக்கு முன்னாடி ஒரு ஓரமா நின்னு கடைக்கு வர்ரவுங்க போறவுங்கள வேடிக்கை பாத்துட்டு பேசாம போயிறனும்.கடைக்கு முன்னாடி வந்தெல் லாம் நிக்கப்புடாதுன்னுசொல்றாங்கண்ணே என்பான் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு,,,/
அவரும்சிரித்துக்கொண்டே சொல்வார்,என்ன சார் குடிக்ககூடாதுங்குற முடிவ மனசுல வச்சிக்கிட்டு அதுக்கு ஒரு காரணத்த இவ்வளவு நாகரீகமா சொல் றீங்களே என,,,சிரித்துக்கொள்கிற இருவரிலும் பரஸ்பரம் பூக்கிற மனப்பூ ஒன்றின் முகர்வில் ஒன்று மனம் கொள்வதாய் இருக்கும்.
புரண்டுபுரண்டுபடுத்துக் கொண்டிருந்தவன்எப்பொழுது கண் அயர்ந்தான் எனத் தெரியவில்லை.கண் விழித்துப் பார்த்த போது மணி பத்து ஆகியிருந்தது. ஏதோஅதிசயமாய்கண்விழித்தவன் போல மடவென எழுந்து குளித்து முடித்து விட்டு பஜாருக்குக்கிளம்பினான்,
பஜாருக்குக்கிளம்பும் போது பணிரெண்டரை மணிஇருக்கும்,”என்னஇந்நேரமா கெளம்பீட்டீங்களே,எங்க,எதுனா அவசர ஜோலியா எனக்கேட்ட மனைவியி டம் இல்லாம்மா ஒன்னும் அப்பிடியெல்லாம் அவசரமுன்னு இல்ல, சும்மா இருக்குறநேரத்துலரெண்டுபலகாரத்த வாங்கி போட்டமுன்னா வேலை முடிஞ் சாப்புல இருக்கும்.தீபாவளியும் அதுவுமா மொத்தமா எல்லாத்தையும் போட்டு ஒழப்பிக்கிட்டு கெடக்க வேணாம்ன்னு பாத்தேன்,
“பஜாருக்குப்போறேன்,அப்பிடியேகாய்கறியும்தேங்காயும்வாங்கிட்டுவந்துர்றேன், கதர் கடையில சேலை எடுக்க வேண்டி இருக்குமுன்னு சொன்ன, எடுக்க ணுமா,இல்ல இருக்குற போதுமுன்னு விட்டுருவமா எனக் கேட்ட போது சரி பாப்பம் சாய்ங் காலமா,,,,எனச்சொன்ன மனைவியிடம் சொல்லி விட்டு கிளம்பினான்,
காலை சாப்பாடு சாப்பிட்டு கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகிபோகிறது,அது எப்படி எனத்தெரியவில்லை,திடீரென ஒருநாள் நின்று போனது பின் அதுவே வழக்கமாகிப் போக இன்று வரை காலைச்சாப்பாடை தியாகித்தவனாய் ஆகிப் போகிறான்.
ஒன்று அலுவலகத்திற்கு கிளம்புகிற அவசரத்தில் சாப்பிட முடியவில்லை. இல்லையென்றால் இரவு தூங்க வெகு நேரமாகிப்போவதால் காலைசாப்பாடு சாப்பிட்டால் செமிக்காது எனச்சாப்பிடுவது இல்லை.
பழகிப்போனதன்வழியிலேயேசென்று விடுகிறான்,இன்றும் அப்படியே சென்று விடலாம், திடீரென பழக்கத்தை மாற்றுவானேன்.வேண்டாம் என கிளம்பி விட்டான்.
பாலம் வழியாகத்தான் சென்றான்.ஜேம்ஸ்வசந்தன் கடையில் டீ சாப்பிடும் போது மணிஒன்று இருக்கலாம்.டீ இல்லை முடிக்கப்போகிற நேரம் ,காப்பி போட்டுத் தருகிறேன் என்றார்,
இவனுக்கும்காபிக்கும் ரொம்ப தூரமாகி ரொம்ப நாட்களாகி விட்டது. வேலை க்குப் போன புதிதில் வெளியூரில் அக்கா வீட்டில் தங்கியிருந்த போதில் புரூக் காப்பிதான் போட்டுக்குடிப்பான்,
“போட்டுக்குடிச்சிக்கோ”எனசொல்லிவிடுவார்கள்அக்கா,இவன் எழுந்திருக்கிற நேரம் அவர் ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டிருப்பார்,அல்லது அலுவலகத்திற்குகிளம்பிக்கொண்டிருப்பார்.இவனுக்கானால்கேஸ்ஸ்டவ்வை பற்றவைக்கவே சற்று உதறலாய் இருக்கும்.சரி என்ன ஆகி விடப்போகிறது என மனம்நடுங்கியவாறேபற்றவைத்துஅதில் முதன் முதலாய் காபி போட்டுக் குடித்த ருசி நாவின் சுவையறும்புகளில் பற்றிக்கொள்ள சிறிது நாட்களாய் காபி பைத்தியம் பிடித்தவனாய்த்தான் இருந்தான்,பின் வந்த நாட்களில் ஏதோ விதிவசமாய்டீக்குடிக்கப்போகஅதுவேஇன்றுவரைபற்றிபின்தொடர்ந்து கொண்டிருப்பதாக/
அது இன்று ஜேம்ஸ்வசந்தன் கடையில் உடைந்திருக்கிறது,இன்று மட்டும் என இல்லை,பல சந்தர்பங்களில் பல இடங்களில் விதிவசத்தின் பயனாலோ யாரும் இட்ட சாபத்தாலோகாபி சாப்பிட நேர்ந்திருக்கிறது,சாப்பிட்டும் இருக்கி றான்,
நண்பர்கள் மற்றும் தோழர்கள்,உறவினர்கள் வீட்டில் அல்லது அவர்களுடன் வெளியில் வந்து கடையில் சாப்பிடும் பொழுது என பல நேரங்களில் இவனது விரதம் உடைபட்டிருக்கிறது,
குடித்த காபிக்கு காசு கொடுத்து விட்டு நகர்கையில்தான் ஞாபகம் வருகிறது வந்த வேலை.
பாலத்தின் அருகில் இருக்கிற கடையில் சேவு பாக்கெட்டும் மிக்சர் பாக்கெ ட்டுமாக வாங்கி கொண்டு போய் விடலாம், இந்தப்பக்கமாய் வருகிற நேரங்க ளில் எப்பொழுதாவது வாங்குவான்,விலை கொஞ்சம் கம்மி சாப்பிட நன்றாக இருக்கும்,ரொம்பவும் மோசம் கிடையாது. அப்படியே வாங்கிக்கொண்டு ரயில் வே லைன் வழியாகப்போய்விடலாம் என நினைத்து வந்து கொண்டி ருந்த போது காதிக்கடையில் போய் சட்டை யை எடுத்து விடலாம் என்பது ஞாபகம் வந்தது,
இவனுக்குள்ளாகஒருஆசை,நேரம் கிடைக்கும் பொழுது ஒரு கதர் வேஷ்டியும் சட்டையும் எடுக்க வேண்டும் என ,எடுத்து விடலாம் இன்று எனப்போன போது வேஷ்டியை விடுத்து சட்டையை எடுத்துப் போடச் சொல்லி பார்த்துக் கொண்டிருந்தான்,
அவர்கள் எடுத்துப் போட்டுக்கொண்டிருக்கும் பொழுது சட்டைகள் அடுக்கி வைக்கப்பட் டிருந்த ரேக்கில் கட்டம் போட்ட சட்டை ஒன்று இவன் கண்ணை உறுத்திக் கொண்டிருந்தது. அதை மட்டும் எடுக்கச்சொல்லி பார்த்த போது மனதுக்குப் பிடித்த கலராயும் டிசைனாகவும் இருந்தது.
விலையைக்கேட்டான், அறு நூற்றி எழுவது ரூபாய் என்றார்கள்,தள்ளுபடி போக நானூற்றி எழுபது ரூபாய் ஆகும் என்றார்கள்,இவனுக்கு தூக்கி வாரிப் போட்டது,இதுநாள் வரை இவன் இருநூற்றி ஐம்பது ரூபாய்க்கு மேல் சட்டை எடுத்ததில்லை.மிஞ்சிப்போனால் முன்னூறு,
இப்பொழுதுக்கு இப்பொழுது பிள்ளைகள் வைவதால் முன்னூற்றி ஐம்பதி ற்கும் அதற்கு மேலாகவும் எடுக்கப்பழகிக்கொண்டான். அதன் படி இந்த சட்டை யையும் எடுத்து விடலாம் என்ன இப்பொழுது குறைந்து போகிறது என நினைத் தவனாய் எடுத்து தனியே வைக்குமாறு கேட்டுக்கொண்டும் சாயங்காலம் சேலை எடுக்க வரும்பொழுது வாங்கிக்கொள்கிறேன் சேர்த்து எனச் சொன்ன வனாய் கடையை விட்டு வெளியே வருகிறான்.
கோவிலுக்கு போகிற நாட்களிலும் சரி அது அல்லாத தினங்களிலும் சரி, மணியண்ணன் மாஸ்டராய் இருக்கிற கடையில் போய் ஸ்டாராங்காய் ஒரு டீக்குடித்தால்தான் இவனது அன்றாடம் முடிந்தது போல் இருக்கும்.
அலுவலகம் விட்டு வருகிற போதும் சரி அலுவலகத்திற்கு போகிற போதும் சரி,அவரது கடையில் டீக்குடிபதென்பது வழக்கமாகிபோய் விட்டது,
நேற்றைக்கு முன் தினம் டீ சாப்பிட்டுக்கொண்டிருக்கும் பொழுது வடை மா ஸ்டர் அருகில் வந்து அமர்ந்தார்,அவரது அமர்வில் ஒரு நெருக்கமும் வாஞ் சையும் தெரிந்ததாக,என்ன இது தீபாவளிக் காசுக்காய் இருக்குமோ,,,,? இவ் வளவு நெருக்கமாய் எப்பொழுதும் வந்து அவர் அமர்ந்ததில்லை.
இவனுக்கானால் சங்கடமாய் போய் விட்டது.ஒருவித மன நெளிவுடன் அவர் அருகில் இருந்து எழுந்து வேறிடம் போய் நின்று கொண்டான்.
கொஞ்சம் மனம் தேர்ந்த மாதிரி இருந்தது.அப்படியே காசு கொடுக்க வேண் டும் என யோசித்தாலும் கூட தீபாவளிக்கு இன்னும் இரண்டு நாட்கள் இருக்கி ன்றன.அதற்குள்ளாக வந்தால் கொடுத்துக்கொள்ளலாம் என்கிற நினைப்புடன் எழுந்த இவன் எதிர்தார்ப்போல் இருக்குறஹோட்டலுக்குள்செல்கிறான்,போன வாரம் கோயிலுக்கு வந்த போது இரவு எட்டு மணியாகிப்போக சாப்பிட்டு விட்டுப் போகலாம் என கடைக்குள் அமர்ந்திருந்து கணவனும் மனைவியும் இரண்டு குழந்தைகளுமாக வந்தார்கள்,அடேயப்பா ஒரு மினி மிலிட்டரியின் மிடுக்குடனும் வாய் நிறைந்த புன்னைகையுடனுமாய் ஹோட்டலுக்குள் நுழைந்த அந்தக் குடும்பத்தைக்காண கண் கோடி வேண்டும்.
அவ்வளவு சந்தோஷமாயும் அவ்வளவு புன்னகையுடனும் அவ்வளவு நெஞ்சு நிமிர்வுடனும் வந்த அவர்களின் சந்தோஷத்தை அள்ளிக்காத்துக்கொண்ட கடைக்காரர் அவர்கள் கேட்டதை இலையில் வைத்தார்,
புன்னகை பூத்த முகத்துடன் அவர்கள் சாப்பிட ஆரம்பித்தார்கள்,
அவர்கள் சாப்பிட்டு முடித்து வெளியில் வரும்பொழுது இவனும் மனைவியும் சாப்பிட ஆரம்பித்திருந்தார்கள்.

8 comments:
>>> கோவிலுக்கு போகிற நாட்களிலும் சரி அது அல்லாத தினங்களிலும் சரி, மணியண்ணன் மாஸ்டராய் இருக்கிற கடையில் போய் ஸ்டாராங்காய் ஒரு டீக்குடித்தால்தான் இவனது அன்றாடம் முடிந்தது போல் இருக்கும். <<<
பலருக்கும் இப்படியான வாஞ்சை இருப்பதுண்டு..
அன்பின் தீபாவளி நல்வாழ்த்துகள்..
அருமை...சில வீடுகளில்..தூங்கினாலும் திட்டு..தூங்காவிட்டாலும் திட்டுதான்....திட்டும் மறத்துதான் போய்விட்டது அவர்களுக்கு
பரபரப்பான அலுவலக வேலைக்கு நடுவில் கிடைத்த ஒரு நாள் ஓய்வின் கதை அனுபவம். நன்று.
வணக்கம் துரை செல்வராஜ் சார்,
நன்றி வருகைக்கும் கருத்துரைக்குமாக./
வணக்கம் ஸ்ரீராம் சார்,
நன்றி வருகைக்கும் கருத்துரைக்குமாக/
எல்லோர் வீடுகளிலும் நடக்கும் இயல்பானதை கதையாக்கியமைக்கு பாராட்டுகள்
வணக்கம் அசோகன் கருப்பசாமி சார். நன்றியும்.உயரிய அன்பும்!
Post a Comment