2 Nov 2017

ஊடறுத்து,,,,,,


தன்னால்முடியாது இது,எனநினைக்க வைத்ததும் ,இது முடியுமா என மன தளவில் மளைப்பேற் படுத்திதளர்வுறச் செய்ததுமான வேலை நினைத்தை விட சீக்கிரமாகவும் சிறிது கடினம் காட்டியுமாய் முடிந்து போகிறது,

காலையில் வழக்கத்தை விட தாமதமாகவே எழுந்தான்,பொதுவாகவே லீவு நாட்கள் என்றாலே அப்படித்தான் ஆகிப் போகிறது.தவிர வழக்கம் என்பது இப்போது வழக்கத்தில் இல்லாமலும் வழக்கொழிந்து போன ஒன்றாகவும் ஆகிப் போனதாய்/

நல்லதாய்சொல்லத்தெரியவில்லை,ஏதேனுமாய்கெட்டதாகவே பேசித்திரியத் தோணுகிறது.தூக்கம் தூக்கம் தூக்கம்,,,,எழுந்தபின்னாலே ஏக்கம் ஏக்கம் ஏக்கம்,,, என ஆகிப்போகிறது அது பற்றி நினைக்கிற போதும் பேசுகிற போதும் ”பின்னஎன்னசார்நீங்களே சொல்லுங்க,ஒரு மனுசன் ஏதோ கொஞ்சம் லேட்டா தூங்குனா பத்து இல்ல பதினோரு மணி ஆகும்,ஆனா இவருக்கு மட்டும் கொஞ்சம் லேட்டுன்னா நடு ராத்திரி ஒரு மணி ரெண்டு மணிக்கு பக்கத்துல விடியக்காலையில நாலு மணிக்குத்தூங்குறார்ண்ணே. என சொல் லும் போது பக்கத்து வீட்டுக்காரன் சங்கடமாக நெளிவான்.

இவன்அவனைப் பார்த்து கைகொட்டி சிரிப்பான், பெருங்குரலில்/அந்தப் பெருங் குரலையும் கைதட்ட லையும் கட்டுக்குள் கொண்டு வரவும் சிரிப்பை அடக்க வும் நீண்ட நேரமாகிப் போகும்.

“நல்ல மனுசனப்பாத்து புகார் சொன்ன போ, அவனே ரெண்டு நாளைக்கி ஒரு க்க ராத்திரி செகண்ட் சோ சினிமா பாத்துட்டு ராபாடி போல திரியிற பைய அவங்கிட்டபோயி,,அடபோம்மாவேலையப்பாத்துக்கிட்டு,ஏதோகொஞ்சம்பழகிப் போச்சிஅப்பிடிஅதுக்காகஒரேயடியாத்தானதுள்ளாத,என்னமோநாங்களெல்லாம் ஒண்ணுக்குமே லாயக்கில்லாத ஜென்மம் மாதிரியில்ல பேசுற, என்னோட இந்த நடவடிக்கையால ஏதாவது குடும்பத்துல யெடைஞ்சல் ஏதாவது பண்ணி யிருக்கேனா,இல்லாநாலுபேரப்போலதண்ணிவெந்நின்னுஅலையிறேனா,அப்பிடி இருந்து ஏதாவது ஏங் நடவடிக்கையில கோளாறு இருந்தா சொல்லு நீயி, அதவுட்டு ராத்திரி லேட்டா தூங்குறேன்,சீக்கிரம் தூங்குறேன்னு,,,அத ஒரு பேச்சா பேசிக்கிட்டு,போடி போடி போக்கத்தவளே,,,,,,”என அவளும் இவனுமாக பேசிக்கொண்டிருக்கிற நேரங்களில் எழுந்தமுங்கும்பேச்சலைகளின் பேரரவம் கேட்டு அக்கம் பக்கத்திலிருந்து எப்பொழுதுமாய் உரிமையோடு வந்து போகிற வீடுகளிலிருந்து போய் கலாய்ப்பார்கள்,

“ஆமாமாம்ஒங்களோடஇதே பொழப்பாப் போச்சி,எந்த வீட்லதான் எந்த ஆம்பள தான் சீக்கிரம் தூங்குறாங்க சொல்லுங்க,அப்பிடியே தூங்குனாலும் முழுத் தூக்கமா எங்க தூங்குறாங்க,நடுராத்திரியில எழுப்பி ஒக்கார வச்சி பொழம்பிக்கிட்டு இருக்குறாங்க, குடும்பம்புள்ளைங்க அவுங்கபடிப்பு வேலை வேலை வாய்ப்பு அப்பிடி இப்பிடின்னு,,,,என்னெத்தையோ நெறைய பேசுறா ங்க, பொழம்புறாங்க,

”இப்பிடித்தான் ரெண்டு நாளைக்கு முன்னாடி டீக்கடையில வேலை பாக்குற பையன் ஒருத்தன் அவன் கடையில் சீனி வாங்கீட்டு வரச்சொன்னாங்கன்னு போயிருக்குறான்,பஜாருக்கு போயிட்டு திரும்பி வர்ற போது மரக்கடைப் பக்கத்துல வந்துக்கிட்டிருந்துருக்கான் ,கண்ணு மயங்குற சாயங்கால வேளை, மரக்கடை ஓரமா ஊர்ந்துக்கிட்டு திரிந்த பாம்பு ஒண்ணு நெலையா அந்த யெடத்துல நின்னு வேடிக்கை பாத்துக்கிட்டு இருந்தவன் கால்ல ஏறிருச்சி. டக்குன்னு சுதாரிச்சி தட்டி விட்டவன் என்ன பண்ணிட்டான் காலால மிதிச்சி ருக்கான்,இவனோடமொதமிதிக்கிதப்பிச்சி போன பாம்பு பக்கத்துல மரக்கடை க்குள்ள தரையில படுத்துக்கிட்டு இருந்தவரு பக்கத்துல போகப் பாத்துருக்கு, இவன் பதறிப்போயி ஆகா அவர் இன்னைக்கி கொத்தாம விடாதுன்னு கால் ட்ட மிதிச்சிருக்கான்.

”மிதிச்ச பையன் நடு சென்டராவும் மிதிக்காம கழுத கவனமில்லாம வால் பக்கம் மிதிச்சிட்டான் போலயிருக்கு,மிதிபட்ட பாம்பு பொட்டுன்னு போட்டு ருச்சி.சரின்னு சுதாரிச்சி அப்பிடியே பாம்பு கடிச்ச கையோடஆஸ்பத்திரிக்கும் போகாமஅந்த பாம்ப தேடி கண்டுபிடிச்சி கொன்னுட்டு அப்பறமா கடையில கொண்டு போயி சீனிய குடுத்துட்டு ஆஸ்பத்திரிக்கு போயிருக்குறான்,

அதுவும் இவனா போகல இவனுக்கு போகணும்ங்குற மதியும் இல்ல, வாங் குன சீனிய கடைமொதலாளிகிட்டகுடுத்துட்டு மிச்சச்சில்லறைய எண்ணிக் குடுக்கும் போது பையன் கொஞ்சம் மயங்கிருக்கான்.அப்புறமாஎன்ன ஏதுன்னு தண்ணி தெளிச்சி எழுப்பி கேக்கும் போது பாம்பு கடிச்ச விஷயத்த சொல்லி யிருக்கான்,கொலை பதறிப்போன மொதலாளி சடக்குன்னு ஆட்டோ பிடிச்சி அனுப்பி விட்டுருக்காரு ஆஸ்பத்திரிக்கு கூட ஒரு பையனையும் சேத்து, பாம்பு கடிச்சி ரெண்டு மணி நேரம் ஆனதுனால ரத்தம் ஒறைஞ்சி போச்சின் னு ஆஸ்பத்திரியிலசொன்னாங்களாம்,

“நல்லவேளையா இவன் போனது கவர்மெண்ட் ஆஸ்பத்திரியா ஆகிப் போச்சி, அங்க விஷ கடிக்கின்னு சிறப்பான மருந்து மாத்திரை வச்சிருந்தால பொழச் சான்,இல்லைன்னாகொஞ்சம் செரமமா போயிருக்கும்ன்னு சொன்னாங் களாம்,

எவ்வளவு வேகமா பாம்பு கடிச்ச விஷயம் அவுங்க வீட்டுக்கு தெரிஞ்சிருச்சி ன்னு தெரியல.மடமடன்னு வீட்டுல இருந்தும் தெருவுல இருந்தும் வந்துட்டா ங்க,அவன் அம்மா மில்லுல வேலை செய்யிறா,அவுங்க அப்பா லோடு மேனா இருக்குறாரு பத்தாக்கொற பொழப்பு,அவன் இருக்குற தெருவுல முக்காவாசி ஜனம்அப்பிடித்தான்.பாவம்வறுமைக்குவாழ்க்கைப்பட்டவுங்க,என்னசெய்வாங்க சொல்லுங்க,கெடச்சவேலையப்பாத்துக்கிட்டுகௌரவமா பொழப்பு நடத்திக் கிட்டு இருக்காங்க,என்னதான் கஷ்டம்ன்னு வந்தப்பக்கூட தடம் பொறலாம இருக்குறவுங்க,ஆமா,

இப்பிடி இருக்குற வீடுகள்ல புள்ளைங்களப் பெத்த தகப்பன் எப்பிடி நிம்மதியா தூங்க முடியுமுன்னு சொல்லுங்க, அது போல எல்லா வீடுகள்லயும் நெறஞ்சி கெடக்குற பிரச்சனைய வச்சிக்கிட்டு எப்பிடி நிம்மதியா இருக்குறது சொல் லுங்க நிம்மதியா எப்பிடி தூங்கவாங்க தப்பன் மார்க சொல்லுங்க,,?

மாசச் சம்பளம் வாங்குறவுங்க சம்பளம் வாங்குன ஒடனே மலிகைக்கடைக்கு அரிசிக் கடைக்கு,பால்க்காரருக்குன்னு குடுத்தது போக தவணைக்கு வாங்குன துணிக்கடையில இருந்து மத்தது மத்தது வரைக்குமா அடைச்சி சரிக்கட்டி கடன்வாங்குன யெடத்துலஅவுங்களுக்குநல்ல புள்ளையாகி வந்து மீதத்த வீட்டுல வச்சி கணக்குப்பாத்து கௌரவமா குடும்பம் நடத்தீட்டு வர்ற பாங்கு க்கே ஒருதனிசலாம்போடணும், இவுங்கஇப்பிடின்னா கூலிஜனம் இருக்கா ங்களே அவுங்க பாடு இவுங்கள விட பெரும்பாடு,வாரக்கடைசியில சம்பளம் வாங்குன கையோட சீட்டுப்பணம்,தவணைக்கி நிக்கிற கடன் மத்தது மத்த தெல்லாம் போக அவுங்க கையில நிக்கிறத வச்சி கும்பத்த ஓட்ட படுற பாடு இருக்கே அப்படியாப்பட்ட வீட்டுல தகப்பன் எப்பிடி நிம்மதியா தூங்குனாவான் சொல்லுங்க,இது ஊடு ஊடா புள்ளைகளுக்கு மொத்தமா வர்ற படிப்புச்செலவு, ஆஸ்பத்திரிச் செலவு கல்யாணம் சடங்கு நல்லது பொல்லதுன்னு ஏகப்பட்டத சொமந்துக்கிட்டு அலைய வேண்டியிருக்கு.இதையெல்லாம் மனசு பூராம் சொமந்துக்கிட்டு இருக்கப்ப எப்பிடி அவுங்க நிம்மதியா தூக்கம் வரும் சொல் லுங்க,

”இப்பிடித்தான் ராவும் பகலுமா தூங்காம தேவுடு காத்துக்கிட்டு இருந்த மாதிரி இருக்காங்க பெரும்பாலான் குடும்பத்துல,இந்த லட்சணத்துல நம்ம அவுங்கள கொற சொன்னமுன்னா எப்பிடி,,? ஒரு வகையிலபாத்தாஅவுகளநம்ம கையெ டுத்து கும்புடணும். இதுல ஒங்கவீட்டுக்காரரு எவ்வளவோ பரவாயில்லன்னு நெனைச்சிக்கங்க,அவருஎன்ன தப்புத்தண் டாவா செய்யிறாரு,ராத்திரி கண்ணு முழிச்சிபடிக்குறாருன்னு சொல்றீங்க,,, எழுதுறாருன்னு சொல்றீங்க.,, அப்பறம் பொழுதுபோகலைன்னாகம்ப்யூட்டர் முன்னாடி உக்காந்துருக்காருன்னு சொல் றீங்க,இது ஒரு குத்தம்ன்னு நீட்டி மொழக்கி நித்தம் பேசிக்கிட்டு இருந்தா எப்பிடி,,,?”

”வேணுமுன்னா ஒண்ணு செய்யிங்க, நீங்களும் அவர் கூட சேந்து முழிச்சிக் கிட்டு இருங்க,சரியாப்போகும் பிரச்சனை, என வந்தவர்கள் இவன் மனைவி யைப் பார்த்துச் சொல்லும் போது ஆமாமாம் இவரை மாதிரி ராப்பூரா முழிச் சிக்கிட்டு திரிஞ்சா அவ்வளவுதான், நான் போயி சேந்துருவேன் சீக்கிரம். எனச் சிரிப்பாள்.போயிச்சேரு அப்பிடியாவது எனக்காவது நல்ல காலம் பொறக்கட் டும் என இவன் பதிலுக்கு சொல்லி சிரிக்க அந்த இடமே ஒரே சிரிப்புக் களமாகிப் போகும்,

அந்தச்சிரிப்பிற்கு ஊடாக அட சும்மா இருங்கம்மா எல்லாரும்,தலைக்கு மேல வளந்த புள்ளைங்கள ஆணெண்னும் பொண்ணுன்னுமா வச்சிருந்தாலும் கூட இவுங்க ரெண்டு பேரும் இன்னும் இளம் காதலர்கள் மாதிரிதாதான திரியிறா ங்க,சும்மா நம்ம முன்னாடிதான் இது மாதிரியான பேச்செல்லாம்”,,,,,என்கிற சொல்லாக்கப் பதமும் சேர்ந்து கொள்ளும்/

”அட போங்கப்பா நீங்க வெளையாட்டுக்கு இப்பிடி பேசுனாலும் ஒங்க ரெண்டு பேரு மனசுக்குள்ளயும் ஒருத்தர் மேல ஒருத்தர் பூட்டி வச்சிருக்குற அன்பு இந்த உலகத்தளவு பெருசு” எனச்சொல்லிவிட்டும் பேசி விட்டுமாய் கலைவா ர்கள்.

இது போலாய்த்தான் தினசரி நிகழ்வாய் அவர்களது பேச்சும் பழக்கமும் இருந்த விடுமுறை நாளன்றின்காலையில் அவன் எழ மணி பத்து ஆகிப் போனது.

இன்றுவிடுமுறைநாள்தானே,அப்படியேகுளித்துமுடித்துவிட்டுபஜார் பக்கமாக போய் வரலாம் என்கிற யோசனையில் இருந்தவன் குளித்து முடித்து இவனு க்குப் பிடித்ததான பேண்ட் சர்ட் எடுத்துப்போட்டுக்கொண்டு நின்ற பொழுது ஆட்டுக்காரர் வந்தார்,

வேகமாக வந்து நின்ற அவரிடம் பேண்ட் சர்ட் நன்றாக இருக்கிறதாஎனக் கேட்க முடியுமா,,,,?இவனுக்கு மட்டும் பிடித்திருந்தது மாதிரி யானஒன்றை அடுத்தவரிடம் காட்டி எப்படி நன்றாக இருக்கிறதா எனக் கேட்டு விட முடியும்,,?

பிரௌன் கலர் பேண்டும் வெளிர் பச்சை வர்ணத்தில் அப்பாவித்தனமான ஒரு சட்டையும்அணிந்திருந்தான்,இருக்கிறதில் இவனுக்குப் பிடித்தமானது.லக்கி சர்ட் லக்கி பேண்ட் எனவெல்லாம் சொல்லிவிட முடியாது.ஆனாலும் அந்தக் கலர் ஜோடிதான்,இவன் மனம் கவர்ந்ததாக/

எப்பொழுதும் எங்கு போனாலும் சரி அதையே எடுத்துப்போட்டுக்கொள்வான். அந்த ஜோடியைப்போடுகிற நாட்களில் இவனிடம் தேடி ஓடி வந்து உட்கார்ந்து கொள்வதாக ஒரு மன மகிழ்ச்சி இருக்கும்.அது போலான மன மகிழ்ச்சி பணியில் இருக்கிற நாட்களிலும் பிற நாட்களிலுமாய் பிரதிபலிக்கிற போது அன்றைய தினம் சிறக்கிறதுதான்,

அதை போய் அவரிடம் சொல்லவும் கேட்டு விடவும் முடியாதுதான், அப்படி யே கேட்டாலும் அவர் இருக்கிற அரிபரியில் அரக்கப்பறத்தலில் பெரிதாக ஒன்றும் சொல்லி விடமாட்டார்.

அவர் சொல்கிறார்,”முன்னப் போல எங்க மேய்ச்சல் இருக்குது சார், முன்ன யெல்லாம் ஐம்பது உருப்படி வரைக்கும் வச்சிருந்தேன்,அப்பிடிவச்சிருந்தப்ப மேய்ச்சல் நெலம் தேடிப் போவேன்,காலையில சோத்தக்கட்டிக்கிட்டு போற வன் மதியம் வரைக்கும் எங்கிட்டாவது எட்ட இருக்குற காட்டுப்பக்கமா போயி மேச்சிட்டுக்கிட்டு இருப்பேன், மதியமான ஒடனே ஆடுகள கொஞ்சம் மேய்ஞ்ச அலுப்புல படுத்து தைப்பாற வுட்டுட்டு அப்பிடியே நானும் சாப்புட் டு முடிச்சிட்டு கொஞ்சம் யெழப்பாறிட்டு மூணுமணிவாக்குல பைய பத்திக்கிட்டு வந்தேன்னா ஆடுகளும் காடு கரைகள்ல இருக்குற புல்லுகள மேய்ஞ்சிக்கிட்டு வரும். புல்லுகளும் அப்ப அப்பிடி வெளைஞ்சி கெடக்கும்,ஆடுகளும் அத தேடித் தேடிப் போயி தின்னும்,

“வெளைஞ்சிகெடக்குற புல்லுகளும் வா வா என்னைய தின்னுன்னு கூப்புடும், ஆடுகளும் இந்தா வர்ரேன்,,இந்தா வர்ரேன்னு,,,போயி திங்கும்,அப்பிடியெல் லாம் காடு கரை நெறைய பச்சைக வெளைஞ்சி கெடந்த காலத்துல ஆடு வளக்க பிரியமா இருந்துச்சி ,இப்ப அந்த பிரியமும் போச்சி ,ஆடு வளக்குற சூழ் நெலையும் இல்ல,பாதி ஆடுகளுக்கு மேல வித்துப்புட்டேன். மேய்ச்சலுக்கு கொண்டு போக நெலமும் இல்ல,எங்கயும் தண்ணியையும் காங்கல,நான் இருக்குற யெடத்துலயும் வீடுக நெருக்கமா வந்துருச்சி,முன்ன மாதிரிஆடுகள வெளியிலகாத்தாட நிக்க விட முடியல,இதுல திருட்டு வேற, ஆடுக மேஞ்சிக் கிட்டே இருக்குற போது எவனாவது வந்து ஈரத்துண்ட போட்டு போத்தி தூக்கீட்டுபோயிருறான்,இந்தஎழவெல்லாம்வேணான்னுதான் பேசாம இருக்கு ற உருப்படிகள வித்துப்புட்டு கையில காச தேத்திக்கிட்டு பேசாம இருக்குற வேலையப்பாத்துட்டு கெடைக்கிற சோத்த தின்னுக்கிட்டு இருக்க லாமுன்னு சொன்னா கேக்கமாட்டேங்குறா வீட்டுக்காரி அவளுக்கு நம்ம கஷ்டம் எங்க தெரியப் போகுது”. என்கிறார்,

அவரது பேச்சின் வாஸ்தவமும் கனமும் புரிந்தவனாக கொஞ்சம் அமைதி காத்துவிட்டு கேட்கிறான்,”அய்யா நமக்கு தெரிஞ்சவுங்க யாரும் மரம் வெட்டுறவுங்க இருக்காங்களா” என/

வீட்டு வெளி யில் பக்க வாட்டாக முளைத்திருந்த வேப்ப மரம் ஒன்று தன் கிளை விரித்து சக்திக்கு மேலாக வளந்திருந்தாகவும் அக்கம் பக்கம் அளவுக்கு மீறி கிளை விரித்து பரந்து இருந்ததாகவும் பட்டது.அதை கொஞ்சம் வெட்டி விட்டும்கவாத்துப் பண்ணியது போல் அழகுற செய்து விட்டால் ஒன்று போல ஆகி அப்புறமாய் முளைக்கிற போது நன்றாக முளைக்கும் என்கிற யோசனை வந்த சமயங்களில் மரத்தை ஒரு முறை ஏறிட்டுப் பார்ப்பதுண்டு,

மரக் கிளைகளின் ஊடறுத்துப் போகிற கேபிள் வயரையும் வீட்டிற்கு வருகிற சர்வீஸ் வயரையும் எட்டிப்பிடிக்கிற மரக் கிளைகளைப் பார்க்கிற சமயங்களி லுமாய் முதல் வேளையாய் இதை வெட்டி விட வேண்டும் என்கிற நினைப்பு மனதில் தீப்பொறியாய் கிளம்பி எறிவதுண்டு,

எறிதலின் முனை பற்றி மனதினுள்ளாய் கூடு கட்டி கொண்டிருந்த நினை வுகள் ஒன்றாய் கை கோர்த்து மரத்தை வெட்டிவிட ஆள் தேடி ஒரு வாரமாய் அலைந்து கொண்டிருந்தான்,

அலுவலகத்திற்கு போகிற முனைப்பிலும் அமுக்கும் வேலை அவரசரங்களி லுமாய் மறந்து போய் விடுகிறான்.அல்லது அதற்கென ஆள் தேடி அலைய நேரம் வாய்ப்பதில்லை.

அப்படி வாய்க்கிற சமயங்களில் ஆள் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தா லும் நல்ல வேலைக்காரனாக அமைவது அரிதாகிப் போய் விடுகிறது. அதிலே யே அலுத்துப் போய் அப்படியே விட்ட சமயங்களிலன்றினான ஒரு விடுமு றை தினத்தின்றின் காலையில் இவரது சந்திப்பு கிடைத்திருப்பது மிகவும் சந்தோஷம் அளிப்பதாகவே/

அவரிடம் தயங்கித் தயங்கித்தான் கேட்டான்,உடனே அவர் ”என்ன விஷயம் சொல்லுங்க,மரம் வெட்டணும் அவ்வளவுதானே. நானே வெட்டீருறேன், அடுத்தவுங்களுக்குக் குடுக்குறத எனக்குக்குடுத்துருங்க என்றவர் ஏங்கிட்ட மரம் வெட்டுற அரிவா இல்ல,வாடகைக்குதான் எடுக்கணும், இங்க பக்கத் துலஅந்தக்கடை இல்ல பஞ்சாயத்து போர்டு ஆபீஸ்கிட்ட இருக்குற கடையில தான்எடுக்கணும்,நமக்கு தெரிஞ்சவுருதான்,

”நீங்கநெனைக்கிறமாதிரி.எனக்குசொந்தக்காரரெல்லாம்இல்லஅவரு,ஒங்களப் போல பழக்கம்தான்,நல்ல மனுசன் ,பழகவும் வைக்கவும் தன்மையா இருப் பாரு,ஒரு நா அங்கிட்டுப் போனப்ப புதுசா கடை தெறந்துருக்கேன்.யாராவது தெரிஞ்சவுங்கஏதும் சாமான் வேண்டுமின்னு சொன்னாங்கன்னா சொல்லுங்க ன்னு சொல்லீருந்தாரு.கட்டட வேலைக்குத் தேவையான ஜாமான்க அத்த னையும் வச்சிருக்காரு,தட்டு மம்பட்டி,தண்ணி ட்ரம்முன்னு வச்சிருக்கறது மட்டுமில்லாமஅருவா,கோடாரின்னு வச்சிருப்பாரு அவர் கிட்டப்போயி எடுத்த முன்னா கொஞ்சம் வாடகையும் கொறச்சலு.கொஞ்சம் முன்னப்பின்ன திருப்பி குடுத்துக்கிறலாம் எடுத்த நாள்லயிருந்து என்றார்.

சரி எடுத்துட்டு கொஞ்சம் பைய வாங்க,நானும் காலைச்சாப்பாடு சாப்புடல இன்னும்என்றவன் அவர் போன பாதையையே பார்த்துக்கொண்டிருந்து விட்டு வீட்டிற்குள்ளே நுழைகிறான்,

பின் புறமுமாயும் வாசல் வைத்திருந்த வீடு.

மரத்தை அவருக்கு காண்பித்து விட்டு அவர் போனதும் வீட்டின் பின்புற கத வை திறக்கச் சொல்லிஉள்ளே வருகிறான்.கை காலை கழுவிக்கொண்டு,

இன்றைய நேற்றைய பழக்கமா அது .கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்களு க்கும் மேலான பழக்கம்,

வீட்டு நடையை விட்டு இறங்கி பக்கத்து வீட்டுக்கு போய் வந்தால் கூட காலை கழுவி விட்டுத்தான் வீட்டிற்குள் நுழைவான், காலைக் கழுவும் போது கை மற்றும் முகமும் சேர்ந்து கொள்ளும்,

கழுவிய கையையும் காலை யும் துடைத்து விட்டு சாப்பிட்டுக் கொண்டிருக்கு ம் பொழுது வந்து விட்டார் ஆட்டுக்காரர்,இவன் பேண்ட் சர்ட் மாட்டி பஜாருக்கு க் கிளம்ப தயாராய் இருந்தான்,

அவர் கொஞ்சம் மெதுவாகத்தானே வருவார் அதற்குள்ளாக பஜார் போய் விட்டு வந்து விடலாம் என நினைத்தவனாய் இருந்தவனின் கணக்கை பிழை என முன் அறிவித்து வந்து விட்டார் ஆட்டுக்காரர்,

வந்தவர் இவனை கூப்பிட்டு மரத்துக்கு மேல ஏறுனப் பெறகு இந்த அரு வாள ஏங்கிட்டக்குடுங்க என்றார்,சரி கொடுத்து விடலாம் என அவர் மரம் ஏறியதும் அவரிடம் பால் கயிறு ஒன்றை வீசி அதன் ஒரு முனையை இவனுக்குப் போடச் சொல்லி அவர் போட்டதும் அரிவாளை கயிற்றில் கட்டி அவரை மேலே இழுக்குமாறு சொன்னான்.

அவர் கயிறை இழுத்ததும் அரிவாள் அவர் கைவசம் ,இப்பொழுது மரத்தின் மேல் அவரும் அவர் வெட்டப் போகும் கிளைகளும்/ கீழே இருந்து இவன் கையை மட்டும் காட்டக்காட்ட அவர் வெட்டிக் கொண்டிருந்தார்

அவர் வெட்டிப்போட்ட கிளைகள் இலைகளைச் சுமந்து வீட்டின் பக்கவாட்டு வெளியெங்குமாய் சிதறிக்கிடந்த போது வச்சி வளத்த மரங்க தளுக்காம போ னப்ப தானா வெத விழுந்து வளந்த மரம் இப்ப விஸ்வரூபம் எடுத்து கை கால் விரிச்சி பூவும் பிஞ்சிம் காயும் கனியுமா நிக்கிறப்ப வெட்ட வேண்டி யதாப் போகுதே என்கிற நினைப்பு ஒரு பக்கமாய் இருந்த போதிலும் கூட மண் பிளந்து துளிர்த்து வளர்ந்து கிளை பரப்பி இலை விரித்து பூவும் பிஞ்சும் காயும் கனியுமாய் நிற்கிற மரங்களை ஊன்றுவதை விடுத்து வெட்ட வேண்டியதிருக் கிறதே என்கிற ஒரு பக்கமாய் துளி விட்ட போதிலும் கூட வெட்ட வேண்டியதி வெட்டினால்தான் வளர வேண்டியதும் வளர்கிறது என்கிற சாமா தானத்துடன் ஆட்டுக்காரர் வெட்டிப் போட்ட பெரிய பெரிய மரக்கிளைகளை மொத்தமாய் ஓரிடத்தில் சேர்த்து வைத்து துண்டு துண்டாய் வெட்ட ஆரம் பிக்கிறான்,

தன்னால்முடியாது இது,என நினைக்கவைத்ததும் ,இது முடியுமா என மனத ளவில் மளைப்பேற்படுத்தி தளர்வுறச் செய்ததுமான வேலை நினைத்தை விட சீக்கிரமாகவும் சிறிது கடினம் காட்டியுமாய் முடிந்து போகிறது,

8 comments:

Thulasidharan V Thillaiakathu said...

நன்றாக இருக்கிறது சகோ

கீதா

vimalanperali said...

நன்றியும் பிரியமும்...!

vimalanperali said...

நன்றியும் அன்பும்,,,,/

வலிப்போக்கன் said...

நட்டு வைக்காத மரத்தையே வெட்டும்போதுவராத கவலை.... நட்டு வைத்தமரத்தை வெட்டும்போது வருவது...சுயநலமாகத்தான் தெரிகிறது..

vimalanperali said...

நன்றியும் அன்பும்,,,,!

vimalanperali said...

நன்றியும் அன்பும்,,,,,!

Kasthuri Rengan said...

தொடருங்கள் தோழர்

vimalanperali said...

வணக்கம் மது சார் நன்றியும் உள்ளார்த்தமும்,,,/