நீளப்பறந்த ரோட்டில் அந்த கடையில் டீக்குடிக்க இவனுக்கு மிகவும் பிடித் திருந்ததுதான்.
அதற்காக மற்ற டீக்கடைகளில் டீக்குடிக்க இவனுக்கு பிடிக்காமல் இல்லை,
எப்போதாவது கொஞ்சமாய் பிடிக்காமல் போவதுதான்.சமயங்களில்மிகவும் பிடித்துப் போகும் அதற்கு ,காரணம் இல்லாமல் இல்லை.
பெரும்பாலுமாய் கூரைக் கடையில் சாப்பிடுவான்.
அது கூரைக்கடை இல்லை,அதற்கு பெயர் அப்படியே நிலைத்து விட்டது, கடையின் முன் இருக்கிற வெளியில் கூரை போட்டு தாழ்வாரம் இறக்கி அதன் உள்தான் டீக்கடை இருந்திருக்கிறது,
கூரை தாழ்வாரத்தில் டீயும் தாழ்வாரத்திற்குப்பின் ஹாலாக விரிந்த கட்டிட முமாக இருந்திருக்கிறது.இப்பொழுதும் கட்டிடத்தின் சுவரில் எங்காவது ஒரு மூலையில்,,,,,,,,,,,மெஸ் என எழுதியிருப்பதை பார்க்கலாம்.
டீக் குடித்துக் கொண்டிருந்த ஒரு நாளில் இவன் மனம் உறுத்தி கேட்க நினைத்திருந்த கேள்வியை கேட்டே விட்டான், டீ மாஸ்டரிடம்/
அவரும் ”ஆமாம் சார் இதுக்கு முன்னாடி சாப்பாடு மெஸ் இருந்துச்சி, காலை யில நைட்டுக்கு டிபன் கெடையாது,முழுசா சாப்பாடுதான்,
”காலையில பதினோரு மணிக்குக்கெல்லாம் சாப்பாடு ரெடியாயிரும், அப்பயி லயிருந்து சாய்ங்காலம் நாலு மணி வரைக்கும் ஓடும்,
”சும்மா சொல்லக்கூடாது,நல்லா ஓடும்,சமயத்துல ஒரு சிப்பத்துல பாதிவரை க்கும் கூட காலியாகிரும் அரிசி.டிபன் சாப்புட்டு அலுத்துப்போனவுங்க, ஒங்க ளப் போல மூணு நேரமும் சோறு சோறுன்னு சாப்புடுறவுங்க இன்னும் இன் னுமா சோறு மேல பிரியம் உள்ளவுங்களுக்கு எல்லாத்துக்கும் இந்தக் கடை பிரியம் ஆகிப் போச்சி.
மூணு நேரமும் சோறா சாப்புடுறீங்கன்னு ஒங்கள தப்பா சொல்லல சார்,நான் அப்பிடித்தான் மூணு வேளை இல்லை,ஆறு வேளையும் சாப்பாடு வச்சாக்கூட சாப்புடுவேன்,
”சோத்தாலா அடிச்சவுங்கன்னு சொல்வாங்கல்ல,அது மாதிரிதான் சார் நானெ ல்லாம்,நமக்கு அப்பிடி சாப்டாத்தான் சாப்ட்ட திருப்தியா இருக்கு, ஆனா இப்ப ஆசைப்பட்டா கூட அப்பிடி சாப்புட முடியல,வீட்ல இட்லி தோசைதான் போடு றாங்க,அத விட்டு வெளியில கடையில சாப்புடலாம்ன்னு பாத்தாலும் அந் நேரத்துக்கு கடையில சோறு கிடைக்கிறதுங்குறது அபூர்வம்தான், ஊரெல் லாம் தேடிப்பாத்தலும் கெடைக்காது.தலை கீழா நின்னு தவம் பண்ணுனாக் கூட ம்ஹூம் கெடைக்காது,
”அப்பறம் பூக்காதத காய்க்கச் சொன்ன கதையா ஆகிப் போகும்.இது எதுக்கு வீண்வம்புன்னு வேணாம் இதுக்காக போயி சாப்பாட்டுக் கடைக்காரங்கள புண் படுத்தக் கூடாதுன்னும் நொந்துக்கக்கூடாதுன்னும் விட்டுட்டேன்.
நான் பரவாயில்ல,ராம்நாட் பக்கமிருந்து வந்து இங்க கௌவர்மெண்ட் வேலை பாக்கவந்திருக்குற ஒருத்தர்ன்னா காலையில ஆபீசுக்குப் போயிட்டு காலை யில பதினோரு மணிக்கு சோத்த வடிச்சி யெறக்குன ஒடனே வந்துருவாரு,
அவரு சொல்லுவாரு.பதினோரு மணிக்கு வடிச்சி யெறக்குற சோத்த காலை யில ஒன்பது மணிக்கெல்லாம் ஆக்கினீங்கன்னா என்னையப்போல ஆள்களு க்கு ஒதவியா இருக்கும்ன்னு/
அவரு சொன்னதுக்கு கடைக்காரரு சொன்னாரு,”இருக்கும்தான்,இதுக்கே எங் களுக்கு வேலை செய்ய நாக்கு தள்ளிப் போகுது. நாளுக்கு நாளு சாப்புட வர்ற ஆள்க எண்ணிக்கை கூடிக்கிட்டே போகுது, எங்களுக்கு ஆள்க எண்ணிக்கை கூடக் கூட வருமானந்தான, சம்பாத்தியந்தானன்னு நெனைச்சாக்கூடா எங்க ஒடம்பு நலனையும் பாக்கனுமில்ல,
“சம்பாத்தியம்சம்பாத்தியமுன்னுஓடிக்கிட்டுதிரிஞ்சாஅப்புறம்நாங்கஆஸ்பத்தி ரியில போயி கெடக்க வேண்டியதுதா,எங்கள வந்து பாக்க நீங்களெல்லாம் வரிசை கட்டிவரணும்பாத்துக்கங்க,ஒங்களப்போலகாலையில சீக்கிரமாவும், சாய்காலம் வரைக்குமா கடைய தெறந்து வச்சிருக்கச்செல்றவுங்க நெறயப் பேரு இருக்காங்கதான்,
“நீங்களாவதுகாலையில சீக்கிரம் சூடான சாப்பாடு குடுங்கன்னு கேக்குறீங்க, இன்னும் சில பேர்ன்னா பழைய சோறு கெடைச்சாக்கூட போதும் பரவாயில் லன்னு சொல்றாங்க,
“அவுங்க சொல்ற படி செய்வோம்ன்னு நைட்டு கொஞ்சம் சாப்பாடு ஆக்கி வைச்சி காலையில மோர் ஊத்தி பழைய சோறா குடுத்துறலாம்ன்னு பாத்தா அதுக்கும் வழியில்லாம ஆகிப் போச்சி/
அப்பிடி சிலரு கேட்ட புதுசுல பழைய சோறு வித்திக் கிட்டிருந்தோம் ,அதுக் கும் கெராக்கி கூடிப் போச்சி.அதுல கவனம் போனா அப்புறம் பதினோரு மணிக்கு சோத்த வடிச்சி ரெடியா வச்சிக்கிற முடியாதுன்னும் யேவாரம் கெட்டுப் போயிருமுன்னும் ஒரு முடிவு எடுத்தோம்,
”காலையில பதினோரு மணிக்கு இறக்குற சோத்த பத்து மணிக்கு முன்னா டியே அடுப்புல இருந்து யெறக்குறதுன்னு முடிவு பண்ணுனோம்.அது படியே காலையில ஒன்பது மணிக்கெல்லாம் சோறு ரெடியா இருக்குற படி பாத்துக் கிட்டோம்.ஒன்பது மணின்னா டாண்ணு ஒன்பது மணிக்கு சோத்த வடிச்சி யெறக்கமாட்டோம்.எட்டுஎட்டரைமணிக்கெல்லாம்சாப்பாடுரெடியா இருக்கும். அது போலசாயங்காலம்ஏழுமணி வரைக்கும் வைச்சிருக்குறதுன்னு முடிவு பண்ணுனோம்.அது போல செய்யவும் செஞ்சோம்,”ஏழு மணின்னா அது எட்டு மணி வரைக்கும் கூட ஆயிரும்ன்னு சொல்வாரு கடைக்கார ஓனரு,
“அவரு இருந்த வரைக்கும் யேவாரம் நல்லா இருந்துச்சி, அவரு போனதுக் கப்புறம் கடையும் போச்சி.யேவாரமும் போச்சி,
பையங்களால கட்டி இழுக்க முடியல,அப்பிடியப்பிடியேமெல்லமெல்ல மெஸ் ஸ காலி பண்ணீட்டு அதோட மிஞ்சுனஅடையாளம இந்த டீக்கடைய வச்சிரு க்கோம்.
”இந்தக்கடையேவாரத்துக்குஒண்ணும்கொறவில்ல,ஒங்களப்போலபுண்ணியவாங்ககடைக்கு தொடர்ந்து வந்து ஆதரவு குடுக்குறவரைக்கும் யேவாரத்துக்கும் சம்பாத்தியத் துக்கும் கொறவில்லை,
“மெஸ்ஸீ நடந்துக்கிட்டு இருக்கும் போது மெஸ்ஸீ ஓனருக்கு நான் வலது கையப்போலஇருந்தேன்,அவருபோனதுக்குஅப்புறம்அவரு புள்ளைங்க எடுத்து நடத்துற இந்த டீக் கடையில மாஸ்டரா நின்னுக்கிட்டு பொழுத ஓட்டிக்கிட்டு இருக்கேன்,
எனக்குன்னு அவரு புள்ளைங்க தனியா சம்பளமுன்னு ஒண்ணு நிர்ணயிக்கல, ஒங்களுக்குஎவ்வளவு தெனசரி தேவையோ அத எடுத்துக்கங்கன்னு சொல்லீட் டாங்க,நானும்செஞ்சவேலைக்கு வஞ்சனையில்லாம ரூவா எடுத்துகிருவேன்,
ஏங்கிட்ட ஒரு கெட்ட பழக்கம் இருக்கு,வாரத்துக்கு ஒரு தடவஒரு குவாட்டர் பாட்டுல உள்ளதள்ளலைன்னாதூக்கம்பிடிக்காதுஎனக்கு,,/
அது அந்தப் புள்ளைகளுக்கும்தெரியும்.அவுங்கஅதுக்குன்னுதனியாகாசு எடுத் துக்குற சொல்லீருவாங்க, சம்பளம் போக/
”அது மட்டும் இல்ல தண்ணி சாப்புடுற அன்னிக்கி ராத்திரிவீட்டுக்குப்போகாம இங்கயே படுத்துக்கிற சொல்லீறுவாங்க,மறுநா காலையில சீக்கிரம் எந்திரிச்சி கடைய தெறக்கணும்ன்னும் சொல்லீருவாங்க,
“மத்த நாளும் சீக்கிரம் தொறக்குற கடைதான்னாலும் கூட மத்த நாள்ன்னா வீட்டுல இருந்து விடி யால எந்திரிச்சி குளிச்சி முடிச்சி ரெடியாயி வருவேன், அன்னைக்கி மட்டும் இங்கயே படுத்து எந்திரிச்சி விடியாலையில குளிச்சி முடிச்சி கடை தெறந்துறுவேன்,
“மறு நா ஞாயித்துக்கெழமைதான மதியம் வரைக்கும்தான கடை, கடைய முடிச்சிட்டு வீட்டுக்குப் போனேன்னா ரெடியா இருக்குற கறிச்சாப்பாட்ட சாப்புட்டுட்டு படுத்துருவேன்.
நானும் ஏங்க வீட்டுக்காரி மட்டும்தான் வீட்டுல, புள்ளைங்க ரெண்டையும் கட்டுக் குடுத்துட்டோம்.எங்க ரெண்டு பேருக்கு அரைக்கிலோ கறி எடுத்தாலே அதிகம் .
எடுத்து நல்லா கொழ கொழன்னு கொழம்பு வச்சி யெறக்கி வச்சிருப்பா ,நான் போனதும் ரெண்டு பேருமா பேசிக்கிட்டே சாபுட்டுட்டு அப்பிடியே ஒரு தூக்கம் போட்டு எந்திரிச்சா மறு நா பொழுது விடிஞ்சிரும்.
அப்பிடியே பொழப்பப் பாக்க இங்கிட்டு ஓடி வர்றதுதான். எனச்சொன்னவர் கொடுத்த டீயை வாங்கிக்குடித்துக்கொண்டே அண்ணாந்து பார்த்த பொழுது கூரை இருந்த இடத்தில் வேயப்பட்டிருந்த ஊதாக்கலர் தகரம் இருந்தது.
டீக்கு காசு கொடுத்து விட்டு கடையை விட்டு வரும் பொழுது சொல்கிறார் கடைக்காரர் ,ஒங்கள ஒரு சாயல்ல பாக்கும் போது மெஸ் இருந்தப்ப காலை யில சாப்பாடு கெடைக்குமான்னு கேட்டு வந்தவரு மாதிரியே இருக்கீங்க என/
அதற்கடுத்ததாய் நீளப் பறந்திருந்த சத்திய மூர்த்தி ரோட்டில் பழைய பேப்பர் கடைக்குப் பக்கத்தில் இருந்த கடையின் டீ இவனை மிகவும் ஈர்த்திருந்தது.
காரணம் கூரைக்கடையில் கிடைக்காத மரியாதையும் மதிப்பும் இங்கு கிடைக் கும், இவனுக்கென மட்டும் இல்லை,அந்தக் கடைக்கு டீக்குடிக்க வருகிற யாருக்கும் அந்த மரியாதை சொந்தமாகித்தெரிவதுண்டு.
கடையில் சுட்டு அடுக்கப்பட்டிருக்கிற நான்கைந்து ரகமான வடைகள்,பன், பிஸ்கட், இது போக தட்டை முறுக்கு,சீடை, தேங்காய் பன் என இன்னும் இன்னுமான ரகத்திற்கு ஒன்றானவைகளை வாங்க வருகிறவர்களுக்கும் அந்த மரியாதை சொந்தமாகித் தெரிவதுண்டு.
பெரிதாக ஒன்றுமில்லை,வாங்கண்ணே,வாங்க தம்பி,வாங்க சார்,,,,,டீ சாப்புடுறீ ங்களா,,பன்னா வடையா எது வேணாலும் எடுத்து சாப்புடுங்க இந்தா டீப் போ டச் சொல்லுவோம் என்கிற சொல் பதங்களே வருகிரவர்களை சிறிது ஆற்றுப் படுத்தி அமர வைக்கும்,அப்படியான அமர்வு கடைக்கு வருகிறவர்களுக்கு ஒரு சிறிய மன இளைப்பாறலாகிப் போகும்,அந்த மன இளைப்பாறல் பெரும்பா லானவர்களுக்கு பிடித்திருந்தது,
சிலருக்கு அது அனாவாசியமாய் தெரிந்திருக்கலாம்,என்ன இது கடைக்கு வந் துட்டவுங்களப்புடிச்சிவாங்க உக்காருங்கன்னுக்கிட்டு,அதான் வந்துட்டமுல்ல, இவுங்க வாங்கன்னு சொன்னாப்புல வந்துறப் போறமா,இல்ல வாங்கன்னு சொல்லாம இருந்தாப்புல வராம இருந்துறப் போறமா சொல்லுங்க.சும்மா போ ட்டுக்கிட்டு என்பார்கள்,
அதெல்லாம் சொல்லில் கணக்கு இல்லை அவர்களுக்கு.எதற்க்கெடுத்தாலும் நொட்டை சொல் பேசித் திரிகிறவர்களை அவர்களும் சேர்ப்பில் வைத்துக் கொள்வதில்லை, அப்படி ஆட்கள் யாரென கடைக்காரர்களுக்கும் மாஸ்டருக் கும் நன்றாக அடையாளம் தெரியும்.அதனால் அவர்களை கண்டு கொள்கிற அளவிற்கு அவர்களது பேச்சை கண்டு கொள்வதில்லை.
பிடிமானத்தின் இறுக்கமும் தளர்வும் அந்நேரத்தின் அந்நேரங்களில் மிகச் சுளு வாய் காட்சிப்பட்டுப் போகிறதுதான்.
காட்சிப்பட்ட சுளுவுக்குள் சுமந்தளுத்துகிற பாரமாய் மனம் எப்பொழுதும் எந் நேரமுமாய் ஓலமிட்டுக்கொண்டும் கைதட்டி சிரித்துக் கொண்டுமாய்/
ஏன் இப்படி என்னஏது என சுயம் காட் டி விசாரிப்பவர்கள் கொஞ்சமேயானா லும் கூட சொல்லிச்செல்வது இவனது அன்றாடமாகிப் போகிறதுதான்,
சொல்லி விடுவான் மனதிற்குள் ஒன்றும் வைத்துக்கொள்ளாமல்/.நண்பன் கூட வைவான் ”ஏண்டா இப்பிடியேவா பிளாட்டா இருக்குறது, கொஞ்சம் கூட நெளிவு சுளிவு இல்லாம,ஒனக்குன்னு ஏதும் ஒளிவு மறைவு கிடையாதா”,என அவன் கேட்கிற போது சொன்னான்,
“அப்பிடியெல்லாம் நீ நெனைக்கிறது மாதிரியெல்லாம். இல்ல,எனக்குள்ளயும் ஒளிவுமறைவு எல்லாம் உண்டு,ஆனா அத வெளியில காட்டிக்கிற மாட்டேன். சில பேரப் போல என்னைய கறாரா காண்பிச்சிக்கிறனுங்குறதுக்காக மூச்ச புடிச்சி இழுத்து நின்னுக்கிட்டு நெஞ்ச வெடைச்சமானிக்கி தம் கட்டிக்கிட்டெ கிட்டெல்லாம் திரிய மாட்டேன்,எப்பயும் போல இருக்குறதுதான்,இப்ப என்னன் னா இறுக்கமா மொறைச்சிக்கிட்டு யாரும் கூடயும் சரியா பேசாம செய்யாமா சிரிப்பு வந்தாக்கூட சிரிக்காம உம்முன்னு உர்ன்னு திரியிற ஆளா இருக்க எனக்கு பிடிக்க மாட்டேங்குது, அன்பா பாசமா இலகுவா இயல்பா இருப்போம். என்ன இப்ப கொரைஞ்சிறப் போகுது.நெனைச்சா நெனைச்சிக்கிட்டு வேணா போகட்டும்,இவன்ஒண்ணும்தெரியாதஇளிச்சவாப்பையன்னு,அதுனாலஎனக்கு ஒண்ணும் நட்டம் ஒண்ணும் கெடையாது தெரிஞ்சிக்க,
”இது சம்பந்தமா சொல்லணும்ன்னா ஏங் பிரண்ட் ஒருத்தர் சொல்லுவாரு, அவரு கவர்மெண்ட் ஆபீசுல மேனேஜரா இருக்காரு,அவருக்கு அறுபத நெறு க்கி ஆகப் போகுது வயசு.அவரோட வயசுக்கும் அனுபவத்துக்கும் என்னென்ன பாத்துருப்பாரு,என்னென்ன கேட்டுருப்பாரு, எத்தன பேருகிட்ட பழகீருப்பாரு, எத்தனை பேரு கிட்ட நல்லவிதமா கெட்ட விதமா பேரு வாங்கிருப்பாரு, எத்த னை பேருகிட்ட மொகர அடிபட்டுருப்பாரு,எத்தனைபேரு மனசார வாயா ரா வாழ்த்தீருப்பாங்க,எத்தனை பேரு வயிறெரிஞ்சி வைஞ்சிருப்பாங்க, இன் னும் இது போலான நல்லது கெட்டதுக எத்தனைய அவரு வயசுல பாத்துருப்பாரு சொல்லு,
”அவரு சொல்லுவாரு,ஒன்னைய இளிச்சவாயன் மாதிரி இருக்குறயேன்னு சொன்னவன் பெரிசா ஒண்ணும் கெட்டிக்காரனா இருந்துற முடியாது, கெட்டிக் காரனாஇருந்தாஅவன் வாயிலயிருந்து அப்பிடிப்பட்ட வார்த்தை வராது மொத ல்ல, அப்பிடியே அவன் சொல் படி நீஇளிச்சவாயனாஅப்புராணியா இருக்குற துனால ஒனக்கு ஒண்ணும் நஷ்டம் கெடையாது, இன்னும் சொல்லப்போனா கெட்டிக்காரத்தனம் காட்டிக்கிட்டு சம்பிராயம் பேசிக்கிட்டு திரியிறாம் பாரு. அவனுக்குதான் நஷ்டம்,என்ன நம்ம நஷ்டத்த வெளியில காட்டிக்கிருவம், அவன் அப்பிடி காட்டிக்கிற மாட்டான்.அவ்வளவுதானே வித்தியாசம் ஒழிய வேற பெரிசா ஒண்ணும் இல்ல.நீ நீயா இரு,ஒன்னைய அப்பிடி சொன்னவன் அவன்அவனாஇருந்துட்டுப்போறான்.எதுக்காவும்இதுலகாம்பரமைஸ் பண்ணி க்காதன்னுவார்.
உண்மைதான் அவர் சொல்வதும் என இல்லாமல் அன்றிலிருந்து இப்படியே இருந்து விட பழகி விட்டான்.
டீயின் ருசிக்காக இல்லாவிட்டாலும் கூடபழக்கத்திற்காகபோக வேண்டிய கட்டாயமும் தேவையும் ஏற்பட்டுப் போகிறதுதான்.
பழக்கம்,,,,முக தாட்சண்யம் ,அன்பு,தோள் தழுவல்,ஈகை, விட்டுக் கொடுத்தல், மரியாதை,எல்லாம்எல்லாமும் கெட்ட வார்த்தைகளாகவும் வேஸ்ட் லக்கேஜ் களாகவும் ஆகிப் போன காலகட்டத்தில் வாழ்கிற நம்மைப் போன்றவர்கள் இந்த மண்ணில்வாழலாயக் கற்றவர்கள் ஆகிப்போனோமோ என்பான் நண் பன், ஆமாம் என முழுமையாக சொல்லிவிடத் தோணவில்லை. இல்லை என முழுவதுமாக மறுத்துவிடவும் முடியவில்லை.எதற்கு வீண் வம்பு தர்க்கம் என நினைத்து செய்வதில்லை.
அதற்கு காரணம் அந்தக் கடையின் டீ மாஸ்டரும் கடையின் ஓனரும் என்று கூடச் சொல்லலாம்.
அவர் போட்டுத் தருகிற டீயின் சுவை எனக் கூடச் சொல்லலாம்.
கடைக்குள்ளாய் நுழைந்ததும் இவன் பதிலை எதிர்பார்க்காமல் டீயை போட் டுக் கொடுத்து விடுவார் மாஸ்டர் மறு நிமிஷம்/
டீயை கையில் வாங்கிய மறு கணம் என்ன அதுக்குள்ள டீயப்போட்டுக் குடுத் தீட்டீங்க,ஒரு வடை சாப்புடலாம்ன்னு நெனைச்சேன் எனச்சொன்ன மறு நிமி ஷம் அவரே வடையை எடுத்து கையில் கொடுத்து விட்டு இந்தக் கையில் இருக்கும் டீ கிளாஸை வாங்கிக் கொள்வார்.
அவர் வாங்கிக் கொண்ட டீக்கிளாஸை ஏக்கத்துடன் பார்த்தவாறாய் வடை யை பிய்த்து சாப்பிட்டுக் கொண்டிருப்பான்.
உயர்த்திப் பிடித்துப் பார்த்தால் நான்கு அங்குலத்திற்கும் குறைவாய் கிளாஸி ற்குள் உறை கொண்டிருக்கிற டீயின் மிடறுகள் ஒவ்வொரு மடக்காய் நாவின் சுவைறும்புகளில் பட்டு உள்ளே பயணிக்கையில் கிடைக்கிற சுகமே அலாதிப் பட்டு இருப்பதாக,,/
டீ யில் மட்டும் இல்லை,அவர் போடுகிற வடையிலும் தனித்து காண்பிப்பார்,
சூடாகி காய்ந்து கொண்டிருக்கிற அகல வடிவமான வட்டச் சட்டியில் சுட்டெ டுக்கிற உளுந்த வடையாகட்டும்,பருப்பு வடையாகட்டும்,இன்னும் இன்னு மான பிற பிற வடைகளாகட்டும், அவர் கைபடும் போது தனி ருசி காண்பித்தும் கலர் ஏறியுமாய் தெரிந்து பட்டுப் போகிறதுதான்.
அவர் அந்தக் கடையின் டீ மாஸ்டர் மட்டுமல்ல,வடை மாஸ்டரும் அவரே/ சமயத்தில்சரக்கு மாஸ்டரும் அவரேயாகிப் போகிற வித்தையும் நடக்கும், அடுப்பில் சோற்றை வைத்து விட்டு ஓடிப்போய் கடையில் அரிசி பருப்பு அரசலவு வாங்கி வருகிற வீட்டுப் பெண்களின் அவரசம் காட்டி ஓடுவார் கடைக்கு,
காய் கறி வடை போட காய்கறி வேண்டும்,அது இருக்கும்,உளுந்தவடைபோட ஆட்டி ரெடியாக இருக்கும் மாவில் அரிந்து போட வெங்காயம் வேண்டும்,இது போக பருப்பு வடைக்கு மசால் வடைக்கு எனத்தனித்தனியாக கலந்து போட பொருள் வாங்க வேண்டும்,
இது அத்தனையும் போக பஜ்ஜிக்கு என தனியாக போட வாழைக் காய் பஜ்ஜி மாவு எல்லாம் வாங்க வேண்டும்.
இவையெல்லாவற்றின்கூட்டையும்மொத்தமாய்முக்குக்கடைக்குதான்போகவேண்டும்.
கடைக்காரரைப் பார்க்கும் போதுசரக்குமுறுக்கா கடைக்காரர் முறுக்கா என்கிற சொல்லாக்கம் தன்னைப் போலவே முளை கொண்டு நிற்கும்.மாஸ்டர் சிட் டையை நீட்டியதும் என்ன மாஸ்டர் நீங்க புதுசா சிட்டைய நீட்டிக்கிட்டு,,,,,/
நீங்க வாங்குற சரக்குதான் எனக்கு மனப்பாடம்ஆச்சே,வடைக்கு பஜ்ஜிக்கு இன்னும் போண்டாவுக்குன்னு,,,,ஜாமான்க வேணும் அவ்வளவுதான எனச் சொல்லியவறாய்எத்தனைகூட்டம்நின்றாலும்அவர்களையெல்லாம்அப்படியப் படியே நிறுத்தி வைத்து விட்டு அவரே கடைக்குள் போய் சரக்குகளை எடுத்து அடுக்கி வைத்துக் கொடுப்பார்.
அவர் அப்படியெல்லாம் போய் யாருக்கும் சரக்கு எடுத்துக் கொடுக்கிறவரில் லை, எவ்வளவு கூட்டம் வந்த போதும் கூட உட்கார்ந்திருக்கிற கல்லாவை விட்டு அசையக் கூட மாட்டார்,
கடைக்கு வந்தவர்கள் கூட கேட்பார்கள்,என்ன கடைக்கார மொதலாளி உக்கா ந்துருக்க யெடத்துலயே உங்கள ஆணி வச்சி அடிச்சிட்டாங்களா என,
அட போங்கம்மா,அப்பிடியெல்லாம் ஒண்ணும் இல்ல,நானும் கடைக்குள்ள போயி மொகத்த நொழச்சிக்கிட்டேன்னா ஒங்களப்போல கடைக்கி வர்றவுகள வாங்கன்னு கூப்புடுறது யாரு?
மாஸ்டர் வரும் போது மட்டும் ஏன் எந்திரிச்சிப் போயி சரக்குப்போட போ றேண்ணா அவரு கடைக்குப் போயி வடை போட்டுட்டு மத்த மத்த வேலை களெல்லாம் முடிச்சிட்டு வீடு போக லேட்டாயிரும் அதுனாலத்தான் அவர மொத ஆளா அனுப்புறதே தவுர வேற அந்த நோக்கமும் கெடையாது.என பல சரக்குக் கடைக்காரரால் சுட்டிக்காட்ட படுகிற மாஸ்டர் வேலை பார்க்கிற டீக்கடையில் டீக்குடிக்க இவனுக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
2 comments:
அன்பும்.பிரியமுமான நன்றி!
வணக்கம் நாகேந்திர பாரதி சார்,
நன்றியும் அன்பும்,,,,,,
Post a Comment