எட்டித்தொட்ட டம்ளர் சூரீரென சுட்டுவிட சட்டென எடுத்த கை பாதியில் நிறு போகிறது இரும்புக்கை மாயாவியின் கையைப் போல/
கரண்டை தொட்ட கணத்தில் சட்டென்று காணாமல் போய் விடுகிற மாயா வியின் உடம்பைப் போல இங்கு பலருக்கும் உருதாங்கி இருக்க வேண்டும் என்பது ஆவலாய் இருக்கிறதுதான்.ஆனால் நிதர்சனத்தில்,,,,,,,,
மாயாவிக்கு முடிகிறது அந்த மாயாவியை ரத்தமும் சதையுமாய் படைக்கிற மனிதனுக்கு முடியவில்லை எனும் போது ஆச்சரியமாகவே,,,,,என்கிறான் நண்பன்/
“அட விடு அங்கு மாயாவி இங்கு மனிதன் அவ்வளவே வித்தியாசம். மாயா விக்கு தொட்டது துலங்கிப்போகிறது, இங்கு அது இல்லை என ஆகிப் போகி றது மனிதனுக்கு,,,/
பார்ப்பதற்கு அழகாய் இருந்ததோ இல்லையோ இவனுக்கு மிகவும் பிடித்த மான டம்ப்ளர். அது.
பித்தளை,சில்வர்,செம்பு என எத்தனை எத்தனைகள் வீட்டில் இருந்த போதும் கூட இந்த தாமிர டம்ப்ளரில்தான் தண்ணீர் மற்றும் டீக் குடிக்கிறான்,
வீட்டில் பிளாஸ்டிக் மக் ஒன்று அழகாய் பூவுடன் சிரித்து கண்ணடித்துக் கொ ண்டிருக்கிறபோதும் கூட அது உதிர்ந்து கீழே விழுந்து காயப்படுத்திக் கொள் ளுமோ தன்னை என்கிற எண்ணம் மனம் முழுக்கவுமாய் பரவி விரவி நின்ற போதும் கூட பிடி வாதம் காட்டி அந்த தாமிர டம்ளரில்தான் குடிக்கிறான் டீ,/
இவ்வளவு எதற்கு டீ மட்டும் இல்லை,கூழ் குடிப்பதானாலும் கூட அந்த டம்ப்ளரில்தான் குடிக்கிறான்,
வாரத்திற்கு ஒருமுறை விடுமுறை நாட்களீல் கண்டிப்பாக கழி அல்லது கூழ் சாப்பிட்டு விடுவான்,
கூழாய் இருந்தால் வெறும் வெங்காயம் போதும்,கழி கிண்டுகிற அன்று சாம்பார் அல்லது கறிக் குழம்பு,துணைக்கு ரத்தபொரியலை சேர்த்துக் கொள் வதுண்டு அது கிடைக்கிற தினங்களில்,
கறிக்கடையில் முன் கூட்டியே சொல்லி வைக்க வேண்டும் ரத்தம் வேண்டு மென்றால்,இல்லையானால் காலையில் சீக்கிரம் எழுந்து போக வேண்டும்,
இவன் சீக்கிரம் எழ வேண்டும் மறு நாள் என நினைக்கிற அன்று இரவுதான் லேட்டாக தூங்குகிறான்.பின் எப்படி மறு நாள் காலை சீக்கிரம்,,,,,?
சரி பரவாயில்லை அதனால் என நினைத்து வம்படியாய் எழுந்தால் உடல் சோம்பேறித்தனம் தாங்கியும் மந்தம் கொண்டுமாய் விடுகிறது,
அது தவிர்க்கவே கொஞ்சம் ஏழு அல்லது ஆழரை மணி போல ழுவது இவன் வாடிக்கையாகிப்போகிறது,
அப்படி எழுகிற நாட்களில் ரத்தம் கிடையாது கழிக்கு,வெறும் கறிக்குழம்பு மட்டுமே,,,/
வெளிப்புறமாய் டம்பளரின் விளிம்பில் இருந்த இரு கோடுகளை அங்கு போய் வரைய யாருக்கு தோணியது எனத்தெரியவில்லை.
ஒரு வேளை டம்ப்ளரை தயாரித்த இடத்தில்அந்ததயாரிப்பாளருக்கு தோன்றி ய யோசனையாய் இருக்கலாம்.அங்கு டிசைன் பண்ணுபவரும் விற்பவரும் அவரேதானே,வேண்டுமானால் இன்னொரு இடத்தில் இன்னொரு டம்பளரை பார்த்து அடித்த காப்பியாக இருக்கலாம்.
செல்வமணி பாத்திரக்கடையில் ஒரு வருசம் கட்டிய சீட்டுப்பணத்தில் வாங் கியது,
மாதம் நூறு ரூபாய் ,இரண்டு சீட்டு,இரண்டு பிள்ளைகள் பேரிலும்/, சீட்டு ஆரம் பிக்கு போது நன்றாக இருந்தது,இப்படியாய் ஏதாவது பணம் சேர்த்து வாங்கி னால்தான் ஏதாவது பொருள் வாங்கினால்தான் உண்டு உருப்படியாக என நினைத்த நேரம் செயல் படுத்தி விட்டான் மனைவின் சம்மதத்துடன்/
ஆனால்போகப்போகத்தான் தெரிந்தது அதை செயல் படுத்துவதில் இருக்கிற சிரமம்.முடியவில்லை,ரொம்பவும்சிரமப்பட்டது,குடும்பத்திற்கு மற்ற செலவு கள் போக பாத்திரச்சீட்டு கட்ட மிகவும் சிரமம் காட்டியது நிலை.
சீட்டு கட்டப் போன ஒரு மாதத்தின் கடைசி நாளன்று கடைக்காரர் கூட கேட்டார், ”என்ன சார் ரொம்ப செரமமா இருக்கா சீட்டுப்பணத்த கட்டுறதுக்கு, தொடர முடிய லைன்னா விட்டுருங்க,இதுவரைக்கும் எவ்வளவு கட்டீருக்கீங் களோ,அந்தபணத்துக்கு பாத்திரம் குடுத்துர்றேன்,நீங்க அதுக்கப்பறம் ஒங்க ளால எப்ப முடியுதோ அப்ப சீட்டு கட்டுறத தொடருங்க,போதும்,நீங்க ஒவ்வொ ரு தடவையும்ரொம்பவும் மனசு கஷ்டப்பட்டு வர்ற மாதிரி வர்றது எனக்கு ரொம் பவும் சங்கடமா இருக்குதுதான்.”என்றவரை,,,,,,,
”இல்லைசார்அப்பிடியெல்லாம்இல்லை,தெரிஞ்சோதெரியாமலோதொட்டாச்சி,தொடர்ந்தே ஆகணும்,இல்லைன்னா என்னால நிம்மதியா இருக்க முடியாது சார். நைட் டெல்லாம் நிம்மதியா தூங்க முடியாது என்னால ஆமாம்,கஷ்டம் யாருக்குத் தான் இல்லை சொல்லுங்க,பெறந்த கொழந்தையில இருந்து சாகப் போற வரைக்கும் எல்லாருக்கும் ஒவ்வொரு விதமான கஷ்டம் சார்,,,,,
“இப்பஒங்ககிட்டகட்டுறபாத்திர சீட்டு மட்டும் இல்லை, தெருவுல மாசச் சீட்டு, பேங்குலஓடுறமாதம்தவணைடெபாஸிட்டுவேற,,இப்பிடிஎல்லாம்போககுடும்பச் செலவு கல்யாணம் காச்சி நல்லது பொல்லது ஆஸ்பத்திரின்னு,,,,, போயி நிக்கையில தாவு தீந்து போகுது தீந்து/
”போன வாரம் இப்பிடித்தான் ஆபீஸில வேலை பாத்துக்கிட்டு இருக்கும் போது கூட வேலை பாத்தவரு மயங்கி கீழ விழுந்துட்டாரு .என்னமோ ஏதோன்னு தூக்கி உக்கார வச்சி பாத்தப்ப சுத்தி இருந்த எல்லாரும் ஆஸ்பத்திக்கு கூட்டிக் கிட்டுப் போங்க,ஏதாவது நெஞ்சு வலியா இருந்தாலும் இருக்கலாம், இல்லை அது சம்பந்தமா ஏதாவது பிராபளம் இருக்கும்ன்னு சொன்னதும் அந்த நேர பதட்டத்துல ஒண்ணும் செய்யத்தோணாம ஆஸ்பத்திரிக்கு தூக்கீட்டு ஓடுனா அங்க ஒடனே பெட்ல அட்மிட் பண்ணச்சொல்லி குளுக்கோஸ் ஏத்தீட்டாங்க.
“சாதாரணமா கீழ விழுந்ததுக்கு இவ்வளவான்னு யோசிக்கிட்டே இருக்கும் போது அந்தடெஸ்டு எடுக்கணும் இந்த டெஸ்டு எடுக்கணுமுன்னு மூவாயி ரம் ரூபா கட்டச் சொல்லீட்டாங்க எனக்குன்னா என்ன செய்யிறதுன்னு தெரி யல அந்நேரம்,சும்மா போயி பாத்துட்டு வந்துரலாம்முன்னுதான வந்தோம். வந்த யெடத்துல இப்பிடி ரூவா கட்டச்சொன்னா எப்பிடி,நாளைக்கி அவரே ஏன் இவ்வளவு பணம் கட்டுனீங்கன்னு கேட்டா நான் என்ன பதில் சொல்றது அவருக்கு,,,?
இந்த எதுக்கும் இருக்கட்டுமேன்னு கையில ஒரு ரெண்டாயிரம் ரூபா கொண் டு போயிருந்தேன்,அப்பத்தான் தோணிச்சி ,ஆகா நமக்குத்தான் ரெண்டாயிரம், பெரிய தொகை,இந்த மாதிரி யெடங்கள்ல இதெல்லாம் ஒரு பெரிய தொகை யே கெடையாது,இன்னும் சொல்லப்போனா இதெல்லாம் அவுங்களுக்கு பேப் பர்மாதிரிதான்னுதோணுச்சி,
“சரிஆகவேண்டியத்தப்பாருங்க, வைத்தியத்த ஆரம்பிங்க,ஆபீஸில இருக்குற வுங்க கொண்டு வர்றாங்கன்னு சொல்லியும் கூட அவுங்க பணத்தக் கட்டுனா த்தான் வைத்தியம் ஆரமிப்போம் ன்னு சொல்லீட்டாங்க, சரி என்ன செய்யிற துன்னுகைய பெசைஞ்சிக்கிட்டு நிக்கிறப்ப ஆபீஸில இருந்து வந்துட்டாங்க, ரெண்டு பேரு வந்தவர்ல ஒருத்தருதான் அவரோட நகைய வச்சி கொண்டு வந்தாரு,
”மாசக் கடைசிங்குறதுனால யாருகிட்டயும் கையில காசு இல்ல,மயங்கி விழுந்தவரே எப்பவும் கையில ரொக்கமா பத்தாயிரம், இருபதாயிரம் வரைக் கும் வச்சிக்கிட்டு இருக்குறவரு, வீட்டுல ஏதோ அவசர செலவுன்னு செல வழிச்சிட்டேன்னு சொன்னாரு, ஆபீஸுல இருக்குறவுங்க கொண்டு வந்த பணத்த கட்டீட்டுவைத்தியத்தஆரம்பிக்கச்சொன்னோம்.அதுக்கப்பறம் அவுங்க வீட்டுக்கு சொல்லி விட்டுட்டு அவுங்க வீட்டம்மா வந்த ஒடனே வந்தோம் கெளம்பி அங்கயிருந்து,”
அது போலஎதிர் பாராம ஆகிபோகுது,கையில அவ்வளவு ரொக்கம் வச்சிக் கிட்டுஅலையிறமனுசனுக்கே இப்பிடி நெலைமைன்னா எங்களுக்கு சொல்ல வே வேணாம். இந்த மாதிரி செலவுகள்ல செய்ய நெனைக்கிறது பிந்திப் போ குதே தவிர்த்து வேணுமுன்னே செய்யிறது கெடையாது,,,பாத்திரச்சீட்ட கேன்ச லெல்லாம் பண்ண வேணாம், கட்டீர்றேன் எப்பிடியாவது,,,,,,,,,/என சொல்லிக் கொண்டிருந்த நாளில் நகர்வில்தான் தோணியது.
ஒரு சீட்டை கேன்சல் பண்ணி விட்டு ஒரு சீட்டு கட்டலாம்,ஆனால் இரண்டு சீட்டும் இரண்டு பிள்ளைகள் பேரில் இருக்கிறது,ஒரு சீட்டை கேன்சல் பண் ணினால் ஒரு மகள் வருத்தப் படுவாள்.இளையவள் பரவாயில்லை, சின்ன வள் பெரிதாக ஒன்றும் நினைத்துக் கொள்ள மாட்டாள்.ஆனால் பெரியவள் மனதுக்குள் நினைத்து புழுங்கிப் போவாள்.
சின்னவள் போல படக்கென பேசி விட மாட்டாள்.அது மட்டும் இல்லை,நடந்து போனதை நினைத்து மிகவும் வருத்தப் பட்டுப் போவாள் வருத்தப்பட்டு,இதை செய்தால் இது இப்படி இருக்குமோ,இது இப்படியாகுமோ என்கிற கற்பனை மிகுதியில் இருப்பாள்.
இப்படித்தான் வீட்டில் கறிச் சோறு சமைத்த ஒரு நாளில் குழம்பில் கிடந்த இரண்டு ஈரல் துண்டுகளும் சின்னவளின் சாப்பாட்டுத் தட்டுக்கு போய் விட அவளும் சாப்பிட்டு விட்டாள் ஏதோ ஒரு ஞாபகத்தில்/
பொதுவாகவே அவளுக்கு சாப்பாட்டில் ஏதும் குறை இருந்தாலும் பரவாயில் லை, பெரியவளுக்கு குறை இருக்கக்கூடாது என நினைப்பவள்,அப்படி இருந் தாலும் தன்னுடைய சாப்பாட்டை கொடுத்து விட்டு இவள் கொஞ்சம் பசி தாங்கிக் கொள்வாள்,.
அல்லது வீட்டில் இருப்பதை சாப்பிட்டுக் கொள்வாள்,அது பற்றி பெரிதாக ஒன் றும் அலட்டிக்கொள்ள மாட்டாள்.இப்படியான பிள்ளையை கைக்கொள்வதும் அவளுடன் பழகுவதும் எளிதாகவும் சிரமமின்றியும் இருக்கும் வீட்டில்,
ஆனால் பெரியவள் போல் மனோ நிலை கொண்ட பிள்ளைகளிடம் கொஞ்சம் பார்த்தும் பதனமாகவும் இருக்கத்தான் வேண்டி இருக்கிறது,என்கிற மனோ நிலையில்தான்அன்று சாப்பாடு வைக்கிற போது சின்னவளுக்கு போய் விட்ட ஈரல் துண்டை தனக்கு வேண்டும் என்றுதான் வைக்கவில்லை என கோபித் துக் கொண்டு சாப்பிடாமல் உட்கார்ந்திருந்தாள்.
பொங்கிய சோறும் வைத்த குழம்பும் அப்படியே இருக்கிறது,,,,என்கிற இவனது எண்ணத்தை இளையவளிடம் பகிர்ந்து கொண்ட போது சொல்கிறாள் அவள்,
“ஏன் இப்பிடி இருக்கா இவ,வீட்லதான் இப்பிடி இருக்கான்னு சொன்னா படிக் கிற யெடத்துலயும் இப்பிடித்தான் இருக்கான்னு சொல்றாங்க,அவ கூடப் படிக் கிற புள்ளைங்க,நேத்திக்கி இவ கூட படிக்கிற ஒரு அக்காவைப்பாத்தேன் ,அவு ங்க சொல்றாங்க,சொல்றாங்க சொல்லிக் கிட்டே போறாங்க நான் ஸ்டாப்பா, ரொம்ப ஒண்ணும் இல்ல நாலு பேரு இருக்குற யெடத்துல தன்னை அஞ்சா வதா இருக்குற ஒரு ஆளா நெனைக் காம நாம மட்டும்தான் அந்த யெடத் தோட ஒட்டு மொத்தமும்ன்னு நெனைக்கிறதுனால வர்ற பிரச்சனைன்னு சின்ன சின்னதா நெறைய சொல்றாங்க, கேக்குறதுக்கு எனக்கே ஒரு மாதிரி யாவும் அவமானமாவும் இருக்குப்பா.
”பேசாமஅவளைபடிப்பபாதியில நிப்பாட்டீட்டு கல்யாணத்த பண்ணி வைங்க,,,,, கல்யாணம் பண்ணி வச்சி கொழந்த குட்டின்னு ஆனாத்தான் கொஞ்சம் உருப் படுவா,இல்லைன்னா வருஷமெல்லாம் கறிக்கொழம்புல ஈரலக்காணேமுன் னு சண்ட போட்டுக்கிட்டும் மனத்தாங்கல் பட்டுக்கிட்டுமா இருப்பா,
“இவளெல்லாம் நாளைக்கி ஒரு வீட்டுக்குப் போயி என்னன்னு அனுசரிச்சி இருக்கப் போறான்னு தெரியல,,,,ஒரு கறிக்கொழம்புல கோபப்படுறவ நாளை க்கி எதெதெதுக்கு கோபப்பட்டு நிக்கப்போறான்னு பாப்போம்,கொண்டாங்கப்பா நான் போயி எதாவது கடை தெறந்திருக்கான்னு பாத்து கறி வாங்கீட்டு வர்றேன்” என பையை தூக்கிக்கொண்டு போனவளை தடுத்து இவன்தான் போய் கறிவாங்கிவந்தான்,
ஆனால் ஆட்டுக்கறி கிடைக்கவில்லை,எப்பொழுதும் ஆட்டுக் கறி வாங்குற கடைக்காரர் இசக்கிபாலன் அப்பொழுதான் கடையை சுத்தம் செய்து கழுவி விட்டு மூட ஆயத்தமாகி க்கொண்டிருந்தார்,அவரிடம் விஷயத்தை சொன்ன தும் சார் கொஞ்சம் இருங்க இந்தா கேட்டுச்சொல்லீருறேன் என போன் பண்ணி யாரிடமோ கேட்டார்,அவர் போன் பண்ணி கேட்ட இடத்தில் ஒரு கிலோ கறி எலும்புடன் அப்படியே இருப்பதாகவும் எலும்புக்கு காசு வேண் டாம்,கறிக்கு மட்டும் காசு கொடுத்தால் போதும் என டவுனுக்குள் இருக்கிற ஒரு கடைக்கு கோடு போட்டு அனுப்பி வைத்தார்,
போகும் போது சொன்னார்,சார் போன ரெண்டு மாசமா கடைப்பக்கம் தலை வச்சி படுக்கவே இல்லையேநீங்க, என.
உண்மைதான் அவர் சொன்னது,கார்த்திகை மார்கழி இரண்டு மாதங்களும் காய்கறி அடை கொண்ட வீடாக ஆகிப் போனது. கறி எடுக்கவே இல்லை.
குளிர் மாதம் என்பதால் வயிறு தாங்காது செமிப்பதில் பிரச்சனை இருக்கும் என இவன் கறி எடுப்பதில்லை.
பொதுவாக,நானகைந்துவருடங்களாக அப்படியேபழகி விட்டான்,வயிறு பிரச்ச னை எனடாக்டரிடம்போய்நின்றபோதுஅவர் சொன்ன ஆலோசனைதான் இது, குளிர் மாதங்களில் கடினமான உணவை கொஞ்சம் தவிர்த்து விடுங்கள் என.
அவர் சொன்ன கடினத்தில் கறியும் வர கட் பண்ணி விட்டான்.வீட்டில் மனை வியிடமும் பிள்ளைகளிடம் கேட்ட பொழுது மனைவி சொன்னாள் ”நானே இதை உங்களிடம் முன் மொழியலாம் என இருந்தேன் என”அதைக்கேட்ட பிள்ளைகள் இரண்டும் கொஞ்சம் அரை மனதாய் சம்மதித்தார்கள்,
அரைமனது யாருக்கு இருந்திருக்கும் இந்த விஷயத்தில் என நீங்களே முடிவு செய்யுங்கள் பார்ப்போம் என இசக்கிபாலனிடம் சொன்ன பொழுது கரெக்டாக சொல்லி விட்டார்,மூத்த மகளுக்குத்தானே அப்படியான அரை மனது என/
ஆமாம் என தலையாட்டி விட்டு அவர் போன் பண்ணி சொன்ன கடைக்குப் போனான் கறி எடுக்க,,,,/
கறி எடுத்து வந்து சமைத்துப்போட்டதும்தான் சமாதானமானாள் பெரியவள். ஆனால் இவன் வாங்கி வந்த கறியில் ஈரல் இருந்திருக்கவில்லை.
அப்பொழுதுதாம் தெரிந்தது,அவளது பிரச்சனை ஈரல் மட்டும் இல்லை.ஈகோ என,,/
”மெல்ல எடுக்க வேண்டியதுதான் என்ன அவசரம், அதுக்குள்ள/ இப்பத்தான கொண்டு வந்து வச்சேன்,அதை அவசரப்பட்டு தூக்காட்டி என்ன ,
“ஒண்ணு நா கொண்டு வந்து வச்சி ஆறி அவிஞ்சி போனப்பெறகு எடுக்க வேண் டியது,இல்ல இப்பிடி அவக்கு தொவக்குன்னு அவசரப்பட்டு எடுத்துட்டு கை சுட்டுருச்சின்னு கூப்பாடு போட வேண்டியது என மனைவி சமையலறையி லிருந்து போட்ட சப்தம் இவன் காதை துளைத்ததாக/
ஏன் சத்தம் போடுற,நீயி எனக்கு டீக்குடுக்குறையின்னு ஊருக்கெல்லாம் தெரி யணுமா,,,,,,,?
ஆமாம் இல்லைன்னாலும் தெரியாது,ரொம்பத்தான்,என்னவோ,,,
”இங்க சமையல் ரூமுல பாதி நேரம் ஒங்களுக்கு டீ போட்டு குடுக்கவே சரியா இருக்குங்குறது இங்க தெருவுல இருக்குற எல்லாருக்கும் தெரியும் ,இதுல நான் வேற போயி சொல்லணுமாக்கும்,இந்த மாதிரின்னு,,,/
”கொடுமைதான்போங்ஒங்களோட,,,,,,,”எனச்சொல்லிய மனைவியின் பேச்சை உள் வாங்கியவனாய் சூரீரிட்ட டம்ளரை ஓரம் கட்டி வைத்துவிட்டு கொஞ்சம் நேரம் கழித்து எடுக்கலாம் என்கிற முடிவுக்கு வருகிறான்,
முடிவுகள் இது போல் நெருக்கடி வரும் போதும் சுரீர் என சுடுகையிலும்தான் பிறக்கும் போலிருக்கிறது.
பூனை முடிகள் படர்ந்து முளைத்துத் தெரிந்த கைகள் இரண்டில் டம்ளரை எட்டித் தொட்டது வலது கையாக உருபட்டுத் தெரிகிறது.பொதுவாக அப்படித் தானே இருக்க வேண்டும்,
எடுப்பதற்கும் கொடுப்பதற்கும் வலது கை ,வேறொன்றிற்கு இடது கை அப்ப டித் தானே நண்பா,,,,?என நண்பனிடம் சொன்னபோது ஏன் அப்படியில்லாம யெடது கையில யெடுத்தா என்ன கெட்டாபோகப் போகுது,இல்ல நாறித்தான் போகுமா என்ன சொல்லுங்க,என்பான்.
அப்பிடிப் பாத்தா நமக்கு வலது கையி சாப்புடுறதுக்கு,யெடது கையி கழுவு றதுக்குன்னு வச்சாக்கூட யெடது கையில நம்ம மத்த வேலைகள செய்ய லையா,,இல்ல வலதையும் யெடதையும் பிரிச்சி பிரிச்சி பிச்சி வச்சிட்டுதா திரியிறமா சொல்லுங்க,
ஒங்களுக்கு தோது வலதுன்னா எனக்கு தோது இடது கையின்னு ஆகிப் போ குது சில வேலைகள்ல,அது தவிர்த்து ரெண்டு கைகளையும் சேத்து வச்சி அதன் பலத்தோடயும் பலவீனத்தோடயும்தான சில வேலைகள செய்யத்தான வேண்டியிருக்கு.
அப்பிடி செய்யும் போதுதான அந்த வேலையும் பலப்படுது.அத விட்டுட்டு நீ பாட்டுக்கு என்னென்னமோ பேசிக்கிட்டே போறையே என்பான்,
ஞாயம்தான் அவன் சொல்வதும்.
அப்பிடிப்பாத்தா இந்த நகரத்த துப்பரவு பண்ற தொழிலாளிக்கும்,சாக்கடை அள் ளுறவுங்களக்கும் எது வலது கையி,எது யெடது கையி சொல்லு,,,
அவுங்கஎதப்பிரிச்சிஎதுக்குபயன் படுத்துவாங்க,நீ சொல்ற மாதிரி இடது வலது ன்னு பாத்துக்கிட்டு கைய பெசைஞ்சிக்கிட்டு நின்னாங்கன்னா பொழப்பு போ யிரும்,என்கிற நண்பனின் பேச்சு ஞாபகத்திற்கு வர சுரீரிட்ட டம்ப்ளரை மைய மிட்ட விழியை நகர்த்தாது பார்த்துக் கொண்டிக்கிறான்,

4 comments:
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்.
நன்றியும் அன்பும்!
இனிய பொங்கல் வாழ்த்துகள் நண்பரே
நன்றியும் அன்பும் பிரியமுமாய்,,,,/
Post a Comment