11 Dec 2018

சிலந்தி வலை தட்டான்கள் (பாகம் 2)

உடன் கைகோர்த்தவாறு இருட்டும் நெருங்கி வந்து கொண்டிருந்தது. இப்பொ ழுதெல்லாம் சீக்கிரம் இருட்டி விடுகிறதுதான்,இரு சக்கரவாகனத்தில் வரும் பொழுது கொஞ்சம் கவனமாகவும் ஜாக்கிரதை காட்டியுமாய் வர வேண்டியி ருக்கிறதுதான்,

நேற்று முன் தினம் மாலையில் கூட இல்லை,காலையில்தான் மதுரம் பட்டி தாண்டி விரைந்து கொண்டிருந்தாள் எட்டு ஐம்பது ஆகிபோனது,

கொஞ்சம் சீக்கிரம் போனால்தான் வரையறுக்கப்பட்ட நேரத்திற்குள் அலுவ லகம் செல்லமுடியும்.கொஞ்சம் தாதமானாலும் கூட சிறிது மனச் சங்க டமும் கூச்சமும் ஏற்பட்டுவிடுகிற காரணத்தினால் தாமதமாகப்போகும் காட்சியை வெட்டி அகற்றி விடுகிறவளாகிப் போகிறாள்.

வெட்டி விடுகிற காட்சிகளின் அகலமும் நீளமும் அழமுமாய் காணப் படுகிற கைகோர்ப்பின்ஊடாய்எத்தனை எத்தனைகளோ நுழைந்து விடுகி றதுதான்,

நுழைந்து விடுகிற அத்தனையும் நல்லதாயிருந்தால் பரவாயில்லை, கெட்ட திலும் கேடு கெட்டதாய் உருவெடுத்து நிற்கிறது, அந்த நிற்றலில் ஊற்றெடு த்து ஓடுகிற பொரணியும்,முடை நாற்றமும்,குற்றம் கண்டு பிடித்தலும் பரஸ் பரம் ஒருவர் மென்னியின் மீது ஒருவர் ஏறி அமர்ந்து உடலும் மனதும் முறி ந்து போகிற அளவிற்கு நடக்கும் பேச்சும் முன்னே சிரித்து விட்டு பின்னால் மென்னியை நெருக்கும் வேலையும் நடந்தேறிப் போகிறது தான்.

எதற்கும் ஒரு நேரம் வேண்டும் என்பாள் இவள் சிரித்துக் கொண்டே, ”எப்பி டிம்மா இப்படி சிரிச்சிக்கிட்டே இருக்கீங்க” எனக்கேட்ட சக ஊழியர் ஒருவரி டம் வருது சார் சிரிக்கிறேன் என்றாள்.

“போக சிரிப்பு ஒரு அருமருந்துன்னு சொல்றாங்க சார்,என்னையக்கேட்டா சிரிப்பு மட்டும் இல்ல சார்,நல்லதான ஒரு சினிமா, நல்லதான ஒரு பாட்டு, நல்லதான ஒரு டீ வி நிகழ்ச்சி,நல்லதான ஒருபுத்தகம்ன்னு நல்லதான ஒரு பேச்சு,நல்லதான ஒரு பழக்கம்,,,,,இதுல எது படிச்சாலும் பாத்தாலும் கேட்டா லும் நல்லதுன்னு நெனைக்கிறேன் சார்.நெனைக்கிறது மட்டும் இல்லை, அப்பிடித்தான் நடந்துகிறவும் செய்யிறேன்,அதான் இப்படி எதுக்கெடுத்தாலும் சிரிக் கிற மனசும் ஒடம்பும் வாய்ச்சிருது,மத்தபடி இது ஒண் ணும் எட்டாத தூரத் துலயிருந்து வம்படியா கயிறுகட்டி இழுத்துட்டு வர்ற விஷயமில்ல,

”மந்திரத்துல மாங்காயும் பழுக்காது, தேங்காயும் வெளையாது,அப்பிடியே பழுத்தாலும் வெளைஞ்சாலும் அது ஒண்ணுக்கும் ஆகாது,

சில பேரு நெனைக்கிறது போலவும் ,நடந்துக்குறது போலவும் வெளிய சிரிப் பாயும் உள்ள வெஷமாயும் இருக்குற ஜந்துக்கள தொடச்சி எறியிற கல்லா நெனைக்கிட்டு,பல்லக்கடிக்காம இருந்தமுன்னுவையிங்க,சிரிப்பு ஈஸியா கை வந்துரும்,,” என்பாள் கூடவே/

என பேசிக்கொண்டிருந்த நாளன்றின் ஒரு நகர்வில் ”என்ன இன்னைக்கி டூ வீலர்ல வரமா பஸ்ஸீல வந்துட்ட எனக்கேட்ட கோபால் சாரிடம் ஆமா சார் தீடீர்ன்னு நல்ல பிள்ளையாயிட்டேன் பஸ்ஸில வந்துட்டேன் என்றாள்,

“அப்பாதான் என்னைய அப்பிடி வளத்துட்டாரு,தைரியமா இரு ,நல்லா படி நல்ல வேளைக்குப்போ, புறச்சூழ் நிலைகள கணக்குல எடுத்துக்கிட்டு அதுக்கு பலியாகம வளருன்னு சொல்லி சொல்லி வளத்தாரு.அப்பிடி வளத்ததுனால யும் புறச்சூழல்க என்னைய ஆளாக்கிவிட்டதுனாலயும் இப்பிடி ஓரளவுக்கு தைரியமா இருக்கேன்.

“இவ்வளவு தூரத்துக்கு வண்டி ஓட்டிக்கிட்டு வரணுமுன்னு ஆசை இல்ல எனக்கு,வேற வழியில்ல காலையில அந்த நேரத்துக்கு பஸ்ஸீ தோது இல்ல. அதுனாலத்தான் வர வேண்டியிருக்கு,அது ஒண்ணும் பெரிய பிரச்ச னையாத் தெரியல,வர்ற வழி நெடுக ஊர்களாத்தான் இருக்கு,அதுல நெறை ஞ்சி நின்னு வாழுற மக்கள்,அது போக வழி நெடுக இருக்குற மரம் செடி கொடி சுத்தம் சொமந்த காத்து அது தடவிக்குடுக்குற புல் வெளிகளும் தோட்டம் காடுகளும் கண் கொள்ளாம இருக்கும் போது அத வேடிக்கை பாத்துக்கிட்டே வந்துரு வேன்,ஆனா என்ன சாய்ங்காலம் போகும் போது கொஞ்சம் இருட்டீருச்சின் னாக்கூட பக்கு பக்குன்னு இருக்கும்,

”முந்தா நாளு இங்கயிருந்து கெளம்பும் போது கொஞ்சம் லேட்டுதான், இருந் தாலும் கெளம்பீட்டேன்,கரெக்டா மருதம்பட்டி தாண்டவும் நல்லா இருட்ட ஆரம்பிச்சிருச்சி,நானும் வண்டியும் மட்டும்தான் ரோட்டுக்குத் தொணையா வும், ரோடும் அதோட வழி காட்டுதலும் மட்டுமே எனக்குத் தொணையாவும் வந்துக்கிட்டு இருந்த நேரம் எனக்குப்பின்னாடி வந்து என்னைய முந்துன வண்டி கொஞ்ச தூரம் போனதும் வேகம் மட்டுப் பட்டுப்போக ஆரம்பிச்சிச்சி, அதே வேகத்துலேயே போன அந்த வண்டிய நான் கொஞ்சம் எட்டுத் தொடவும் இருட்டுல கொஞ்சம் நிதானமாவே போங்கம்மா,இவ்வளவு வேகமா போகா தீங்கன்னு சொன்னவரு எனக்கு சைடுலயே வந்தாரு

“அவருக்கு ஏங் அப்பா வயசு இருக்கும்,எனக்கு அந்த நேரத்துல அவரு எனக் காக ஏங் கூடவே வந்தது கொஞ்சம் ஆறுதலா இருந்துச்சி.

“இன்னும் இப்பிடி யும் ஆள்க இருக்கத்தான் செய்யிறாங்க,அவங்க இனங்க ண்டுக்கிட்டுஅவுங்களோடகரெக்டாகைகோர்த்தமுண்ணாசமூகஉறவுகொஞ்சம் நல்லா இருக்கும்.

இத்தனைக்கும் அவருநான் போற ஊருக்கு யெடப்பட்ட ஊருக்காரரு,ஆனா எனக்காக எங்க ஊரு எல்லை வரைக்கும் வந்து என்னைய விட்டுட்டுப் போ னாரு,அப்பிடியாபட்டஆள்கதான்சார்அந்தநேரத்துக்குகைகொடுத்த தெய்வமா ஆகித்தெரியிறாங்க, இத்தனைக்கும் அவரு கொஞ்சம் நிதானமில்லாமத்தான் தெரிஞ்சாரு,பக்கா கிராமத்துக்காரரான அவருகிட்ட ஒட்டிக்கிட்டு இருக்குற ஈரம் கூட பல யெடங்கள்ல இல்லை.

பொம்பளை புள்ளைங்க நல்லா உடுத்திக்கிட்டு வந்தா புடிக்க மாட்டேங்குது, கொஞ்சம் கூடுதால மேக்கப்புல வந்துட்டா”என்ன இப்பிடி மினிக்கிட்டு திரியி றான்னு காதுப்படவே பேசுறாங்க, கல்யாணம் ஆகாத புள்ள அப்பிடி வந்துட்டா யார மயக்க இப்பிடி திரியிறான்னுறாங்க, கல்யாணம் ஆன பொண்ணுங்க கொஞ்சம்பளிச்சின்னு வந்தா அதான் ஒண்ணு பெத்தாச்சி ல்ல,இன்னும் என்ன மினுக்கல்ன்னும்சொல்றாங்க,அதுக்காக என்ன சார் மூஞ்சியில கரிய பூசிக் கிட்டா திரிய முடியும் சொல்லுங்க,யார்கிட்டயும் ஃப்ரியா பேசிற முடியாது, சிரிச்சிற முடியாது,பழகீற முடியாது,,,, ஒடனே ஆயிரம் கரம் கொண்ட அபூர்வ சிகா மணிகளா மொழச்சி வந்து பிலி பிலுன்னு பிடிச்சி உலுக்கி எடுத்து சந்தேகக்கணைகள தொடுத்து சிறப்பு பட்டம் குடுத்து வச்சிருவாங்க, தேவைப் படுற நேரத்துல தேவையில்லாம அந்தப்பட்டத்த எடுத்து பறக்க விடுவாங்க, அதுவும் கோரப் பல்லக் காட்டிக் கிட்டு பொரணி பேச்சு,சிண்டு முடியிறதுன்னு விவஸ்தையில்லாம பறந்துக்கிட்டு திரியும். என்ன அந்த பறத்தல கொஞ்சம் கண்டுக்கிறாமஇருக்குறவரைக்கும்நாமதப்பிச்சோம்,பறக்குறதுக்குள்ள போயி சிக்கிட்டோமுன்னு வையிங்க அவ்வளவுதான் அதுக்கு கேள்வி பதில் எழுப்பி யே காலம் போயிரும்”.எனச் சிரித்தஅவளை பார்த்த கோபால்சார் ”நீஎப்பவுமே நல்ல புள்ளைதாம்மா” என்றார்.

சொன்னவரை ஏறிட்டவள் ”நான் இருபத்தி நாலு மணி நேரமும் நல்லவ தான் சார்,சமயத்துல கொஞ்சம் அப்பிடி இப்பிடி இருப்பேன். அவ்வளவு தான் என இவள்சொன்னதை கேட்டுக் கொண்டிருந்த சகப் பணியாளர் ஒருவர்,, ,, அம்மா, நீங்க சொன்னதுல ஒரு சின்ன மாற்றம், சமயத்துலதான் நீங்க நல்லாயிருக் கீங்க,மத்தஎல்லாநேரத்துலயும்நீங்கஅப்பிடிஇப்பிடித்தான்இருக்கீங்க” என்றார்,

அதைக்கேட்டதும் கட கடவென அலுவலகம் அதிர சிரித்த அவளின் சிரிப்பு அடங்க வெகு நேரம் ஆனது.

இது நாள் வரை இது போலான சிரிப்பிற்கும் சிரிப்பை கைகோர்த்து வைத்தி ருக்கிற நடவடிக்கைக்கும் லேசான நட்பிற்குமாய் பழகிப்போன இவள் அந்த நேரம் அவளை அங்கு பார்ப்பாள் என எதிர்பார்த்திருக்கவில்லைதான்.

அப்பொழுதான்பஸ்ஸிலிருந்துஇறங்கிவந்துகொண்டிருந்தாள்,ஊரைப்போர்த்தியிருந்த பனி இவளின் மீதும் படர்ந்து பட்டதாய்,அந்த நேரத்திலேயேபளிச்சிட்ட சாலை விளக்குகள் பரப்பியிருந்த மென் வெளிச்சம் சாலை களின் மீது பட்டுப்படர்ந் திருந்ததாய்.

படர்ந்திருந்தவெளிச்சம் அந்த இடத்தைக்கடந்த ஒவ்வொருவர் மீதுமாய் பரவி அமுங்கியதாய்,/

கூடவே விளக்கு வெளிச்சத்தில் பறந்து திரிந்த கொசுக்களும், தட்டா ன்களும், விட்டில்களும்,,,/

தட்டான்கள் பறக்கிறதே இன்று மழை வருமோ என நினைத்த நேரம் விளக் குக் கம்பத்தின் உச்சியில் எரிந்து கொண்டிருந்தவிளக்கின் அடி ஓரமாய் படர்ந் திருந்த நூலாம் படையில் சிக்கித் துடித்துக் கொண்டிருந்தது ஒரு தட்டான்,

மேலே ஏறி எடுக்கலாம் என்கிற நினைவும் வளர்ந்த குச்சி கொண்டு தட்டி விடலாமோ என நினைத்த எண்ணமும் கை கூடுவது கடினம்தான் போலிரு க்கிறது,கைகூடினாலும் அதை செயல் படுத்துவதுசுத்த பைத்தியக் காரத்தனம் என எண்ணவைத்து விடும்போலிருக்கிறது சூழலை பார்க்கிறபோதுஎன நினை த்த வாறே சென்றுகொண்டிருக்கும் பொழுது எதிர்பட்ட வளின் அருகில் சிறுமி ஒருத்தி நின்று கொண்டிருந்தாள்,

விசாரித்ததில் பேத்தி என்றாள்,அவளுக்கு உடல் நலமில்லை என்றும் டாக்ட ரிடம் காண்பிக்க வந்ததாகவும் சொன்ன அவள் நான் ஒங்கள கவனிக்கலம் மா, நீங்களாத்தான் கூப்புட்டு பேசுறீங்க,ரொம்ப நன்றிம்மா என கை கூப்பிய வாறே பஸ்ஸேறச் சென்றாள்,

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தட்டான் சிக்கிக் கொண்டது - மனதிலும்...

vimalanperali said...

நன்றியும் அன்பும்!

வலிப்போக்கன் said...

தட்டான் மட்டமல்ல..இப்போதைய காலத்தில் உதவி செய்யும் எண்ணம் பைத்தியகாரமானதாகத்தான் இருக்கிறது..

vimalanperali said...

அன்பும் நன்றியும்!

vimalanperali said...

நன்றி கருத்துரைக்கு/