17 Jan 2019

குறிப்பு காட்டிகளின் நகர்வுகள்,,,

 
டாக்டர் சொன்ன படி செய்வதா வேண்டாமா என்பதே மங்களாக்காவின் முன் இருந்தமிகப்பெரிய கேள்வியாய் இருந்தது.

தொங்கி சரிந்து கொண்டிருந்த கேள்வியின் உக்கிர முடிச்சுகளும் முனையும் அவளைச் சுற்றி சுருக்கிட்டு இருக்கியதாய்/

நேற்று முன்தினம்தான் மாலையில் டாக்டரிடம் போயிருந்தாள்,

நல்ல கூட்டம் ,மெலிதாக பெய்து கொண்டிந்த குளிர் ,கொஞ்சம் உக்கிரம் காட் டத் தொடங்கி தன் கால்களை விரித்து ஆழ ஊன ஆரம்பித்ததாய் பட்டது,

எவ்வளவு உக்கிரமான வெயிலையும் தாங்கிக்கொள்கிற அவளால் குளிரை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

பொதுவாகவே அப்படியே பழக்கப்பட்டுப்போனது உடல்,

”வெப்பபிரதேசஜீவன்கள்தானே நாமெல்லாம்.அப்படி இருக்கும் போது குளிரை ஏற்க உடல் தயங்குவது சரிதானே,,,” என்று சொல்வான் கணவன்,

”அடப்போவேதெரியும்,குளிர்என்ன குளிரு பெரிசா,இங்கயேஇப்பிடி சொன்னா, குளிர் பிரதேசத்துல வாழ்றவுங்க நெலைமைய நெனைச்சிப்பாரு,,” என்பான்,

கூட்டமாய் இருந்தது,இன்னும் டாக்டர் வரவில்லை என்றார்கள்,

ஏதோ ஆபரேஷனுக்காய் போயிருப்பதாயும் வந்து விடுவார் எழு மணிக்குள் ளாய் என்றும் சீட் எழுதிக்கொடுத்த பெண் சொன்னாள்.

நன்றாக இருந்தால் தன் சின்னப்பெண்ணின் வயது இருக்கும்.ஒன்பதாவது படிக்கிறாளாம்,பள்ளி முடிந்து வந்த பிறகு ஒன்பது அல்லது பத்து மணிவரை இங்குதான் இருப்பேன் இந்த வேலையை செய்து கொண்டு என்றாள்.

சம்பளமுன்னுபெரிசாஒண்ணும்இல்லக்கா,எங்கம்மாவுக்குகாசநோயி முத்திப் போயி இருக்கும் போது ஒரு பைசா வாங்காம இவருதான் கொணப்படுத்திக் குடுத்தாரு,அந்த நன்றியிலதாக்கா இன்னைக்கி வரைக்கும் இங்க வந்து வேலை செஞ்சிக்கிட்டு இருக்கேன்,

டாக்டரும்எங்களப்போலஇல்லாதகுடும்பத்தச்சேந்தவருங்குறதுனாலஎன்னை யப் போலானவுங்க கஷ்டம் தெரியுதுக்கா என்றாள்.

பிள்ளைகள் இப்படியான புரிதலோடு வாய்த்து விட்டால்வேறென்னவேண்டும் பெற்றோர்களுக்கு,, என நினைத்த கணங்களில்மங்களாக்காவின் கண்களின் ஓரம் கண்ணீர் துளிர்த்து விடுகிறது.,

வீடுதான் மருத்துவமனையாய் ஆகி உருப்பெற்றிருந்தது.

வீடு நிரம்பிய மனித வாசனையும், இறைந்து கிடக்கிற துணிகளும் குக்கர் விசில்சத்தமும்மிக்ஸி,கிரண்டரின் ஓட்டமும் அரிசி பருப்பு அரசலவும், நிரம்ப நிரம்பவும் பாதி அளவுமாய் இருந்த தண்ணீர் குடங்களும் ரத்தமும் சதையும் உயிரும்உணர்வுமாய்சமையலை கைக்கொண்ட பெண்கள் காட்சிப்பட்ட சமை யலறையும்,கட்டிலையும், பீரோவையும்சுமந்திருந்த பெட்ரூமும், சைக்கிள் மற்றும் இரு சக்கரவாகனங்கள் நின்றிருந்த வராண்டாவும் வெறும் செங்கலும் சிமெண்ட்டும்,மணலாக மட்டுமே காட்சிப்படாமல் இது நாள்வரை வாழ்ந்து வெளியேறிய குடும்பங்களின் அடையாளங்களை அன்பும் பிரியமும் நட்பும் காதலுமாய் உயர் வாஞ்சையுடன் சொல்லிச்சென்றதாய் தோன்றியது.

யார்இருந்தவீடோ எத்தனை வருடங்கள் குடியிருந்தார்களோ, எத்தனை குழந் தைகளோஅவர்களுக்கு,பெற்றகுழந்தைகள் ஓடியாடித்திருந்தார்களா இல்லை டீவியும் இண்டர்நெட்டும் மட்டுமே கதி எனக் கிடந்தார்களாத் தெரியவில் லை.

ஓடியாடிய விளையாட்டும்,அவர்களில் ஊற்றிடுத்து வழிந்த வியர்வையும் அவர்களுக்குள் ஒற்றுமையையும்,உயர் பண்பையும் வளர்த்தது எனலாம்.

வளர்த்து காத்த பண்பு ஒருவர் மீது ஒருவர் தோளுடன்ஒருவரையும், ஒருவர் மனதுடன் இன்னுருவரையும் ஒட்டி உறவிடச் செய்திருந்ததாய்/

உறவிட்டவர்களின் பெருமூச்சையும் கைகோர்ப்பையும் ஒற்றுமையையும் சான்றுபடுத்திக்காட்டிய அந்தக்கட்டிடம் வீட்டிலிருந்து ஆஸ்பத்திரியாய் மாறி பரிணாமம் கொண்டிருந்ததாய்/

வராண்டாவில் தவழ்ந்து கொண்டிருந்த கைக்குழந்தைக்குப்பக்கத்தில் இருந்த இன்னொரு குழந்தை உஸ் சப்தமிடாதீர்கள் எனஉதட்டில் அழுந்தப்பதித்த ஆள்க்காட்டி விரலை எடுக்காமல் எச்சரித்துக் கொண்டிருந்தது,

குழந்தைகளை மிகவும் பிடித்திருக்கிறது மங்களாக்காவிற்கு. அடுத்தத் தெரு வில் இருக்கிற அல்லியக்காவின் பேத்தியைப் பார்க்க ஏதாவது சாக்கு வைத் துக் கொண்டு தினமும் போய் வந்து விடுவாள்,

அந்தப்பக்கமாகத்தான்கடைக்குப்போகவேண்டும்,அந்தோணிசாமியண்ணன்கடையில் தான் வியாபாரம்.


சின்னதான தேங்காய்ச்சில்லிலிருந்து அரிசி பருப்பு வரை அவர் கையால்தான் நிறுவை/

’போனவுடன் கேட்டுவிடுவார் அவர்,என்னக்கா,,, தினத்துக்கும் அரிசி பருப்பு அரசலவு தவிர்த்து எதுவும் வாங்குறதில்லைன்னு முடிவா என்ன,,,?’என/

”அப்பிடியல்லாம் இல்லண்ணே,வாங்கலாம்தான், யானையைக் கூட,ஆனா அத வச்சித்தீனி போட சத்து வேணுமில்ல எனக்கு அது போலதான், அது போலத் தான் கை இருப்புக்குத்தகுந்தாப்புலதான எதுவும்” என்பாள்,மங்க ளா க்கா/

கடைக்காரரும் சிரித்துகொண்டே ”கையிருப்பு என்னாக்கா கை இருப்பு இருந் தா வாங்குங்க,இல்லையா கடனா வாங்கிக்கங்க.இருக்கும் போது குடுங்க,,,, ஒங்கள நம்பி இந்தக் கடையவே தூக்குக்குடுக்கலாமுக்கா,எத்தனை நாளு ,எத்தனி பொழுதானாலும் கடைக்கு எந்தவித சேதமும்,பங்கமும் இல்லாம அப்பிடியே அல்வா மாதிரி திருப்பிக்குடுத்துருவீங்க, அதுஒண்ணு போதாதா ஒங்க மேல வச்சிருக்குற நம்பிக்கைக்கு”என்கிறவர் ”இங்க கடைக்கி வர்ற எல்லாரும் கணக்கு வச்சிருக்காங்க நோட்டு வச்சிருக்காங்கக்கா ஒங்களத் தவிர ,நீங்க மட்டும்தான் கையில் காசு கொண்டு வந்து சரக்கு வாங்குற ஆளா இருக்கீங்க”என்பார்.

அவரின் பேச்சிற்கு சிரித்துக் கொள்கிற மங்களாக்க ”நீங்க சொல்றத ,நானும் வாங்கப் போறேன்,நீங்களும் குடுக்கப் போறீங்க,அதுல ஒண்ணும் மாற்றுக் கருத்து இருந்துற முடியாது பாத்துக்கங்க, ஆனா இது குடுக்குறதும் வாங்கு றதும் நல்லா ஓடிக்கிட்டு இருக்குற வரைக்கும்தான் நான் ஒங்களுக்கு நல்ல புள்ள,இதுல கொஞ்சம் பெசகு ஏற்பட்டுருச்சின்னுவையிங்க,ஏற்பட்ட பெசகு ஞாயமா இருந்தாலும் கூட அது பெரிசாகித்தெரியும்.அப்பிடிக்காட்டுறது ன்னு க்குக் காட்டுறதுக்குன்னு நாலுபேரு நேந்துவிட்டது போல காத்துக்கிட்டு இருப் பாங்க,அவுங்க ஒண்ணுன்னா ஒன்பதுன்னு பேசுறதுக்கு ரெடியா இருக்காங்க, அந்த ரெடி வளந்து ஆளுயறதுக்குப் போயி நம்ம தலை மேலயே ஏறி நம்ம கழுத்த இறுக்க அனுமதிக்கக்கூடாது இல்லையா, நம்ம மதிப்ப நாமளே கெடு த்துக்குறக்குடாது,இருக்குற வரைக்கும் மதிப்பா இருந்துட்டு போயிறணும் ,

கையில இருக்குற போது நீங்க சொல்றது போல அரிசி பருப்பு அரசலவு தவிர்த்து மத்தத வாங்கிக்கிற வேண்டியதுதான்,மத்தநேரம்பேசாம மனச மூடிக்கிட்டுப்போயிறவேண்டியதுதான்,

”போனவாரம் கறிக்கடைக்குப்போயிருந்தேன்,அங்க போயி கறி வாங்கிட்டு இருக்கும் போது கொஞ்சம் ஈரல் சேத்து வாங்கலாமுன்னு ஆசை,ஈரல சேத் துப்போடச்சொல்லீட்டு இருக்கும் போதுதான் கையிலஇருக்குற பணம் போ தாதுன்னு தெரிஞ்சிச்சி/

”கடையில சொல்லீட்டு வீட்டுக்குப் போயி காச எடுத்துட்டு வந்து குடுத்து ட்டுத்தான் கறிய வாங்கீட்டுப் போனேன்.

“கடைக்காரங்க கூட அடுத்து வரும்போது குடுக்கலாமுல்ல,இப்ப என்ன தெரி யாதஆளாநீங்க,குடுக்காமயா போகப்போறீங்கன்னாங்க,

நான் குடுக்காமப்போகப் போறதில்ல,நீங்களும்வாங்காமப்போகப்போறதில்ல, இருந்தாலும் நான் குடுக்க மறந்து போவேன்,அந்த மறதி வேணுமுன்னுக்கே செஞ்ச மாதிரி கொண்டு வந்து விட்டுரும்.அப்புறமா அந்த பேச்சே வளந்து வளந்து பெரிசாகி விருட்சமா நிக்கும், அந்த விருட்சத்தப் புடிச்சித் தொங்கு றதுக்கு நாலு பேரு ரெடியா இருக்காங்க,அவுங்களுக்கு அதே சோலிதான் ,எங்கன வம்புன்னு அலைய வேண்டியது,அலைஞ்சி திரிஞ்சி அலுத்துப்போயி அடுத்தவம்புக்கு தவ்விக் கிட்டு திரிய வேண்டியதுன்னு” இருப்பாங்க, அப்பிடித் திரியிறவுங்க கடைசி வரைக்கும் அப்பிடியேதான் திரியிவாங்க,

அட விடுங்கக்கா தொங்கீட்டுத்திரிஞ்சா திரிஞ்ட்சிப் போறாங்க,

”ஒங்களுக்கு முன்னாடி ஒருத்தரு கறி வாங்கீட்டுப்போனாரே அவருக்கு இன் னைக்கி அவரு கறியோட சேத்து ரெண்டாயிரம் ரூபா பாக்கி இருக்குது,

”அவரு ஏதாவது கூசுறான்னு பாத்தீங்களா,,,?

அப்பப்ப தருவாரு ,ரொம்பவும் சுண்டி கேக்க முடியாது அவருகிட்ட, அப்பிடிக் கேட்டா உள்ளதும் போயிரும், அதுனாலத்தான் அப்பிடியே குடுக்கவும் வாங்க வுமா இருக்கம், என்ன ஒரு சமயம் வரும் ,ஒரு சமயம் வராது.வந்தா வரவு, வராட்டி செலவுன்னு நாங்களும் சகிச்சிக்கிட்டம்.அந்த சகிப்பே நாளடைவுல பழகிப்போச்சி/

“ஆரம்பத்துல கொஞ்சம் சங்கடமா இருந்தாலும் கூட அதுவே பழகிப்போச்சி எங்களுக்கு,என்ன செய்ய எங்க பொழப்பு அலி பொழப்பு,அப்பிடித்தான் இருக்கு முன்னு ஏத்துக்கிட்டு ஓடிக்கிட்டு இருக்கம்/

“நிக்கிற வரைக்கும் ஓட்டம் தடையில்லாம தொடர்ந்தா சரி”ன்னவங்க கிட்ட அன்னைக்கி வாங்கீட்டு வந்த கறியோட அவுங்க சொன்ன சொல்லையும் சேத்து சொமந்துக்கிட்டு வந்தேன்.

“எங்க ஊர்ல இப்பிடித்தான் ஒருத்தரு இருந்தாரு அவருக்கு பேரே பெட்டிசன் பார்ட்டின்னுதான்சொல்லுவாங்க,இந்தவிபரம் தெரியாம அவருகூட எல்லா ரும் சகஜமா பழகீட்டு வந்துருக்காங்க,அப்பறம் நாள் போகப் போகத்தான் தெரி ஞ்சிருக்கு, ஆளு இந்த மாதிரின்னு,அதுக்கப்புறம் அவரு கூட பழக்கம் வச்சி ருக் குற ஆளு கொறஞ்சி போனாங்க,

நெலத்துல உழைப்பையும் மனசுல வெள்ளந்தித்தனத்தையும் வச்சிக்கிட்டு உயிரும் உணர்வுமா பழகுற கிராமத்து ஜனங்ககிட்டப்போயி விஷம் தூவி கலந்தது போல ஆகிப்போச்சி அவரு செயல், அப்பிடியே ஒதுங்கீட்டாங்க அவ ருகிட்டயிருந்து/

அவரு அதுக்குப் பின்னாலா நெஞ்ச நிமித்திக்கிட்டுத்திரிஞ்சாலும் ஒத்தக்கா ட்டு கொரங்குபோல ஆகிப் போனாரு,அவரு வீட்டு நல்லது பொல்லதுக்குக் கூட யாரும் போறதில்ல,அவரையும் மத்தவுங்க வீட்டு நல்லது பொல்லது க்குக் கூப்புடுறதில்ல.

“பின்ன அவுங்கள வச்சே அவரு வேடிக்கை காட்டுனா,ஏதோ அவரப்பொறுத்த அளவு அவரு கெட்டிக்காரருன்னா ஜனங்களப் பொறுத்த அளவுக்கு அவுங்க கெட்டிக்காரங்க இல்லையா,,,?

“கூழோ, கஞ்சியோ,,,இருக்குறத சாப்புட்டுக்கிட்டு,,,அவுங்க பாடு அவுங்கபொழ ப்புன்னு இருக்குறவுங்கள போயிக்கிட்டு குத்திப் பாத்த ஒடனே அவுங்களும் கோபமாயி ஒதுக்க ஆரம்பிச்சிட்டாங்க,அவரு செத்ததுக்குக்கூட ஊர் ஜனம் யாரும்போகல,அந்தளவுக்குநம்பிக்கைமோசம்பண்ணீட்டாருன்னுமிதமிஞ்சிய கோபத்துல அப்பிடியே புறக்கணிச்சிட்டாங்க அவர,ரொம்ப நெருங்குன சொந் தக் காரங்கமட்டும்தான் அவரோட பட்டும் படாம தொடர்பு வச்சிருந்தா ங்க,

“பின்ன என்னண்ணே ,நம்ம என்ன பேசுறமுன்னு நம்ம வாயாலேயே தெரிஞ் சிக்கிட்டு நம்மலயே கிறுக்காக்குற நரித்தந்திரம் நாள் பூரா செல்லாதுல்ல, வெளியில நெஞ்ச நிமித்துக்கிட்டு தைரியவான காண்பிச்சிக்கிட்டாலும் கூட ரொம்பஉள்ளுக்குள்ளரொம்பகோழையாஇருந்துதான்செத்துப்போயிருக்காரு/,

”அதுபோல பல ஜென்மங்க இருக்காங்க,அதுக்கெல்லாம் எதுக்கு நம்ம யெடம் குடுக்கணும் சொல்லுங்கண்ணே,

”சொமக்குற சொமைய விட சொமதர்ற சுகங்கள் சமயத்துல மனசு நெறைஞ்சி இருக்கு”என்கிற அவளது பேச்சைக் கேட்ட கடைக்காரர்,

”எக்கா ஒண்ணு கேட்டா தப்பா நெனைக்கக் கூடாது,சேலை துணிமணியெ ல்லாம் எங்க எடுக்குறீங்கக்கா,ஒங்களுக்குன்னு தனியா நெசவு கிசவு ஓட்டுறா ங்களா என்ன ,ஏங் வீட்டுக்காரியும் ஒங்கள பாத்துட்டு பெரு மூச்சு விடாத நாளே இல்லை,,

“இத்தனைக்கும் கொறைஞ்ச விலையிலதான் எடுக்குறதா சொல்றீங்க,ஆனா ஏங் வீட்டுக்காரி பொடவை எடுக்கன்னு போயிட்டா ஐநூறு அறநூறுக்குக் கொ றைஞ்சி எடுக்க மாட்டா,அப்பிடி எடுத்துவந்து உடுத்தீட்டு இருக்குற நாள்ல கூட ஒங்களப்போல யாராவது சாதாரண காட்டன் பொடவைகட்டிக்கிட்டு வரும் போது குமுறிப்போவா குமிறி,,/

“அப்புறமா நீங்க போனப்பெறகு ஏங்கிட்ட வந்து சொல்லுவா,,,,,இது இன்னை க்கி நேத்திக்கில்லை,என்னைக்கி நீங்க ஏங்கடைக்கு சாமான்க வாங்க வந்தீங் களோ அன்னைக்கில இருந்தே இப்படி ஒன்னு ஓடிக்கிட்டு இருக்கு ,படமெ டுத்து நிக்குறது போல,

“இன்னைக்கிஅவளையே கூப்புடுறேன்,நீங்களே பேசி ஒரு முடிவுக்கு கொண்டு வந்துருங்க என்ற கடைக்காரர் மனைவியைக்கூப்பிட்டு மங்களாக்காவிடம் பேசச்சொன்ன போதும் அவர்கள் பேசிமுடித்த போதும் காய்கறி வாங்கிய பையில் ஒரு பிஸ்கெட் பாக்கெட்டை வாங்கி போட்டுக்கொண்டு போனாள் மங்களாக்கா,,/

கையில் காசுஇருக்கிறதோஇல்லையோபிஸ்கட்பாக்கெட்டை மட்டும் அவள் கடன் சொல்லி வாங்கிக் கொள்வாள்.

அது என்ன ஏற்பாடு என கடைக்காரரும் கேட்டதில்லை, மங்களாக்காவும் சொன்னதில்லை.

ஆஸ்பத்திரியில் வாயில் விரல் வைத்து ”ஸ்ஸ்ஸ்”என அழுந்தச்சொல்கிற போஸ்டர் குழந்தையைப் பார்த்ததும் பக்கத்துத் தெருகுழந்தைக்குதான் வாங் கிப்போகிற பிஸ்கெட்பாக்கெட்ஞாபகத்திற்கு வந்தது,

டாக்டர் சொன்ன படிஆபரேஷன்பண்ணிவிடலாம்,நான்கு மாதங்களுக்கு முன் னால் வெளியூர் போயிருந்த போது ஒரு டாக்டரிடம் ஆலோசனையாய் கேட்ட போது சொன்னார்,

“நீங்க குடல் யெறக்கத்த லேசா நெனைச்சிறக் கூடாது, அத நீங்க உடனடியா ஆபரேஷன் பண்ணனும் இல்லைன்னா ஏதாவது விபரீதமா ஆயிரும் என்றார்,

சரி ஆபரேஷன் பண்ணினால் எவ்வளவு செலவாகும் ?எப்பொழுது பண்ணிக் கொள்ளலாம் எனக்கேட்ட போது ”ரொம்பவும் ஒண்ணும் ஆகாதுமா,ஜஸ்ட் இருபத்தஞ்சாயிரம்தான்ஆகும்மா,ஒரு வாரம் ஆஸ்பத்திரியில இருக்க வேண் டியதிருக்கும்.வீட்டுக்குப்போனதுக்கு அப்புறமா கனமான பொருள் ஒண்ணும் தூக்கீறக்கூடாது,முக்கியமாதண்ணிக்கொடம் தூக்கக்கூடாது,மாடிப் படியில ஏறக்கூடாது,வேகமா நடக்கக்கூடாது,சைக்கிள் ஓட்டக்கூடாது”,,,,என நிறைய கண்டிஷன்களைச்சொன்னார்,

சரி என அதை யோசித்தவாறே ஊர் வந்து சேர்ந்த மறுநாள் உள்ளூர் டாக் டரைப் போய் பார்த்தபொழுது டாக்டர் அவர் சொன்னதைத்தான் உறுதிபடுத் தினார்,

ஆனால்செலவுஇருபத்தைந்தாயிரம்ஆகாது.பத்தாயிரத்திலிருந்துபணிரெண்டு வரை ஆகலாம் என்றார்,

கூடுதலாக ”நூறு நாட்களெல்லாம் நீங்கள் ஓய்வு எடுக்க வேண்டாம். ஆபரே ஷன் பண்ணிய சிறிது நாட்கள் கொஞ்சம் கவனமாக இருந்தால் போதுமா னது, அவ்வளவே” என்றார்,

“அவசரம் எல்லாம் ஒன்றுமில்லை என்ற போதும் கூட அவசியம் பண்ண வேண்டிய ஆபரேஷன்” என்றார்.

டாக்டர் சொன்னதை கேட்ட அன்று ஆஸ்பத்திரியிலேயே சிறிது நேரம் அமர் ந்திருந்துவிட்டு வந்தாள் மங்களாக்கா,,,/

ஆஸ்பத்திரியின்உள்வராண்டாபோஸ்டரில்தவழ்ந்துகொண்டிருந்தகுழந்தையும் ,அதன்அருகில்”ஸ்ஸ்ஸ்”,,,என வாயில் அழுந்த விரல் பதித்து எச்சரித்த குழந் தையையும் ஏறிட்டவளாய் மங்களாக்கா,,,/

8 comments:

Kasthuri Rengan said...

பதிவு அருமை தோழர்

vimalanperali said...

வணக்கம் கஸ்தூரி ரங்கன் சார்,
அன்பும்,நன்றியும்
வருகைக்கும்,கருத்துரைக்குமாய்.

Yaathoramani.blogspot.com said...

மங்களாக்காவின் மனநிலையை உணர வைக்கும் விவரிப்பு.வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

மங்களாக்காவின் மனநிலையை உணர வைக்கும் விவரிப்பு.வாழ்த்துக்கள்

vimalanperali said...

நன்றியும் அன்பும்.

vimalanperali said...

விரியும் பிரியங்கள்,,,/

Thulasidharan V Thillaiakathu said...

உள்ளூர் டாக்டரே பரவாயில்லையோ! மங்களாக்கா பாவம்தான் இந்த ஆப்பரெஷன் ஒன்னும் அத்தனை பயமில்லை என்று மங்களாக்காவிடம் சொல்லித் தேற்ரலாம் என்று தோன்றியது...

கீதா

vimalanperali said...

நன்றியும் அன்பும் சார்,
பிரியங்களுக்கும் வருகைக்கும்.