19 Mar 2019

படைப்பு பரிசுப்போட்டி- விமலன்

படைப்பு பரிசுப்போட்டி- விமலன்: அம்மையார் ஹைநூன்பீவி நினைவு பரிசுப்போட்டி

கீச்சுச்சொல்,,,,,,,,

காற்றின் திசை கொள்ளாது
பறந்து சென்று கொண்டிருந்த
தூரத்துப்பறவை ஒன்று
போட்டு சென்ற விதை
மண்பிளந்து துளிர்த்து வளர்ந்து
கிளைத்து பரந்து பாவி
இலையும் கிளையும் பூவும் பிஞ்சுமாய்
நிற்கிற நேரம்
அதில் சந்தோசித்து கூடைந்த பறவைகள் இரண்டு
காதல் பாஷை பேசிக் கொண்டிருந்த நேரம்
வேகம் கொண்டு வந்த யந்திரங்கள் இரண்டு
வரிசையாய் நின்ற மரங்களை வெட்டிச் சாய்க்கின்றன,
வெட்டிண்ட மரங்கள் கொண்ட இலைகளையும் கிளைகளையும்
கிள்ளி எறிய தனியாய் நின்ற யந்திரம் ஒன்று
அதன் வேலையை செவ்வனே செய்து கொண்டிருந்தது,
வெட்டுண்ட மரமும் அறுபடும் அதன் கிளைகளும் இலைகளும்
கூர் முனை கொண்ட யந்திரத்தின் பல்லில்
அறுபட்டுக்கொண்டிருந்த நேரம்
ஆறாதும் ,தீறாதும் பறந்து பறந்து கூடைந்து
காதல் பாஷை பேசிகொண்ட பறவைகளும்

அதன் குஞ்சுகளும் ரத்தம் தோய அறுபட்டு
வெட்டப்பட்டுக்கிடந்த மரத்துண்டுகளின் மீது
உயிர் சாட்சியாய் துடித்துக்கிடக்கிறது.
நிறைந்து தெரிந்த அத்துவான வெளி முழுவதுமாய்,,,/
 

10 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

வேதனை
வளர்ச்சி எனும் பெயரில் நம்மைநாமே அழித்துக் கொள்கிறோம்

போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள் நண்பரே

Yarlpavanan said...

அருமையான பதிவு
சிந்திப்போம்

ஸ்ரீராம். said...

அருமை.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

முன் கூட்டிய வாழ்த்துகள்...

வெங்கட் நாகராஜ் said...

அடடா.... உயிரிழந்த பறவைகள்.... :(

கவிதை நன்று.

vimalanperali said...

வாஸ்தவம் தாங்கிய கருத்துரைக்கு நன்றி,,,/

vimalanperali said...

அன்பும் பிரியமும் சார்,,.

vimalanperali said...

மிகை அன்பு,,

vimalanperali said...

பிரியம் வைத்தகருத்து ,நன்றி/

vimalanperali said...

உயிர் வாதையில் பறவைகள்,,,/