Showing posts with label சொல்சித்திரம்சிறுகதை.. Show all posts
Showing posts with label சொல்சித்திரம்சிறுகதை.. Show all posts

10 Sept 2012

விடியல்,,,,,


           
இம்மாதியான பேச்சுக்கள்தான் உறவுகளுக்கும்,நட்புகளுக்கும்,தோழமைகளுக்கும் பரஸ்பரம்முகம்பார்த்துக்கொள்ளுதலுக்கும்ஆரம்பப்புள்ளியாய்அல்லதுநெசவிடலாய்அமைந்து போகிறது .
தங்கச்சி என்றழைத்தவாறேதான் வருகிறாள் அவள்.நேற்றிரவு இரண்டு தடவை கரண்ட்ஆப்ஆகிப்போகிறது.இரவு2.00 மணியிலிந்து 1.00 மணிவரையும்,அதிகாலை 4.00மணியிலிருந்து5.00மணிவரைக்கும்/இதில்தூக்கம்காணாமல் போய்விட்டது.
 
எப்போதுமேசனிக்கிழமைஇரவுகளில்கொஞ்சம்தாமதமாகதூங்குவதுதான் வழக்கம்.
நேற்றிரவு அரை நாளின் அலுவலகம் முடிந்த அலுப்பில் வீட்டுக்கு வரும்போது மதியம் மணி மூணு இருக்கும்.
 
இவன் வரும்வரை மனைவியும் சின்ன மகளும் கூட சாப்பிடவில்லை.  கேட்டதற்கு
தாமதமாகத்தான் சாப்பிட்டதாகச்சொன்னார்கள்.
 
சின்னவளுக்கு  இன்று பள்ளி விடுமுறை. ஆனால் “சிலிப்டெஸ்ட்” இருக்கிறது எனச்சென்றாள்.9 மணிக்கு ச்சென்று 11 மணிக்கு வந்து விட்டாளாம்.அவள் வருகிற வேளைநான்அலுவலகம்சென்றுவிடுகிறேன்.வந்துமாலைகிரிக்கெட்விளையாடப்போகவில்லை. 
பரிட்சைவரை கிரிக்கெட் டீமுக்கு லீவு என்றாள்.விளையாட்டில் கவனம் குவிகிற போது பரிட்சையில் மார்க் குறைந்து போகக்கூடும் என பள்ளி நிர்வாகம் செய்த ஏற்பாடு இது.
 
8லிருந்து+2வரை எல்லா பள்ளி மாணவ,மாணவிகளுக்கும் விளையாட்டிலிருந்து விதிவிலக்குஅதில்இவனதுசின்னமகளுக்குசந்தோஷமானசந்தோஷம்,அவளேதான் விரும்பி அந்த விளையாட்டு டீமில் சேர்ந்தாள். இப்போது அவளேதான் வ்ளையாட்டு இல்லை என்றதும் சந்தோஷம் கொள்கிறாள்.தினசரி காலை 6.30 மணிக்கெல்லாம் பேட்டை எடுத்துக்கொண்டுக்கிளம்பிவிடுவாள்.விளையாண்டு விட்டு பள்ளியிலிருந்து  8.00மணிக்குகிளம்பிவீடு வந்து சாப்பிட்டு விட்டு திரும்பவுமாய் 9.00 மணிக்குள்ளாகப் போக வேண்டும். நல்ல விளையாட்டிது என்பாள் அவளின் தாய்.இவன்தான் “விடு ஒன்றைப்பெற ஒன்றை இழக்க வேண்டி வரும்தான்எனச் சொல்லி  சமாளித்து  வக்காலத்து  வாங்குவான்.  நல்லாப்போனா,ஒண்ணவுட்டுஒண்ணுசம்பாரிக்க,ஒடம்பவுட்டுறாம ஆமாம் என்பாள் அவளும் விடாமல்/
நெருக்கிக்கேட்டதில்பிள்ளைகளைவிளையாட அனுப்புகிற எல்லாப்பெற்றோர்களும்  சொல்லி அலுத்துக்கொள்கிற சொல் இதுவாகத்தான் இருக்கிறது எனத் தெரிகிறது.
 
ஒருவீட்டில்அம்மாஎன்றால்இன்னொருவீட்டில்அப்பா,,,,,,,,,வித்தியாசம் அவ்வளவே/
திரும்பத்திரும்பசெய்கிறஒரேவேலைஅலுத்துப்போகிறதுதானே?என்கிறாள் சின்னவள்.அதுவும் வாஸ்தவமே/
 
அவளின் வாஸ்தவமான பேச்சுடனும்,மனைவியின் ஆதங்க அலுப்புடனும் வயிறு வீங்க சாப்பிட்டு விட்டு படுத்தவன் நன்றாக தூங்கிப்போனான்.ஆழங்களில் இழுத்துச் சென்ற கனவு இவனது மனதுக்கு,இசைவானதாயும், நன்றாகவுமாய்/
 
தூங்கிஎழுந்ததும்ஒருடீ,மனைவிகொடுத்ததுநன்றாகவேஇருந்தது.,,,,,,,,,,,,,,,,,,,,,,,,போல/
எனஇவன்சொன்னநேரம்இடுப்பில்கைவைத்து முறைக்கிறாள்.
 
மனைவி.டீ,மனைவி,இன்னமும்எழாமல் புத்தகத்தை பிடித்தவாறே  தூங்கிப் போயிருந்த மகள்.ஏதோ ஒரு பழைய பாடலை காட்டிய தொலைக்காட்சி,சுழன்று கொண்டிருந்த மின்விசிறி.கம்பிகளில்கறுப்புப் பெயிண்ட் காட்டிய ஜன்னல் கதவு,எரிந்துகொண்டிருந்த ட்யூப் லைட்,நடை,வராண்டா என காட்சிப்பட்ட  வீட்டின் நகர்வு .
 
டீயை குடித்து முடித்த மாலையை நகர்த்தி இரவை உறையச்செய்த நேரம்,சரியாகத் தூங்கவில்லை.10.30 மணிக்கு சாப்பிட்டுவிட்டு 11.30 க்கு படுத்து தூக்கம் வராமல் புரண்ட பொழுது 12.00 மணிக்குப் போன கரண்ட் 1.00 மணிக்குத்தான் தன்னை பதித்துக்கொண்டது.
 
பின்பு எந்நேரம் தூங்கிப்போனான் எனத்தெரியவில்லை.குறைந்த பட்சம் 1.30 மணி ஆகியிருக்கலாம்.திரும்பவும்அதிகாலை4.00மணிக்குபோனகரண்ட்5.00மணிக்குத்தான்வருகிறது. அப்போது  வந்த விழிப்பு  எப்போது  தூக்கத்தில்  மையமிட்டது எனத் தெரியவில்லை. தூக்கத்தில் மையமிட தாமதமானது கூட பரவாயில்லை. உடலெல்லாம் வேர்த்தும்,கசகசப்பாயும் இருந்ததுவே பெரிய எரிச்சலாய்/
இரண்டாவது தங்கச்சி என்ற கூப்பிடலுக்கு  விழித்து விட்டான்.இவனது மனைவி அடுப்படியிலிந்து புடவையில் கையை துடைத்தவாறே செல்லவும்,வெளியிலிருந்து மூன்றாவதுமுறையாக“தங்கச்சி”கேட்காகமலிருக்கவும்சரியாய் இருந்தது.
 
"என்னக்காநல்லாயிருக்கீங்களாஇவன்மனைவி.நல்லாயிருக்கேன் தங்கச்சி,
கடைக்குப்போனேன்,அப்பிடியே ஒன்னய பாத்துட்டுப்போகலாமுன்னு வந்தேன் தங்கச்சி” என்றாள் வந்தவள்.
 
எங்களது பக்கத்து தெருவில் குடியிருக்கிறாள்.60பதைஎட்டி நெருக்கியிருக்கும் வயது.ஆனால் வயது தெரியவில்லை.இவனது அம்மாவை விட பத்து வயது குறைவாக இருக்கலாம்.அவ்வளவே.என நினைத்துக்கொண்டிருந்த நேரம் “தங்கச்சி திருச்செந்தூர் போறம்,ஒரு டூரு வர்றியா”என இவனது மனைவியிடம் சொல்லியும் கேட்டும் கொண்டிருந்த நேரம் இவனுக்கு விழிப்பு வந்து விட்டது.
 
எழுந்திரிக்கமனமில்லாமல் படுக்கையிலேயே புரண்டு கொண்டிருந்தான்.”இன்னும் தூங்குறாரா வீட்டுக்காரரு?ஆமாம் ஞாயித்துக்கெழம கொஞ்சம் லேட்டாகத்தான்  செய்யும் படுக்கைய விட்டு எந்திரிக்க/
 
அதான் தங்கச்சி ஒரு ஆளுக்கு முன்னூறு ரூபா டிக்கெட்டு,சாப்பாடெல்லாம் நம்மதான்.காலையிலஇட்லிசெஞ்சிகொண்டுபோய்க்கிற வேண்டியதுதான், வீட்டுல
பிரிஜ்இருக்குல்லப்பா,நைட்டேமல்லிசட்னிஅறைச்சிவச்சிக்கிறவேண்டியதுதான்.
மதியம் அங்கபோயி,,,,,,,,,,,,,,,ஹோட்டல்ல சாப்பாடு, சூப்பர்சாப்பாடுப்பா, அப்பிடியே நைட்டுக்கு எங்கயாவது கடையில ரெண்டு இட்லி கிட்லின்னு வாங்கி சாப்டுட்டு
வீட்டுக்குவந்துரவேண்டியதுதான்.
 
போனமாசம்தான்காசி,பத்திரிநாத்,புத்தகயான்னுபோயிட்டுவந்தேன்,நல்லஇருந்திச்சிப்பா,மகன்மெட்ராஸ்லவீடு வாங்கிருக்கான்,போன வாரம்தான் பால் காச்சுனோம்,
மகாபலிபுரம்ரோட்டுல வீடு,அப்பர்ட்மெண்ட் வீடுதான்.இப்பவிக்கிற வெலையில
எங்கயெடம் வாங்கி எப்பிடி கட்டி முடிக்கிறது. அதான் கட்டுன வீடாப் பாத்து வாங்கியாச்சு, 
எட்டாவதுமாடியிலநின்னாமகாபலிபுரம்கடல்காத்துசும்மாசூப்பராஅடிக்குதுப்பா,காருவாங்கனுன்னாங்க,
நான்தான் இப்பயிருக்குற டவுன் ட்ராபிக்கில கார்ல எறும்பு ஊர்ந்து போன மாதிரி போறதுக்கு பேசாம டூ வீலரே போதும்ன்னு சொல்லீட்டேன்” என்றாள்.
 
“ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் அங்கயிருந்து வந்தேன்.வீட்ல பின் பக்கம் நிக்கிற வேப்பமரத்த வெட்டுனம்.எங்க ஊர்லயிருந்துதான் ஆள்க வந்துருந்தாங்க வேலைக்கு. ஊர்லயிருந்துஆள்கள்வந்துட்டாசாப்பாடுகொண்டு வர வேணாமின்னு சொல்லீருவேன்,
 
ஒரு ரசம் ,கூட்டு,கத்திக்கா சாம்பாருன்னு செஞ்சு போட்டேன்.இன்னும் கூட மிச்சம் கெடக்கு,பிரிஜ்ஜில வச்சிருக்கேன்,காலையில அதான் சாப்பாட்டுக்கு.ரெண்டு ஆள்க வந்தாங்க,எண்ணூறு ரூபா சம்பளம்.வெறகுஒரு 1100 ரூபாய்க்குப்போச்சு.இது போக வண்டிவாடகைஇருக்கு,
 
ஒங்கமரத்தக்கூடவெட்டனும்ன்னுசொன்னீங்களே,வெட்டனும்ன்னாக்கூடசொல்லுங்கப்பா,வரச் சொல்லுவோம். நல்லாவேல செய்யிவாங்க. என்னயக்  கேட்டா இதவெட்டக்கூடவேணாம்மேலபோறகொப்புகளமட்டும்வெட்டி  எடுத்துட்டு
          வுட்டுருங்கப்பா,அதுவாட்டுக்குநல்லாபெருக்கட்டும்.பின்னாடிநல்லவெலைக்குப்
         போகும்.எதுக்குவீணாப்போயிவெட்டணும்என்றாள்.சரிப்பா வரேன்.
 
கொஞ்சம் கறி எடுத்தேன்.எனக்கு  இந்த  சிக்கனெல்லாம்  புடிக்கிறதில்லப்பா, மட்டன்தான்.மாசத்துக்கு ஒருதடவ அதுவும் கால் கிலோ மட்டும்எடுப்பேன்.அதுவே ரெண்டு நாளைக்கு கெடக்கும், பிரிஜ்ஜில வச்சி,வச்சி சாப்பிடுவேன். சரிப்பா டூர் வர்றதுன்னா கொஞ்சம்முன்னக்கூட்டிசொல்லீருங்கப்பா.50ரூபாஅட்வான்ஸீ,நான் கெளம்புறேன்”.என அந்த இடத்தை விட்டு நகன்றாள்.
10 வருடங்களாக வீட்டைவிட்டு வெளியில் வராமல் தனது உடல்நலமில்லாத கணவணை அவர் மரணிக்கிற காலம் வரை பார்த்து அவரே தன் உலகம் என இருந்த அவள்/
 
அவள் சென்றதும் படுக்கையை விட்டு எழுந்து வெளியில் வருகிறேன்.பொழுது நன்றாக விடிந்திருந்தது. 

12 Aug 2012

பின்நிழல்,,,,,,


   அவர் ஏன் அப்படி கோபப்பட்டார்?அவரது கோபம் எங்கிருந்து சுளியிடுகிறது
எனத்தெரியவில்லை. ஆனால் கோபப்பட்டு விட்டார்.

 “கோபம்என்றால்கோபம்அப்படிஒருகோபம்”எனசொல்கிறஅளவில்உஷ்ணமாகிப்போகிறார்.பக்கத்தில்ஏதேனும்சின்னஞ்சிறுஉயிரிகள்இருந்தால் கருகிப்
போயிருப்பார்கள் போலும்.

  முதலில் நாலாம் எண் கவுண்டரில் உள்ள கிளார்க்கைப்பார்க்கிறார்.அவர் கூறிய பதிலில் திருப்தியடையாமல் இரண்டாம் நம்பர் கவுண்டருக்கு வருகிறார்.அங்கேயும் அவருக்கான பதில் இல்லை போலும்.பின் வாங்கியவராய் 5 ஐயும்,6 ஐயும் 1 ஐயும் பார்க்கிறார்.அவர்களெல்லாம் பிஸியாக/

  கடை நிலை ஊழியரைபோய்ப் பார்க்கிறார். அவர்7 எண் கவுண்டரைக்காட்ட அங்கேயும்போய்விபரம்கேட்கிறார்.மெலிந்தஉடல்.தளர்ந்தநடை,உப்பிப்போன கன்னம்.
50வயதிற்கு மேலிருக்கலாம் அவருக்கு.சிவந்த நிறத்திற்கு அவர் அணிந்திருந்த சட்டைமுழுதாக பொருந்திப் போய் விடவில்லை. கண்ணாடித் தட்டிலிருந்த மலர்செடிபோல துருத்திக்கொண்டு ஒட்டாமல்/

 தொளதொளவென வெளிர்நிறத்தில் அணிந்திருந்த சட்டைக்கு கீழிருந்த வேஷ்டியில் ஓடித்தெரிந்த ப்ரெவ்ன்க்கலர் கரை அவரது பாதம் தட்டி நிற்கிறது. கையில் எந்நேரமும் ஒலிக்கலாம் அல்லது எந்நேரமும் பேசிக்கொள்ளலாம் என தயார் நிலையில் இருந்த செல்போன்.

 மேல் புறமாய் திறந்திருந்த சட்டை பட்டன் வழியாக அவரது நெஞ்சின் வெள்ளை ரோமங்கள் வெளிப்பட்டுத்தெரிந்தது.

 படிய வாரியிருந்த தலையிலிருந்து நான்கு வெள்ளை முடிகள் சிலுப்பி நின்றது.
 முகத்தில்மாட்டியிருந்த கண்ணாடி இளம் கருப்புக்கலர் காட்டி சிரித்தது.சிரித்த கண்ணாடியின்பிரேம்களில்பெயிண்ட்உதிர்ந்துஉரிந்து நின்றதுஅவருக்கான
உடலையும்எடையையும்தாங்கியவாறு இருக்கையிலிருந்து ஊன்றி நின்ற 
இரண்டு கால்களில் சூவும்,ஸாக்ஸீம்/

 வலது கால் பாதத்தில் பின் பக்கத்தில் பாதியை காணவில்லை.அரைப்பாதம் வரை வெட்டி எடுக்கப்பட்டிருந்தது.

 “சுகர் ரொம்பகூடிப்போச்சு சார்.சின்ன புண்ணாத்தான் மொதல்ல இந்த யெடத்துலமொளைச்சதுகாலைகாட்டிசொல்கிறார்..அப்பறம்பெருசாகிக்கிட்டே
போயி ஒரு கால கட்டத்துல ஆறல,என்ன செய்ய?டாக்டர் கிட்டப்போயி நின்னப்ப “ஒனக்கு சுகர் ரொம்ப கூடிப்போச்சு,புண்ணு வந்த பகுதிய ஆபரேசன் பணிஎடுத்துரலாம்அப்படின்னாரு,நம்ம ஏரியா டாக்டருதான் சார்,இல்லைன்னா முழுக்காலுக்கும்பரவிமொழங்கால்லஇருந்துஎடுக்கவேண்டி வரும்ன்னாரு.
அப்பத்தான் எனக்கு சுகர் இருக்குற விஷயமே தெரிய வந்துச்சு.சங்கடப்பட்டு என்னசெய்யசார்அந்தடாக்டர்சொன்னஆஸ்பத்திரியிலே அட்மிட் ஆயி ஆபரே
ஷன்பண்ணிக்கிட்டேன்.இப்ப அரப்பாதத்தோட அலையுறேன்”சார்என்றார்,

 நேற்றைக்கு முன் தினம் அவர் எனது வண்டிக்கு பின்னால் லிப்ட கேட்டு ஏறி வரும் போதுதான் இதெல்லாம் சொல்கிறார்.

 “நம்ம ஊருல இருக்குறஒரு தனியார் மில்லுலதான் வேலை பாத்தேன் சார்.நான் அங்க போயிவேலைக்குசேரும்போதுஎனக்கு வயசு 23 சார்.ஒரு 4 வருசத்துக்குமுன்னாடிதான்அங்கயிருந்துவந்தேன்,ரிட்டையர்டாகிஇல்ல, மில்ல மூடிட்டாங்க,லாக் அவுட்டுன்னு அறிவிச்சுட்டாங்க,என்ன செய்ய?நஷ்டம்,யூனியன் நடவடிக்கை,அது இதுன்னு கைவிரிச்சாங்க,காரணம் சொன்னாங்க?அதை நம்பி 27 வருசம் ஓடிருச்சு.என்னய மாதிரி கிட்டத்தட்ட 200 குடும்பம்.அவுங்க கதியெல்லாம் என்னாச்சுன்னு தெரியல.பல பேரு பலபக்கம் பொழப்பப்பாக்க போயிட்டங்க சார்.பல பேரு குடும்பத்த மட்டும் இங்க விட்டுட்டு மெட்ராஸீ,பாம்பேன்னு பொழப்புக்காக அலையுறாங்க சார்.மாசம் ஒரு தடவ ரெண்டு தடவைன்னு வந்து குடும்பத்தப் பாத்துட்டு போய்யிறாங்க.
அவுங்க அங்கயிருந்து வரும் போது இருக்குற சந்தோசம் புள்ள குட்டிகள் விட்டு பிரிஞ்சிப் போறப்ப இருக்குறதில்ல சார்.என்னதான் வசதியான ஊருல இருந்தாலும் வேலபாத்தாலும் கூட இங்க பழைய சாப்பாட்ட சாப்ட்டுட்டு இருந்த மாதிரி இருக்குமா சார்?

 எனக்கு ஏதோ குடும்ப பலம், பூர்வீக சொத்து கொஞ்சம்ன்னு இருந்துச்சி,அத வச்சி ஒரு பொண்ண கரையேத்தீட்டேன்,இப்பதிருப்பூர்ல இருக்காங்க,ஏதோ அவுங்க பொழப்பு ஓடிகிறுது நிக்காமலும்,பழுது படாமலும்,/
இன்னொரு பொண்ணுக்கு யெடம் பாத்துகிட்டு இருக்கேன், மிச்சம் நிக்கிறது பையன்தான் சார்.அவன்கையஊணி கரணம் பாஞ்சிக்கிறுவான்.அந்த அளவுக்கு அவங்கிட்ட தெறம கெடக்கு. பெருமைக்காக சொல்லல சார்,சின்ன வயசுல நான்எப்பிடிஇருந்தேனோஅப்பிடியே இருக்கான் சார்.கழுத கொணத்துலயாவது கொஞ்சம்மாற்றம்இருக்கக்கூடாது.சொன்னாலும் கேக்கமாட்டேங்குறான்,
நாலுயெடத்துல போயி அனுவப்பட்டு வந்தா தன்னால தெரியும்.நானும் சும்மா இல்லாம இந்த ஒடம்ப வச்சிக்கிட்டு ஒரு யெடத்துல வாட்ச் மேனா இருக்கேன் சார்.

 எனக்கு மாதிரி இங்க எத்தன பேருக்கு வாய்க்கும் வாய்ப்பு சொல்லுங்க?200 குடும்பங்களதெருவுக்குகொண்டுவந்த அந்த மில்லு நிர்வாகம் இதையெல்லாம் யோசிச்சிருக்குமான்னு தெரியல சார். எப்பயுமே வலியும் வேதனையும் நம்மள மாதிரி ஆட்களுக்குதான் சார்,அவுங்களுக்கு என்ன?

  எங்க யூனியன் தலைவர்  கூட ஆளு காலமாயிப் போனாருன்னு சொன்னாங்க
எல்லாம்கேள்விப்பட்டதுதான்எங்கயிருக்காருஎன்னன்னுதெரியல,துஷ்டிக்குக்
கூட போகமுடியல,அவருஇல்லாட்டிஎங்களுக்குமில்லுல,அந்த   சம்பளமில்ல,
அந்த  மரியாதை   இல்ல,  அந்த   வாழ்வு   இல்ல,,,,,,   ஆனா   அப்பிடியெல்லாம்
எங்களுக்கு  கௌரவமும், நெஞ்சு  நிமிர்வும்  குடுத்தவரு இப்பசாம்பலாபோனப் 
பெறகும்எங்க மனசுல நிக்குறாரு சார். சும்மா சொல்லக்கூடாத் சார்,எங்களோட ரததமும்சதையுமாஇருந்தாருஅவரு,எங்க எல்லார்வீட்டுவிசேசங்கள்லையும்
முடிஞ்சஅளவுகண்டிப்பா கலந்துக்கிருவாரு/

  சுருக்கமா சொன்னா எங்கள்ல ஒருத்தரா இருந்தாரு அவரு.அப்ப்டியெல்லாம் இனி ஒரு மனுசரப்பாக்குரது அபூர்வம் சார்.”

  என்னைப்பார்த்த, எனது இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து வந்த ஒரு சில பொழுதுகளிலேயே எப்படி அவரால் இப்படியெல்லாம் பேசிவிடமுடிகிறது எனத்தெரியவில்லை.

 நேற்றைக்கு முன்தினம் காலை நான் அலுவலகம் செல்கிற வழியில் தென்பட்டு   என்னுடன்  ஏறி  வந்தவர்தான்  இதெல்லாம் சொல்பவராக  மாறித்
தெரிந்தார்.

 அவரின் சப்தம் இன்னும் கூடிக்கொண்டே போனது.முடி அடர்ந்த கையை ஆட்டி,ஆட்டி வேகமாகவும் தொடர்பு விட்டுப்போகக்கூடாது என்பவராயும் பேசுகிறார்.அவர்சப்தமிடும்போதுஅவரதுஉடல்ஆடிப்போகிறது.பேச்சுஅறுந்துஅறுந்து வார்த்தைகள்தொடர்பற்றுதெறிக்கிறது.

   அவர்வெளிப்படுத்திய வார்த்தைகள் அந்த பரந்த வெளியில் பட்டுப்பரவுகிறது.

6 Aug 2012

பஞ்சுமூட்டை,,,,,,,


மேல்புறம் எட்டும் கீழ்ப்புறம் பத்துமாய் மூட்டைகள் அடுக்கப்பட்டிருந்த வண்டி வரிசையாய் பலகைகளால் அடுக்கித் தைக்கப்படிருந்தது.
கை தேர்ந்த தச்சரின் கைவண்ணத்திலும்,உழைப்பிலும் செய்நேர்த்தியிலுமாய் உருவாகியிருந்ததாய் இருக்க வேண்டும்.

அவரது உழைப்பும்,ரசனையும் பிசைந்து உருவாக்கப்பட்டிருந்ததாய் இருந்த வண்டி பார்க்க அழகாகவும் கொஞ்சம் பழசாகவும் தெரிந்தது.
பழசும் ஒரு வித அழகுதான்(இதைச்சொன்னால் சம்பந்தப்பட்டவர்கள் இடுப்பில் கை வைத்து கொண்டு கண்களை உருட்டி முறைக்கக்கூடும்) அசைந்து ஆடி பாரம் இழுத்து வந்த வண்டி ரயில்வே கேட்டின் அடைப்பில் காத்து நின்றிருந்தது.

நான் ஸ்டாண்ட் போட்டு நிறுத்தப்பட்டிருந்த எனது இருசக்கர வாகனம் மற்றும் எனது திசை திரும்பிய விழிபார்வை வழியாக ஊடுருவித்தெரிந்தவர்களாய் வண்டியும்,வண்டியிலிருந்த பத்தும் ,எட்டுமான பருத்தி மூட்டைகளும் அவைகளின் மீது இழுத்துக் கட்டப்பட்டிருந்த கயிறும், கயிற்றிலிருந்து நீட்டிக்கொண்டிருந்த சிலும்புகளும்,அதன் முனை மழுங்கா கூர் முனைகளும் கட்டுக்குள் இருந்த பெரிய,பெரிய சாக்குகளின் ஓட்டை வழியாகவும் பிதுங்களாகவும் தெரிந்த பருத்தி மாலை நேர வெயில் பட்டு மின்னியது.

வெயில் உரசிச்சென்ற மூட்டைகளையும்,மூட்டைகள் கட்டிய கயிற்றையும் தன் மேல் சுமந்து நின்ற வண்டியை இழுப்பதற்காய் கட்டப்பட்டிருந்த ஒற்றை மாடு வாயை அசை போட்டவாறும் வாயிலிருந்து ஒழுகிய மென் ஒழுகலான நுறையுடனுமாய்,கூர்முனையற்று பெயிண்ட் உதிர்ந்த கொம்புகளுடனும், நீர் வழிந்த கண்களுடனுமாய்மெலிந்ததோற்றம் காட்டி நிற்கிறது பார்வையில் பரிதாபத்தை விதைத்துச்சென்றவாறு/

வண்டியின் முன் நின்ற பஸ்,அதன் பின் நின்ற கார் பக்கவாட்டாக நின்ற இரு சக்கரவாகனங்கள் பெயர்ந்து கிடந்த சாலை,அதன் சிறு கல் பெயர்ந்து தெரிந்த பள்ளங்கள்,வண்டியின் டயரில் ஒட்டிக்கிடந்த மென் தூசிகள்,சுழன்றடித்த காற்றில் சாலையிலிருந்து மேலெழும்பி பறந்த தூசிகள் மற்றும் மனித முகங்களைப் பார்த்தவாறு மாட்டை தடவிக்கொடுத்து அதன் உடல் தட்டிக்கொடுத்த வண்டிக்காரின் கையில் மின்னிய செல் போன் ஒரு மினி சூட்கேஸ் சைசுக்கு இருந்தது.

“பரவாயில்லப்பா,இப்ப ரெண்டு தோசை ஊத்திக்குடுங்க,நீங்களும் பசிச்சா ரெண்டு ஊத்திச்சாப்புட்டுக்கங்க,நான் வீடு வந்ததுக்கப்புறம் நெறைய தோசை ஊத்திதர்ரேன் சாப்புடலாம் என பேசிக்கொண்டிருந்தவரையே உற்றுப்பார்க்கிறேன்.

பதிலுக்கு என்னையே உற்றுப்பார்த்த அவரது உடம்பில் சட்டையில்லை.ரோமம் மண்டியிருந்த வெற்றுடம்பில் துண்டு போட்டிருந்தார்.அது தோள் பட்டை தழுவி தொந்தி தாண்ட முடியாமல் நின்றது. இடுப்பில் கொஞ்சம் அழுக்கும்,பழுப்பும் ஏறிய கட்டம் போட்ட கைலி,தடித்துக் கனத்த கைகளும்,கால்களும் வீடுகளில் நிற்கும் தூணை நினைவு படுத்தியது.

“என்ன தம்பி அப்பிடிப்பாக்குறீங்க?ஏங் வீட்டம்மாவுக்கு ஒடம்பு சரியில்ல ஒரு வாரமா,பெட்டல கெடக்கா கௌவர்மெண்ட் ஆஸ்பத்திரியில,பக்கத்துல இருந்து பாத்துக்க குடுத்து வக்கல தம்பி எனக்கு,தெனமும் சாய்ங்காலமும், காலையிலையும் பள்ளிக்கூடத்துக்கு போறதுக்கு முன்னாலயும்,பள்ளிகூடம் போயிட்டு வந்ததுக்கு பின்னாடியும் புள்ளைங்கதான் போய் பாத்துக்குதுங்க/
அதுக பள்ளிக்கூடம் போயிட்ட பகல் பொழுதுல ஒத்தையில கெடப்பா,எதுன்னா ஒண்ணுக்கு,தண்ணிக்கின்னாக்கூட ரொம்ப செரமப்பட்டுதான் போறா பாவம்,என்ன செய்ய தம்பி நான் போயி சவரட்டன செய்யனும்னா இங்க வண்டி ஓட்டம் நின்னு போகுது.வண்டி ஓடலைன்னா ஏங் பொழப்பு தரிங்கினத்தோம்தான் தம்பி.ஓடுற தண்ணியில விழுந்த சுழி மாதிரி இப்பிடி சொழட்டி வாங்குது நம்ம பொழப்பு” என அவர் பேசிக்கொண்டிருந்த போதே அடைக்கப்பட்டிருந்த ரயில்வே கேட் திறந்து விட்டது.

திறக்கப்பட்டிருந்த கேட்டின் வழியாக கடந்த பஸ்களுடனும் ,கார்களுடனும்.இரு சக்கரவாகனங்களுடனுமாய் அந்த மாட்டு வண்டியும் செல்கிறது பாரம் சுமந்தும் வண்டியோட்டின் மனம் சுமந்துமாய்/

24 Jul 2012

நுரைத்தண்ணி,,


   அவர் போய்க் கொண்டிருந்தார் நெடித்துமெலிந்ததன்கைகளையும்,கால்களை
யும்வீசியபடி/

 வீட்டின் படியிறங்கி தெருவில் நடந்து ரோட்டைக் கடந்து சென்று கொண்டிருந்தார்.
   
   மண்ணின்துகள்களும், கல்லும், தூசியும்  கலந்திருந்த  தெருவில்  நடமாடித்
தெரிந்தகோழிகளும்ஊடாடித்திரிந்தநாய்களும்அவரதுஉடல்உரசிசென்றமென்காற்றும்அந்த இளம் காலையின் அடையாளங்களாக அவருடன் கைகோர்த்துக் கொண்டு/

 இந்தா வந்துவிட்டது. ஒன்று,இரண்டு,மூன்று நான்காவது கடையாக அமர்ந்திருக்கிற நாகர் கோவிலார் கடையில் தான் அவர் அன்றாடம் காய்கறிகளும்,பலசரக்குகளும் வாங்கிகொள்கிறார்.

 ஒற்றை ஆளுக்கு எத்தனை தேவையாய் இருந்து விட முடியும்? அதுவும்60தைஎட்டி தொடப்போகிற இந்த வயதில்?என்ற போது கூட பிடிவாதமாய்அன்றாடத்தேவைக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவுமட்டுமே
வாங்கிக்கொள்கிறார்.

    ஒன்றுகூடாது.ஒன்று குறையாது.அது எப்படி இவ்வளவு துல்லியமாக வாங்க முடிகிறது அவரால் எனத்தெரியவில்லை.

   அரிசி,பருப்பு,அரசலவு எண்ணெய் மற்றும்  காய்கறி   எல்லாம்  அங்குதான்.
இப்போதுதான் ரெண்டு ரூபாய் காய்கறி வந்து விட்டதே,ஒரு கை காய்கறி ரெண்டு ரூபாய்.ஆரம்ப விலை அப்படி என இருந்தது இப்போது ஐந்து ரூபாய் வரை ஆகிபோனது.

கத்திரிக்காய்வெண்டைக்காய்தக்காளி, கேரட் எல்லாவற்றிற்கும்அப்படித்தான்.
ஐந்துரூபாய்க்குஒருகை அள்ளிப்போடுவார்கள்.ஆனால்அவர்அதையெல்லாம்
வாங்கமாட்டார்.ஐந்து ரூபாய் காய்கறிகளிலிருந்து விடுபட்டுதனியாக தட்டில் உள்ள காய்கறிகளை மட்டுமே வாங்குவார்.

  “பெரியக்காதான்சொல்லுவாள்.அடிக்கடி. நாக்குக்கு  ருசியா சாப்புடாட்டி கூட 
ஒடம்புல ஒட்டுற மாதிரி சாப்புடணும்” என்பாள்.

     "தனியாளஇருக்கஒடம்பப்பாத்துக்க. ஏதாவது ஒண்ணுன்னா சொல்லிவுடு.
”நாங்க என்ன படக்குன்னு வர முடியாத தூரத்துலயா இருக்கம்.மினி பஸ் ஏறுனா அடுத்த  காமணி   நேரத்துல  வந்து  விழுந்துர்ர  தூரம்  என   சொல்லி
வார்த்தைகளால்மனதுக்குமருந்திட்டுஆறுதல் சொன்னவளும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக இறந்து போனாள்.

  இவரை விட கால் அடி உயரம் கூடத்தான் இருப்பாள்.பூஞ்சையான உடலில் குடிகொண்டிருக்கிற அந்த தைரியம் அவர்களது குடும்பத்தில் யாருக்கும் இருந்ததில்லை. இத்தனைக்கும் பள்ளியில் படித்த காலத்தில் பரம சாதுவாயும் ,அதிகம் வாய் பேசாதவளாகவும்/
   18முடிந்து19தைஎட்டித்தொடுகிறவேளையில்அவளுக்குகல்யாணம் முடிந்து
விட்டது.

    உள்ளூர்   மாப்பிள்ளைதான். கடலைமிட்டாய்,பொட்டுக்கடலை,மிக்சர்,சேவு
என்கிறசில்லறைஅயிட்டங்களைவாங்கிபாக்கெட்போட்டுசின்னக்கடைகளுக்குப்போடுபவர்.

 ஐந்துபவுன்நகை,துணிமணிகளுக்குப் போக சாப்பாட்டிற்குஇவ்வளவு என கொடுத்து விடுவதென பேசி முடித்தார்கள்.

  இரண்டு பிள்ளைகள் ஆண் ஒன்றும் பெண் ஒன்றுமாக/ பையன்மூன்றாவதும்,
பெண்ஐந்தாவதுமாகப் படித்தார்கள்.

 பரஸ்பரம்இருவரதுமார்க்குகளும்பாடங்களும்,இருவரிடமும் நெசவிட்டுமாறி,
மாறிவித்தைகாண்பிக்கிறவிளையாட்டுநடக்கும்.

  இருவருக்கும் இடையில்சுவரெழும்பி நிற்கும் வித்தியாசவிகிதங்களை கம்புகொண்டுதாண்டிசரிசெய்யவேநேரம்சரியாகிப்போகிறது. 

 முன்னது, பின்னதிலும், பின்னது முன்னதிலுமாய்மாறி,மாறி பின்னிக்கிடக்கிற
 சமயங்களில் இருவரது பள்ளித் தேர்ச்சியிலும் ஒரு வித்தியாசம் தெரியும்.
.
 அந்த வித்தியாசங்களில் ஏற்படுகிற உரசல்களும் சண்டைகளும் மின்மினிகள் ஒன்றோடோடுஒன்றுமுட்டி மோதுவது போல   அழகாகயிருக்கும், இவர்  கை
நிறைந்துஏதாவதுவாங்கிப்போய்அவர்களுடன்பேசிச் ரித்துக் கொண்டிருக்கிற நாட்களில்/

 “வந்துட்டயாப்பா,புள்ளைகளுக்கு ரெண்டு தீன்பண்டம் வாங்கிக் குடுத்துட்டு மச்சானும்,மாப்புளையுமா ராத்திரி கடைப்பக்கம் சுத்தீட்டு திரியிறதுக்கா?,
 
 "அட என்னக்க நீ,வீட்டுக்கு வந்தவன வான்னு கூப்புடாம இப்பிடிப்போடு தாளிக்கிற?”

   “வையாம   பின்ன  என்ன  கொஞ்சவா  சொல்ற?ஒரு பொம்பளப் புள்ளைய
வச்சிருக்கம்,செய்யிறம்ன்னு ஒரு ஒசன இருக்கா மனுசனுக்கு?நீயும் ஒண்ணுக்கு ரெண்டா பெத்து வச்சிருக்க,நாம என்ன வஸ்தாவி பரம்பரையா என்னத்தையோ இத்துப்போன ஒடம்ப வச்சிக்கிட்டு ஒட்டுப்போட்டு ஓட்டிக்கிட்டு திரியிறம். இந்த லட்சணத்துல அந்த நாத்தமெடுத்த கண்றாவிய ஊத்தாட்டி என்ன?”

   “விடுக்கா நாங்க  என்ன  எந்நேரமும்   பாட்லும்,   கையுமாவா  அலையிறம்.?
ரெண்டு,மூணுமாத்திக்குஒருதடவதான/

  ருசிகண்டநாக்கு விடமுடியல,போக எங்களுக்கு இருக்குற ஒடம்பு அலுப்புக்கு இப்பிடி ஏதாவது தேவப்படத்தான் செய்யுது,நாங்க என்ன குடிச்சிப்புட்டு கடைக்குபக்கத்துலயோ,இல்லைன்னா எங்கனையாவது வம்பு இழுத்துக்கிட்டா திரியிறம்?நாங்க குடிக்கிறது மூணாம் பேருக்கு தெரியாது.இங்க ஒனக்கும் அங்க ஏங் வீட்டுக்காரிக்கும் தவுர/

 “எதுனா சொன்னா இப்பிடி மனச்சமாதானம் பண்ணி பேசிருப்பா,சரி சரி மச்சான் எங்க தெருமுக்குல நிப்பாரே,சரி கடைக்குப்போயிட்டு போகும் போது வீட்டுக்கு வந்து ஏதாவது சாப்புட்டுப் போடா வயித்தக்கெடுத்துக்காத” என்பாள்.

 “அதெல்லாம் இருக்கட்டும்,மச்சான நீ வாட்டுக்கு இப்பிடி ஏதாவது ஏட்டிக்கி போட்டியா பேசிப்புடாத,பாவம் அவர் சின்னப் புள்ள மாதிரி,

 “அட போடாபோடா கிறுக்கா, ஓங்கிட்ட இது சம்பந்தமா பேசுற பேச்சக் கூட ஒங்க மச்சான்கிட்டபேச மாட்டேன்டா. எனக்குத் தெரியாதாடாஏதோ கூடப் பொறந்த பொறப்புங்குறதால இதையெல்லாம் ஓங்கிட்ட சொல்றேன்.எனக்கு வாழ்க்ககுடுத்தசாமிடாஅவரு,அவருஎன்னயவச்சிருக்குறஇருப்புக்குஅவருக்குகோயில்கட்டிகும்புடணும்.அவர்ட்டப் போயி,,,,,,,,, எப்பிடிடா, நல்லா சொன்னபோ/

    அவள் கல்யாணமாகிப் போகும்முன்அவளதுசமையலில்வைத்தஉடம்புதான்
இது.இன்றுவரைதாக்குபிடித்து ஓடிக்கொண்டிருக்கிறது.

  வீட்டிலிருக்கிற சமையல் சாமான்களில் எதையாவது தோண்டி துருவி எடுத்து கையில் போட்டு தெள்ளி ஒட்டித் தட்டி அரைத்து அதற்கு ருசியூட்டி விடுவாள்.

 அப்படிஒருபக்குவம் இருந்தது அவளது கையில்."ஏலே என்ன அவசர முன்னாலும் சாப்பாட்டபொறந்தள்ளாத ஆமாம்.இந்த வயசுல வாய்கிற ஒடம்புதான் கடைசி வரைக்கும் பாத்துக்க” என்றவளின் வாஞ்சை அவளது கல்யாண தினத்தன்றோடு போய்விட்டதும் இன்று அவள் இல்லாத போதும் கண்காணாத பேச்சாக ஆகிவிட்டது.

  அவர் கைலியை முழங்காலுக்கு மேலாக மடித்துக் கட்டி பார்த்ததில்லை. பூப்
போட்டகையிலின் மடிப்பு வழியாய் வெளித்தெரிந்த வெள்ளை முடிகள் அவரது காலில் வெள்ளை வர்ணம் பூசியதாக/

மெலிந்ததிரேகம்வத்திப்போனமுகம்ஏற்றிசீவியதலைமுடிஇன்னும் உதிராமல்/அவர் அணிந்திருந்த முழுக்கை சட்டை உடல் ஒட்டாமல்/

 சமயத்தில் சட்டை போடாமல் வெற்றுடம்பில் துண்டு போர்த்தியவராய் கைலியுடன்வருவார்.திரேகமெல்லாம் வெள்ளை காட்டி கண்ணடிக்கும் முடிகளுக்குள் ஏதும் காக்கைக் குருவிகள் வந்து அடைந்தாலும் தெரியாது போலிருக்கிறது.

  சின்னக்காள்தான் சொல்வாள் அடிக்கடி.ஏன் இப்பிடி மொகம் நெறைய முள்ளு,முள்ளாமுடியநட்டுக்குவச்சிக்கிட்டுதிரியிற ?ரெண்டு நாளைக்கு ஒரு தடவசேவிங்கபண்ணுஇப்படிதிரிஞ்சையின்னாஒன்னையப்பாகுறசின்னப்புள்ளைகளுக்குமேலுக்குசௌக்கியமில்லாமபோயிரும் போலயிருக்கு கிறுக்கா” என தலையில் தட்டி ரேசரை எடுத்து கையில் தருவாள்.

  “அப்பாவப்பாத்துருக்கயில்ல நீயி? என்னவேல எப்பிடிக்கெடந்தாலும் ரெண்டு
நாளைக்கொருக்க சேவிங் பண்ணாம வெளியில  வரமாட்டாரு.

  அவரு சேவிங் பண்ண மறந்த நாள்ன்னா நம்ம  அம்மா  ஆஸ்பத்திரியிலயும்,
வீட்லயுமா மாறி,மாறி படுக்கையில கெடந்த ஒரு மாசந்தான்.
 
 இந்தா கண்ணாடி,சீப்பு அப்பிடி வெளியில வச்சி ஜன்னல் குறுக்குக்கம்பில கண்ணாடிய தொங்கவிட்டுட்டு சேவிங் பண்ணு.வீட்டுக்குள்ள வேணாம்” என்பாள்.

அவள்சொன்னசொல்மனம்தங்கி   நிற்க  இன்றுவரை  இரண்டு  நாளைக்கு  ஒரு
முறை   என   ஷேவிங்   தொடர்கிறது.   அவளும்   இப்போது  ஆஸ்பத்திரிக்கும்,
வீட்டுக்குமாக/

  இரண்டு அக்காக்கள்,ஒரு தங்கை என நிறைசூழ்ந்த குடும்பத்தில் பிறந்த அவர் அக்காக்களின் கவனிப்பிலும்,தங்கை அள்ளி வைத்த சாப்பாட்டின் ருசியிலுமாய் வளர்ந்திருக்கிறார். 

    தங்கையை    பக்கத்து  ஊரில்தான் கட்டிகொடுத்தார்கள் அவள்  இப்போது
சென்னையில் இருக்கிறாள்.

   கணவனுக்குஏதோஒருஇங்கிலீஸ்கம்பெனில் வேலை என்றாள்.கை நிறைந்த 
சம்பளம். கம்பெனி கொடுத்த வீடு, கார், இத்தியாதி,இத்தியாதிஎனவசதியாக இருக்கிறார்கள்.

   கைவரப்  பெற்ற    வசதியை   காரணம்   காட்டி   பிறந்த   வீட்டிலிருந்து பிடுங்க
ஆரம்பித்தாள்ஏற்கனவேஎரிகிறகொள்ளிஇதில்எந்தக்கொள்ளியை எடுத்துத்தர?

   அதுவும்   பற்றாக் குறையின்   உறைவிடமாய்   வீடு  ஆகி  போன  பின்   அவள்
கேட்பதைஎங்கிருந்து தர?முடியவில்லை அவர்களால்.

   கோபித்துக் கொண்டு தாயின் இறப்புக்குக்கூடவரவில்லை. “கடைசிப்புள்ளை,
கடைசிப்புள்ளன்னுதூக்கித்தூக்கிவளத்தாதலையிலதூக்கி வச்சிட்டுஆடுனா,
அவஇப்பபொறத்தால காட்டீட்டுப்போயிட்டா,

  “அப்பிடி என்ன கோவமுன்னு தெரியல ,மானம் கெட்ட கோவம் அவ என்ன வச்சிக்கிட்டாவஞ்சகம்பண்ணுனா,

  "இருந்த வரைக்கும் மகராசி மூணு புள்ளைகளுக்கும் ஒடி ஓடித்தான் செஞ்சா .முடியாத பட்சத்துல அவளும் என்னதான் செய்வா பாவம்.
   
   பூச்செடி மாதிரி ஒத்த ஆம்பளப்புள்ளைய வச்சிக்கிட்டு அதக்கூட கவனிக்காம பொம்பளப் புள்ளைங்க, பொம்பளப் புள்ளைங்கன்னுதிரிஞ்சதுக்கு நல்லா விசுவாசம் காட்டிட்டா,என்றார்கள் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள்.

     அப்படி   அன்று  காற்றில்  கரைந்த  பேச்சையும்  இன்னும்  மனதில்   முடிந்து
வைத்திருக்கிற   மிச்சமிருக்கிற   நினைவுகளையும்  வெளியூரில்  இருக்கிற
தனது  பிள்ளைகளையும்,தனது அக்காக்களின்வாரிசுகளையும்அவ்வப்பொழுது 
பார்த்தும் நினைவலைகளில் நீந்த வைத்துக்கொண்டுமாய்அன்றாடங்களின்
காலையில்இப்படிகடைக்கும்வீட்டுக்குமாய் நடந்து கொண்டிருக்கிறார். 













21 Jul 2012

மனக்குமிழ்,,,,,


 யாருண்ணே,,,,,?ராஜ கோபாலா? யாருண்ணே ராஜகோபாலா?என்கிற   இளம் குரலுடன் கலந்து வந்த கேள்வி இரண்டாவது முறையாகத்தான் என்னை தொடுகிறது.
  
 எட்டித் தொட்ட குரலை என்னை நோக்கி எறிந்தவனுக்கு 14 ஐ தாண்டி 15 இருக்கலாம் எனஅறிகிறேன்.எனதுமகன்வகுப்புத் தோழன்.

 இளம் முகம்,வளித்து வாரிய தலைமுடி. இளம் சிவப்பில்வேர்வைவழிந்த என்னைப்பிசுக்கான முகம்.நட்டு வைத்த செடிக்கு கையும்,காலும் முளைத்தது போலத் தெரிந்தான்.

   அவனே பேசிய அவனதுதொண்டைக்குள்ளிலிருந்து இன்னொருவர் எட்டி உதைத்துகுரலைஉடைப்பது போல இருந்தது.

   குரல்கள்   உடை படுகிற  காலம்  அல்லது   பருவங்களை சுமந்த அவனும்,
அவனைப்  போன்ற பலருமாய்  பள்ளியிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்த
மாலை நேரம்.

   இறகு விரித்த பறவைகள் ஒன்றோடு ஒன்றுதோள்தொட்டும்,இறகுறசியுமாய்
 பறந்தும்,நடந்தும் வந்த ரம்மியமது.

  உரசிய சிறகிலிருந்து உதிர்ந்த இறகுகள் சிதறிக்கிடந்த வெளியெங்கிலுமாய் ஆனந்தித்துத் திரிந்தவைகளில் இரண்டு ஒன்றுடன் ஒன்று உரசி கீழே விழுந்து விடுகிறது.

  பார்த்துக் கொண்டிருந்த எனக்கே மனம் பதறுகிற போதுஅவைகளுக்கு,,,,,? நல்ல வேளையாக காயமேதும்படவில்லை.

  சிரித்தவாறு எழுந்து கைகால்களை உதறிதட்டி விட்டு,விட்டு உற்சாகமாக மூக்கோடு மூக்கு உரசியதாய்வந்தவைகளைப் போலபள்ளியின்வாசலடைத்து வருகிறார்கள்.

   அவர்களிலிருந்துபெயர்ந்தெடுத்துதரைதுளைத்துவந்தவனாகஎன்முன்னே
வந்துநின்ற அவன்தான் என்னை நோக்கி குரலும், கேள்வியும் வீசியவனாக/

     பழனிஅவனதுபெயர்உள்ளூரில்தான்தாளமுத்துதெருவில்இருக்கிறான்.
கைக்கும்,வாய்க்கும்பத்தாதவருமானத்தைகைக்கொண்டகுடும்பத்தில்பிறந்து விட்ட அழகுப் பையன்.

   திருமணமாகி 4 ஆண்டுகள் கழித்து வரமிருந்து தவமிருந்து பெற்ற பிள்ளை அவன் என்பது உபரித்தவலாக/

  அவரது அப்பா வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஐஸ் வியாபாரம் செய்யப் போய்விடுவார்.அதில் கிடைக்கிற வருமானம் போக வாரத்தின் மீதி நாட்களுக்கு பருப்பு மில்லில்வேலை.

   அதுஅல்லாதநாட்களில் நைட் வாட்ச்மேன் வேலைக்குப்போய்விடுவார்.
அங்கும் நிரந்தரமாகவே இங்கேயே வந்து விடுங்கள் என வேலைக்கு என கூப்பிடுகிறார்கள் கம்பெனிக்காரர்கள் இவர்தான் தள்ளிப் போட்டுக்கொண்டே இருக்கிறார்.

 பெயிண்ட் அடிக்கிற மிக்கேல்ராசு கூட சொன்னது. “ஏன் இப்பிடி சைக்கிள் மிதிச்சிக்கிட்டு,ஐஸ்யேவாரம்,பருப்புமில்லுன்னுபோயிக்கிட்டு,செவனேன்னுவாட்ச்மேன்வேலபாத்துக்கிட்டு இருக்கவேண்டியதுதான,இவரு மேல
எவ்வளவு நம்பிக்கை இருந்தா இப்பிடி கூப்புடுவாங்க?என்றாராம்.
 
 பின்னாளில் அவனைப்பற்றியும்,அவனது குடும்பத்தைப்பற்றியுமாய் இப்படி அறிந்து கொள்கிறேன்.எனது மகன் மூலமாக காராசேவுக்கு கையும்,காலும்
முளைத்தது மாதிரி இருக்கிறான் அவன் என பேசிக்கொண்டிருந்த ஒரு நன் நாளின் இரவில்/

   வரச்சொல்லியிருந்தான் பள்ளிக்கு மாலை ஆறரை,ஆறே முக்கால் போல/ அவனது வார்த்தையின் நுனி பற்றி,நடு தொட்டு ,அடிபிடித்து பள்ளி வாசலில் அவசர அவசரமாய் நான் போய் நின்ற நேரம் மாலை 6.50.

  வெயில் தன்னை மஞ்சளுக்குள் மறைத்துக் கொண்டு இரவை நோக்கி கை நீட்டுகிற நேரம். நான் போய் விட்டேன். காலையிலேயே சொல்லியிருந்தான்.

 “இன்றுமாலைவரும்போது செருப்பு வாங்க வேண்டும் அதுபோக பள்ளிக்கு கொண்டு போனமண்ணெண்ணெய்யும்,ஸ்டவ்வும்அப்படியே இருக்கிறது,
அதையும் எடுத்து வரவேண்டும் நீங்கள் வந்தால்தான் அது சாத்தியப்படும்.
ஸ்டவில்இருக்கிறமண்ணெண்ணெய்சிந்தாமலும்,பாட்டிலைபைக்குள்சாயாமல்கொண்டுவருகிறசூட்சும்மும்நெளிவும்,சுளிவும்எனக்குதெரியாதுஅல்லதுகைவராது.அதற்காகத்தான்உங்களது வருகை அவசியப்படுகிறது,கூப்புடுகிறேன்”
என அவன் சொன்ன போது ஆட்டிய தலையை நிறுத்தாமல் பள்ளி வாசலில் நான்.

 பள்ளியில்நடக்கவிருக்கிறஒருகண்காட்சிக்காகஅவன்ஒருசைன்ஸ்ப்ராஜக்ட்செய்துகொண்டுபோயிருந்தான்.

  அதில் ஸ்டவ்வும்,மண்ணெணெய்யும் அடக்கமாகிபோகிறது.அப்படி அடங்கி விட்டவகளை கொண்டு வருவதற்கும் சேர்த்துதான் எனது வருகை.

  நான்,சாலை சாலையில் விரைந்து கொண்டிருந்த மனிதர்கள் விரிந்து சிரித்த
மண்,அதன் வாசனைமிகுந்ததுகள்கள்எல்லாம்பெரிதும்சிறிதுமாய் என்னை நோக்கி சிரித்துக்கொண்டிருந்த வேளையில் என்னை நோக்கி வந்த பையன்,
சைக்கிளபாத்துக்கோங்கன்னே,நான்ராஜகோபால்கிட்டசொல்லீட்டுவந்துர்ரேன் அவனுக்காகநீங்கவாசல்லதவமிருக்கீங்கண்ணு” என கிளம்புகிறான்.

  14ஒன்று 49 திடம் குரல் பரிமாற்றம் செய்து கொண்ட மேல்லிய வேளையது.அது.

   மெல்லிய இறகு ஒன்று உடல் தடவிப் போன உணர்வை ஏற்படுத்திச் சென்ற கணமாயும்/

 ஆ,,இதுவும்நன்றாகத்தான்இருக்கிறது.அவன்,நான்மற்றும்சாலையில்சென்றவாகனங்கள்,மனிதர்கள் எனக்கு எதிராக நின்று தெரிந்த பள்ளியின் காம்பவுண்ட் சுவர்மற்றும் கேட் அருகே காக்கி யூனிபார்ம்ல் நின்றிருந்த வாட்ச் மேன், என காட்சிப்படலமாய் என் கண்ணில் பட்ட நேரத்தில் பள்ளியினுள்ளே சென்றவன் சுவற்றிலடித்த பந்தாக திரும்பி வருகிறான்.

 “அண்ணேநீங்கபோவீங்களாம்,அவன்மேட்ச்ஆடிக்கிட்டுஇருக்கான்.முடிச்சிட்டுவருவானாம்.”சொல்லி முடித்து சைக்கிளை எடுத்துக் கொண்டு பறந்து விட்டான்.

 சிறிது நேரம் பள்ளியையே வெறித்துப் பார்த்தவனாக நின்று விட்டு கிளம்புகிறேன் ,மெலிதாக திறந்திருந்த வாய் கூட மூட தோணாமல்/

 ஏதாவது ஒரு நினைவு முற்றிப்போகிற நேரங்களில் இப்படித்தான் ஆகிபோகிறது. 

  ஏதோ ஒருவிழிப்புணர்வு ஊர்வலத்தில் பையன்களோடுபையன்களாக சேர்ந்து
சித்துவாத்தியாரை செய்த கேலியும்,வைத வசவும் அவருக்கு கேட்டிருக்குமோ எனக்கருதி பின்னாளில் நான் பள்ளி போக மறுத்த நாட்கள் இப்போது நிழலாடுகிறது. 

 அவர்போலதமிழ்பாடம்நடத்திநான்வேறுயாரையும்பார்த்த்தில்லைஇதுவரை
எனசொல்கிறவர்களைஇப்போதும்நிறைந்துபார்த்திருக்கிறேன்சொல்லவும் கேட்டிருக்கிறேன்.

 உயர்ந்த மதில்களால் சூழப்பட்ட பள்ளியது.இல்லாத வீட்டுப் பிள்ளைகளையும் தன்னுள்அடைக்காத்துவைத்திருந்தபள்ளியில் வாத்தியார்களும்,
டீச்சர்களுமாய் சூழ்ந்த பள்ளியில் அவரகள் நடத்திய பாடங்கள் பதிந்த அளவு அவர்களும் எங்களின் மனம் பதிந்து போயிருந்தார்கள்.   

 துப்பறியும் நாயும்,போலீசும் பள்ளிக்கு வந்த ஒரு நாளில் பள்ளிக்கு லீவு விட்டு விட்டார்கள். பள்ளியில் திருட்டு நடந்து விட்டதென/

கிழக்கோரமதில்சுவரில்தெரிந்ததிருடனின்வழுக்கிஇழுத்தகாலடித்தடங்களைபார்த்தவாறு பேசிகொண்டிருந்த போலீசாரின் பின்னாலேயே நாங்களும் திரிந்தோம் கட்டாமலேயே/(அன்று அவிழிந்த கை இன்று மனைவியை பார்த்த்தும் கட்டிக்கொள்கிறது.)

 அங்கு படித்த நாட்களில் முகமது வாத்தியார் பலருக்கு முன் மாதிரி என சொல்லலாம்.அவர்நடத்துகிறவரலாற்றுப்பாடங்களில்மன்னர்கள்மட்டுமில்லாமல்மனிதர்களும்தெரிந்தார்கள்.வாழ்க்கை,நடப்பு ,சமூகம்,இலக்கியம்,,,,,,
எனநிறைய  பேசி  எங்களது  மனதில்  பதியனிட்ட   அவரைப்   பள்ளியின்
நிர்வாகத்திற்கு பிடிக்கவில்லை.(பின்இது மாதிரியானவர்களை எந்தப்பள்ளி
நிர்வாகம்தான்ஏற்றுக்கொள்ளும்?)

நான்படிப்பைநிறுத்தியபின்நாளின்மாலைப்பொழுதொன்றில் பஜாரில்அவரைப் பார்த்தேன்.சம்பளப்பிரச்சனையில்சங்கத்துடன்இணைந்து போராடியதற்காகம், நீதிமன்ற வாசல்ப் படியைமிதித்த்தற்காகவும் என்னை நீக்கிவிட்டது அந்த பள்ளி.இப்போது சிவகாசியில் இருக்கிற ஒரு தனியார் பள்ளீயில் வேலை பார்க்கிறேன்” என்றார். 

 இத்தனை வருட பள்ளி வாழ்க்கையிலும்,வெளி வாழ்க்கையிலும் அவரைப் பார்த்த நாட்களில் அன்றுஅவரதுஅருகாமையாகநின்றுஸ்டாரங்காக நல்ல டீக்குடித்தேன்.மனசு ஆசுவாசப்பட்டு/ 

 போகிறவழியில் பாய் கடையில் டீக் குடித்து விட்டு போக வேண்டும்.ஏதாவது கடிக்கக் கிடைத்தால் தேவலாம்.பெரும்பாலும் வாழைப்பழம் இருக்கும்.வடை பஜ்ஜி என சாப்பிடுவதை விட இது எவ்வளவோ மேல்.

 வாழைப்பழத்தில்அத்தனைரகங்கள்உண்டு என அவரது கடை பார்த்துதான் தெரிந்து கொண்டிருக்கிறேன்.

கடை அடைத்துத் தெரிந்த வாழைப் பழத்தின் ரகங்கள் நிறைந்து தெரிந்தாகவும் ,மற்றசரக்குகள்நிறையதொங்கியதும்,காலப்போக்கில்குறைந்துகண்முன்னாலேயேஅருகிப்போனசோகம்சற்றேசங்கடமானதுதான்.அண்ணன்தம்பிபிரிவினையால்வந்தவிளைவு என்றார்கள்.

வாழைப்பழத்தார்கள்தொங்கவிடப்படுவதற்காய்அரையப்ப்பட்டிருந்தகொக்கிகள் கடையின் உள்கூரையில்இன்னும்காணக் கிடைக்கிறது.

 இரண்டு அல்லது ஒரு பழத்துடன் நகர்ந்தால் வருகிற ரமணன் சார் தம்பி கடையில்தான் பையனுக்கு செருப்பு எடுக்க வேண்டும். 

 மற்ற கடைகளை விட பத்து,இருபது குறைத்து எடுக்கலாம். கையில் காசு இல்லையென்றாலும் கூட கடன் சொல்லிக் கொள்ளலாம்.ஒரு வாரம் கழித்து கொடுத்த போது கூட ஒரு சிறு முகச் சுழிப்பு இல்லாமல் வாங்கிக் கொள்வார்.

என்னநாம்போகிறநேரம்மனுசன்கடையில்இருக்கவேண்டும்.அவ்வளவுபெரியகடையையும்,அவ்வளவுவிலைகொண்டசரக்குக்களையும்போட்டு விட்டுக்
போய் விடுவார்.கடை திறந்திருக்கும்.அவர் இருக்கமாட்டார்.அவ்வளவு நெரிசலான இடத்தில் கடையை திறந்து போட்டு விட்டுப்போக தனி ஒரு தைரியம் வேண்டும்.

 இன்று அவர் இருக்கிற மாதிரி தெரிகிறது.திறந்திருந்த கடை வாசலில் ஆடிய நிழல் அவர் இருப்பதை உறுதி செய்தது.அப்படியானால்கண்டிப்பாகஇன்று செறுப்பு எடுத்து விடலாம்.

 தெரிபுகளின் நுனி பற்றி சாலை கடக்கிறவனயும்,அவரது கடை நோக்கி விரைகிறவனாகவும்/

9 Jul 2012

வெளிச்சக் கோடு

                        
   இடுப்பும், தலையும் அவளது. குடங்கள் யாரது  எனத்  தெரியவில்லை
தண்ணீருடன்  தலையில்ஒன்றும்,  இடுப்பில்ஒன்றுமாய்  தூக்கி   வைத்துக்
கொண்டுஅவள்எட்டெடுத்துவைக்கிறஒவ்வொருஅடிக்குமாய்குடத்திலிருந்து  அலம்பி,அலம்பி சிதறித்தெரிக்கிற தண்ணீர் துளிகள் மென்மழை தூரல்போல் அவள்மீதும் அவளது புடவை மீதுமாக பட்டுத்தெரித்துதரைதொடுகிறது.       
   தரை தொட்ட தண்ணீரை  உள்வாங்கி  உறிஞ்சிக்  கொண்ட  மண்ணுக்கு
எவ்வளவு தாகம் என தெரியவில்லை, பார்த்தகனத்தில்தண்ணீராய் இருந்தது மண்குடிக்க  உள் போனது எப்படி என எண்ணத்  தோணுகிற வாஸ்தவத்தை
சற்றேதள்ளிவைத்துவிட்டுபார்த்தால்வழிந்த தண்ணீரில் பட்டு மின்னிய வெயில்ஏதோ சொல்லிப்போவதாகவும்,அழகு காட்டி நிற்பதாகவும்தெரிகிறது.    
  முனிசிபல்தண்ணீர் வருகிற தினங்களில் அவளுக்கு பிரச்சனையில்லை.
அது அல்லாத நாட்களில் குடங்களை தூக்கிக்கொண்டு ஒவ்வொரு இடமாக அலையவேண்டியிருக்கும்.
   சுப்புலட்சுமியக்கா வீட்டுக்கு  சரசக்கா வீட்டுக்கு,மல்லிகா  டீச்சர்வீட்டுக்கு,
போலீஸ்க்காரர்வீட்டுக்கு,நடராஜன்சார் வீட்டுக்கு,சுந்தர்ராஜ் சார் வீட்டுக்கு, தங்கம் மேடம் வீட்டுக்கு,,,,,,என அவள் அன்றாடம் தூக்கி சுமக்கிற தண்ணீரின் வரிகள் அவளது உடலில்வழித்து கோடு வரைகிற  நேரம் அவளது எண்ணம் வேறொன்றாய் இருக்கிறது.
 லாட்ஜ் அய்யாகிட்ட கேட்டு பத்துக்கொடம், ரயில்வே கேட்டுக்கிட்ட இருக்குற ஆஸ்பத்திரியில சொல்லி பத்து கொடம்,அப்புறம் வாட்டர் டேங்குல போன ஒரு பத்து கொடம்,மத்தாயு பங்களாவுல பத்து கொடம்,,,,,,,,,,,என அன்றாடம் அவள் நாற்பது குடங்கள் வரை தண்ணீர் சுமக்கிறாள்.  அனைவரது வீட்டுக்குமாக சேர்த்து.
 குடத்துக்கு இவ்வளவு என பேச்சு, அல்லது கணக்கு.பிளாஸ்டிக் குடம்தான்.அதுஇருக்கும்முப்பதுகுடங்களுக்கும் மேலாக/
  வீட்டுக்காரர்கள் கொடுக்கிற காசில்தான் இவள் தண்ணீருக்கும் காசு கொடுத்து விட்டு தனக்கும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  தண்ணீர் பிடிக்கிற சில இடங்களில் கரிசனப்பட்டு காசு வாங்க மாட்டார்கள் சமயத்தில்/
   இதைவீட்டுக்கார்கள்கேள்விப்பட்டோமோப்பம்பிடித்தோவிட்டால் போதும்,
மறுநாள்அவள்குற்றவாளிக்கூண்டில்நிறுத்தப்பட்டுவிசாரிக்கப்படுவாள்
 "அதான்ஓசியாதண்ணிகுடுத்தாங்களாம்லஅந்தயெடத்டுலஅப்புறம் என்னடி
எங்ககிட்டகாசுவேண்டிக்கெடக்குகொடத்துக்குஇவ்வளவுன்னு" எனவாய்க்கு 
வந்த படி பேசுவார்கள்.
“இதுகஇப்பிடித்தான்க்காஎவ்வளவுசெஞ்சாலும்நன்றிவிசுவாசம் இருக்காது.
இதுலசெலவுக்கில்ல,வீட்லகஷ்டம் உதவி  செய்யிங்கண்ணு  பொலம்பல்  வேற,
 “இவ மினுக்கிக்கிட்டு,மினிக்கிக்கிட்டு அந்த லாட்ஜ்ப் பக்கம் போகும் போதேதெரியும்க்கா.இந்தமாதிரிஏதாவதுஏடாகூடமாசெய்வான்னு.இப்பஅது சரியாப்போச்சுஎனவரம்பு மீறிய வார்த்தைகளும், செல்லரித்து புழுப்பூத்துப்
போனசொற்களுமாய் வந்து  காதில்  நாராசமாய்  துளைக்கிற  வேளைகளில்
மனம்பொறுக்கமாட்டாமல்சம்பந்தப்பட்டவர்களுடன்சண்டைபோட்டிருக்கிறாள்.
சண்டைபோட்டமறுநாளிலிருந்துதண்ணீர்குடங்கள்அவர்களது வீட்டுக்கு
சுமக்கவேண்டிய வேலையிருக்காது அவர்களது வீட்டிலிருந்து வருகிற காசு 
நின்று விடும் என்கிற போதும் கூட/
  பின்னே எவ்வளவுதான் பொறுப்பது இவர்களது பேச்சை,அவள் முன்பே சொல்லியிருக்கிறாள் மிகவும் நாகரீகமாகவும்,நாசுக்காகவும்.
“அம்மா நான் ஒங்க வீடுகளெல்யெல்லாம் தண்ணியெடுத்து வைக்கிறது சரிதாம்மா,ஒங்கக்கிட்ட கைநீட்டி அதுக்காக காசு வாங்குறேங்குறதும் நிஜம்தாம்மா,அதுக்காகஎன்னையஏளனமா பேசிப்புடாதிங்கம்மா,மனசு தாங்காதும்மா எனக்கு.தாயில்லாம வளந்த புள்ள நானு.எனக்கு கூடப்பொறந்தவுன்னு அக்கா,தங்கச்சிங்க யாரும்  கெடையாது.இந்த வீடுகள்ல ஏன் அம்மா வயசுல இருக்குறவுங்களும்,ஏங்கூடப் பொறந்த பொறப்புகளா நான் நெனைக்கிறவுங்களும் இருக்காங்க,பாத்து கொஞ்சம்சூதானமாபேசிங்கன்னால்லேநான் புரிஞ்க்கிருவேம்மா”என/
  ஆனால்அதையும்மீறிஇப்படிபேச்சுகள்சாக்கடையாய்வந்து வழிந்
தோடுகிறநேரங்களில்வேறுவழிதெரியாமல்சிலிர்த்தெழுந்துவிடுகிறாள்.
   அந்தமாதிரிசமயங்களில் காம்பவுண்டே வந்து அவளை சமாதானம் பண்ணும்,பாதி முறைப்புடன்,மீதி முனைப்புடனுமாய்/
  அவளுக்குத்தான்தெரியும்இந்தவீடுகளுக்கெல்லாம்தண்ணீர்பிடித்து
கொண்டு வந்து சேர்ப்பதற்கு அவள் படுகிற பாடு.
  எத்தனைபேச்சு,எத்தனைஏளனம்,எத்தனை இழிவு உடம்பை கிழித்து ஊடுருவுகிற எத்தனை பார்வைகள்,,,,,,,,,,,,,,என இன்னும் இன்னுமான அத்தனையையும்மீறி  அவள்அங்கு நிலை கொண்டு பார்க்கிற வேலை
அவ்வளவு சுலபமானதாய் அவளுக்கு இருந்ததில்லை.
  ராமசாமிரோட்டின்முக்கிலிருக்கிறடீக்கடையிலிருந்துராதாகிருஷ்ணன்
காம்பவுண்டில்இருக்கிறவரிசைவீடுகள்வரைஅவள்தான் குத்தகை.
டீக்கடைகளுக்குதண்ணீர் சுமப்பதில் ஒரு சின்ன சௌகரியம்.ஓசியில் வடைவாங்கிக்கொள்ளலாம்,வீட்டில்பிள்ளைகளுக்குஆகிக்கொள்ளும்.
சாப்பாட்டுக்கும் ஆகிப்போகும்.ஓசியாக கிடைக்கும் டீயில்சமயத்தில் பசியாறிக்கொள்ளலாம்.      
  காலையில்இரண்டுகுடங்கள்.தேவையேற்படுகிற நேரங்களில்தேவை
ப்படுகிறவீடுகளுக்குமாலை நேரங்களிலும் அவள் தண்ணீர் கொண்டு வந்து தருகிறாள்.
  மெலிந்து,சிவந்த மேனியில்  வலுக்கட்டாயமாக வீற்றிருக்கும் அந்தக் குடங்களை தினசரி காலையிலும்,மாலையிலுமாக அவள் சுமந்தாளா அல்லது குடங்கள்அவளைசுமந்ததா என தெரியாத அளவிற்குஇருந்த அவளது வாழ்வில் இடுப்பும் தலையும் அவளது.
  ஆனால்அவள்சுமக்கிற குடங்கள் யாருடையது எனத்தெரியவில்லை/       








              

3 Jul 2012

கோலமாவு

   அன்று மாலை தாமதமாகத்தான் தேனீர்கொண்டு வந்தாள். ஒரு டீ மூன்று காபிகள்.
      வெள்ளைநிறத்தில்சிவப்புப்பூப்போட்டசேலை. சிவப்புக்கலரில்
சட்டை.மெலிந்து தளர்ந்த சிவந்த மேனி.படிய வாரியிருந்த தலை முடி.இதுதான் அவள் என்கிற அடையாளத்துடன்தான் அவளது தினசரி வருகை.
     புடவைஜாக்கெட்டில்வேண்டுமால்மாற்றம் இருக்கலாம்.
ஆனால்அவளது புன்னகையிலும்,கனிவிலும் எந்த மாற்றமும் இருக்காது.
   கேட்டால் “போகும் போது  அள்ளிக் கொண்டா  போக போறம் சார்.இருக்குறவரைக்கும் நாலு பேர்கூட நல்லா பழகி சிரிச்சு பேசீட்டுசந்தோசமாஇருந்துட்டுப்  போகவேண்டியதுதானசார்.
எந்நேரமும்உம்மன்னா மூஞ்சிமாதிரிதிரிஞ்சா,ஒடம்பும்,மனசும்
கெட்டுப்போயிரும்சார்.
அவருக்குஇப்பிடிஇருக்குறதுதான் பிடிக்கும்.அது மாதிரிதான் நான்இப்பஇருந்துட்டுவர்ரேன்.அவரு கத்துக்குடுத்துட்டு
போனதுதான்இதெல்லாம்.இந்தாநான்கட்டியிருக்கேனே இந்த செகப்புக்கலர் சேல.இது அவருக்கு ரொம்பப்பிடிக்கும். அதான் இத அடிக்கடி கட்டிக்கிருவேன்,சேலையில்இருக்குற பூக்கள் கூட உதிந்து போயிரும் போல இருக்கு.இருந்தாலும் நான் விடறதாயில்ல.”என்பாள்.
   அலுவலகத்தில்  உள்ள  மற்ற  மூவருக்கும் காபி.அவனுக்கு மட்டும் டீ.அது ஏன் எனத்தெரியவில்லை.
டீ மீதான மோகம் வர வர அதிகரிக்கிறதே தவிர  குறைந்த பாடில்லை. இந்த முறை டாக்டரிடம் சென்ற போது அவர் கீரீன் டீவேண்டுமானால்  முயற்சி  செய்து பாருங்கள் என்றார்.
 துவர்ப்பும்,இனிப்புமாய்49ஆண்டுகள்நாவின்சுவையறும்புகளில் நல்லாட்சிசெய்துகொண்டிருந்தஒன்றுமாறுவதென்றால்கொஞ்சமல்ல,நிறையவேசிரமப்படவேண்டியிருக்கிறது.
  அலசர் தொந்தரவினால் வயிறு வலித்தபோதோ அல்லது வயிற்றின்பக்கவாட்டுப்பகுதி வலித்த போதும் வலியச்சென்று டீக்குடிக்கிற பழக்கம்அவனுள்எப்போதுமுடியிட்டுகொண்டது எனத் தெரியவில்லை.
   காலையில் எழுந்து இரண்டு டம்ளர் டீயில் சுழியிடுகிற பழக்கம் இரவு படுக்கைக்கு போகும் போது எண்ணிக்கையில் பத்தைத் தொட்டிருக்கும்.
    “நல்லஆளு ,நல்ல பழக்கம் போங்க என்பாள்.இவனது மனைவி.
அவள் அனுதினமும் தேனீர் கொண்டு வந்திருந்த நேரம் தூரத்தில் எங்காவது ஒரு பூ மலர்ந்திருக்க வேண்டும். அவளைஅவன்அக்கா என்றே கூப்பிடப் பழகியிருந்தான்.அது என்னவோ தெரியவில்லை.
பெண் என்றால் அக்கா,ஆண் என்றால் அண்ணன் என்பது இவனது கணக்காக இருந்தது.
    
 அந்தஅலுவலகத்திற்குமாறுதல்ஆகிவந்தநாள்முதலாய்இப்படித்தான்ஊரில்எல்லோரிடமும்பழகுகிறான்.பேசுகிறான், ஒட்டிக்
கொள்கிறான்.
வாங்கக்கா,போங்கக்கா,சரிங்கக்கா,வாங்கம்மா,போங்கம்மாவும் சேர்த்தே வரும் சமயத்தில்/
     இந்தமாசம்டீக்காசுவாங்கலையாக்கா,,,,,,என்பதுமாதிரியானதே
அவளுடனான  அதிகபட்ச  பேச்சாக  இருந்திருக்கிறது  இதுவரை இவனுக்கு/
  ராமசாமியின்மனைவிஅவள்.ராமசாமி டீக்கடை என்றால் ஊருக்குள்  பலபேருக்குமனம் களி கொள்ளும்/
  இளைஞரிலிருந்து பெரியவர் வரை அவரது கடை வடைக்கும்,டீ மற்றும் டிபனுக்குமாய் அடிமை.அடிமை என்ன அடிமை?அவரிடம் போனால் கடன் சொல்லிக் கொள்ளலாம்.
   காலையில் இட்லி, தோசை, வடை ,மொச்சை சில நாட்களில் பூரி என ஆரம்பிக்கிற வியாபாரம் பாதி கடனில் போய் முடியும்.
  கடன் என்றால் அந்த மாதிரி கடனை ஊருக்குள்  எந்தக் கடையிலும் பார்க்க  முடியாது.  அப்படி   ஒரு  திகிடுதிம்பான  கடன்.  சாப்பிட வருபவர்களும்கூசாமல்கடன் சொல்வார்கள்.அவரும் கூசாமல் கடன் கொடுப்பார்.
  கடன்தான் அவர்களுக்குள்ளான மனப்பினைப்போ என எண்ணுகிற அளவு/
  நோட்டு நிறைந்த கணக்குகள் ஒவ்வொருவர் பெயரிலும் கடையில்உள்ளமரஅலமாரியில்அடுக்கப்பட்டிருக்கும்.நோட்டைக்காட்டிகாசைக்கேட்டால்பெருத்துநிற்கும்அவருடையதொந்தியைதடவிக்கொடுத்தவாறு”குடுப்பம், குடுப்பம் எங்க ஊரவிட்டு ஓடியா  போகப்
போறம்”.என அவர்கள் சிரித்து கேலியாய் சொல்வதும்,இவர் “என்னையப் பாத்தா  எளக்காரமா  தெரியுதா  ஒங்களுக்கு,  வர்ரறவுங்கெல்லாம்இப்பிடிசித்தப்பா,பெரியப்பா,மாமன்,மச்சான்னுபோயிட்டீங்கன்னாஅப்பறம் நான் தலையில துண்டப் போட்டுட்டு போக வேண்டியதுதான்,
“இங்கஒங்க பேர்ல இருக்குற கணக்கு நோட்டுல அடைகாத்து கெடக்குதுப்பா. என்பவர் சரி,சரி வாங்கப்பா வந்து போன காலு,தின்னு பழகுன வாயி நீங்களும் வேற எங்கதான் போவீங்க” என்பார்.
   ஊரின் முக்கிய சந்திப்பில் அல்ல.ஒரு ஒதுக்குப்புறமாய் இருந்தது அவரது கடை.எண்ணி இருந்த கடைகளில் அவரது கடை முக்கிய இடம் பெற்றதாக/
   தரை தடவி நிரம்பிய  புழுதியில் புரண்டு எழுந்து வந்த உழைப்பின் மக்களின் பிரியம் இவரது கடையாகதான் இருந்திருக்கிறது.
   உழைப்பின்ருசியறிந்தவர்களைஅவர்என்றும்புறக்கணித்ததில்லை.
ஊரிலுள்ள கடைகள் வாடிக்கையாக ஒரு சிலரை  மட்டுமே வைத்துக்கொண்டிருந்த போது இவர் அனைத்துத் தரப்பையும்  வாடிக்கையாளர் ஆக்கினார்.
  அப்படியானவர்களுக்கு இவரது மன விசாலம்  பிடித்துப் போகவும் உழைப்பின்மக்களும்இல்லாதவர்களும்அவர்களது கடையின்நிரந்தர வாடிக்கையாளராகிப்போனார்கள்.
 அப்படிவாடிக்கையாகிப்போனவர்கள்சொன்னசொல்லும்,பேசியபேச்சும் இவர் பேசியசிரிப்புப் பேச்சுகளும், கோபங்களும்,ஆதங்கங்களும் அவரது கடையின் சுவர்களில் மோதி எதிரொலித்துக்கொண்டிருந்த ஒரு நாள் இரவில் இறந்து போகிறார் அவர்.
   அதிகம் குடித்ததனால் கல்லீரலும்,கணையமும் கெட்டுப்போய் விட்டது என்றார்களாம் டாக்டர்கள்.பின் எந்நேரமும்அதிலேயே முக்குளித்துக்கொண்டிருந்தால்கெடாமல்என்ன செய்யும்.என்றார்கள் ஊர்க்கார்கள்.
 எதுஎப்படியோஅவரதுஇழப்பைஊர்ஜீரணித்துஏற்றுக்கொண்டதைபோல அவரது  குடும்பத்தினரால்  ஏற்றுக்  கொள்ள   முடியவில்லை.
  மயானத்தில் எரிந்து பரவிய தீயின் புகையாய் அவரது நினைவும் காற்றில்கரைந்து  போனது.  அதற்கப்புறமாக  அவள்தான்  கடையை பொறுப்பேற்று/
    முன்பு போலான வியாபாரமும், வாடிக்கையாளர்களும்  இல்லை
என்றாலும்கூடஅவள்வேறு விதமாக வியாபாரத்தை விரிவு செய்தாள்.
  காலையில்டீ,வடை.முடிகிறஅன்றுமட்டும்இட்லி,தோசை,அப்புறம் அது  முடிந்து  பள்ளி  இடைவேளை விடுகிற வேளையில் பள்ளிப்
பிள்ளைகளுக்குரஸ்னா,ஜூஸ்,ஏதாவதுதின்பண்டம்,அப்புறம்காலனிவீட்டுப்பக்கம்வடைவிற்கப்போவாள்.இதுபோகசாய்ங்காலவேளைகளில்இனிப்புஉருண்டை,ரவாலட்டு,மிட்டாய்சேவு,முறுக்கு என்கிற புதுதளத்தை விரித்துவிட்டாள்.
 பிழைப்பிற்குவேறுஎங்குபோகசொந்த ஊருக்குப்  போகலாம்என்றால் தனியாக இருந்த சனாதன விதவைத்தாயும் இறந்துபோனார்.
உள்ளூரில் இருக்கிற  அண்ணனுக்கு அவனது பிழைப்பிற்காய் கைஊணி கர்ணம் பாயவே  நேரம்  சரியாய் இருக்கிறது. மம்பட்டி,
கடப்பாரை,விவசாயம்,கூலிவேலைஇதுவேஅவனதுபிழைப்பை
நிர்ணயம் செய்கிற மந்திரச்சொல்லாக இருக்கிறது.
  இருக்கிற கால் காணியில்,,,,,,,,,,,ஏதோ பயர் ஆபீஸ்காரர்கள் நிலத்தைவிலைக்குக்கேட்டதாய்சொன்னான்விற்றால்கணிசமாய் கொஞ்சம் தேறும்.உனக்கு ஏதாவது தருகிறேன் என்றிருந்தான்.
    அவன்கொடுத்தால் அப்படியே  பேங்கில்  போட்டு  வைத்துக்
கொள்ளலாம்.பின்னால் உதவும்.
     அவள்தங்கச்சிசிவகாசியில்வாக்கப்பட்டிருக்கிறாள்.  கொஞ்சம்
வசதியானஇடம்.பக்கத்தில்அண்டவிடமாட்டாள்.கடுவாப்புலி.அவளது பையனை தம்பி   பெண்ணுக்கு  கேட்கலாம்  என  நினைக்கிறாள்.
“பெரிய  வீட்டுக்  காரங்க  அப்பிடித்தான்   இருப்பாங்க,   நாமதான்
அனுசரிச்சிபோயிக்கிறனும்.”எனநினைத்துக்கொள்வாள் அடிக்கடி/
   சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை  பார்க்கிறான்.
கைநிறைந்தசம்பளம்.ஓரளவு வசதியாக இருப்பதாய்  சொல்கிறார்கள்.
ஏதோகல்யாணம்செய்துவைத்தால்அவர்களது பிழைப்பு எப்படியாவது ஓடிவிடும்.
   ஆனால் எப்படி வாய்க்கிறது எனத்  தெரியவில்லை.விதிவிட்டவழி
என்றைக்கும்அவ்வளவுநேரம்இருந்துபேசியதில்லைஅவள் வருவாள்.
டீதருவாள்போய்விடுவாள்.மின்னலின்வேகத்தில்தான்அவளதுநகர்வு
இன்றுடீயைவைத்துவிட்டுநகரவில்லை கொஞ்சநேரம் பேசிக்கொண்
டிருந்தாள்.
    “சாய்ங்காலம்வடைபோடுவீங்களா?அவன்.
  “இல்ல சார் இப்பத்தான் விருதுநகர் வரைக்கும்  போயிட்டு  வந்தேன்.ரேஷன்  கார்டுல  அவபேர  சேக்குறதுக்குள்ள  போதும்,  போதும்ன்னுஆயிருச்சி.போனவாரம்கொண்டுபோயி  குடுத்துட்டு  வந்தேன்.  காசு  பத்து  அஞ்சு  ஆனாலும் செஞ்சு குடுத்தாங்களே.
    ரேஷன் கடைக்காரர்தான் இதுக்கெல்லாம் உதவியா  இருந்தாரு.
இப்பத்தான். என்னமோ அவரு இல்லாத கொற.இப்பிடி அலைஞ்சி திரிஞ்சி சீரழிய வேண்டியிருக்கு என  சொன்ன போது அவளது கண்கள் துளித்து விட்டது.
“ஏங்தம்பிபொண்டாட்டிக்கும்எனக்கும்பேச்சுவார்த்தகெடையாதுன்னாலும் ஆம்பள தொனையில்லாதவ அவ எங்க போவா பாவம்?’     
    நல்லாயிருப்பாங்கன்னுதான்செஞ்சுவச்சம்.அவருதங்கச்சிக்கும்,
ஏந்தம்பிக்கும் கல்யாணம் கட்டி வச்சி கூட்டீட்டு வந்து இங்கயே குடி 
வச்சம்சொந்தஊர்லஇருந்தாசேராதவுககூடசேந்து  கெட்டுப்
போயிருவான்.”
   “எங்க அண்ணன் கூட இங்கயே இருக்கட்டும்.நான் அவன ஆளாகிவிடுரேன்னாருஏந்தக்கச்சிவீட்டுக்குவேலைக்கு நம்பகமான
வேலையாளச்சின்னு நெனைச்சா,இது எதுவும் வேணாம்ன்னு  எங்க வீட்டுக்காரர்தான்இங்க கூட்டீட்டி வந்து கடைய கையில  குடுத்தாரு. அவுகளும் நல்லாத்தான் பொழைச்சாங்க,
“ஏந்தம்பின்னாகடையேகதின்னுகெடந்தான்.அவன்பொண்டாட்டியவும்சும்மாசொல்லக்கூடாது.வடைக்குமாவாட்ட,இட்லிக்குப்போட,சட்னிக்குஆட்டகடைக்குபோயிசரக்கு வாங்கீட்டுவரன்னுரெக்ககட்டிக்
கிட்டுதான் இருப்பா,அவுக ரெண்டு பேரு இருந்த வரைக்கும் எங்களுக்கு சொடக்கு எடுத்துவுட்ட மாதிரி நிம்மதியா இருந்துச்சி,
அவுங்களும் சந்தோசமாதான் இருந்தாங்க,
  “எனக்குத் தெரிஞ்சு இந்த ஊரல சந்தோசமா அப்பிடி ஒரு குடும்பம் இருந்துநான்  பாத்ததில்ல. அவன் போதாத காலம். ஒத்தப் பொம்பளப்புள்ளைய பெத்துப் போட்டுட்டு யெறந்து போனான்,
“அவன் சாகும் போது இந்த புள்ள ஆறு வயசுல நின்னுச்சு,ரெக்க மொளைக்காத கோழிக்குஞ்சா,
“ஏதோபேருதெரியாமஒடம்புலபுகுந்தநோயிஅவனஉருக்குளைச்சிருச்சி..அவன்போதாதநேரமோஎங்கபோதாத  நேரமோ தெரியல.
   பொண்டாட்டியவும்,புள்ளயவும் இப்பிடி  தெருவுல  விட்டுட்டு
போயிட்டான்,என்னசெய்யபின்ன?
அவஆட்டுனமாவும்சுட்டுப்போட்டஇட்லியும்தொடந்துஇருக்கட்டும்ன்னு ஏங் வீட்டுக்காரர்தான் அரவணைச்சுக்கிட்டாரு.
ஒருபக்கம் கூட பொறந்த தங்கச்சி,ஒருபக்கம் நனஞ்ச கோழிக்குஞ்சா நிக்கிறமச்சினன்(ஏந்தம்பி)பிள்ள,பின்னஎன்னசெய்ய?இழுத்துபோட்டுக்கிட்டம்,
  “அன்னைக்கு இழுத்த இழுப்பு இன்னைய வரைக்கும் ஓடிக்கிட்டு இருக்கு.
  அவுங்களோடஒத்தப்புள்ளதான்இப்பநெஞ்சுக்குழியிலநின்னுக்கிட்டு
வாதிச்சிட்டு கெடக்கா.அவளுக்கு வயசு ஆச்சு,11 வது போறா,அவரு யெறந்த மறு நாளே இவ ஒக்காந்துட்டா குத்தவச்சி/
அழுதகண்ணீரோடஈரம்காயிறதுக்குள்ளஇப்பிடிஒண்ணு.சந்தோசப்படுறதா,
  துக்கப்படுறதான்னு தெரியல, அவரக் கொண்டோயி சுடுகாட்டுல வச்சகையோடஇந்தவிசேசத்தையும் செஞ்சு முடிச்சோம்.என்னசெய்ய பின்ன?ஏதோ வயித்து  ஆத்தரம்,வாழ்க்கத்  தேவை  பொழைக்கணும்
ஓடிக்கிட்டுத்  திரியிரேன்,
  “நானு ஏந்தம்பி பொண்டாட்டி,அவ மகன்னு மூணு பேருக்கும் ,மூணுவேளைஒன்பது தட்டு கழுவுவனும் சார்.இருக்கோ இல்லையோ அது தெரியுமா வயித்துக்கு?,
  “அவரு உசிரோட இருந்து நல்லாபொழச்சநேரத்துல எங்க வீடே கதின்னு கெடந்தான் இன்னோரு தங்கச்சி பையன். எங்களுக்கும் புள்ளைஇல்லாதகாரணத்துனாலஅவனத்தான்புள்ளையா நெனைச்சு வளத்தோம்.இப்ப அவனும் சேலத்துல ஒரு கம்பெனியில வேலை  பாக்குறான்.     
   கை நெறைய சம்பாதிக்கிறான்,கண்ணுக்கு லட்சணமா இருக்கான்.
அவனுக்குஇந்தப்புள்ளய கட்டி வச்சிரலாமன்னு ஒருபக்கம் யோசன ஓடுது சார்,
  நாலு பக்கம் பாக்கவேண்டியதுதான்.எது தோது வருதோ அத முடிச்சிக்கிற வேண்டியதுதான் சார்.ஏற்கனவே சிவகாசிக்காரி புள்ள மனசுலநிக்கிறான்.இவன்ஒருபக்கம்,ரெண்டு பேருதாய் தகப்பங்கிட்ட
யும்,கையக்காலபுடிச்சாவதுபேசிப்பாக்கணும்.யாராவதுஒருத்தர்சம்மதம்சொன்னாக்கூட போதும்,
"சாதாரணமாஇருக்குறவன்கூடஇன்னைக்குபத்துபவுன்கேக்குறான்.
அதான்என்னசெய்யன்னுதெரியல.முழிச்சிக்கிட்டு நிக்கிறோம்.இவள தள்ளிவிட்டுட்டா எங்க கடமை முடிஞ்சிரும் சார்.
   இனிமே எங்களுக்கு என்ன,ரெண்டு பேர்தான சார்,அப்பிடியே கடையக் கட்டிக்கிட்டு பொழுதப்  போக்கிற மாட்டோம்? என்றவாறு நகர்கிறாள்.