Showing posts with label சொல்சித்திரம். பதிவுசமூகம்சித்திரம்அனுபவம் கடிதம். Show all posts
Showing posts with label சொல்சித்திரம். பதிவுசமூகம்சித்திரம்அனுபவம் கடிதம். Show all posts

29 Sept 2019

பின்னிருக்கை,,,

பேருந்தின் பின்னிருக்கையில் ஒட்டப்பட்டிருந்த பச்சைநிற ரெக்ஸின் இடது ஓரமாய் கிழிந்து தொங்கிறது காற்றில் ஆடிய படி/

ஆடிக்கொண்டிருந்த ரெக்ஸினை இருக்கையின் பின் பக்கமாய் அழுத்தி பிடித்த படி கண்டக்டரிடம் டிக்கெட் வாங்குகிறான்.

”அதை ஏன் அழுத்திப்பிடித்துக்கொண்டு?விடுங்கள் தன்னிஷ்டத்திற்கு”என்ற கண்டக்டரை ஏறிட்டவன்,”முகத்திலடித்து இடைஞ்சல் செய்கிறது அதனால் தான்” என்றவனாய்,பேருந்து ஏறப்போகையில் வீட்டு வாசலில் நின்று வழிய னுப்பிய தாயின் நினைவை மனம் கொள்கிறான்.

படிய வாரியிருந்த தலை ,என்ன செய்தும் அள்ளிச்சேர்க்க முடியாமல் முன் புறம் தொங்கிய ஒற்றை முடி,மிகைப்படாத எண்ணெய்ப்பூச்சு, மை தடவாத நரை முடியின் அசல்.நெற்றிக்கு இட்டிருந்த குங்குமம், அதன் மேலே கீற்றாய் மின்னிய திருநீறு.வகிடெக்கும் இடத்தில் மின்னிய செந்தூர்க்கம், பாந்தமாய் உடுத்தியிருந்த காட்டன் புடவை எல்லாம் மனதில் மையம் கொள்ள காற்றில் ஆடிய ரெக்ஸின் சீட்டை அழுந்தப் பிடித்திருந்த கையை எடுத்து விடுகிறான் காற்றின் அசைவில் ரெக்ஸின் சீட்டின் ஓரம் இவன் முகத்தில் அறைபடும் போதெல்லாம் தாயின் காட்டன் புடவை இவனில் உறை கொள்வதாக,,,/

14 Aug 2017

கம்பு,கேப்பை,கோதுமை மற்றும் செஞ்சோளம்,,,,

வீட்டிலிருந்துதான் கிளம்பினான்.கிளம்பிய பொழுது காலை பதினோரு மணி யை எட்டித்தொடப்போகிற வேளையாய் இருந்தது.

சின்ன மகள்தான் சொன்னாள் இது அஞ்சி நிமிஷம் லேட்டுப்பா,என்ன நீங்க கடிகாரத்த வச்சிருக்கீங்க, ஒண்ணு லேட்டா ஓடுது,இல்லபாஸ்டா ஓடுது என/

அவள்அப்படித்தான்கொஞ்சம்அவசரக்குடுக்கையாய்வார்த்தைகளைக்கொட்டி விடுவாள்.இரண்டாம் வகுப்பு படிக்கும் போது மாறு வேடப் போட்டியில் விவே கானந்தர்வேஷம்போட்டு பசித்த மானுடன்வயிற்றில் கடவுள் இருக்கிறார் என வசனம் மனப்பாடம் பண்ணச்சொல்லி அனுப்பிய போது மாறு வேடப் போட் டியில்ஜெயித்து விட்டு வந்தபின்னாய் இவனிடம் அவள் கேட்ட கேள்வி இன்றளவுமாய் மனதில் நிற்பதாக/

ஏன் அப்படிச்சொன்னீர்கள் அப்படியானால் பசிக்காத மனிதனின் வயிற்றில் கடவுள் இல்லையா என்றாள்,

அதற்கு அர்த்தம் அதில்லை,பசியின் வெம்மையும் கொடுமையும் கடவுளை உணர வைக்கிறது என அர்த்தம் கொள்ளலாம் என்றான்.

அப்படியா நீங்கள் சொன்னது உண்மையா இல்லையா எனது டீச்சரிடம் கேட்டு முடிவு பண்ணிக்கொள்கிறேன்,என்றவள் அன்று மாலையே டீச்சரிடம் கேட்டு வந்ததாகச் சொன்னாள்,சரிதானப்பா நீங்கள் சொன்னது என /

அது போல் அவள் பல விஷயங்களில் பல மாதிரியாய் உருவெடுத்து நிற் பாள்,

அதே இரண்டாம் வகுப்புப்படிக்கும் போது ஸ்கூல் யூனிபார்மில் சட்டையின் இடது கையோரமாய் லேசாக கிழிந்து போகிறது,அவள் சொன்னாள் ,கிழிந்த தைதைத்துக்கொடுங்கள்போட்டுக்கொள்கிறேன்என.இவன்சொன்னான் வேண் டாம் கிழிந்தது கிழிந்ததாகவே இருக்கட்டும்,அதற்கு மாற்றாக வேறு ஒன்று எடுத்துவந்துவிடுகிறேன்என்றான்.சொன்னவன்எடுத்தும்வந்துவிட்டார்,ஆனால் அந்த புது சட்டையை அவள் போடவே இல்லை, தொட்டுக்கூடப் பார்க்கவில் லை அவளிடம் ஏன் எனக்கேட்ட பொழுது எனக்காக வேஸ்டா ஆகுற வீண் செலவ நான் ஏத்துக்கல,என்றாள்.

அவளைப்பொறுத்த வரை சரியாக இருக்க வேண்டும் எல்லாம் அவ்வளவே, தனக்காகவும் சரி வேறு எதற்காகவும் சரி அனாவசியமாய் ஆகும் செலவு களை ஏற்றுக்கொள்ள மாட்டாள்.

அவள் சொல்லுவதற்காய் இருபத்தைந்து வருடங்களாய் வெறும் பேட்டரி செல்களை மட்டுமே வாங்கிக் கொண்டு உயிர் காட்டி ஓடிக்கொண்டும் வேறெதுவும் பெரிதான செலவெதுவும் வைக்காமல் இருக்கிற காலத்தின் கை காட்டியான கடிகாரம் பார்ப்பதற்கு மாற்றமுடியுமா என்ன,,?

ஆனால் பெரியவளின் கருத்தும் பார்வையும் இதில் வேறாக இருக்கிறது. தா மதமாக ஓடினால் என்ன இல்லை கொஞ்சம் அதிகமாக நேரத்தை முன்ன றிவித்து காட்டிவிட்டால்தான் என்ன சொல்லுங்கள்.

செய்யப் பட்டிருக்கிற மெக் கானிசத்தின் படியும் சொல்லப்பட்ட சொல்லை ஏற்றுமாய் இயங்குகிற ஒரு சின்ன யந்திரம்.அது என்ன தானாகவா விருப் பட்டு இயங்குகிறது.

நாம் எப்படி வைக்கிறோமோ அப்படியாய் இயங்குவதுதானே,,,?இதைப்போய் பெரிதாக எடுத்துக்கொண்டு,,,,,நமது உடலில் ஏதாவது வந்து விட்டால் உடனே சம்பந்தப்பட்ட உடல் உறுப்பை அறுத்தா எறிந்து விடுகிறோம்? மாத்திரை மருந்து,மருத்துவர்,மருத்துவம்,அலோபதி,ஹோமியோபதி,,,எனஎத்தனைஎத்த னைகளை யோசிக்கிறோம்,எத்தனை எத்தனைகளைப்பார்க்கிறோம். எத்தனை எத்தனை பேசுகிறோம். எத்தனை எத்தனை பங்கிட்டுக் கொள்கிறோம். அத்த னைக்கும் அர்த்தமில்லாமலா போய் விடுகிறது.உடம்பிற்கு வருவதை சரி பண்ணிக்கொள்ள வைத்தியமும் வைத்தியரும் இருபப்தைப்போல இதையும் சரி பண்ணி ஓட விட கடைகளும் ஆட்களும் இருக்கிறார்கள்.அவற்றை சரி பண்ணி ஓட வைத்து விடலாம் என்பாள்.

அவள் இருக்கட்டுமே பார்ப்போம் இப்பொழுது எல்லாம் கரெட்டாக இருக்க வேண்டும் என்பது என்ன கணக்கு என்பாள்.

அதுவே முதலில் தப்பு என்பதும் எல்லாவற்றிலும் எல்லாமும்சரியாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது நம் தவறு என்றும் சரியாக ஓடிக் கொண் டிருக்கிற ஒன்றை வம்பாக எடுத்துக்கொண்டு போய் கெடுத்துக்கொள்வானேன் என்பதுவும் அவளது கருத்து/

உழமானப்பட்டுக்கிடக்கிறதாய் வீடு/முன் வாசலும் புற வாசலுமாய் வைத்த ஆயிரம் சதுர அடி வீட்டில் அத்தனை காலம் வாழ்ந்த பின்னுமாய் இப்படி ஒரு எண்ணம் அலுச்சாணீயப்பட்டுத்தோணூகிறதாய்/

பெயிண்ட்அடிக்கவேண்டும்வீட்டுக்கு.வீட்டை எக்ஸ்டெண்சன் பண்ணி கட்டிய திலிருந்து வீடெல்லாம் தெரித்துக்கிடக்கிற சிமிண்ட் பூச்சுத்தெரிப்புகளும் அதன் தடங்களும் இன்னும் அப்படியே பூச்சு மாறாமலும் தடம் மாறாமலு மாய்/

அதைப்பார்க்கிற போதெல்லாம் இவனுக்கு பெயிண்ட் அடிக்க வேண்டும் என் கிற உத்வேகம் பிறக்காமல் இல்லை.அதற்கான ஆட்கள் கூலி பெயிண்ட் கலர் உட்படயோசித்துவைத்துவிட்டான்.

இவனுக்குத்தான்நேரம்கிடைக்கவில்லை,ஒருநாளின்முக்கால்வாசி நேரத்தை பறித்துத்தின்று விடுகிற அலுவலகம் மீதி இருக்கிற நேரத்தில் கொஞ்சமாகக் கூட வேறெதையுமாய் யோசிக்க விட்டதில்லை பெரிதாக.சரி நேரம் வாய்க் கும் பொழுது பார்த்துக்கொள்ளலாம் என விட்டு விடுகிறான்.

அம்மாதிரியான விட்டு வைப்பு இப்படியாய் காட்சிப்பட்டும் உழமானம் கொண் டும் தெரிவதாக/இது போலாய் வெற்று வார்த்தைகள் சுமந்து ஏக்கப்பெரு மூச்சு விடுகிற சமயங்களில் சின்னவள் பாட்டுப்போட்டு விடுவாள்.ஹோம் தியோட்டரில்/

அதில்ஒலிக்கிறபாடல்கள்பலதரப்பட்டவையாய் இருக்கும். பழைய பாடல்கள், இடைக்காலம்,புதுப்பாடல்கள்,,,,என கலந்துகட்டியவையாய் பென்டிரைவில் பதிந்து வைத்திருப்பாள்.

அதில் பெரும்பாலுமாய் இவனது டேஸ்டுக்கு தகுந்தாற்போல இடைக் காலப் பாடல்களை ஒலிக்க விடுவாள். இவன் வீட்டை விட்டு போய் விட்ட பின் ஹிந்திப்பாடல்களை ஒலிக்க விட்டுக்கேட்பாள்.

ஏனென்று கேட்டால் நன்றாக இருக்கிறது என நான் தான் ஒன்றிரண்டு பாடல் களை பதிந்து வைத்துள்ளேன் என்பாள்.மேலும் ஏன் அவையும் பாடல்கள்தா னேஎனகேள்வி போர்த்தி நகர்கிற அவள் அவளுக்கு விருப்பட்ட ஹிந்திப் பாட லைஒலிக்கவிடுவாள்இவன்முன்னாகவே/அர்த்தம்தெரியாவிட்டாலும்கேட்பதற்கு நன்றாகவேஇருக்கிறது,

நல்லாத்தானே இருக்கு, இதுக்குப்போயி ஒங்க அக்காகாரி பெரிசா குதிக்கி றா ளே நல்லாயில்ல அது இதுன்னு,எனக் கேட்டால்அவள்அப்படித்தான் பெரிசா அவளுக்குபாட்டுக்கேக்குறடேஸ்டுஇல்லை,அதுபத்துனஞானமோஅவதானிப்போ எதுவும் கிடையாது,என்னமோ அவ சொல்றான்னு நீங்களும்,,,,,,,,ஹோம் தியோட்டர்ல பாட்டு ஓடிக்கிட்டு இருக்கும் போதே டீ வி யில மெகாத்தொடர் பாத்துக்கிட்டு இருப்பா,ஒரே நேரத்துல எப்பிடி ரெண்டையும் பாக்கவும் கேக் கவும் முடியும் யோசிங்க என்பாள்.

பொதுவாவே எல்லா விஷயத்துலயும் அவ டேஸ்டும் அவளோட பங்கும் இப்பிடித்தான் இருக்கு.என்ன செய்ய சொல்லுங்க என்கி றாள் சிறியவள். ஆனால்அவளோஏன்ஒவ்வொன்றையும்ஆழ்ந்துஅவதானித்துக்கொண்டு,,,,,,,,,,,,?
தேவையற்ற விஷயம் அது என்னைப்பொறுத்த அளவில் என்பாள்.

சரி அப்படியே இருக்கட்டும் உன்னளவிலாய் நீ முன் வைக்கிற விஷயமும், அவளலவிலாய் அவள் வழிமொழிகிற விஷயமும் என இவன் அவர்களை சமாதானம் செய்கிற போது,,,,இவன் மனைவியின் சப்தம் கொஞ்சம் கூடி விடும்.சரி ரெண்டு பேரும் அங்க என்ன வெட்டி தர்க்கம் பண்ணிக்கிட்டு/

ரெண்டு பேர்ல ஒருத்திய கிச்சனையும்,இன்னொருத்திய மத்த வேலைகளை யும் பாக்கச் சொல்லுங்க,நாளைக்கு வேற வீட்டுல போயி வாழப்போறவுங்க, அங்க இந்த பேச்சு மட்டும் துணை குடுக்காது பாத்துக்கங்க என்பாள்.

ஒங்களச்சொல்லணும்மொதல்லரெண்டும்பேசுறதகேட்டுக்கிட்டுநீங்களும்அவுங்களோட சேந்துக்கிட்டு பேசிக்கிட்டு இருக்கீங்க பாருங்க என்பாள்.இவனது மனைவி/

அவளது பேச்சிற்கு அப்புறம் மறு பேச்சு கிடையாது இந்த வீட்டில்/

ஆனால் இவ்வளவுபேசுகிறஅவள் தினசரி பறவைகளுக்கு கொண்டு போய் தானியம் வைத்தாளாஎன்கிறகேள்விக்கு கிட்டத்தட்ட இல்லை என்றுதான் பதில் வரும்.

தின்னஏதுமற்ற விவசாய நிலங்களின் மீது பறந்து அலுத்துப்போன வாயில்லா ஜீவன்கள்சிலகூட்டமாய்வான்வழிபறந்துவந்துஇவர்கள்போடுகிறதானியத்தை தின்றுபோவதில் இவனுக்கு கொஞ்சம் பெருமையாகவும், கொஞ்சம் ஆறுதலா யும் இருந்ததுண்டு.

எப்பொழுதிலிருந்து இந்தப்பழக்கம் ஆரம்பித்தது எனத்தெரியவில்லை.வந்து விட்டது தொடர்கிறது இப்பொழுது வரை,மாதா மாதம் பலசரக்கு வாங்கும் போது கடையில் ஒரு கிலோ தானியம் வாங்கிவிடுவது வழக்கம்.

ஒரு தடவை கம்பு,ஒரு தடவை கேப்பை,ஒருதடவைகோதுமை,,,என ஏதாவது வாங்கிக்கொள்வான்.கோதுமைபெரும்பாலுமாய்ரேஷன்கடையில் கிடைக்கும்.

ஆனால்கம்பு கேப்பை கிடைப்பதில்லை,ஒரு நாள் காலை வேளையாக மாடியி ல்போய் நின்று கொண்டிருக்கும் போது புறாக்கள் நான்கைந்து பறந்து வந்தன, பறந்து வந்த புறாக்கள் இவன் இருப்பு மாடியில் இருப்பதைப் பார்த்ததும் அப் பக்கமாய் வருவதை தவிர்த்து வேறு பக்கமாய் பறந்து விட்டன,

அன்றிலிருந்து இன்று வரை இவன் மாடிபக்கமாய் போவதில்லை அந்த காலை நேரத்தில் தின்ன ஏதாவது தேடி அலைகிறது போலும் என இவனாக முதலில் இரு கை சோற்றை வைத்துப்பார்த்தான்,ம்ஹூம் தின்னவில்லை, திங்காது, இது போலானதை விட்டுட்டு உண்மையிலேயே அதுகளுக்கு ஏதா வது தின்னப்போடணும்ன்னு நெனைச்சிகீன்னா,,,தானியம் தவசின்னு ஏதாவது வாங்கிப்போடுங்க, ஒங்களுக்கு புண்ணியமாவது வந்து சேரும். என்கிற பேச்சி ற்கு கட்டுபட்டவனாயும்நம்வீட்டில் வந்து நாலு ஜீவராசிகள் சாப்பிட்டுப் போகி றதென்றால் நமக்குத் தானே புண்ணியம்,என நினைத்து ஆரம்பித்த வேலை,

இருபது புறாக்கள் வரை இப்பொழுது வர ஆரம்பித்து விட்டது,அது போக அவை வந்து போனபின் மைனா மற்றும் பெயர் தெரியாத சில பறவைகள் வந்து போக ஆரம்பித்தன,வாங்கிய ஒரு கிலோ தானியம் போதவில்லை இப்பொழுதெல்லாம்.

அப்படியான நாட்களில் இன்னமும் ஒருகிலோ வாங்கிக்கொள்வான். இவன் குடியிருக்கிற ஏரியாவில் இருக்கிற தவுட்டுக் கடையிலேயே வாங்கிக் கொள் வான்.

தவுட்டுக்கடையில்வாங்குகிற தானியங்கள் கொஞ்சம் தூசி கலந்து இருக்கும், தவுட்டுக்கடையில் வாங்வதில் இன்னொரு லாபமும் இருக்கிறது. அங்கு செஞ்சோளம் வாங்கிக்கொள்ளலாம்.

கம்பு கேப்பை கோதுமையை விட அது கொஞ்சம் விலை கம்மிதான்,புறாக்கள் செஞ்சோளம்தின்பதில்லை,அதுஉண்மையில் உண்ணுமா உண்ணாதா என்பது பற்றிஇவனுக்குத்தெரியாது,ஆனால்இவர்கள்போடும்செஞ்சோளத்தைஉண்ணாது, மாறாக அடுத்து வருகிறவைகள் ஒன்று விடாமல் அவற்றை பெறக்கித்தின்று விடும்,மாடி கூட்டி வைத்தது போல் சுத்தமாக ஆகி விடும்.

ஒரு நாள் கேப்பை ,ஒரு நாள் கம்பு ஒருநாள் கோதுமை,ஒரு நாள் செஞ்சோ ளம் என அடுத்தடுத்ததாய்ப் போடுவான்.

கையிருப்பு காலியாகப்போகிற நிலையில் இருக்கிற போது கம்பு கேப்பை கோதுமை,செஞ்சோளம் என இருக்கிற ஸ்டாக்கை தீர்த்து விடுவான்.

அப்படியாய் ஸ்டாக் தீர்க்கப்படுகிற அன்று வட்டவடிவமாய் வரையப்பட்ட கோலம் போலாய் ஒன்றை கற்பித்துகொண்டு தானியங்களை சிதறலாகப் போட்டு அதில் ஒன்றுடன் இன்னொருதானியம் கலக்காதவாறு அடுக்கடுகாய் போடுவான்,

அந்த அடுக்களின் இடுக்குகளில் குடியிருக்கும் தானியங்களில் தேவையான வற்றை பெறக்கி எடுத்து உண்டு விட்டுப்போகும் புறாக்களும் இன்னும் பிற பறவைகளும் எந்த வித சேதாரமும் யாருக்கும் வைக்காமல்/

அப்படியாய்சேதாரம்வைக்காமல்சாப்பிட்ட பறவைகளை இப்பொழுதெல்லாம் காணமுடிவதில்லை, சுத்தி இருக்கிற வீடுகளின் மாடிகளில்ஆள் நடமாட்டம் அதிகரித்துப்போனதும் வீடுகளில் உள்ள சிறுவர்கள்  மாடியின் மீது ஏறி வந்து விளையாடவுமாய் இருந்ததில் கிலி கண்ட பறவைகள் பயந்து ஒதுங்கிக் கொண்டன போலும்,

இப்போது புறாக்களுக்காகவும்,மற்ற பறவைகளுக்காகவுமாய் வாங்கி வைத்த கம்பும் கேப்பையும் கோதுமையும் செஞ்சோளமுமாய்தேடுவாரற்றுக் கிடக்கி றது வீட்டின் வராண்டாவில்/

யாராவது தெரிந்தவர் இருந்தால் அல்லது இங்குவந்துபோன புறாக்களுக்கும், பறவைகளுக்குமாய்தந்திமுகவரி அல்லது ஜி மெயில் ஐ டி இருந்தால் சொல் லுங்கள்,அனுப்பலாம்ஒருசெய்தி/சிறியதாகவோபெரிதுபட்டோ,,(எப்பொழுதும் போல் எங்களது வீட்டின் மாடியின் மீது உங்களுக்காக சிதறப்போட்டுக் காத்தி ருக்கும் கம்பு கேப்பை,கோதுமை மற்றும் செஞ்சோளம் தின்பதற்கு ஆளற்று காய்ந்துபோய்க்கிடக்கிறது,ஆகவேவாருங்கள்,வந்துசாப்பிட்டுவிட்டுபோங்கள், உங்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்கிறோம் நாங்கள்,தேவைப்படுமானால் உங்களுக்காகசிக்னல் விளக்குகள் அமைத்துக் கொடுக்கச்சொல்லி மனுக்கொடுக்கலாம் உரிய இடத்தில்,,,,) அனுப்பலாம்,

அது பார்த்து அவைகள் வர வாய்ப்பில்லை என்றால் பறவையியல் வல்லுன ரிடம் சொல்லி அவைகளிடம் பேச்சுவார்த்தை நடத்திப்பார்க்கச் சொல்லலாம். என உத்தேசித்து நாட்களை கடந்த போதும் கூட அவைகளுக்கு இங்கு இரை தின்ன வர நேரமும் அதற்கு இரையிடும் பாக்கியமும் எங்களுக்கு இல்லை என முன்னறிவித்துச் சென்றவாறு அந்தப்பறவைகள் அந்தோ பறந்து போய்க் கொண்டிருக்கின்றன/

13 Aug 2017

நிறப்பிரிகைகளாய்,,,,,,

கிளம்பியஇடம்வீடாகவும்கிளம்பிய நேரம் மாலை ஆறரையாகவும் இருந்தது.

கறுப்புக்கலர் பேண்ட்டும் அதற்கு மேட்சாக இல்லாமல் ஏதோ ஒரு வெளிர் கலரில் சட்டையும் போட்டுக்கொள்வது இவனது ட்ரெஸ் கோடாக இருந்தது.

கறுப்பு இல்லையெனில் பிரௌவ்ன்,அதுவும் இல்லையெனில் வெளிக்கலரில் வைத்திருக்கிற ஒரு பேண்ட்,

அதை போலான வெளிர்க்கலர் பேண்ட் அணிகிற நாட்களில் அடர்க்கலரில் டிசைன்தரித்திருக்கிற சட்டையை அணிந்து கொள்வான்.அதுவும் எக்ஸ்பெயரி டேட் கடந்து தாங்கி ஓடிக்கொண்டிருப்பது போல் படுகிறது,

ஆகவே அது கிழிந்து கிழியும் முன்பாக இன்னொரு சட்டை எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும்,இவன் எப்பொழுதும் இப்படித்தான்,

ஒரு சட்டை கிழியப்போகிறது,இல்லை அதன் பயன் பாட்டுக்கு வந்து நீண்ட நாள் ஆகப் போகிறது.என்றால் இன்னொரு சட்டை எடுக்க வேண்டும் சீக்கிரம் என குறித்து வைத்துக்கொள்வான்,

பஜார் பக்கமாக போகும் பொழுது அல்லது கையில் காசு இருக்கிற சமயமாய் பார்த்துசட்டையை எடுத்துவைத்துக்கொள்வான்,பின் சமயம் வாய்க்கும் போது அல்லது அந்த சட்டை கிழிந்த பின்னாய் போட்டுக் கொள்வான்.அதான் எடுத்து வந்தாச்சில்ல,போட்டுக்குற வேண்டியதுதான,,, என்றால் இருக்கட்டு மே இப்ப என்ன அதுனால ,அது கிழியட்டும்ன்னு காத்திருக்கேன்,என்பான்,

”ஆமாஅது எப்ப கழிஞ்சி நீங்க எப்ப போட்டுக்குறபோறீங்க,,” என்கிற கேள்விக் கு சிரித்துக்கொள்வான்,கேட்பவர்கள்பதில் சொல்பவர்கள்வேறு வேறானவர் களாய் இருந்த போது இவன் மனம் படக்கென வாரிபோட்டு விடக்கூடும்,

ஆனால் கேட்பவர் இவனது மனைவியாகவும் பதில் சொல்வது இவனாகவும் இருக்கிறபொழுதுஅடவிடுஇப்போஎன்னஎன்பதும்,மெல்லியதாய்படர்கிறசிரிப்பும் தான்இவனின்பதிவாய் இருக்கும்.

சமயத்தில் எடுத்து வைத்ததை ஒரு வருடம் வரை கூட போட மாட்டான், போன வருடம் அக்கா எடுத்துக்கொடுத்த சட்டையை இப்பொழுதான் போட்டி ருக்கிறான்,

இவன் என்னமோ பெரிதாக தமிழ் இலக்கிய உலகில் பெரிதாக சாதிக்கப் போகிறவன்போலவும்அல்லது சாதித்து விட்டது போலவும்இவனது ஆறாவது சிறுகதைநூல் வெளி வந்த போது அக்கா எடுத்துக்கொடுத்த சட்டை,

சட்டைக்கும் இலக்கியத்திற்கும் என்ன சம்பந்தம் இருந்து விட முடியும் எனத் தெரியவில்லை,அதற்கு அந்த விலைக்கு புஸ்தங் கங்கள் ஏதாவது வாங்கிக் குடுத்திருந்துருக்கலாம்,வைத்திரிந்திருப்பான்,

படித்திருப்பான் என்று சொல்வதை விட வைத்திருந்திருப்பான், எனச் சொல் வதே சாலப்பொருத்தமாய் ப்படுகிறது. இப்பொழுது பலபேர் அப்படித்தானே/ புத்தகங்களை ஷெல்பில் அடுக்கி வைத்திருக்கிற அலங்கார பொருட் களாகத் தான் வைத்திருக்கிறார்கள்.அதுபோலதான் இவனும் புத்தகங்களை ஷெல்புக ளற்ற வீட்டில் வைத்திருக்கிறதாய் இவன் மீதே இவனுக்கு கோபமும் வருத்த மும் உண்டு,

புத்தகங்கள்அவ்வளவாகஇல்லாதவீட்டில்புத்தகங்களைஅவ்வளவாகபடிக்காத ஒருவனாய் இவன் இருந்திருக்கிறான் என்கிற வருத்தமும் இவன் மீது இவனு க்கு அவ்வப்பொழுது இல்லாமல்இல்லை.

அப்படியான வருத்தங்களும் கோபமும் இவனை பெரிதாய் ஒன்றும் பாதித் ததில்லை,படியாதவன் என்று வேண்டுமானால் சொல்லிவிட்டு போகட்டுமே. யார் வேண்டாம் எனச்சொன்னார்கள்,என்பது இவனது திண்ணமான எண்ணம்.

இவனது நண்பன் சொல்லுவான் டேய் சும்மாயிரு அடி முட்டாள் மாதிரி பேசாத என ,அது போலான அவனின் அடி முட்டாள் மாதிரி என்கிற பேச்சை இவன் எப்பொழுதும் சீரியஸாக எடுத்துக் கொண்டதில்லை.ஒரு மெல்லிய சிரிப்புடன்தான் கடந்திருக்கிறான்,

ஆனால்ஏதோஒரு நாளன்றின் மாலையில் நண்பர்களாக கூடியிருந்த வேளை யில்அதே அடி முட்டாள் பேச்சு வர இவனுக்கு சுருக்கென்று தைத்து விட்டது, இவன் நான் அடி முட்டாள்தான் கிட்டத்தட்ட இங்கிருக்கிற யாரளவிற்கும் படிக்கவில்லை,இங்கிருக்கிறயாரளவிற்கும்எனக்கு அறிவில்லை, இங்கிருக்கி ருக்கிற யார் போலவும் நான் அரசாங்க வேலையோ தனியார் நிறுவன ஊழி யனாகவோ இருந்து சம்பாதிக்கவில்லை,அப்படியான் புண்ணிய மும் பாக்கிய மும் வாழ்வில் கிடைக்கப்பெறாதவன் நான்,ஆகவே வாழ்வின் முழுமையை இன்னும் அனுபவிக்காமல் இருக்கிறவர்களில் ஒருவனாய் இருக்கும் நான் அடி முட்டாளே,,,,,அடி முட்டாளே என கலங்கித்தான் விட்டான் கொஞ்சமாய்/

அந்த கொஞ்சமாய் அவனுக்குள்ளாய் சமன் பட ரொம்பவும் நாளாகிப்போனது. அதுவரை அந்த நண்பனையோ இல்லை அவனுடன் சேர்ந்த நட்பு குழாம்க ளையோ பார்க்கிற போது தலையை குனிந்து கொண்டு கவனத்தை வேறு பக்கமாய் திசை திரும்பி விடுவான்.அன்றிலிருந்து இன்று வரை அப்படித்தான் ஓடிக்கொண்டிருக்கிறதாய் நினைக்கிறான்.

இப்பொழுதான் என இல்லை, எப்பொழுதும் இப்படித்தான் ,வீட்டில் மூன்று ஜோடிகள்அடர்மற்றும்வெளிர் கலர் பேண்ட்டும் சர்ட்டுமாக வைத்திருக்கிறான்

ஆனாலும் இது நாள் வரை கோயம்புத்தூரில் ட்ரெயினிங்க் சென்ற பொழுது எடுத்தமஞ்சள்கலர்கட்டம்போட்டசட்டைபோல்இதுநாள்வரைஅமையவில்லை.

சட்டை துணியை எடுத்து வந்த கையோடு மேட்டுபட்டு டெய்லரிடம் போய் தான் தைத்தான்,அவரிடம் துணி தைப்பது இவனுக்கு மிகவும் பிடித்தமான தாக.

இப்போதைக்குள்ளாய்சட்டைகள்எடுத்துதைத்ததில்லை.எல்லாம்ரெடிமேட்தான். இவனுக்குத்தெரிந்து சட்டைக்கு துணி எடுத்து தைத்து ரொம்பவும் தான் நாட் களாகிப்போனது,டெய்லர் கூடக்கேட்பார் பேண்ட் தைக்கப்போகும் போது.

“சார் என்ன இது நீங்கள் ரெடிமேடில் சட்டை எடுத்துப்போடுகிறீர்கள் என்பதற் காக சொல்லவில்லை,துணி எடுத்து தைத்துப்போடுங்கள் நன்றாக இருக்கும் உங்களுக்கு,அது உங்களது தோற்றத்தை மேம்படுத்துக்காட்டும், பார்ப்பதற்கு நன்றாக இருப்பீர்கள் என்பார்,ஆனால் இவன் தான் அவர் சொல்வதை கேட்ட தில்லை,காலப்போக்கில்அவரிடம்பேண்ட்தைப்பதையும்நிறுத்திக்கொண்டான்.

அவரிடம் தைக்கிற பேண்ட்டின் துணி கிழிந்த போது கூட அவர் தைக்கிற தையல் பிரியாது அவ்வளவு கெட்டியாய் இருக்கும். என்ன தையல் கூலிதான் கொஞ்சம் அதிகம்/

அதைப்பற்றி இவன் பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை.ஆனாலும் அவரிடம் அவர் தைத்த பேண்டையோ சட்டையையோ ஆல்ட்ரேசன் வேலைக்கு என கொண்டு போனால் பண்ணித்தர மாட்டார்,அல்லது அவர் தைத்தது சரிதான் என வாதிடுவார்,அதிலேயே எரிச்சலுற்றுஇவன் அவரிடம் போய் தைப்பதை யே நிறுத்திக்கொண்டான்,

இப்போது மார்க்கெட் அருகில் இருக்கிற கடையில் தைக்கிறான் ,அளவு கொடுத்து அட்வான்ஸ் கொடுத்து விட்டு வந்துவிட்டால் போதும்,மறு நாள் அல்லது அதற்கு மறு நாள் போய் வாங்கிக்கொள்ளலாம் என்கிற சௌகரியத் திற்காக அங்கே போய் கொடுத்து வாங்கிக்கொண்டிருக்கிறான்.

பையன்களுக்குரெடிமேட்தான்,அவர்களுக்கு பிடித்த டிசைனில் பிடித்த கடை யில் எடுத்துக்கொள்வார்கள்.அது போலாய் எடுத்த ஒன்றைத்தான் இப்பொழுது அணிந்து கொண்டு வெளியே வருகிறான்.கிளம்புகிறார்கள் பஜாருக்கு/

வட்ட வடிவ குட்டிக்கடிகாரத்திற்குள்ளாய் அடைந்து கிடந்த முட்களின் நேசம்மிகு பிணைப்பும் கைகூட்டலும் தோள் மீது கைபோட்டுக்கொள்ளலும் நன்றாகவே/

அது நேரம்அறிவித்துச்செல்கிறபொழுதுஇனிய பொழுதெனத்தான் கணக்கில் கொள்ளவேண்டியதாய் இருக்கிறது,

வடக்குபார்த்தசுவரில்இருந்தசெல்பின்மீதுஇருந்ததிண்டைதாண்டிவைக்கப்பட்
டிருந்ததாய் காட்சிபட்ட கடிகாரம் அங்கு வைக்கப்பட்ட நேரம் மிகவும் சுவாரஸ் யம் சுமந்து இருந்ததாய் அறிவான் இவனும் மனைவியும்/

கடிகாரம் வாங்கி வந்த இடம் பஜாராகவும்,வாங்கிய கடை பாய் கடையாகவும் இருந்தது,.பாய் கடை துரைசாமி டாக்டர் ஆஸ்பத்திரி அருகில் இருந்த சந்தில் இருந்தது,அங்குதான் வாங்கினான் கடிகாரத்தை,150ம் ரூபாய் என/

நூற்றி ஐம்ப ரூபாய்க்கு கடிகாரமா,,,.ஆச்சரியம் கலந்து வாங்கி வந்து சுவரில் மாற்றிய தினத்திலிருந்து இன்று வரை ஓடிக்கொண்டும் காலத்தை சரியாக காட்டிக்கொண்டுமாய் இருக்கிறது எனலாம்,

காலத்தை கணக்கிட்டு காட்டுகிற கடிகாரம் தன் நிலைகாட்டி வட்ட வடிவ கடிகாரத்திற்குள் அடைபட்டே கிடக்கிறது சின்னதும் பெரியதுமான முள் ஓட்ட த்துடனும் விநாடி முள்ளை துணைக்குச் சேர்த்துக் கொண்டுமாய்/

வீட்டிலிருந்து கிளம்பி தெரு இறங்கி குடிகள் கடந்து ஸ்டைலாக சைக்கிளை ஸ்டாண்ட்போட்டுநிறுத்தி ஆனந்தா ஹோட்டல் டீயை ஸ்டாரங்காக செல்வம் மாஸ்டர் கைகளால் குடித்துக்கொண்டுமாய் இருக்கிற பொழுது அவர் அணிந் திருக்கிற வெளிர் நிற சட்டையும்,கட்டம் போட்ட கைலியும் எப்பொழுதாவது புகைகிற பீடியின் புகையும் அவரது சப்தமற்ற பேச்சும் மென்சிரிப்பும் அவரை அடையாளம் காட்டும்.

இவனைப் போலானோர்களைப் பார்க்கிற போது குடித்துக்கொண்டிருக்கிற பீடியைஅமத்தி விடுவார், இல்லை டீ பட்டறையின் ஓரமாய் வைத்து விடுவார், ஒரு தடவை அவர் பட்டறையின் ஓரமாய் பீடியை வைத்ததைப் பார்க்காமல் பட்டறையின் ஓரம் உள்ளங்கையின் முனையை ஊன்றி விட்டான் தெரியா மல்/

உடன் சுட்டு விட்ட பீடியை கையில் எடுத்து டீ மாஸ்டரிடம் சொன்ன போது மாஸ்டர் தர்மசங்கடமாய் நெளிந்தார்,

இவன் நினைத்துக்கொண்டான்,செல்வம் மாஸ்டர் போடுகிற டீயின் சூடு குடிக்கும் முன்பாக உள்ளிறங்கி கைவரை வந்து சூடு காட்டிச்செல்கிறது போ லும் என்கிற நினைப்புடன் உள்ளே சமையல் மாஸ்டராய் இருக்கிற முதலா ளிக்கு வணக்கம் சொல்லி விட்டு நகரும் முன்னாய் அவரை முதலாளி என கூப்பிடுவதன் ரகசியம் இவனுக்கு மட்டுமே தெரிந்ததாக இருக்கிறது,

என்ன மொதலாளி என்ன இப்பிடி என்ன சமையலு, என்ன ஸ்பெசலு இன்னை க்கி என்றால்,,,அட என்ன மொதலாளி நீங்க என்னமோ பெரிசா ஆர்டர் பண்ணி சாப்புடப்பொற மாதிரி,என்ன பண்ணுனாலும் ஒங்களுக்கு அந்த சாம்பார் சோறும்ஆம்ளேடுட்டும்தான்புடிச்சிருக்கு,அது போல எனக்கு ஒங்களுக்குன்னு எடுத்துவச்சிதனியா பரிமாருறதுக்குன்னு கொஞ்சம் சிறப்பான சமையல் ஐட்ட ங்கள்உண்டு, அதை கொஞ்சம் எடுத்து வச்சிருவேன், அப்புறமா நீங்க பிரியமா கேக்குற ஆம்ளேட்ட நீங்க வந்து சாப்புட உக்காந்த ஒடனே போட்டுத்தருவேன் ,அதுதான் என்னோட ஸ்பெசல் சமையலும்,அதுல இருக்குற பழக்கமும், இதுல நீங்க போயி என்னைய மொதலாளின்னு கூப்பிட்டீங்கண்ணா எப்பிடி,,,? என்பவரைப் பார்த்து இவன் சொல்வது எனக்காக சாப்பாட்ட எடுத்து வக்கிற இந்த மன விசாலம் இருக்கு பாருங்க, அதுக்காகத் தான் ஒங்கள மொதலா ளின்னு கூப்புட்டேன்,வேறஎதுக்கும் இல்லை என சொல்லிவிட்டு நீளம் காட்டி செல்கிற தார்ச்சாலையில் கன ரகமும் இலகு ரகமும் இரு சக்கர வாகனங் களும் சமயா சமயங்களில் பாதசாரிகளும் செல்கிற சாலையில் இவனும் ஒருவனாக,,,/

சென்று ஓடிய நாட்களைத்தாண்டி இப்பொழுது அந்த ஆனந்தா ஹோட்டல் இல்லாத நாட்களில் செல்வம் மாஸ்டரையும் முதலாளியையும் எங்காவது யாராவது பார்த்தால் சொல்லுங்கள் எனச்சொல்லுவான், தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமுமாய்/

அவ்வப்பொழுதாய் இவன் டீக்குடிக்கின்ற முக்குரோட்டுக் கடையில்இருக்கிற டீமாஸ்டர்செல்வத்தைப்போலவேதென்படுவார்,முதலாளியைஇவன்குடியிரு க்கும் ஏரியாவிலேயே இப்பொழுது பார்க்கமுடிகிறது.

திருச்சிப்பக்கம் விராலி மலையில் போய் ஒரு ஹோட்டலில் வேலைபார்த்த அவர் உடல் நிலை மோசமாகிப்போய் விட்டதால் வந்து விட்டதாகக் கூறி னார்,

ஆறரை மணிக்கு பஜாருக்குச்செல்வது உசிதமற்ற காரியம் என்றும்,அவ்வ ளவாக அது நன்றாக இருக்காது என்றுமாய் சொல்லப்படுகிறதா என்ன,,? அப்ப டியெல்லாம் இல்லை,போகலாம் என்கிற முடிவு தாங்கி நீண்ட வேளைக்குப் பின்னான யோசனைக்கு அப்புறமாய் கிளம்பினோம், நானும் மனைவியுமாக/

ஏங்க அந்த செல்போன ஆப் பண்ணி வச்சிட்டு கொஞ்சம் பாட்டில்ல தண்ணி ய ஊத்துனாத்தான் என்ன,எல்லாம் நானேதான் செய்யனும் நீங்க எதையும் தொட் டுறாதீங்க, அப்புறம் ஏன் லேட்டு எதுக்கு லேட்டுன்னு என்னையப் போட்டு பிடுங்கிஎடுத்தாநான்என்னதான் செய்யிறது சொல்லுங்க,,,,என அவள் சொன்ன நேரம் இவன் செல் போன் பேசிக்கொண்டிருந்தான் ,

மூன்று பேரிடம் பேச வேண்டியிருந்தது,ஒன்று சின்னவனிடம்,

நாங்கள் கிளம்புவற்குசற்று முன்தான் கிளம்பி நண்பனின் வீட்டிற்கு சென்றி ருந்தான்,அவனுக்குஇப்பொழுதுஅடிக்கடிநண்பனின்வீட்டிற்குச்செல்லப் பிடிக்
கிறது.

என்னடாவெனக்கேட்டால்அங்குஅவன்தொலைக்காட்சியில்ஆங்கிலச்சேனல் களை வைத்துப்பார்க்கிறான்.அதில் நல்ல,நல்ல படங்களையெல்லாம் பார்க்க முடிகிறது, அதனால்தான்செல்கிறேன்என்கிறான்/

அடுத்ததாக போன் பண்ண நினைத்த பெரியவன் திருமங்கலம் பக்கமாய் வந்து கொண்டிருக்கிறேன் என்கிறான்.

இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது அடிபட்டு மதுரை ஆஸ்பத்திரியில் இருக்கும் நண்பனைப் பார்க்கப்போயிருந்தான்.

மூன்றாம் நபர் இவன் வேலை பார்க்கும் அலுவலகத்தில் வேலை பார்க்கிற கிருஷ்ணன் நம்பியிடம்,திருநெல்வேலியில் இருக்கிற அவரிடம் அலுவலக வேலை நிமித்தமாக பேச வேண்டியிருந்தது.

எல்லோரிடமும்பேசிவிட்டுதிரும்புகிறபோதுஎடுக்க மறந்த ஹெல் மெட்டை எடுப்பதற்காகவீட்டைதிரும்பவுமாய்திறந்துஹெல்மெட்டைஎடுத்துக்கொண்டு வீட்டைப்பூட்டி விட்டுக்கிளம்புகிற நேரம் மாலை மணி ஆறையாய் இருக்கிற து,

26 Jun 2017

இருப்புப்பாதைகளின் வழி தொட்டு,,,,,,,,

போய்க்கொண்டிருந்த சாலையோரம் தனது இருப்பு காட்டி சடுதியாய் ஓடிக் கொண்டிருந்த இருப்புப்பாதைகள் மூன்றின் உள்ளும் புறமுமாய் புற்களும் செடிகளும் பெயர் தெரியாத சிறு சிறுப்பூக்களுமாய் முளைத்துக்கிடக்கின்றன..

உயரம் குறைந்து ஒற்றைக்குச்சிகளாய் நீட்டி நீட்டி நின்ற புற்களும் கூப்பி விரித்த கையின் அகலத்திறத்திலில் வீற்றிருந்த உயிர்க் குடையாய் அகலம் காட்டி விரிந்து முளைத்து நிற்கிற செடிகள்,மஞ்சளாய், சிவப்பாய், கத்தரிப்பூ கலராய்,,,,,என பல நிறம் காட்டி சிரிக்கிற சிறு சிறு பூக்கள் ஏதாவது செடிகள் அல்லதுபடர்ந்து கிடக்கிற கொடியின் பிடியில் நின்றதா இல்லை காற்றாடும் அந்தரத்தில் தானாக முளைத்து நிற்கிறதா என புரியாதஅளவிற்கு பூத்துப் போர்த்திக் கிடக்கிறது,

இதில் புற்களின் முனையில் படிந்து கிடக்கிற தூசியையும் புழுதியையும் விட்டு விட்டு பார்க்கையில் அதன் நடுப்பாகத்திலிருந்து அடிப்பாகம் வரை பச்சையான ஒற்றை வர்ணம் காட்டி நிற்பது போலும் அதன் அருகாமையா யும் தூரமாயும் இல்லாத படர் கொடியின் மேலிருக்கிற அழுக்கு கொஞ்சம் கொஞ்சமாய் உதிர்ந்து மண் தொடப்போகிற வேளை அதன் அடிக்காம்பு கலர் காட்டியும் பிடிமானம் விட்டுக்கொடுக்காமலுமாய்/

இது இரண்டின் கூட்டிசைவிலும் நட்புறவிலுமாய் கை நீட்டி அரவணைத்து தோள் தழுவளைப்போல் பெயர் தெரியாத பூக்களை அள்ளி அரவணைத்து இருப்பு காட்ட அனுமதிக்கிறவையாய் அவ்விடத்தில் மூன்றின் காட்சிப்படுத லும் ஒன்றிணைவுமாய்/

பாதை தொட்டும் அது விட்டு விலகியுமாய் கிடந்த செடிகளின் முளைத்தலை தாங்கியும் காட்டியுமாய் ஓடிக்கடந்த இருப்புப்பாதையின் ஓரமாய் சென்ற சாலை கைப்பிடித்து அழைத்துச்செல்கிற இடம் மதுரை ரோடாயும்,ரயில்வே ஸ்டேஷனின் முகப்பு வாயிலாகாவும் இருக்கிறது.

முகப்பு வாயிலின் வலது ஓரமாய் அமைந்திருந்த கேண்டீனும் அங்கு சாப்பிடு பவர்களும் டீக்குடிப்பவர்களும் வெளியிலிருந்து பார்க்கும் பொழுது எளிதாய் கண்ணுக்கு புலப்பட்டவர்களாக/

அலுவலக நாட்களின் நகர்வொன்றில் இரவு நேரப்பணியின் போது டீ சாப்பி ட்டு வரலாம் கொஞ்சமாக தூக்கமும் களைப்பும் போகவுமாய்/ என நினைத்து நடு இரவின் அந்த நேரத்திற்கு டீக்கடை தேடி அலைந்த போது அது சுழியி ட்டு கொணர்ந்து சேர்த்த இடம் இவ்விடமாயும் இந்தக்கேண்டீனாகவும் ஆகிப் போகிறது.

டீக்குடித்து விட்டுக்கிளம்புகையில் உடன் வந்த ஆறு பேரில் மற்ற ஐந்து பேரும்உறுதியாகச்சொன்னார்கள்,என்ன சார் இது டீக்குடிக்கப்போகலாம் எனச் சொல்லிவிட்டு டீப்போட்டு பழகுகிற இடத்திற்கு கூட்டி வந்து விட்டீகளே என/

அவர்களின் ஆதங்கமும் உள் மனப்புழுங்கலும் உண்மையானதும் வாஸ் தவமானதுமே அள்ளிக்காட்டுவதாக அந்த நேரத்தில்/

அதை சரி பண்ணவும் சமாளித்துப்பூக்கவிடவுமான மறு நாளின் அதிகாலை யில் நல்ல டீயாய்ப்பார்த்துகுடிக்கவும் குடித்த அனைத்திற்கும் இவன் காசு கொடுத்து திருப்திப்பட்டுக்கொள்கிற படியாகவும் ஆகிப்போகிறது,

இப்படியாய் காட்சிப்பட்ட கேண்டீன் முடிந்து ஸ்டேசனின் நுழைவு வாயிலில் படி இறங்கி வருகிற இடத்தின் இடது புறமாய் வேலி கட்டி வளர்க்கப்பட்ட குரோட்டன்ஸ் செடிகளும் பூக்களுமாய் அழகுகாட்டிச்சிரிக்கின்றன எந்த வஞ் சைனையுமில்லாமல்/

அவ்வழியாய்செல்பவர்களுக்கும்,வருகிறவர்களுக்கும்ரயில்பயணிகளுக்குமாய் இதப்பட்டுப்போகிற அந்தக்காட்சியை கை வசம் கொண்டிருக்கிற பார்வையில் சூழ்கொண்டிருக்கிற இடத்தை கைபிடித்தழைத்து வந்த சாலை சுட்டிக் காட் டியது போலவே அந்த சாலை இங்கிருந்து அங்குமாய் அழைத்துச்செல்கிறது. வேறென்ன கைபிடித்துத்தான்/

பிடித்தழைத்துச்சென்ற கையின் ஈரம் காய்வதற்குள்ளாய் நடந்து முடிந்த நிகழ்வின் ஓரங்கமாயும் இருப்புப்பாதையின் உள்ளாய் முளைத்துக்கிடக்கிடக் கிறசெடிகளையும் புற்களையுமாய் மேய்கிற ஆடுகள் பெயர் தெரியாத பூக்க ளை தின்றுவிடத்துணியவில்லை.பச்சை காட்டிய புற்களையும் வெளிர் மஞ்சளும் அடர் பச்சையும் கலந்து கலர் கட்டி காட்டிய செடிகளை ஓடி ஓடி மேய்ந்தவாறும் ஆவலில் அள்ளி அள்ளி தின்றவாறுமாய் இருந்த ஆடுகள் மறந்தும் கூட பூக்களின் பக்கம் திரும்பி விடவில்லை

அவைகளை தொட்டுப்பறித்து தின்று விடவோ இல்லாததின் ரகசியத்தை கேட்ட வேளையில் ஆட்டுக்காரர் சொல்கிறார் படக்கென/

அவர் வைத்திருந்த கம்பு ஆளுயரத்திற்கும் மேலாய் அரவம் காட்டாமல் நிற் கிறது. என்ன இது ஏன் இவ்வளவு உயரம் காட்டுகிற கம்பு என்கிற இன்னும் இன்னுமான சிலவையாய் சேர்த்துக் கோர்த்து வரிசையாகவும் அது அற்று மாய் கேட்ட பொழுது அவர் சொன்னது சற்று அதீதம்காட்டிச் சென்றதாகவே இருந்தது அந்த இடத்தில்/

“எனதன்பிற்குரியஐயா அவர்களே இந்த ஒரு வாரத்தில் தினசரி காலையிலும் மாலையிலுமாய் உங்களை அயராது கவனிக்கிறேன்.அன்றாடங்களின் நகர்த லில் நிறைந்து போன ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாய் மாணவ மாணவிகளுமாய் பயணிக்கிற இந்தப்பாதையில் என்னை உற்றுக்கவனிக்கிற வெகு சிலரில் நீங்களும் ஒருவராய் இருக்கிறீர்கள்,

”உங்களது பார்வையின் தீண்டலும் அது தாங்கி வருகிற உள்ளுணர்வுமாய் என் மீது படர்கிற வேளை உள்ளின் உள் நுழைந்து ஏதோ சொல்ல வருவது போலவும் கேட்க வருவது போலவும் ஏதோ ஒன்றை அறிவுறுத்தி என் உள்ள த்தின் உள்ளில் திணித்துச் செல்வது போலவுமாய் தோணிப்போகிறது. அப்படி யான எனது அவதானிப்பு சரிதானா இல்லை தவறா என சரியாக தெரியாத தங்களை உற்றுக்கவனிக்கிற வேலையை மட்டுமாய் என்னால் விட்டுக் கொடு க்க முடியவில்லை. அதுவும் நீங்கள் வருகிற போகிற வேலையில் மட்டுமே/

ஐயாஎன்னிடம்வேறெதுவும்பெரிதாக அசையும் மற்றும் அசையாச் சொத்துக் கள் இல்லாத வேளையில் இந்த 52 ஆடுகளை ,மட்டுமே எனது உயிரின் மேலான சொத்தாகவும் எனது ஆத்தமார்த்தகாவும் கட்டி வளர்த்து வருகிறேன். இவைகளுக்கென தனி தொழுவம் தனி மேய்ச்சல் நிலம்,தனி தண்ணீர் காட்டும் இடம் எனஎதுவும் திட்டம் காட்டியோ அல்லது வரை படமிடபட்டோ என்னிடம் இல்லை.

“ஆனால் அதற்கும் மேலாய் அவைகளை நல்லபடியாய் வைத்து பாதுகாக்கிற மனதுஇருக்கிறது.அதுஒன்றேபோதும்எனநினைக்கிறேன்.அப்படிநினைப்பதால் தான் அவைகளை எனது உயிருக்கும் மேலாக நினைத்து பாதுகாத்து விட முடிகிறது,ஆனால்எனதுகனகுவைத்தான்என்னால்பாதுகாத்துவிடமுடியவில் லை.

கனகு என்கிற கனகா என் மனம் நிறைந்திருந்த நாட்கள் அன்று/மனம் நிறைந்த ஆசையையும்,உள்ளம் நிறைந்த கனவுகளையுமாய் உடலில் உள்ள காதல் செல்களில் அடுக்கி உருவாக்கியிருந்த நேசம் ஊனின் உள்ளில் உருக் கொண் டிருந்த நாட்கள் அவை.

“ஆசை மிகுந்த உள்ளத்துடன் உலாவரும் வேளையில் அரும்பிக்கிடந்த மீசை மயிர் காற்றில் பறக்க டவுனிலிருந்த மில்லுக்கு எங்களூரிலிருந்து ஐந்து கிலோ மீட்டர்கள் சைக்கிள் பயணத்தில் வேகம் காட்டியவனாய் இருந்தேன் அன்றாடங்களில்/

“ஊரின் உள்ளிருந்து நடுத்தெரு என பெயரிடப்பட்டு கதவு எண் இன்னது முகவரி இன்னது என தீர்மானிக்கப்பட்டஇடத்திலிருந்து தினசரி காலையாய் தினசரி கிளம்பி சைக்கிளில் வருகிற பொழுது ஊர் முடிவின் முக்குத் தெரு விலிருந்துஉள்வாங்கியிருந்த வீட்டிலிருந்து ஏதாவது சாக்கு வைத்துக் கொண் டும் காரணம் சுமந்து கொண்டுமாய் என்னை பார்க்க வந்து விடுவாள் தெரு முனை நோக்கி/

”காய்கறி வாங்குவதற்காக,பலசரக்கு வாங்குவதற்காக,டீகடைக்குச்செல்ல பெட்டிக்கடைக்குச்செல்ல என ஏதாவது ஒரு காரணத்தை மடியில் கட்டிக் கொண்டு வந்து நிற்பாள்.

”பலசரக்குக்கடைக்கும் பெட்டிக்கடைக்கும் பெண் பிள்ளை போவது சரி,டீக் கடைக்கும் பெட்டிக்கடைக்கும் வியாபாரம் நடத்திக்கொடுக்க உனது தம்பி இருக்கிறானே,பின் நீ எதற்கு ஒவ்வொன்றிற்குமாய் ஓடி அலைகிறாய் என என திண்ணையில் சம்மணமிட்டோ காலி நீட்டிக்கொண்டோ அமர்ந்து அவளது பாட்டி சொன்ன போது கூட சொன்ன சொல்லின் நுனி குத்திய காதை சற்றே மூடி வைத்து விட்டும்,பாட்டி சொன்ன சொல்லின் நுனி எடுத்து அதன் மென்னி பிடித்து தூர எறிந்து விட்டுமாய் அவனைக்காணும் ஆவலில் காலின் பெரு விரலை தரையில் விரலை தரையில் தேய்த்துக்கொண்டோ அங்கிருந்த வீட்டில் உள்ள பெண்பிள்ளைகளை அழைத்து பேண்பார்க்கிற சாக்கில் உறை கொண்டிருப்பாள்.

“கொண்ட உறையின் இருப்பு அவளது மனம் தாண்டியும் மனம் தாங்கியுமாய்/ இந்த இருதாங்கிகளைப்பார்க்கிற அவளது பாட்டி அவளை ஜாடைமாடையாகப் பேசித்திட்டித்தீர்ப்பாள் முற்றம் தாங்கிய வெளியெங்குமாய்/

“பாத்துடீ அவுந்து கெடக்குற அலைபாயுற மனச அள்ளிக் கட்ட பிரியமில்லாத வயசு இது,புத்திசாலித்தனமா பொழச்சுக்க, ஆத்தா காரியில்லாத வீடு, ஒங்க ப்பன்தோட்டங்காடுஒண்ணேகதின்னு கெடக்கான், வெள் ளாமை வெளைச்சல், வெதைப்பு ஒழவு,,,,,,,,,,ன்னு /நீ என்னடான்னா ரொம்பத்தான மனச விரிச்சிப் போட்டுக்கிட்டுத்திரியிற,,,,,,,,அப்புறம் ஏதாவது ஒண்ணுன்னா அத தாங்கிக்கிற சக்தி நம்மகிட்ட இல்ல,,,பாத்துக்க என்பாள் கண்களீல் நீர் கோர்க்க/

“விடு பாட்டி அப்பிடியெல்லாம் ஒண்ணும் இல்ல,அதே நேரம் அப்பிடியில் லாமலும் இல்ல,என்றறிவித்த நாட்களில் பெண்ணின் அப்பா என்னைக் கூப்பிட்டனுப்பினார் கண்டிக்கிறேன் உன்னை வன்மை சுமந்து எனச்சொல்லி/

.”என்ன தகுதியிருக்கிறது உனக்கு என என் பெண்னை காதலிக்கிறாய். கல் யாணம் பண்ணிக்கொள்ளவும் முனைகிறாயாமே என் சம்மதமின்றி/

”இனிநினைக்காதேஅப்படியெல்லாம்வேண்டாம் இது போலான சிறு பிள்ளைத் தனமான விளையாட்டு. அழுக்கு மூட்டை போலான எண்ணங்களை சுமந்து கொண்டு திரியாமல் அதை கீழே போட்டு விட்டு புத்தியாய் பிழைக்கப்பார்,

“உனது அப்பாவிடம் பேசி விட்டுத்தான் வருகிறேன்.நீங்க போங்க மாப்புள ,ஏங் பையனால ஒங்க கௌரவத்துக்கு எந்தவித பங்கமும் வராது,அவன் வரட்டும், செருப்புட்ட நாலு போட்டு புத்தி சொல்லி வைக்கிறேன்.நீங்க கெளம்புங்க என அவர் சொல்லித்தான் அனுப்பினார்,

“அவர்சொல்லிஅனுப்பிய சொல்லுக்கும் வார்த்தைக்கும் கட்டுப் பட்டு அமைதி காத்துவந்திருக்கிறேன்நான்.அந்தவார்த்தைக்குஎந்தவிதசேதாரமும்ஏற்படாமல் பார்த்துக்கொள்.எனது பெண் வேறொரு வீட்டில் போய் வாழவேண்டியவள், நாங்கள் இன்னும் மிச்சமிருக்கிற நாட்களை நோக்கி வாழ்நாளை நகர்த்த வேண்டியவர்கள்ஆகவே,,,,,,,எனச்சொல்லிவிட்டுச்சென்றபெண்ணினதுஅப்பாவின் சொல்லை ஏற்றும் எனது தந்தையின் சொல்லை ஏற்றுமாய் நான் விட்டு விட்டேன்.

“அன்று முடிவு செய்தவர்தான் எனது அப்பா,சொந்தக்காரன் தான் என்றாலும் தகுதியிலும் தராதரத்திலும் நீ பக்கத்தில் நிற்க லாயக்கில்லாதவன் முகத்தில் காறிஉமிழ்ந்து விட்டானே,இனி நீ அவன் முன் நெஞ்சு நிமிர்ந்து நின்று பிழை த்துக் காட்ட வேண்டும்.என வசித்து வந்த வீட்டை விற்று ஆடுகள் இத்தனை யுமாய் வாங்கிகொடுத்தார்,

”அவர் வாங்கிக்கொடுத்த ஆடுகள் கொஞ்சமேயெனினும் அது பல்கிப்பெருகி இன்றுஇத்தனையாய்நிற்கிறது.என்னதான்அழிவு,பிறப்பு,விற்பனைஎன நடந்து கொண்டிருந்தாலும் கூட இப்பொழுது நிற்கிற இத்தனை ஆடுகளும் நிரந்தரம் காட்டி நிற்கும் என்னிடம்/

”இதுஎனக்குமிகப்பெரியபலம்.எனதுஅப்பா விற்றுத்தந்த வீட்டை இந்த ஆடுகள் விற்கும்பணம்மூலமாய்திரும்பவுமாய் வாங்கிவிட்டேன்/திருமணம் பண்ணிக் கொண்டேன்.ஆண்ஒன்றுக்கும்பெண் ஒன்றுக்குமாக தகப்பனாக இருக்கிறேன்.

”என் போலவே எனது கனகுவும் தமிழகத்தின் தூரத்து ஊர் ஒன்றில் கண்டிப் பாக வளர்ந்து நிற்கிற பிள்ளைகளுக்கு தாயாக இருப்பாள்.

காலம் கிழித்துப் போட்ட கோட்டில் அடி பிறழாமல் பயணித்துக் கொண்டிரு க்கி எங்களில் என் நினைவு தாங்கி அவளும்,அவள் நினைவு தாங்கி நானு மாய் உறை கொண்டிருக்கிறோம்.

“அந்தஉறைவின்நினைவு சாதா ரணமாக என்னில் எப்பொழுது வருவதில்லை. அப்படியாய் வருகிற தருணங்களில் மிகவும்தான் சங்கடப்பட்டுப்போவேன் எந்த ஒரு பிரஞ்சையும் அற்றவனாக/

அந்தசங்கடம் உறைகொண்ட நாட்களில் நான் நானாக இருக்கமுடிவதில்லை.

“அதைஉணர்ந்ததைப்போலவோஎன்னவோஆடுகள்என்னிடம் மௌன பாஷை யில் பேசி என்னை வீட்டிற்கு அழைத்துச்சென்று விடுவதுண்டு.

“பாதை மாறாமல்.அப்படியாய் அழைத்துச்செல்கிற வேளையில்தான் திடீரென மன விழிப்புற்றவனாய் கம்பைச்சுற்றி ஆடுகளை அடக்கி வழி நடத்திச்செல்ல இது உதவுகிறதுதான்.

“என்னைப்பொறுத்த வரை இந்த ஆறடிஉயரத்திற்கும் மேலான கம்பு ஆடு மேய்கிற கம்பிலிருந்து ஏ,கே பார்ட்டி செவன் வரை இதுதான் என அர்த்தம் காட்டிச்சொல்கிறது.

ஆகவே இதை விடுத்து என்னையோ என்னை விடுத்து இந்தக்கம்பையோ பார்த்துவிடமுடியாது.என்றுரைத்துக்கொண்டிருந்தமேய்ச்சல்நாளின்பொழுதொ ன்றில்தான் மஞ்சளும் சிவப்பும் கத்தரிப் பூக் கலருமாய் இருப்புப் பாதையின் ஊடாக முளைத்துக்கிடந்த பூக்கள் கருப்பும் வெள்ளையும் பிரௌவ்ன் கலருமாய் மேய்ந்துகொண்டிருந்த ஆடுகளின் தலையில் பிடிவாதம் காட்டி ஒட்டிக்கொண்டிருந்தன.

கறுப்புக்கலர் ஆட்டின் தலையில் மஞ்சள் நிறப்பூ ஒற்றையாயும்., வெள்ளை நிற ஆட்டின்தலையில்சிவப்பு நிற பூக்கள் இரண்டுமாய் ,பிரௌவ்ன் கலர் காட்டிய ஆட்டின் தலையில் கத்தரிப்பூக்கலர் பூக்கள் இரண்டும் அதன் உதிர்ந்த இதழ் ஒன்றுமாய் பூத்து சிரித்தது போல் இடம் வலம் காட்டி சிரித்தது அழகாய்/

28 May 2017

நாற்றோடை.,,,,,,,,,,


கிளம்பிய நேரமும் கிளம்பிய இடமும் ஒன்றாகி காட்சிப்பட்டுத் தெரிகிறது, கிளம்பிய இடம் குமார் வேலை பார்க்கும் அலுவலகம்.கிளம்பிய நேரம் அலு வலக கடிகாரம் காட்டிய ஆறு முப்பது மணி/

மணி ஆறுக்கும் ஆறு முப்பதிற்குமாய் இவனைப்பொறுத்த அளவில் பெரிய தாய் ஒன்றும் வித்தியாசம் இருந்து விடப்போவதில்லைதான்.

அதே வேளை ஐந்து அல்லது ஐந்தரை என்றால் மிச்சப்படுகிற கொஞ்ச நேரத் தில் ஏதாவது ஒரு வேலையை செய்து முடித்து விடலாம் என நினைக்கிற வனாய்/

என்ன இன்னும் அங்க,,,,,,,,,,,,,,வேலைய முடிச்சமா வந்தமான்னு இல்லாம, சும்மா சவசவன்னு உக்காந்துக்கிட்டு இருந்தா எப்பிடி,,?வாப்பா சிக்கிரம் வீட்டு க்கு, இது மட்டும்தான் வேலையா பாக்க வேலையா இல்ல வேற வேறயா என்பார் நண்பர் ஒருவர்,

ஆனால் யார் என்ன சொன்ன போதிலும் என்ன செய்த போதிலும் குமாரைப் பொறுத்தவரைவேலை வேலை வேலை என றெக்கை கட்டிக்கொண்டு அலை பவன்,

அப்படியாய் ஏதாவது பெரிதாய் வேலை இல்லா விட்டால் கூட நடந்தவைக ளை அசை போட்டுக்கொண்டு அமர்ந்திருப்பான்.அலுவலக நேரம் முடிந்து போன பின்னும் கூட/

நாளை அல்லது அன்றைக்கு முந்தைய நாட்களில் விடுபட்டு நிலுவையில் இருக்கிற வேலை.,,,,,என ஏதாவது ஒன்றை நோண்டிக் கொண்டிருப்பான்.

அப்படியாய் வேலை பார்த்து வந்தால்தான் அவனுக்கு அன்றுவேலைபார்த்து முடித்த திருப்தியும் மன நிம்மதியும் இருக்கும் ,இல்லாவிட்டால் தூக்கம் தொலைந்து போகும் அன்றைய தினத்தில்/

காலையில் இவன் அலுவலகத்திற்கு வந்து விடுகிற நேரத்திலிருந்து மாலை வீடு செல்கிற வரையுமாய் வேறு வேறு உருவங்களில் வந்து போனவர்கள் ரூபங்களாயும்அரூபங்களாயுமாய் காட்சிப்பட்டுத்தெரிய காட்சியின் பதிவுக ளை விழிப்பதிவிலிருந்து கழட்டி தனியே வைத்து விட்டு நிமிர்ந்து பார்க் கையில் இவன் கிளம்புகிற நேரம் புள்ளியிடுகிறது.சிறியதாகவும்,பெரிது பட்டு மாய்/

சேர், டேபிள் ,நாற்காலிகள் கம்ப்யூட்டர்,,,,,,,,,,,அதன் முன்னால் இருந்த பென் சில் பேனா அழி ரப்பர் என நிறைந்து போனவைகளை எடுத்து அந்த மேஜை யின் ட்ராயருக்குள் போட்டு விட்டும் அணைக்காமல் விட்டுவிட்டுச் சென்றி ருந்த கம்ப்யூட்டரை அணைத்து விட்டுமாய் வெளியில் பெஞ்சில் அமர்ந்தி ருக்கையில் அந்தக்காட்சி சரியாக தீட்டப்பட்டாத ஓவியச்சிதறலாய் கண் முன்/

எல்லாவற்றையுமாய் எடுத்தும் ஒழுங்கு படுத்தியுமாய் வைத்த குமார் கம்ப் யூட்டர் மீது படிந்திருந்த தூசியை துடைக்க மறந்து போகிறான் என்பதை பெஞ்சில் போய் அமர்ந்த அவன் அமர்வு ஞாபகப்படுத்தி விட்டுச்செல்கிறது லேசாகவும்,அழுத்தம் தாங்கியுமாய்/

என்ன செய்ய இவ்வளவு ஞாபகப்படுத்திவிட்டு சென்று விட்ட பிறகு துடைக் காமல் விட்டுவிட முடியுமா என்ன,,,அல்லது இருப்பதுதான் ஞாயமாகி விட முடியுமா,,,?

ஞாயமும் அநியாயமும் இங்கே சில வேளைகளில் அநியாயமாய் தீர்மானிக்க படுகையில் இவன் மட்டும் ஞாயப்படி போய்க்கொண்டே இருக்க பிரியப் படு வானா என்ன.,,,/

எழுந்தான் ,துணியை எடுத்தான் ,துடைத்தான் மென்மையாகவும், சுத்தமாகவு மாய்,இவனுக்கெனபழகிப்போனஒன்றும் கைவரப்பெற்றதுமானதும் அதுதான், எது செய்தபோதிலும் முடிந்த அளவு மென்மை காட்டியும்,சுத்தம் காட்டியுமாய் எதையும் செய்து முடிப்பான்,அவனதுபலமும் பலவீனமும் அதுதானாகிப் போகிறது பல சமயங்களில்/

அது போலான பலமும் பலவீனமுமான சமயங்களில் இதுவும் ஒன்று என நினைப்பும் கம்ப்யூட்டரின் துடைப்புமாய் கைகோர்ப்பது இவனில் பட்டுத் தெரி கிறது அந்த நேரத்தில்/

அந்த நேரத்தில் மட்டும் இல்லை,எந்த நேரத்திலும் இவனுக்கு நேர்ந்து போகிற விபத்தும் நன் செயலும் அதுவாகியேப்போகிறது பெரும்பாலுமாய், அது தாங்கிதான் ஓடிக்கொண்டிருக்கிறான் இது நாள்வரை/

இவன்அமர்ந்திருந்தபெஞ்ச்என்றுதான் நினைக்கிறான்.பழைய காலத்து சோபா டைப்மரபெஞ்சாக காணப்பட்டது.அதில்தான் என நினைக்கிறான் ,இன்று காலை துடைத்து சுத்தம் செய்யும் போது பின்னால் பெஞ்சின் முதுகில் எனச் சொல்லலாம்.வலது ஓரக்கடைசியில் கை போகும் அளவிற்கு ஓட்டை இருந் தது,

இதுஎப்பொழுது,,,,,,?கேட்டமனதிற்குவிடைகொடுக்கமுடியாதவனாய் அல்லது தெரியாவனாய் எப்பொழுது ஏற்பட்டிருந்தாலும் ஓட்டை ஓட்டைதானே?என எண்ணியவனாய் அமர்ந்து கொண்டிருக்கையில் அலுவலகத்திற்கு எதிர்த்த கடையிருந்துபாட்டுகேட்டது.

காலத்தைவென்றநல்லபாடல்கள்.கார்களிலும்,கடைகளிலும் ,பொது இடங்க ளிலும் சினிமா தியேட்டர்களிலும் இன்னும் இன்னுமாய்நிறைந்து போன இடங்களிலுமாய் ஆக்ரமித்துக் கொண்டிருந்த வேளையில் தனது தனித் துவதால் தமிழ் பாடல்களை இசை நிரப்பி அனுப்பிய இசைக்காரர்/

அந்தப்பாடல்களை மட்டுமே அதிகமாக கேட்டுக் கொண்டிருந்த அவரிடம் கேட்டான் ஒருநாளில்/என்ன சார் பெரும்பாலுமா அவர் இசை அமைச்ச பாடல்களா விரும்பிக் கேக்குறீங்களே என,,,/

அதற்கு அவர் சொன்னதுதான் வியப்பாய் இருந்தது,சார் மொதல்ல அந்தப் பாடல்கள நான் விரும்பிக்கேக்குறேன்னு சொல்றதே தப்பு ,அந்தப்பாடல்கள் என்னைய தத்து எடுத்து கேக்கவைக்குது சார்.என்ன இல்லைன்னு சொல் லுங்க அந்த பாடல்கள்ல.அன்பு பாசம்,நேசம் காதல்,சுகம் துக்கம் ,வாழ்க்கை தத்துவம் ,ஆச்சரியம்,ஆத்தாமை,சிரிப்பு அழுகைன்னு,,,,,இன்னும் என்னனென் னமோ இருக்கு /

அதெல்லாம் சங்கீதம் பத்தி தெரிஞ்ச அது பத்தி ஞானம் இருக்குறவுங்களுக்கு மட்டும்தான் அதன் உள் விவகாரம் தெரியும், மத்தபடி பாட்டக்கேக்குறது, அதன் மிகுந்து போன பரிணாமங்களுக்கு தகுந்தாற் போல நல்லாயிருக்கு நல்லா இல்லைன்னு சொல்ல மட்டுமே தெரிஞ்ச என்னை போலானவ ங்களுக்கும் இது நல்ல சங்கீதம்,நல்ல பாட்டு,நல்ல இசை சார்,இது போதும்ங் குற திருப்தியோட அன்றாடம் பாட்டுக்கேட்டுக்குருவேன் தினசரிகள்ல இவ்வ ளவு நேரம்ன்னு. என்பார்,

ஏங் பொண்டாட்டி கூட வைவா. ஏங் இப்படி யேவாரம் நடக்குற யெடத்துல எந்நேரமும் பாட்டு பாட்டுன்னுஇருந்தா யேவாரம் எப்பிடி ஓடும். சொல்லுங்க, அதுவும் சரியாகேக்காதஇந்தகாதவச்சிக்கிட்டுஇப்பிடியெல்லாம் என்ன கேக்க வேண்டிக் கெடக்கு என்பாள் அவரது மனைவி/

மோட்டார் ஸ்பேர் கடை வைத்திருக்கிறார்,கடைக்கு வருகிற வாடிக்கையாள ர்களில் சிலர் கூடகேட்பதுண்டு சமயத்தில்.

என்ன சார் ஆடிக்கறக்குற மாட்டை ஆடித்தான் கறக்கணுங்குற மாதிரி ஏதா வதுபாடிமோட்டார் விக்கணும்ன்னு பிளானா சார் என்பார்கள், சிரித்துக் கொள் வார் அந்தப் பேச்சிற்கு அவர்.

குமார்வேலைபார்க்கிறஅலுவலகத்தின் வாடிக்கையாளர். அவர். என்ன சார் என்றால் சிரிப்பார் மென்மையாக.அலுவலகத்திற்குள் நுழையும் போது அவர் சொல்லும்வணக்கம்மென்மைசுமந்தேஇருக்கும்.அந்த மென்மையும் அவரது
அமைதியும் அவர் பேச வந்ததை அல்லது குமார் போலானோர் கேட்ட கேள்வி களுக்கு பதில் சொல்லிவிடும்,அதே நேரம் அவரது அமைதியே எங்களை கேள் வியும் கேட்டு விடும்.என்ன சார் நல்லா இருக்கீங்களா,வீட்ல புள்ளங்களெ ல்லாம் எப்பிடி இருக்காங்க,வேலையெல்லாம் எப்பிடி இருக்கு சார் என்கிறது முதல் இன்னும் இன்னுமான நிறைந்து போன எல்லாவற்றையுமாய் கேட்பது போலிருக்கும்.அதற்கு குமாரும் வாய் மொழியாக பதில் சொன்னது போல் திருப்திப்பட்டுக்கொள்வான்,அதேகுமாரும்அவடரிம்கேட்டதுபோலவும்அவர்
பதில்சொன்னதுபோலவுமாய்திருப்திப்பட்டுக்கொள்வார்.

அதையும்மீறி அவர் அலுவலகத்திற்கு வரும் பொழுது குமார் பேசுகிற பேச் சாக சிலவை இருக்கும்.

என்ன சார் எப்பிடியிருக்கீங்க,_ குமார்

நல்லாயிருக்கேன் சார்,_ கடைக்கார்.

யேவாரமெல்லாம் எப்பிடி நடக்குது சார்._ குமார்.

இருக்குது சார் சுமாரா _ கடைக்காரர்.’

ஒருசின்னடீக்கடைநடத்துரவர்லயிருந்துபெரிசானகடை நடத்துறவருவரைக் கும் யாரை கேட்டாலும் கூட அவர் சொல்றது சுமார்ங்குற பதில் தான் போல/_ குமார்

அவுங்ககிட்ட நீங்க எப்பபோனீங்க,நீங்க எப்ப பேசுனீங்க அவுங்க இப்பிடி சொல்றத கேக்குறதுக்கு,_ கடைக்காரர்.

வாஸ்தவம்தான் அவுங்க பக்கத்துல கூட என்னால போக முடியாதும்ங்குறது நெஜந்தான்,அப்பிடியே போனாலும் கூட நான் நெனைக்கிறது கேக்கமுடியாது, ஏறிட்டுக்கூட பாக்க மாட்டாங்க._ குமார்

அப்பறம் சொல்றீங்க சார்,_ கடைக்காரர்.

இல்ல சார் ,அதுக்காக சொல்லல,சும்மா பேச்சோட வலுவுக்காக சேத்துக்கிட் டேன்._ குமார்

அதெல்லாம் சேத்துகிடலாம் தப்பில்ல,ஆனா நீங்க சொல்றீங்க பாத்தீங்களா, அதுதான் உண்மை.அவுங்க வேற,நாங்க வேற சார்._கடைக்காரர்.

சரிதான் ஒங்க கடைக்கு வந்தா நீங்க வாங்கன்னு கூப்புட்டு கையெடுத்து கும்புடுறீங்க,ஆனா அது போலான கடைக்குப்போனா நாம அவுங்கள கையெ டுத்துக்கும்புடவேண்டியிருக்கு/அப்புறம்சார்புள்ளைங்கஎன்னபடிக்கிறாங்க, எப் பிடி படிக்கிறாங்க_ குமார்.

நல்லா படிக்கிறாங்க,பொம்பளப்புள்ள பத்தாவது படிக்கிறா,ஒரே படிப்பு படிப்பு படிப்புதான்,விட்டா பத்தாவது பணிரெண்டாவது படிப்ப பத்தாவதுலேயே படிச்சி முடிச்சிருவா போலயிருக்கு/பையன் ஹாக்கி வெளையாட்டுல பின்னி யெட்டுகிறான்,படிப்புல சோடை போகாட்டி கூட ஒண்ணுல கூடுதலா கவனம் செலுத்தும் போது இன்னோன்னுல கவனம் கொறஞ்சி போகுதுதான. அவனு க்கு அப்பிடி ஒரு பாக்கியம் வாச்சிருக்கு/பரவாயில்ல படிப்புல இல்லாதாத கெடைக்காதத விளையாட்டு மூலமா அவார்டு,கப்பு,பிரைஸீன்னு வாங்கீட்டு வரும்போது ஆறுதலா இருக்கு.அதயே சந்தோஷமா எடுத்துக்கிட்டு கொண்டா டுறேன் அவன.இதுதான் அவுங்க ரெண்டு பேர பொறுத்த அளவுக்கு படிப்புல இருக்குற நெலமை _கடைக்காரர்.

குமார்காலையில்அலுவலகம் வரும் போது அவரும் வீட்டிலிருந்து வருவதை கவனிப்பான்,அது போலாய் மதியம் இவன் சாப்பிடச்செல்கையிலும் அவர் சாப்பிடச்செல்வதைபார்த்திருக்கிறான்,ஆனால்சாய்ங்காலம் அப்படி முடியாது அவர் நினைத்தாலும்/

ஆனால் இது நடக்கும் போது ஒருவருக்கு ஒருவர் சொல்லி வைத்து செய்தது போல்இருக்கும்,ஆனால்இவன்செல்லும்போதுஅவர்வருவதும்,அவர்செல்லும் போதுஇவன் போவதும் ஒரு தற்செயல் ஒற்றுமையா அல்லது திட்டமிட்ட செயலா என பிறரை எண்ணவைத்த நாட்களின்பொழுதின்ஒரு நாளன்றின் ஒரு பொழுதில் காலையில் வேளைக்கு வரும் பொழுது இவனை பார்த்து விடுகி றார் கடைக்காரர்.

சார் வாங்க டீ சாப்பிடுவோம் என கடைக்கும் கூட்டிக்கொண்டு போய் விடுகிறார் டீ சாப்பிட்டு முடித்து விட்ட கையோடு/

சரி வேண்டாம் என சொல்வது அவ்வளவு நன்றாக இருக்காது .இவன் என்ன இவ்வளவு மண்டை கர்வமாக இருக்கிறான் என எண்ன வைத்து விடுமோ என்கிற நினைப்பில் நேரமானாலும் பரவாயில்லை,இவருடன் டீ சாப்பிடுவத ற்காக ஒரு மணி நேரம் பெர்மிஷன் போடலாம் என நினைத்து போலவே ஆகியும் போகிறது,

அப்படி ஒன்றும் பெரிதாக ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை இருவருமாய். ஆனாலும் அவரது கடையில் போய் அமர்ந்திருந்து விட்டு வந்தான்,எழுந்து வரும்போது சொன்னார்,சார் நேரம் கெடைக்கும் போது வாங்க சார் கடையில ஒக்காந்து எந்திரிச்சிப்போங்க சார்,ஒங்களப்போல ஆட்க வந்து போனா ஏங் கடைக்கு ஒரு ராசி சார் என்றார்,

எதைவைத்துஅப்படிச்சொல்கிறார்எனத்தெரியவில்லை.சரிஎனவந்துவிட்டான் ராசிக்காரன் என்கிற பெயர் தாங்கி.அப்படி வந்த அன்றிலிருந்து குமார் ராசிக் காரனாகவே அறியப்படுகிறான். இன்றுவரை/

நேரம் காட்டுகிற சாக்கில்கட்டி அடைக்கப்பட்டிருந்தவட்டவடிவ கடிகாரத்திற் குள்ளாய் கைகோர்த்துக்கொண்டிருந்த சின்னமுள்ளும் பெரிய முள்ளுமாய் தனக்கு துணையாக விநாடி முள்ளையும் துணைக்கு அழைத்துக்கொண்டு தன் வாழ்நாள் முழுவதுமாய் இளம் காதலர்கள் போல் கை கோர்த்துக்கொண்டு திரிகிற பாக்கியம் பெற்ற ஒன்றாயும் ஒன்றுக்கு ஒன்றை ஒப்புக்கொடுத்தது போலாய்சளைக்காமல்ஒட்டிஉறவாடி ஓடிக்கொண்டிருக்கிறகாலத்தின் கை காட்டியுமாய் காட்சிப்பட்டுமாய் அந்த அலுவலகத்தில்/

அது பார்த்துதான் நேரம் இவ்வளவு எனக் கணக்கிட்டுகிளம்புகிறவனாய்/ கால த்திற்கும் நேரத்திற்குமாய் தன்னை ஒப்புக் கொடுத்து விட்டு நேரம் காலமி ன்றி பார்க்கிற வேலைகள் தன்னை இழுத்துக் கொண்டு போய் வீட்டுக்கு அனுப்புகிற வேளை இந்நேரமாய் ஆகிப்போகிறது,

மணி மாலை ஆறு முப்பது,காலையில் ஒன்பதுமணிக்கு வந்து அலுவலகத் தில் தலை குனிந்தது. தலை தூக்கிப்பார்க்கையில் மணி இத்தனையைச் சொல்லி அறிவித்துவிட்டுச் சொல்கிறது.உம் கிளம்பு சீக்கிரம் ,முன்பு போலெ ல்லாம் இல்லை இப்பொழுது. வயதாகிப்போனது உனக்கு,அதற்குத் தகுந்தாற் ப் போல் உனது வேலைகளையும் ஓட்டத்தையும் நிர்ணயித்துக்கொள்ளப் பழகிக்கொள்.அதுதான் நல்லது உனக்கும் உனது உடலுக்கும்/ என ஒலிக்கிற அசரீரியாய் சொல்லிச்செல்கிற மனதின் குரல் செவிப்பறை தாக்கிச் செல்கி றதுதான்,என்ன செய்ய வாக்கபட்ட கதையாய்,,,,,,,,,,ஒப்புக்கொடுத்து விட்ட உடல் உழைப்பையும் மூளை உழைப்பையும் அலுவலகத்திலிருந்து பிரித்தெ டுத்துப்பார்க்கவோ இல்லையாயின் கழட்டி வைத்துவிட்டு சென்று விடவோ மனம் இருப்பதில்லை பெரும்பாலுமாயும்/

கிளம்பிய நேரமும் கிளம்பிய இடமும் ஒன்றாகி காட்சிப்பட்டுத் தெரிகிறது, கிளம்பிய இடம் குமார் வேலை பார்க்கும் அலுவலகம்.கிளம்பிய நேரம் அலு வலக கடிகாரம் காட்டிய ஆறு முப்பது மணி/

24 May 2017

பஞ்சு மூட்டை,,,,,


மேல்புறம்எட்டும் கீழ்ப்புறம் பத்துமாய் மூட்டைகள் அடுக்கப்பட்டிருந்த வண்டி வரிசையாய் பலகைகளால் அடுக்கித் தைக்கப்படிருந்தது.
கைதேர்ந்த தச்சரின் கைவண்ணத்திலும்,உழைப்பிலும்செய்நேர்த்தியிலுமாய் உருவாகியிருந்ததாய் இருக்க வேண்டும்.

அவரது உழைப்பும்,ரசனையும் பிசைந்து உருவாக்கப்பட்டிருந்ததாய் இருந்த வண்டி பார்க்க அழகாகவும் கொஞ்சம் பழசாகவும் தெரிந்தது.
பழசும்ஒருவிதஅழகுதான்(இதைச்சொன்னால் சம்பந்தப்பட்டவர்கள் இடுப்பில் கை வைத்து கொண்டு கண்களை உருட்டி முறைக்கக்கூடும்) அசைந்து ஆடி பாரம் இழுத்து வந்த வண்டி ரயில்வே கேட்டின் அடைப்பில் காத்து நின்றிரு ந்தது.

நான் ஸ்டாண்ட் போட்டு நிறுத்தப்பட்டிருந்த எனது இருசக்கர வாகனம் மற்றும் எனது திசை திரும்பிய விழிபார்வை வழியாக ஊடுருவித்தெரிந்தவர்களாய் வண்டியும்,வண்டியிலிருந்த பத்தும் ,எட்டுமான பருத்தி மூட்டைகளும் அவை களின் மீது இழுத்துக் கட்டப்பட்டிருந்த கயிறும், கயிற்றிலிருந்து நீட்டிக் கொண்டிருந்த சிலும்புகளும்,அதன் முனை மழுங்கா கூர் முனைகளும் கட்டுக்குள் இருந்த பெரிய,பெரிய சாக்குகளின் ஓட்டை வழியாகவும் பிதுங்க ளாகவும் தெரிந்த பருத்தி மாலை நேர வெயில் பட்டு மின்னியது.

வெயில் உரசிச்சென்ற மூட்டைகளையும்,மூட்டைகள் கட்டிய கயிற்றையும் தன் மேல் சுமந்து நின்ற வண்டியை இழுப்பதற்காய் கட்டப்பட்டிருந்த ஒற்றை மாடு வாயை அசை போட்டவாறும் வாயிலிருந்து ஒழுகிய மென் ஒழுகலான நுறையுடனுமாய்,கூர்முனையற்று பெயிண்ட் உதிர்ந்த கொம்புகளுடனும், நீர் வழிந்த கண்களுடனுமாய்மெலிந்ததோற்றம் காட்டி நிற்கிறது பார்வையில் பரிதாபத்தை விதைத்துச்சென்றவாறு/

வண்டியின் முன் நின்ற பஸ்,அதன் பின் நின்ற கார் பக்கவாட்டாக நின்ற இரு சக்கரவாகனங்கள் பெயர்ந்து கிடந்த சாலை,அதன் சிறு கல் பெயர்ந்து தெரிந்த பள்ளங்கள்,வண்டியின் டயரில் ஒட்டிக்கிடந்த மென் தூசிகள்,சுழன்றடித்த காற்றில் சாலையிலிருந்து மேலெழும்பி பறந்த தூசிகள் மற்றும் மனித முகங்களைப் பார்த்தவாறு மாட்டை தடவிக்கொடுத்து அதன் உடல் தட்டிக் கொடுத்த வண்டிக்காரின் கையில் மின்னிய செல் போன் ஒரு மினி சூட்கேஸ் சைசுக்கு இருந்தது.

“பரவாயில்லப்பா,இப்ப ரெண்டு தோசை ஊத்திக்குடுங்க,நீங்களும் பசிச்சா ரெண்டு ஊத்திச்சாப்புட்டுக்கங்க,நான் வீடு வந்ததுக்கப்புறம் நெறைய தோசை ஊத்திதர்ரேன் சாப்புடலாம் என பேசிக்கொண்டிருந்தவரையே உற்றுப்பார்க்கி றேன்.

பதிலுக்கு என்னையே உற்றுப்பார்த்த அவரது உடம்பில் சட்டையில்லை. ரோமம் மண்டியிருந்த வெற்றுடம்பில் துண்டு போட்டிருந்தார்.அது தோள் பட்டை தழுவி தொந்தி தாண்ட முடியாமல் நின்றது. இடுப்பில் கொஞ்சம் அழுக்கும்,பழுப்பும் ஏறிய கட்டம் போட்ட கைலி,தடித்துக் கனத்த கைகளும், கால்களும் வீடுகளில் நிற்கும் தூணை நினைவு படுத்தியது.

“என்ன தம்பி அப்பிடிப்பாக்குறீங்க?ஏங் வீட்டம்மாவுக்கு ஒடம்பு சரியில்ல ஒரு வாரமா,பெட்டலகெடக்காகௌவர்மெண்ட்ஆஸ்பத்திரியில,பக்கத்துலஇருந்து பாத்துக்க குடுத்து வக்கல தம்பி எனக்கு,தெனமும் சாய்ங்காலமும், காலை யிலையும் பள்ளிக்கூடத்துக்கு போறதுக்கு முன்னாலயும்,பள்ளிகூடம் போயி ட்டு வந்ததுக்கு பின்னாடியும் புள்ளைங்கதான் போய் பாத்துக்குதுங்க/
அதுக பள்ளிக்கூடம் போயிட்ட பகல் பொழுதுல ஒத்தையில கெடப்பா, எதுன் னா ஒண்ணுக்கு,தண்ணிக்கின்னாக்கூட ரொம்ப செரமப்பட்டுதான் போறா பாவம்,என்ன செய்ய தம்பி நான் போயி சவரட்டன செய்யனும்னா இங்க வண்டிஓட்டம் நின்னு போகுது.வண்டி ஓடலைன்னா ஏங் பொழப்பு தரிங்கினத்   தோம்தான் தம்பி.ஓடுற தண்ணியில விழுந்த சுழி மாதிரி இப்பிடி சொழட்டி வாங்குது நம்ம பொழப்பு” என அவர் பேசிக்கொண்டிருந்த போதே அடைக்கப் பட்டிருந்த ரயில்வே கேட் திறந்து விட்டது.

திறக்கப்பட்டிருந்த கேட்டின் வழியாக கடந்த பஸ்களுடனும் ,கார்களுடனும். இரு சக்கரவாகனங்களுடனுமாய் அந்த மாட்டு வண்டியும் செல்கிறது பாரம் சுமந்தும் வண்டியோட்டின் மனம் சுமந்துமாய்/

7 May 2017

ஆர்மோனியப்பெட்டி,,,,





வந்தகுரல்எத்திசையிலிருந்தெனத்தெரியவில்லை.ஒரேசீராகவும்,அழகாகவும்,

லயமாகவுமாய்/

கிழக்கு,மேற்கு,வடக்கு,தெற்கு என திசை அறியாது விழி விரித்தும் செவிப் புலன்களை அனுப் பியுமாய் கேட்டபோது வந்த குரல் குயிலினு டையதாய்/
 
 அட மனம் பிடித்த குரல்,கூ,,,,,,க்குக்கூ,,,,,,,கூ,,,,க்குக்கூ,,,,,,இடைவெளிவிட்டு, விட்டு, ஆகா எப்படி இப்படி,நன்றாக இருக்கிறதே மனம் பிடித்துப்போனவளின் குரல் போல/

நல்ல விஷயம்,,,,,பதிலுக்கு வாயில் இரு கரம் குவித்து கூ,க்குக்கூ,,,,என குரல் கொடுக்கிறான், சுவற்றில் அடித்த பந்தின் விசையாய் திரும்ப வருகிறது பதிலுக்கு குரலும் /கூ,,,,க்குக்கூ,,,/திரும்பவும் இவன் கூ,,,க்குக்கூ,,,,/ திரும்பவு ம் சுவற்றில் அடித்த பந்தாய் கூ,,க்குக்கூ,,, திரும்பவும் அதே கூ,,,குக்கூ,,,, ,, திரும் பவுமாய் அதே கூ,,,,,குக்கூ திரும்பதிரும்ப மாறி மாறி ஒலித்துக் கொண்ட குரல்கள் இவனுடையதும்குயிலினுடயதுமாக/

இதென்னஎதிர்ப்பாட்டு,எசப்பாட்டா?இப்படி மாறி,மாறி பண்ணிக் கொண்டிருக் க ,இனிமேல் இப்படியெல்லாம் பண்ணாதீர்கள்.ஏரியாவாசிகள் பயந்து போகக் கூடும், குயில் கத்துவதுகூட சரி,ஒரு வகையில் ஒத்து கொள்ளலாம்,நீங்கள் கத்துவதென்பது வீடுகளில் இருக்கிற சின்னப் பிள்ளைக ளுக்கு உடம்புக்கு சௌக்கியமில்லாமல் போய் விடக்கூடும்.ஜாக்கிரதை என்கிற அசரீரி ஒலிக்க வந்த அசரீரியை கணக்கில் கொண்டு வீட்டுக்குள் போய் விடுகிறான். போவத -ற்கு முன்பாக எதற்கும் இருக்கட்டும் என விழி கழட்டி அனுப்புகிறான் குரல் வந்த திசை நோக்கி,தேடிப்பார்த்துவிட்டு வந்து சொல்ல ட்டும். இவன் அதற் குள்ளாக வீட்டிற்குள் ளாகப்போய் கைகால்,முகம் கழுவிக் கொள்ளலாம், சற்றே சௌகரியப்படுமானால் குளித்துக் கூட விடலாம் என்கிற நினைப்புடன்.

தோள்ப்பையை கழட்டி மேஜையிலோ அல்லது அருகாமை இடத்திலோ வைத்த நேரம் போன விழி வெளியெங்கும் தேடிப்பார்த்த அலுப்புடன் திரும்ப வந்து அதனிடத்தில் அமர்ந்து கொள்கிறது.வா,வா என்னானது போன விஷயம் எனக்கேட்க முடியவில்லை. மனம் பிடித்தவ ளுக்கு எழுதிய கடிதம் போன வேகத்தில் திரும்பி வந்ததை போல அது வந்தமர்ந்த சடுதியைப் பார்த்தால் போன வேலையில் வெற்றி இல்லை போல/

மனம் பிடித்த மனைவிகொடுத்ததேனீரையும்,அருகிலும்,சற்றேதூரத்திலுமாய் இருந்த மகளையும், மகனையும்ஒருசேரபார்த்துவிட்டும், பேசிகொண்டுமாய் நாவின்சுவையறும்புகளில் படரவிட்ட தேனீரின் சுவையை உள்வாங்கியவாறு இருந்த நேரம் பரந்த வெளியில் பச்சையும்,பிங்கும் இன்னும் பிற வர்ணங்ளி லுமாய் முளைத்துகாட்சிப்பட்ட வீடுகளையும், அதனுள் குடிகொண்ட மனிதர் களையும் மண்ணையும்,மண்ணின் வாசத் தையும் மேலெழுந்து தழுவியவாறு திரும்பவுமாய் மனம்கவர்ந்தஅதேகுரல் கூ,,க்கு க்கூ,

வந்த குரல் எத்திசையிலிருதெனதெரியவில்லை.ஒரே சீராகவும்,அழகாகவும், லயமாகவுமாய்/

23 Apr 2017

ஓட்டத்தைக்கடந்த படிகள்,,,,,,

ஓடிகடந்த படிகள் மூன்றாக இருந்தன.

வராண்டாவிலிருந்து தெருநோக்கியும், தெருவிலிருந்து வராண்டா நோக்கி யுமாய் இருந்த படிகளை கட்டுகிற போது லாபம் நஷ்டம் லாபம் எனச் சொல்லித்தான் அல்லது கணக்கு வைத்துத்தான் கட்டினார்கள்.

முதல் படி லாபம்,எட்டெடுத்து வைப்பது இரண்டாவது படி நஷ்டம் எடுத்து வைத்த எட்டை மேலுமாய் எடுத்து வைத்து கடப்பது மூன்றாவதுலாபம் கடந்த எட்டைதிரும்பவுமாய் எடுத்து வைப்பது,,,என்கிறஅர்த்தத்தில் லாபம் நஷ்டம் லாபம் என்றார்கள்.

தெரு முழுக்கவுமாய் பறந்து பட்டுக் காணப் படுகிற வெளியில் ரோட்டடிக் கென ஒதுங்கியது போக தெருவின் வலதும் இடதுமாய் இருந்த வெட்ட வெளியில்முளைத்துத்தெரிந்த வீடுகள் அருகில் இருந்த மரங்களின் நிழலில் ஒதுங்கி நின்றது போல் இருந்தது சிறிது தூரத்தில் இருந்து பார்ப்பதற்கு/

புதர்காடாய் அடர்ந்து தெரிந்த மரங்களுக்குள்தான்அந்தத்தெருவலமும் இடமு மாய் காத்து வைத்திருந்த எல்லா வீடுகளின் கழிவு நீரும் அந்தந்த வீடுகளின் குப்பைகளும் அங்குதான் வந்து விழு ந்தன,ப்யூஸ்போன ட்யூப்லைட்டை கூட அங்குதான்போட்டார்கள்.

தெரு முழுக்கவுமாய் பறந்து கொட்டிக்கிடக்கிற குப்பைகளை அள்ள பஞ்சா யத்திலிருந்து ஆட்கள் வருகிறார்களோ இல்லையோ,அடிக்கிற காத்து அள்ளிக் கொண்டு போய் குப்பைகளை தெரு முழுக்கவும் மரப்புதரிலுமாய் போட்டு விடும்.

எப்பொழுது பார்த்தாலும் புதர் முழுக்கவுமாய் தூசியும் மண்ணும்,சாக்கடை கழிவுநீர்அடர்ந்ததுமாய்த்தான் தெரியும்.

அந்தப்பக்கம் போகவே பிடிப்பதில்லை.ஒரே வாடை, ஆய்,,,,சேய் என முகம் சுளித்துக்கொண்டு போய் விடுவான்,பால சுந்தரத்தின் மகன்.

அந்தப்பக்கம் வந்தால் மூக்கைப் பிடித்துக்கொள்வான். சேய் லே,,, அங்கிட்டுப் போகவேணாம் ஊம் ஏய்ய்ய்,,,,என்பான்.ஐந்து வயதுதான் இருக்கும் அவனுக்கு,

“மிஸ் சொல்றாங்க,ஆய் இருக்குறபக்கம் போகக்கூடாதுன்னு சொல்றாங்க, அப்பன்னா மிஸ் ஒங்க வீட்ல நித்தம் ஆயிப்பக்கம் போவீங்களா இல்லை யான்னு பதிலுக்கு நான் கேட்டப்ப சொன்னாங்க வாய மூடிக்கிட்டு பேசாம பாடத்த கவனிக்கனும்ன்னு/சரின்னு அன்னையில இருந்து நானும் ஒண்ணும் கேக்குறதில்ல.அவுங்களும் ஒண்ணும் சொல்லிக்கிறதில்ல. என்பான்.

பால சுந்தரம் பாண்டியன் காலனியில் இருக்கிற ஒரு பல சரக்கு கடையில் வேலை பார்த்தார் சிறு வயதிலிருந்து/

அந்தக்கடை முதலாளியின் பழக்கத்திற்காக கடை கொஞ்சம் ஓடுகிறது என் றால் பாலசுந்தரத்தின் நல்ல பழக்கத்திற்காவும் குணத்திற்காவும் கொஞ்சம் அதிகமாகவே ஓடியது எனலாம்,முகம் சுண்டாத பேச்சு,கனிவான சிரிப்பு அளவான பழக்கம்,வேகமான வேலை,இதுதான் அவனை அப்படியாய் அங்கு நிலைநிறுத்தியிருந்தது,

இது தவிர கடைக்கு வருகிற பெண்களில் பாதிக்கும் மேலான பெண்கள் இவன் இருந்துசரக்குவாங்கினால்தான் திருப்தியாகவும் சந்தோஷமாகவும் இருக்கும்  எனச்சொல்வார்கள்.

இது கடைக்கு வருகிற பெண்கள் கடைக்கொள்கிற முறை என்றால் அவர் களைப் பற்றி பாலசுந்தரம் ஒரு கணக்குப்போட்டு வைத்திருப்பான். அவர்க ளின் பழக்கமும் அவர்கள் கடையில் சரக்கு வாங்க வருகிற முறையும் பால சுந்த ரத்திற்கு அத்து படி.

யார் யார் எந்தெந்ததெருவிலிருந்து வருகிறார்கள் என்ன வாங்கு வார்கள். கடன் சொல்வார்களா இல்லை வாங்குற பொருள்கள் பாதிக்கு காசு கொடுத்து விட்டு மீதிக்கு கடன் சொல்வார்களா என்பதிலிருந்து வாங்குற பலசரக்கை சடுதியில் வாங்கிப்போவார்களா இல்லை சரக்குகள் வாங்க வருவது போல் வந்து ஒப்பேற்றுவார்களா என்பது முதல் கொண்டு பாலசுந்தரத்திற்கு அத்து படி/

கடை ஓனர் கூப்பிட்டிச்சொல்லி விடுவார்,யப்பா நீயி அந்த பொம்பளயாள்கள கவனி,ஒண்ணொன்னும் ஒவ்வொரு திசையில இருந்து ஒவ்வொரு நோக்க த்தோட வரும்.ஒண்ணொன்னும் ஒண்ணொன்னு சொல்லிக்கிட்டு வரும், நமக்கு அவுங்கள கவனிச்சி அனுப்புற அளவுக்கு நிதானம் போதாது.நீயே பாத்துக்கப்பா என்பார்.அதபெருமையா நெனைச்சி ஓனர் சொன்ன வேலைய செய்யாட்டிக்கூட சரி அதுவும் ஒரு அனுபவம்தான என்கிற முறையில் எடுத் துச் செய்வான்.அந்த அனுபவமும் பழக்கமும் அவனுக்கு கை கொடுத்தது. பின்னாளில்.அந்தக்கடையிலிருந்து விலகி தனியாக கடை வைத்த போது அவனுக்கு இந்த பழக்கமும் முதலாளி சொல்லிக்கொடுத்த அனுபவமும் கை கொடுத்தது.

இன்னும் சொல்லப்போனால் அவர்தான் கடை வைத்துக்கொடுத்தார். அவரி டம் அது பற்றி பலரும் பல மாதிரியாகச்சொன்ன போதும் அவர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை,விடுப்பா நம்மபள நம்பி வந்த பையன்,அவனுக்கு நம்ம செய்யாம யாரு செய்வா,நான் இன்னும் கூட கொஞ்சம்கூட யோசிக்கிறேன்.

அவனுக்கு கடை வச்சிக்குடுத்து கல்யாணமும் பண்ணி வைக்கலான்ம்ன்னு நெனைக்கிறேன்,எனக்குதெரிஞ்சகுடும்பம்ஒண்ணு,இல்லாத குடும்பம் ,பொண் ணுக்குஅம்மாகெடையாது,அப்பாமட்டும்தான்,அண்ணன்ஒரு குடி கேடி, அவன் சம்பாத்தியம் அவன் குடிக்கே சரியாப்போகும்.பொண்ணு தீப்பெட்டி ஆபீஸீல வேலை பாத்து தனக்குன்னு கொஞ்சம் சேத்து வச்சிருக்கா, இவன்கிட்ட ஒரு தடவ கேட்டப்ப வீட்ல கேட்டுட்டு சொல்றேன்னான்.அந்தப்பையன் வீட்ல போயி நானும் கேட்டேன் ரெண்டொரு தடவ/அவுங்களுக்கு பையன் கல்யா ணம் பண்ணி செட்லாகுறதுல எந்த வித ஆட்சேபனையும்இல்ல,

ஆனாஅவன் அப்பா சொல்றாரு, இப்பத்தான கடை வச்சிக் குடுத்துருக்கீங்க, அதுவே நாங்களும் ஏங்பையனும் செஞ்ச மிகப்பெரிய புண்ணியம்,அதுக்கு எங்க ஒடம்ப செருப்பா தச்சிப் போட்டாலும் காணாதுங்ய்யா, கோவிச்சிக்கிறா தீங்கய்யா இப்பிடியெல்லாம் பேசுறோம்ன்னு, கொஞ்சம் மூச்சு வாங்கிக்கி றோம்ய்யா,ஒரு ஒரு வருசம் டயம் குடுத்தீங்கன்னா அவனும் கொஞ்சம் ஏதோகால்ஊனிக்கிருவான்.அழுத்தமா இல்லாட்டிக்குக்கூட கொஞ்சம் சுமாரா வாவது நெலையாகி நின்னுட்டான்னாக்கூட போதும்,அப்புறம் நீங்க சொல்ற பேச்சுக்கு மறு பேச்சு இல்லாம ஏத்துக்கிறம்ய்யா,,,,,என்ற பாலசுந்தரத்தினது அப்பாவின் பேச்சை இடை மறித்த கடை ஓனர் வாஸ்தவம்தான் நீங்க சொ ல்றதெல்லாம்,மறுக்குறதுக்கில்ல.ஆனா அங்கபொண்ணோடஅப்பன் நெலை மை ரொம்ப சீரியஸா இருக்கு,ஆளு கொஞ்சம் நெலையில்லாம இருக்காரு, அதுக்காகத்தான் இவ்வளவு அவசரப்பட வேண்டியதிருக்கு,இல்லைன்னா அவன் ஏனோதானோன்னு இல்ல நெலையாகால் ஊனுனப்பெறகு கூட கல்யா ணம் வச்சிக்கிறலாம். என்ற கடைக்காரரின் பேச்சை ஏற்று அடுத்த முகூர் த்ததில் திருமணம் நடந்து முடியவும்,திருமணம் எப்பொழுது முடியும் எனக் காத்திருந்ததுபோல்திருமணம் முடிந்த சிறிது நாட்களில் பெண்ணின் அப்பா இறந்து போனார்.

அவர்இறக்கிற பொழுது பாலசுந்தரத்தின் மகன் வயிற்றுப் பிள்ளையாக இருக் கிறான்.அவன்தான் இப்பொழுது சீய் ஆய் எனச் சொன்னவனும், கற்றுக் கொ டுக்கிறவளிடம்அந்தக்கேள்வி கேட்டதும்,அதற்கு பதில் பேச்சு பேசியவனு மாய் ஆகிப்போகிறான்.

படியைக் கட்டிக்கொடுத்த கொத்தனார்கள் எழுநூற்றுச்சொச்சம் சதுர அடி வீட்டில் முன்புறம் படி வைப்பதில் மட்டும் லாபம் நஷ்டம் என முடித்து விடு கிறார்களே ஏன் எனத் தெரியவில்லை.

அந்தலாப நஷடத்திலும் சரி மாடிப்படிகளில் ஏறும் போதும் சரி ஓடித் தாவித் தான் ஏறுகிறான்,கடக்கிறான்,

அலுவலத்தில்உடன் வேலை பார்க்கிறவர் கேட்கிறார்,என்ன சார் இது நடக்கச் சொன்னா ஓடுறீங்களே என்பார் கேலியாக/

பொதுவாகவே அலுலகத்திற்குள் இவனது நடை கொஞ்சம் வேகம் சுமந்தே இருக்கும். அதிலும் இவன் காசாளர் அறையில் அமர்ந்திருந்தானானால் காசா ளர் அறையிலிருந்து பெட்டக அறைக்கும் பெட்டக அறையிலிருந்து காசாளார் அறைக்குமாய் ஓட்டமும் நடையுமாகத்தான் இருப்பான்.அல்லது எட்டுக்களை பெரிதாக எடுத்து வைப்பான்.

கேலியாய் பேசியவர் திரும்பவுமாய் சொல்வார். ஒங்க வேகத்துக்கு எங்களால ஈடு குடுக்க முடியல என.அதற்கு இவன் சிரிப்புமாயும் அது அல்லாமலுமாய் சொல்வதுண்டு.

“சார் வயசு இப்ப அம்பத்தி மூணி ஆகுது சார்.இப்பவே கொஞ்சம் ஒடம்பு பிஞ் சின் வாங்க ஆரம்பிக்குது,அதான் வம்பா ஏதாவது ஒடம்பவருத்துவோம்ன்னு இப்பிடி செஞ்சிக்கிறது,

நம்மளப்போல ஆள்களுக்கு உடல் உழைப்பு கிட்டத்தட்ட இல்லைன்னு ஆகிப் போச்சி சார்,அதான் இது போலான வேலைகள உடல் உழைப்பா நெனைச்சி செஞ்சிக்கிறேன்என்பான்.ரெண்டாவதுஇந்த ஓட்டத்துலதுலயும் வேகத்துல யும் இருக்குற ஒரே பிரயோஜனம் தொந்தாந்தொசுக்கான்னு ஓடி ஓடி ஒக்கா றாம கொஞ்சமாச்சும் ஒடம்ப சொன்னபடி கேக்க வச்சிக்கிறலாங்குற நப்பா சை தான் சார்” எனவுமாய் சொல்வான்.

இவன்சொல்வதை கேட்கிற அவர் சரி என்பது போல்ஆமோதிப்புஇல்லாமல் தவறுதான்எனஆமோதிப்பற்று இல்லாமலும்மெலிதாய் ஒரு மென் சிரிப்பை மட்டுமாய் சிரித்து வைப்பார்.பொதுவாக அந்த சிரிப்பு உங்களுக்கும் வேண் டாம் எனக்கும் வேண்டாம் என்பது போல் இருக்கும்.

அதுகூடபரவாயில்லை,இவனுடன்கூடவேலைபார்க்கும் பெண் கிளார்க் ஒரு வர் ஏன் இப்பிடி எந்த நேரம் பாத்தாலும் பரபரன்னு இருக்கீங்க என்பார்,அதற்கு இளைஞன் நான் அப்பிடித்தான் இருப்பேன் என்கிற இவனின் எளிமையான பதில் கேட்டு சிரிக்காதவர்கள் யாரும் கிடையாது அந்த அலுவலகத்தில்/

அந்த இளவட்ட வேகம்தான் படியில் இறங்குற பொழுதும் ஏறுகிற பொழுது மாய் இருக்கிறது.

ஓடிகடந்த படிகள் மூன்றாக இருந்தன.

வராண்டாவிலிருந்து தெருநோக்கியும், தெருவிலிருந்து வராண்டா நோக்கி யுமாய் இருந்த படிகளை கட்டுகிற போது லாபம் நஷ்டம் லாபம் எனச் சொல்லித்தான் அல்லது கணக்கு வைத்துத்தான் கட்டினார்கள்.

10 Apr 2017

விள்ளலின் நுனிபட்டு,,,,,,,,,

வலது கை கட்டைவிரல் அமுக்கி ஆட்காட்டி விரல் கொண்டு பிய்த்த இட்லி யின் விள்ளலும் தொட்டுக்கொண்ட சட்னியின் காரமும் துணை சேர்ந்து கொண்ட சாம்பாரின் கைகோர்ப்புமாய் விரிந்து கிடந்த வாழை இலையின் இளம் பச்சையின் கைகோர்ப்புடன் பார்ப்பதற்கு ஒரு நவீன ஓவியமாயும் மரபு சார்ந்த ஓவியமாயும் பட்டுத்தெரிகிறது.

ஒன்றுமில்லாமல் இரண்டுமில்லாமல் நான்கே நான்கு இட்லிகள்,உரசினால் காயமேற்பட்டுப்போகுமோ என்கிற பயத்தில் ஒன்றின் மீது ஒன்று உரசாமல் வெண்மையாகவும், மென்மை தாங்கியுமாய்/

நான்கின் வலது ஓரமாய் இருந்த இட்லியின் மீதுமட்டுமாய் தொட்டுப் படர் ந்திருந்த தேங்காய் சட்னியின் அரை வெண்மையும், அதனருகாய் சட்னியை கொஞ்சம் இழுத்துக்கலக்க விட்டிருந்த செந்நிறம் காட்டிய பருப்புச் சாம்பார் வீற்றிருந்த இரு கையலகத்திற்கும் சற்றே கூடுதலாய் இளம் பச்சைகாட்டிய வாழை இலையில் வீற்றிருந்த இட்லியின் விள்ளலை வாயருகே கொண்டு செல்கையில் சாம்பாரில் முழுதாய் முழித்து மிதந்த பருப்பு இங்கே விளைந்த பருப்பல்ல, வெளிநாட்டிலிருந்து தரவிறக்கம் செய்யப்பட்ட பருப்பு என்கிறாள் கடைக்காரி,

பார்க்கக் கொஞ்சம்கலராகத் தெரிந்தாள். அமைதியாய் கொஞ்சம் சாந்தம் தாங்கியமுகம்.பச்சைக்கலரில்வெள்ளைகாட்டிஓடிய கோடுகள் தாங்கியிருந் த நூல்ப் புடவையைக்கட்டியிருந்தாள்.

பொங்கலுக்குஅரசுகொடுத்தஇலவச வேஷ்டி சேலையில் வாங்கியிருப்பாள். அரசின் முத்திரை இன்னும் சேலையின் முந்தியிலிருந்து உதிராமல் இன்னும் அப்படியே இருந்தது.

இரண்டு மூன்று சலவைகள் கண்டிருக்கும் போல இருந்தது சேலை.அதே கலரில்அணிந்திருந்தசட்டையில் வலது கையோரம் நூல் பிரிந்து தொங்கிய து.

தூக்கிச்சொருகியிருந்தசேலையிலிருந்துமீறியாரிடமும்சொல்லாமல் கொள் ளாமல் வெளிப்பட்ட பாவாடையின் அடியோரம் நைந்து கிழிந்து அதன் மஞ்சள் நிறத்தையே பழுப்பாக்கிக் காட்டியது.

அவள் ஒவ்வொரு முறையுமாய் நின்றிருந்த மண்ணெண்ணெய் ஸ்டவ்வின் அருகாய் இருந்து ஒவ்வொருவருக்குமாய் இட்லியும் தோசையும் வடையும் அதற்குத்துணையாய் சட்னியும் சாம்பாருமாய் ஊற்றி வருகிற போது அவளது பழுப்பு நிறமேறிய பாவாடை அடியிலிருந்து தொங்கிய நூல்கள் தரையில் இழுபட்டுக்கொண்டும் கோலம் வரைந்து கொண்டுமாய்/

இழுத்த கோட்டிலும் வரைந்த கோலத்திலுமாயிருந்து கலர்காட்டி ஏதாவது ஒரு அதிசயம் நடந்து விடாதா,,,,,,டப்பாவுகுள்ளிருந்து பூப்பூக்கவும்,புறா பறக்க விடவுமான மேஜிக்கை செய்வது போல,என கண்கொத்திப்பாக காத்திருந்த விழிப்படர்வின் நேரத்தில் கடைக்காரி சொன்ன சொல் அல்ல,அவள் ஊற்றிய சாம்பாரிலிருந்த பச்சை மிளகாய் கடிபட்டதில் வாய்க்குள் பரவிய உறைப்பு நாவின் சுவையறும்புகளுக்கு எட்டிச்சொல்லி விட்டு தண்ணீருக்காய் காத்தி ருக்கிறது.

“இருங்கசார்,மொளகாயகடிச்சிட்டீங்களா,இந்தகொண்டுவர்றேன்சார்,,தண்ணி நீங்க வந்துருக்குற நேரம் டிபன் முடியப்போற நேரத்தநெருங்கி இருக்குது. அதான்இட்லிஎடுத்துவச்சஎனக்கு தண்ணிஎடுத்து வைக்கணும்ன்னு தோணல, தப்பா நெனைச்சிக்கிறாதீங்க,”என்றாள்.

“இல்லம்மா,தப்பா நெனைக்குறதுக்கு இதுல என்ன இருக்குது,இந்த ஊர்ல இருக்குற தண்ணிப் பஞ்சத்துல ஒரு வேளை கடையில் தண்ணி வைக்குற பழக்கமில்லையோன்னுநெனைச்சுக்கிட்டேன்.,

”ரோட்டோரம் இருக்குற சின்னக் கடை நீங்க,நீங்க போயி இப்பிடியெல்லாம் செய்வீங்களான்னும் நெனைப்பு ஒருபக்கம். போன வாரம் ஒரு பெரிய கடை க்குசாப்புடப் போயிருந்தேன். அங்க இங்க சாப்பாட்டுக்கு தண்ணி கிடையாது, விலை குடுத்து தண்ணி பாட்டில் வாங்கிக் கொள்ளவும்ன்னு எழுதிப் போட்டு ருந்தாங்க, எனக்கு அதெல்லாம் பிரச்சனையில்ல, கையில எப்பவுமே ஒரு தண்ணி பாட்டிலு வச்சிருப்பேன்.அதத்தான் குடிக்கிறது,ரெண்டு லிட்டர் கலர் பாட்டில்,அது .கலர குடிச்சி முடிஞ்ச ஒடனே பாட்டில தூக்கி கீழ போட்டுறாம இந்த மாதிரி தண்ணி கொண்டு வர்றதுக்கு பயன்படுத்திக்கிருவேன்.இது போக இன்னும் ரெண்டு மூணு பாட்டிலு வீட்டுல கெடக்குது,மிதமா ஒரு கொதி மட்டும் கொதிக்க வச்ச தண்ணிய பாட்டில்ல ஊத்திக்கிட்டு வருவேன். அது தான் சாய்ங்காலம் வரைக்கும்.எங்க போனாலும் அது ஏங்கூடவே கைக் கொழந்தமாதிரிஏன் தோள்ப்பையிலயே கெடக்கும். சமயத்துல நான் கொண்டு வர்றது மதியம் வரைக்கும் கூட காணாது.அப்புறம் போற வர்ற யெடத்துல கெடைக்குற தண்ணியும் ஆபீசுல இருக்குற மினரல் வாட்டரும்தான்னு ஆகிப் போகும் எனக்கூறியவாறே இலையிலிருந்து கொஞ்சமாய் விலகிப்போய் சாப்பாட்டு மேஜையை எட்டித்தொடப்போன சாம்பாரை அதே ஆள் காட்டி விரலால் இலைக்குள்ளாக தள்ளிவிட்டுவிட்டு அதற்கு இட்லியை அண்டக் கொடுத்துவிட்டு சாப்புடுகிற போது நேற்றைக்கு முன் தினம் மாலையிலாக வாங்கிய தேங்காய் ஞாபகத்திற்கு வருகிறது.

கடந்த ஒரு வாரமாய் மனைவி சொல்லிக்கொண்டுதான் இருந்தாள்.வீட்ல தேங்காயும் வெங்காயமும் காலியாகிப்போச்சி,நானும் ஒரு வாரமா மாடாக் கத்திக்கிட்டு இருக்கேன் என்றாள்.

அப்பிடியா எந்த ஊர்ல மாடு இப்பிடி ஐநூத்திச்சொச்ச ரூபாய்க்கு சேலையக் கட்டிக்கிட்டுநிக்குது.சும்மாரொம்பயும்தான்கோயிச்சிக்கிறாத,என்பான் அவளி டம் நெருங்கி/

சும்மாயிருங்க ஆமாம்,எது சொன்னாலும் பக்கத்துல வந்து நின்னுக்கிட்டு என்னத்தையாவது மாத்திப்பேசி ஆளக்குளுப்பாட்டாதீங்க,என்பாள் மனைவி. ஆமா அப்பிடியே குளிப்பாட்டிட்டாலும்,,,,,அதுக்கெல்லாம் அசருற ஆளா நீயி அடேயப்பா_இவன்.

சரி சரி சும்மா அத இதப்பேசி ஒப்பேத்தாதீங்க,இன்னைக்கி வரும்போது கண்டி ப்பா வெங்காயமும் தேங்காயும் வாங்கிட்டு வரணும் ஆமா எனவாய் கோபம் காட்டுகிறாள்,

”அடப்பாவமேஎதுக்குப்போயிநீயி,அந்தமாதிரி கோவப்படுற மாதிரியெல்லாம் சீரியஸா மொகத்த வச்சிக்கிருற,அதான் ஒனக்கு செட்டா காதுல்ல,ஏங் போயி ட்டு வீணா ட்ரைப்பண்ற, என்பான்.அவளும் பதிலுக்கு சிரித்துக் கொண்டு இப்பிடித்தான் என்னத்தையாவது பேசி சமாதாம் பண்ணாதீங்க என்பாள்,

வெங்காயம்வாங்கச்சொன்னஅன்றும்சும்மாவண்டியிலஅங்கிட்டுப் போனேன் இங்கிட்டுப்போனேன்னு கதை வுடாம வாங்கீட்டு வாங்க, சொன்னத என கையில் வெடுக்கென திணித்த பணமும் பையும் கொண்டு வாங்கியபோது தேங்காய்க் கடைக்காரர் சொன்னார்.

:தேங்காய் வெலை கூடிருச்சி சார்,மழை இல்லாததுனால வெளைச்சல் இல்ல சார்,வெளைச்சல் இல்லாததுனால பதிமூணு ரூபாய்க்கு வித்த காயி இன்னை க்கி இருப்பது ரூபா வரைக்கும் விக்குது சார்,வெங்காயம் கெடைக்கவே இல்ல சார்.பத்து மூடை தூக்குன யெடத்துல இப்ப ரெண்டு இல்லைன்னா மூணு மூடைதூக்குறதுக்கேயோசனையாஇருக்கு,பாத்துக்கங்க,அழுகிப்போறயேவாரம். மூடைக்குள்ளஅப்பிடியே வைக்க முடியாது.தரையில கொட்டி விரிச்சி விட்டா அப்பிடியே காத்து குடிச்சிருது. இதெல்லாம் போக வாங்கீட்டு வந்த சரக்க ரெண்டு கைபாத்துதான் விக்க வேண்டியதிருக்கு.அப்பிடியெல்லாம் வித்து தான் லாபம் பாக்க வேண்டியதிருக்கு பாத்துக்கங்க,எனச்சொன்ன கடைக் காரரிடம் வாங்கிய தேங்காய்/

பத்து வருடங்களுக்கும் மேலாய் அவரிடம்தான் தேங்காய் வாங்குகிறான். பக்கத்திலிருக்கிற காய்கறிக்கடைக்காரருக்கு இதில் ஏக வருத்தம்.இங்கயும் தேங்காய் வெங்காயமெல்லாம் இருக்கு.நீங்க இங்கயே இதெல்லாம் வாங்கிற லாம் என்பார்.

வழக்கமாககடையில்நிற்கிறவர்இருந்தால்அப்பிடியெல்லாம்சொல்லமாட்டார். அவனை மாற்றிவிட பெரியவர் ஒருவர் நிற்பார்.அவர்தான் அப்பிடி யெல்லாம் பேசுவார்.அவரது அந்தப்பேச்சிற்கு பின்பு ஒருநாளாய் கடைக்காரன் வருத்தப் பட்டான்.

அவருக்கு வாடிக்கையாளர்களிடம் நடந்து கொள்கிற முறை வரை தெரியாது மன்னித்துக்கொள்ளுங்கள்.என்றார்.

“ஐய்யய்யோ அப்பிடியெல்லாம் இல்லை, உங்களை மன்னிக்கிற அளவிற்கு நான் பெரிய மனிதனும் இல்லை ,மன்னிப்புக் கேட்கிற அளவிற்கு நீங்கள் தவறேதும் செய்து விடவில்லை.பத்து வருடங்களுக்கும் மேலாக நான் வியா பாரம் வாங்குற கடை அது.திடீரென அவர்களது நம்பிக்கையை சிதைப்பது போல் நடந்து கொள்ளக்கூடாது.அவருக்கு என் மீது இருக்கிற நம்பிக்கையும் நல்லெண்ணமும் பொய்த்துப்போகக்கூடாது என்பதாலேயே அவரை விட்டு இடம்நகர்ந்துவர மறுக்கிறேன்.புரிந்து கொள்ளுங்கள் சரியாக,என்கிற இவனது சொல்லை ஆமோதித்தது ஏற்றுக்கொள்வார் கடைக்காரர்.

அந்த ஆமோதிப்பும் அனுசரனையுமே இது நாள்வரை அங்கு இவனை காய்கறி வாங்க வைத்திருக்கிறது.இனியும் வாங்க வைக்கும்.

மணிகண்டன் போன் பண்ணிய போது மணி ஒன்பது இருக்கலாம்.அந்நேரம் இவன் அல்லம்பட்டி முக்கு ரோட்டை எட்டித்தொட்டிருந்தான்.வருகிற போது வண்டியில்பெட்ரோல்கொஞ்சமாக இருந்தது ஞாபகத்திற்கு வரவில்லை.

நேற்றுகாலையிலேயே அலுவலகம் செல்கையில் ரிசர்வ் விழுந்து விட்டது. விழுந்து விட்ட ரிசர்வை ரிவர்ஸில் எடுத்து மறுபடியும் புல் பண்ணி விட முடியாதுதான்.என்ன செய்ய பின்னே அதற்கு,,,? என்ன செய்வார்கள் பெரிதாக, குறைந்து போன அளவை திரும்பவுமாய் இட்டு நிரப்பி விட வேண்டியது தான்.என நேற்றிலிருந்து நினைத்தவன் நினைத்த நினைவை முடியிட்டு தக்க வைத்துக்கொள்ளாமல் எப்படியோ மறந்து போகிறான். மறந்து போன கணத்தி லிருந்து இப்பொழுது வரை இவனது இருசக்கர வாகனம் ஓடிச்சென்றும் திரும்ப வந்துமாய் நின்றது காதாதூரம் இல்லை என்றாலும் கூட பெட்ரோல் காலியாகிவிடும் தூரமாய் இருந்தது.போதா இது ,மூச்சு வாங்காமல் ஓடிய இரு சக்கர வாகனம் நிற்பதற்கு நின்று விட்டது,

வேகமாய் போய்க்கொண்டிருக்கையில் நின்ற வாகனத்தை ஓரம் கட்டவும் மணி கண்டனிடமிருந்து வந்த போனை எடுக்கவுமாய் சரியாக இருந்தது. அண்ணே நான் வந்துட்டேன்.அரை மணிக்கு முன்னாடியே,நீ வரலையே இன் னும் எனக்கேட்ட அவரிடம் காரணகாரியங்களை விளக்கிவிட்டு நின்ற வண்டி யை தள்ளிக்கொண்டு போய் பெட்ரோல் பங்க் இருக்கிற திசை நோக்கிச் சென்று பெட்ரோல் நிரப்பிவிட்டுச்செல்கிறான்.மணிகண்டன் அழைத்த இடம் நோக்கி.

மிகவும் சிரியதாகவும் அல்லாமல் மிகவும் பெரியதாகவும் அல்லாமல் அந்த கூட்ட அறையில் எப்படியும் நூறு பேர்வரை அமரலாம்.அப்படி அமர்வதற் காய் பிளாஸ்டிக் சேறும் போட்டிருந்தார்கள்.கூட்டம்முடிந்ததும் அங்கேயே உட்கா ர்ந்து சாப்பிட டைனிங்க் டேபிளும் அதே சேர்களும்.

சேரில்உட்கார்ந்துகொண்டுடைனிங்க்டேபிளில்சாப்பிட்டுக்கொள்ளலாம்என்பது ஈஸியான நடை முறை. அது சரி கூட்டம் நடக்கும் போது அமர்ந்து பேச மேடை என யாராவது ஞாபகமாய் கேட்டால் என்ன செய்ய ,அதையும் கட்டி வைத்திருந்தார்கள்.

அந்தமேடையைத்தான் இப்பொழுது அலங்கரிக்க வேண்டும். அதில் கொடிகள் தோரணம் பேனர் என எல்லாம் இருந்தது.அதில் கொடிகள் தோரணம் பேனர் என எல்லாம் கட்டிய பின்பு பிளக்ஸையும் கட்ட வேண்டும்.இவை எல்லா வற்றையும்செய்து முடிக்க எப்படியும் ஒரு மணி நேரமாவது ஆகும். அதற்குத் தான் மணிகண்டன் வரச்சொல்லியிருந்தார் அவ்வளவு அவசரமாகவும் சில வேலைகள் சுமந்துமாய்/

கூடவே தோழரையும் சேர்த்து க் கொண்டார்,தோழர் என்றால் அவரது பெயர், பெயர் இல்லாமல் இல்லை அவருக்கு,ஆனால் நேற்றுப்பிறந்த குழந்தையிலி ருந்து நாளைக்கு தலை போகிறது வரைக்குமாய் இருக்கிற பெரியவர்கள் வரைஅறிந்துவைத்திருந்ததுதோழர்,தோழர்,தோழரே,,அவரது இயற்பெய ரைக் கூப்பிட்டால் கூட திரும்பிப்பார்ப்பாரோ இல்லையோ தோழர் என அழைத் தால் சப்தம் கேட்ட மறு விநாடி தாமதிக்காமல் திரும்பிப்பார்த்து விடுவார்.

அப்படியாய் அடையாளம் கொண்ட அவரும் மணிகண்டனும் இவனுமாய் அந்தஅறையைஅலங்கரித்து விட்டு நிமுருகிற போதுகாலையில் சாப்பிடாம ல் வந்திருந்ததைவெறும் வயிறு ஞாபகப்படுத்தவே மணிகண்டணிடமும் தோழரி டமுமாய் சொல்லி விட்டு சாப்பிட வருகிறான்,

வலது கை கட்டைவிரல் அமுக்கி ஆட்காட்டி விரல் கொண்டு பிய்த்த இட்லி யின் விள்ளலும் தொட்டுக்கொண்ட சட்னியின் காரமும் துணை சேர்ந்து கொண்ட சாம்பாரின் கைகோர்ப்புமாய் விரிந்து கிடந்த வாழை இலையின் இளம் பச்சையின் கைகோர்ப்புடன் பார்ப்பதற்கு ஒரு நவீன ஓவியமாயும் மரபு சார்ந்த ஓவியமாயும் பட்டுத்தெரிகிறது

21 Mar 2017

நன்றி வணக்கம் ,,,,,,,

வேலையின் மேல் கொண்ட காதலால்தான் வந்தேனேயன்றி வேறெதுவுமாய் இல்லை உள்நோக்கம் கொண்டு எனச்சொன்ன சொல்லின் கனம் தாக்கியவர் கள் அனைவரும் சிரித்தே விட்டார்கள்,ஆச்சரியம் சுமந்த விழிப்பார்வை தேக்கியும் காதல்ன்னா எப்பிடி சார்,நல்ல காதலா,கெட்ட கள்ளக்காதலா என்கிற கேள்வியை கொக்கியிட்டுமாய்,,,/

அட போங்க சார் இந்த ஐம்பது சொச்சத்துல காதல தேக்கி வச்சிருக்கருறதே பெரிய விஷயம்/இதுல நல்லதா கள்ளமானதான்னு கேட்டா எப்பிடி சார்,

ஆசைய அறுபது நாளைக்கும்,மோகத்த முப்பது நாளைக்குமா தத்துக் குடுத் துட்ட இந்தியக்குடும்பங்களோட பிரதி நிதியான ஏங்கிட்டப்போயி இப்பிடி ஒரு கேள்விகேட்டீங்கன்னா எப்பிடி சார்,,,?என்று கேட்டவன் இன்று அலுவலகத் திற்கு ஒன்பது மணிக்கு செல்வதற்கு பதிலாக ஒன்பது பத்திற்கு சென்றிருந் தான்.

அப்படிச்செல்வதற்கு அவன் பணி புரிகிற தனியார் அலுவலக மேலாளரிடம் முன்அனுமதிபெற்றிருந்தான்,நினைப்பதுதான்தினசரியின்நகர்வுகளில். 
 
ஆனால் நடக்கத்தான் மாட்டேன்கிறது.என்னதான் செய்யலாம் தெரியவில் லை.

காலையில் சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும்,வாக்கிங்க் போக வேண்டும். வாக்கிங்க் முடித்து விட்டு சைக்கிளிங்க் அது முடிந்ததும் அப்படியே குளித்து முடித்து விட்டு சாப்பிட்டுக் கிளம்ப வேண்டும் அலுவலகத்திற்கு.என பூத்து கிளைவிடுகிற எண்ணத்தில் மறு நாளின் மறு நாட்களில் மாறுதல் வந்து போகிறதுதான்.

கை கால்கள் சூம்பி வயிறு உப்பி தலை கனத்துப்போன ஈனஸ்வரக் குழந் தையாக தோற்றம் கொண்டு விடுகிறதுதான் அப்படியே/

“நீங்கதான் காலையில சீக்கிரம் எந்திருச்சி ஏங்கூட வாக்கிங்க்வர்ற ஆளா என தினசரியாய் வசவு பாடி தண்ணீர் குடிக்கிற மனைவியிடம் இவனும் சொல் வதுண்டுதான்.என்ன செய்ய தூஙக் நேரமாகிப்போகிற ராத்திரி வேளைகளில் குடிகொண்ட தூக்கம் காலையில லேட்டா எந்திரிக்க வச்சிருது,இதுல எங்கி ட்டுப்போயி வாக்கிங்,சைக்கிளிங்,,,, அப்புறம் அப்புறமுன்னு இருக்க,,,,,,?”

”என்னவோ போ ஒருகாலத்துல யோகாவே கதின்னு கெடந்த ஆளுக்கு இப்ப எதுவுமே செய்யிறதுக்கு யோசனையா இருக்குறது ஆச்சரியமா இருக்கு, என் பான் இவன்,.அது போலான நாட்களிலும் அது அல்லாத தினங்களிலும் அலுவ லகத்திற்கு இவன் கிளம்ப அந்நேர மாகிப்போவதும்,அல்லது சிறிது தாமதப் பட்டுப் போவதும் இயற்கைதான்.

எப்படியாயினும்அந்த தாமதப்படுதல் ஒன்பது மணியைதாண்டாது. இவனைப் பொறுத்த வரையில் தாமதம் என்றால் ஒன்பது மணிக்குள்ளாய்/சீக்கிரம் என்றால் எட்டு முப்பதுக்குள்ளாய்/இதுதான் இவனது அன்றாட அலுவலக டைடேபிள்/

அந்த டைம்டேபிளில் எப்பொழுதாவதுஎழுந்து விடுகிற எழுத்துப் பிழைகள் இவனை வெகுவாய் சங்கடத்திற்குள்ளாக்கி விடுகிறதுதான் /

ஏனெனில்இவனைப்பொறுத்தஅளவில்வேலைஎன்பதுஆத்மார்த்தம், வேலை என்பது உள்ளகிடக்கை,வேலை என்பது அத்துவான வெளியில் பூத்துக் கிடக் கிற மலர் நிறைந்த வெளியின் சுவாசம், வேலை என்பது வேட்கை,வேலை என்பதுகாதல்,வேலை என்பது கடமையல்ல,இதோ செய்து முடித்து விட்டேன் பிடி,கொடு சம்பளத்தை என வாங்குவதற்கு/. என்கிற மனோ நிலை தாங்கி யவனாய்வருகிறேனேயன்றிவேறில்லைஎனச்சொல்லிவிட்டுவேலைபார்க்கிறான்,

நன்றி வணக்கம்.

5 Mar 2017

சோப்பிடலின் உருதாங்கி,,,,,


மதயானை கடையில்தான் சோப்பு வாங்கினான்,

மகன் யானை என்பதே மறுவி மதயானை ஆகிபோனது என்று சொல்வார்கள் கடைக்காரைப்பற்றி அந்த ஊர்க்காரர்களிடம் கேட்கிற போது,அவர் பிறந்த போது பிரசவம் பார்த்த தாதி உன் மகன் யானை ஓங்குதாங்காக வருவான், மகன் இனி யானை போல எனதாதி சொன்ன சொல் மறுவி,,,,மறுவி இன்று மதயானையாய் நிற்கிறது,

உள்ளபடிக்குமாய் இது மதயானையின் அண்ணன் கடை.பலசரக்கு தவிர மற்ற தெல்லாம் இங்கு கிடைத்தது,

என்ன சோப்பு வேணும்,,,,கடைக்காரர்.

குளியல் சோப்பு,,,,,,இவன்,

குளியல் சோப்புல எது,,,,,,,?கடைக்காரர்/

சொல்லத்தெரியவில்லை இவனுக்கு.

இதற்கு முன்பாய் சோப்புப்போட்டுக்குளித்ததில்லை இவன்,அந்தப்பழக்கம் இல்லை இது நாள் வரை,/

இடுப்பில் அழுக்கேறிப்போன சிவப்புக்கலர் ட்ரவுசர் இரண்டும்,காக்கிக்கலர் டரவுசர் ஒன்றும் நூல்த்துண்டுகள் இரண்டு தவிர்த்து வேறொன்றும்பெரிதாக இவனிடம் இருந்ததில்லை விவசாய கூலியாய் இருந்த காயாத பொழுதுக ளில்/

பெரும்பாலான சமயங்களில் தலையில் இருக்கும்,துண்டும் இடுப்பில் இருக் கிற டரவுசரும் இவன் பணி செய்கிற நேரத்து பணிசீருடை மட்டும் அல்ல. பொதுவாகவே அவனது அன்றாட உடைகள் என இவனை அடையாளம் கொ ள்ள வைக்கும்/

மண்வெட்டி வேலை செய்துகொண்டிருக்கிறநேரங்களில்இவன்தலையை சுற்றி கட்டி இருக்கிற தலைப் பாகையில் வலது பக்கம் மண்வெட்டியை சுரண்டு வதற்கு ஏற்றார்ப்போல ஒரு கல்வைத்திருப்பான்.

அதை தேர்வு பண்ணியெல்லாம் தெடிச்சென்று எடுப்பதில்லை,போகிற போக் கில் சதுரமாய் சப்பட்டை உர் கொண்டு இருக்கிற கல் ஏதாவது தென்பட்டால் எடுத்து தலையை சுற்றியிருக்கிற துண்டில் சொருகிக் கொள்வான்.

ஈரம் சுமந்த அல்லது அது அல்லாத மண்,, மண் வெட்டி முழுவதுமாய் நிறைந்து ஒட்டிக் கொண்டிருக்கிற நேரங்களில் சுரண்டுவதற்கு ஏற்றார் போல வைத்திருக்கிற சப்பட்டைக் கல் இவன் எப்பொழுதுமே இவன் தலை துண்டு பொதிந்ததாக/

அப்படியாய் உடல் முழுவதுமாய் நிரம்பிய உழைப்பும் அலுப்பு வியர்வையு மாய் இருக்கிற தினசரிகளில் இவன் அறிந்ததெல்லாம் சோப்புப் போடாமல் குளித்த கண்மாய்த் தண்ணீர், கிணற்றுத் தண்ணீர் தவிர வேறொன்றுமில்லை பராபரமே என்பது தான் இந்நேரத்து நிஜமாகிப்போகிறது.

ரோட்டிற்கு வலது பக்கமாய் குளித்தால் மாடச்சாமி அய்யா கிணறு, ரோட்டி ற்கு இடதுபுறமாய்குளித்தால் கண்மாய்த்தண்ணீர், அவ்வளவுதான் வித்தியா சம்.

கண்மயங்காத சாயங்கால வேளைகளுக்கு முன் போனால் மாடசாமி அய்யா கிணற்று தண்ணீர்,கண் மயங்கிய பின் இருட்டிய வேளையில் சென்றால் இருட்டுக்குள்பதுங்கியிருக்கும் பூச்சி பொட்டுகளுக்கு கைதட்டியவாறு சைகை செய்து ஓரம் காட்டி ஒதுங்கியிருக்குமாறு சப்தம் காட்டி சொல்லி விட்டு கண்மாயில் இறங்கி குளித்துவிட்டுவருவான்,

இது கூட அவனாக அறிந்து வைத்தவிஷயமில்லை.இவன் போலவே இந்த கண்டிஷன் சுமந்து குளிக்க வருகிற கிருஷ்ணன்ணன்ந்தான் சொன்னார்,

”எப்பவுமேகண்மாயிலகுளிக்கவந்தாஅப்பிடியேகரையெறங்கிறாத,இருட்டுல,
மனுச நடமாட்டம் ஓஞ்சு போன நேரத்துல ஏதாவது பூச்சி பொட்டு நடமாட்டம் தலைதூக்கியிருக்கும்.அதுக்குயெடஞ்சலாநாமவந்துட்டம்ன்னுஅதும்நெனைச்சிறக்கூடாது,நம்மளுக்குயெடைஞ்சலாஅதுஇருக்குன்னு நம்மளும் நெனைச்சிறக்கூடாது,

அது இல்லாத யெடம்ன்னு ஒண்ணு இருக்காசொல்லு, நாமளும் அது இல்லாத யெடமாப்பாத்து நடமாடவும் முடியாது,

அதுக்காகத்தான் இப்பிடி ஒரு தட்டு நம்ம கையும் வலிக்காம, நம்மளுக்கு குறுக்கவர்றதுக்கும்பாதிப்பில்லாமபோயிக்கிறவேண்டியதுதா”எனசொல்வார்/,

அப்படியாய்வந்துகுளித்துச்செல்கிறநாட்களின்நினைவுகள்மனம் தாங்கி நின்ற பொழுதுகளில்சமயாசமயங்களில் கண் வெளிச்சமாய் இருக்கிற நேரங்களில் மாடசாமிஅய்யாகிணறுதான்குளிக்கவாய்க்கும்,அதுஎன்னவெனத்தெரியவில்லை, இவன்அதுபோலாய்குளிக்கப்போகிற தினங்களில் கிருஷ்ணன்ணனும் வந்து விடுகிறார்,

அவரும்இவனைப்போலத்தான்.உடல்முழுவதுமாய்உழைப்பைஅப்பிக்கொண் டு திரிபவர்,

நாட்களின்இருபத்திநான்குமணிப்பொழுதுகளில்தூங்குகிறநேரம்போகஉழைப் பை கைகோர்த்துக் கொண்டு இருக்கிற மனிதராய்,

இருவருமாய்அப்படிகுளிக்கிறஇடங்களில்சந்தித்துக்கொள்கிறநாட்களில்பேசிக் கொள்வதுண்டு.இன்னைக்குஎந்தக்காடு,யாருதோட்டம்,உழவா,,,,,,,,,,,,களையெடு
ப்பா,மரம்வெட்டாஇல்லைகெணறுதூறுவாறலா,,,,,,எனஅடுக்கிக்கேட்கிறகேள்வி க்குஅவர்முழுத்தகுதிபெற்றவராய்இருப்பார். அவர் செய்யாத வேலை இல்லை எனலாம்.

விவசாய வேலைகளில் அவருக்குத்தெரியாத வேலைகளும் கிட்டத் தட்ட இல்லை எனலாம்,;

பால் பட்டு கரடு தட்டிப்போன ஒரு நிலத்தை அவரதுகையில் கொடுத்தால் அதை விவசாய நிலமாக மாற்றிக்காட்டுகிற வல்லமை அவரிடம் எப்பொழுது ம் இருந்ததுண்டுதான்,அதுமட்டுமில்லை,பேசாத மண்ணை பேச வைக்கவும் விளையாதமண்னைவிளைய வைக்கவுமான சக்தியை தன்னகத்தே கொண்ட மனிதராக இருக்கிறார் என அவருக்கு ஒரு தனிப்பெயர் உண்டு,அது மட்டுமில் லைஅவருக்கிணையாய்இந்தஊரில்வேலைசெய்யஆட்கள் இல்லை எனச் சொல்லலாம்.

ஊருக்குள் உதைப்பு உழவு மும்பரமாய்நடந்து கொண்டிருந்த நேரம்.வடக்குக் காட்டில் அன்று அவர் உழுகப்போயிருந்தார்.காலையில் ஏழு மணிக்கு ஏர் கட்டிய அவர் மதியம் மூன்று மணிக்குள்ளாய் கட்டாந்தரையாய் க்கிடந்த நிலத்தை உழுது பண்படுத்தி நிலத்தின் மண்ணை மலரச்செய்து விதைத்து விட்டு வந்து விட்டார்,

இதில்விதைத்துமுடித்த நிலத்தை இன்னும் உழுது முடிக்க இன்னும் சால்கள் தான் பாக்கியிருக்கிறது,காலையிலிருந்து வேலை செய்து அழுத்துக்கலைத்த மாடு படுத்து விடுகிறது.

படுத்துவிட்டமாட்டைவம்புபண்ணியெல்லாம் எழுப்பத்துணியவில்லை அவர், காட்டின் ஓரமாய் ஒடிய ஒடைக்கு மாட்டை ஓட்டிபோய் நீர்க்காட்டி விட்டு மர நிழலில் கட்டிப்போட்டு விட்டு ஒடையோரமாய் வளர்ந்து நின்ற புற்களை மேய மாட்டிற்கு முன் அனுமதி கொடுத்து விட்டு வருகிறார்,

என்ன செய்யலாம் இப்போது,,,,,,?இப்படியே பாதியில் விட்டு விட்டுப்போக முடியாது,பாதி கூட இல்லை நிலத்தில் முக்கால் வாசிமுடிந்து போனது விதை ப்பு,இதை இப்படியே விட்டு விட்டும் போக முடியாது,நிலத்தின் மேனி யில் மிதக்கிற விதைத்த விதைகளை காற்றுக்குடித்துவிடும்,தவிர காக்கை குருவி கள் கொத்திக்கொண்டு போய் விடும்,பின் நிலத்துக்காரருக்கு அவர் பதில் சொல்லி முடியாது,

இது போலான அனுபவம் இது நாள்வரை ஏற்பட்டதில்லை,இது போலாய் எப் பொழுதாவது ஏற்படுகிற சமயங்களில் பக்கத்துக்காட்டில் அல்லது அவருட னாய்ஜோடியாகவந்த எரில் இருந்து ஒற்றை மாட்டை கழட்டி இதில் கட்டி உழுது விடுவார்,அது இடத்து மாடகாக இருந்த போதும் சரி,வலத்து மாடாக இருந்த போதும் சரி.சரிக்கட்டி உழுது முடித்து விட்டுக்கிளம்பி விடுவார்,

ஆனால் அன்று அப்படி ஏதும் செய்ய முடியவில்லை,கூட வருகிறேன் எனச் சொன்ன ஜோடி கலப்பையை இன்னொரு காட்டிற்கு அனுப்பி விட்டு இவர் ஒற்றையாகவேவந்திருந்தார்,சரிரொம்பநேரமெல்லாம்யோசித்துக்கொண்டிரு
க்கக் கூடாது அல்லது அப்படியாய் யோசிப்பதில் ஏதும் பிரயோஜனம் இல்லை.

விதைப் பெட்டியோடு நின்று கொண்டிருந்த காட்டுக்காரரைக்கூப்பிட்டு ஏரை பிடியுங்கள் கொஞ்சநேரம்,மாடு இல்லாத வெற்றிடத்தை நான்நிரப்பிஇழுத்துச் செல்கிறேன் ஏரை,ஒரு பக்கம் மாடு.ஒருபக்கம் நான்,வலத்துக்காளை காளை யாகவேஇருக்க இடத்துக்காளையின் இடத்தில் மனிதனான நான் நின்று ஏர் இழுக்கிறேன் எனச்சொன்னவரை காட்டுக்காரர் வேண்டாம் எனத் தடுத்தும் கேட்கவில்லை.

“விடுங்கய்யா,இது வரைக்கும் நான் செய்யாத ஒரே வேலை இதுதான், இதுக் கும் ஏங் ஒடம்பு ஏத்ததுதானான்னு தெரிஞ்சிக்கிறதுக்காவது உழுகணுமா இல்லையா” எனச்சொல்லி விட்டு,,, காட்டுக்காரர் வருத்தப்பட்டுக் கொண்டே ஏர்பிடிக்க கிருஷ்ணன்ணனும் விதைப்பை முடித்துக்கொடுத்துவிட்டு காட்டுக் காரரைப் பார்த்து சிரித்த சிரிப்பிற்கு காட்டுக்காரர் ரொம்பவும் சிரமப்பட்டுப் போனார்.

“ஏம்பா நீயி வாட்டுக்கு வந்து ஏன் காட்டுல இப்பிடி செஞ்சிட்டுப்போற ,ஊர்க் காரங்க நான் என்னமோ ஒன்னைய கொடுமைப்படுத்தி வேலை வாங்குன மாதிரியில்லபேசுவாங்க.இந்தப்பாவத்தைநான்எங்ககொண்டுபோயி தொலைக்கிறது”“?என ஏகத்துக்கு வருத்தபட்டிருக்கிறார் காட்டுக்காரர்.

”அட அதெல்லாம் ஒண்ணுமில்லண்ணே,விடுங்க இப்ப என்ன நடக்காததா நடந்து போச்சி,இதெல்லாம் ஒரு அனுபவந்தான வாழ்க்கையில,,,/ என அவரி டம் சொல்லிவிட்டு வந்த நாளன்று போலவே அன்றும் வந்திருந்தார்,

இவனும் அது போலவே உழைப்பின் கழைப்பை உடல் முழுவதுமாய் அப்பிக் கொண்டு போயிருந்த சமயத்தில் வந்த அவருடன் பேசிக் கொண்டே கிணற் றில்இறங்கப்போன சமயம் ஆள் அரவம் ஏதோ கேட்டது போல் இருந்தது.

எப்போதுமே சப்தம் போட்டு பேசும் இவன் அன்று சபதமில்லாமல் பேசினான், கிருஷ்ணன்ணன்போலவே,அவர்அதிகம் சப்தம் போட்டு பேச மாட்டார்,

ஆனால் காரியம் அல்லது வேலை என்று இறங்கிவிட்டால் ஒரு புலிப் பாய்ச் சல்அவரதுஉடம்பில் கூடுகட்டிக்கொண்டு விடும். கட்டிய கூட்டை கலைய விடாமல் இழுத்துப்பாதுகாத்துக்கொண்டு திரிபவர் வேலை முடிகிற வரை/

அந்த விரைவும்,அந்த கூடு கட்டலும்,வேலை சுத்தமுமே அவரை இது நாள் வரை அடையாளப்படுத்திக்கொண்டு வந்திருக்கிறது ஊருக்குள்ளாக/

அம்மாதிரியான அடையாளப்படுத்துதலை அவர் ஒரு போதும் பெருமை யாகநினைத்ததில்லை,அதேநேரம் சிறுமை காட்டியும் புறந்தள்ளியதில்லை.

கேட்டால் சொல்வார்,”தம்பி இதெல்லாம் நம்ம அடிப்படை கொணம் இதைப் போயி பெருமையின்னி நெனைச்சி பீத்திக்கிட்டு திரிஞ்சம்ண்ணு வையி, சரிப்பட்டு வராது,என்ன சொல்றீங்க” என்பார்,

இது போலான பேச்சுக்கள் போலவே அன்றும் ஏதோ ஒன்றை பேசிக் கொண்டே கிணற்றில் இறங்க காலடி எடுத்து வைத்த நேரம் பெருமாள் ஆச்சி மகள் கிணற்றினுள் குளித்துக்கொண்டிருந்தாள்.

வயதுப்பெண் வாளிப்பான உடம்புக்காரி,ஊர்க்கார இளவட்டங்களுக்கு அவள் மேல் ஒரு கண்,

கண் எப்பொழுதும் உடலின் மீது மட்டுமே இருக்க அவளது பருவத்து ஆசை கள் காற்றில் பறக்கும் துணி போல ஆடிக்கொண்டே இருந்தது,

அவள் எப்பொழுதுமே இவனை மாமா என்றுதான் அழைப்பாள்,அவள் ஒன்றும் சொந்தக்காரி இல்லை இவனுக்கு,இன்றளவும் கிராமங்களில் முடியிடிட்டு வைத்திருக்கும்பழக்க வழக்கங்களில்ஒன்றாக வேற்று சாதிகளுக்குள் முறை யிட்டு அழைத்துக்கொள்ளும் வரப்பிரசாதத்தை இவனது கிராமமும் வைத் திருந்தது.’

அந்த வைத்திருத்தலின் அடையாளத்தில் கருவாகி உருவான அவள் இவனை மாமா முறை வைத்து அழைத்தாள்.

”பெருமாள்ஆச்சியாஇல்லாதவீடுபாவம்,,,”எனச்சொல்லி அவளை அந்த கிராம த்தினர்அடையாளப்படுத்திவைத்திருந்தநாட்களில்அவளதுவேலைஊருக்குள் உள்ள சம்சாரி வீடுகளில் போய் வரகு அரிசி திரிப்பதுதான்,

காடுகளில் மனித உழைப்பின் அடையாளம் மண்ணின் மணத்தோடு விளை ந்து வீட்டிற்கு வந்த வரகு அரிசி பெருமாள் ஆச்சியின் உரலில் திரிபடும் போது அந்த வீட்டிற்குள் ஒருவித புது மணம் பரப்பும்,இவளது பேச்சையும் சேர்த்து/

அந்த அடையாளப்படுத்துதல்கள் பெருமாள் ஆச்சிக்கு மட்டுமே சொந்த மாய் இருந்ததில்லை எப்பொழுதும்,அவளோடு கூடச்சேர்ந்து வரகு அரிசி திரிக்க வருகிற நான்கு பேருக்கும் சேரும்.

அவளதுவேலைகளிலும்கஷ்டங்களிலும் கனவுகளிலுமாய் பங்கு கொள்கிற உரிமையும் அந்த நாலு பேருக்கும் உண்டு,

ஏனெனில்அந்தநான்கு பேரும் கிட்டத்தட்ட பெருமாள்ஆச்சியைப் போலவே,,,/

அதனால்தான் பெருமாள் ஆச்சி வரகு திரிக்கும் வேலையை கையில் எடுத்த போது அவர்களைச்சேர்த்துக் கொண்டாள்.

அப்படியாய்பெருமாள்ஆச்சிஅவர்களைசேர்த்துக்கொண்டநாளிலிருந்து இன்று வரை பெருமாள் ஆச்சியின் எதிர் வீட்டிலிருக்கிற இவன் சொல் வதை தட்ட மாட்டாள் பெருமாள் ஆச்சியின் மகள் மாமா என்கிற மரியாதை மாறாமல்/

அப்படிப்பட்டவள் இன்று எவ்வளவு சொல்லியும் கிணற்றிலிருந்து ஏறி வர மறுத்து விட்டாள்,

ஆண்கள் குளிக்க வருகிற நேரமிது.ஏறி வா சீக்கிரம் வீட்டில் போய் மீதம் குளியலை வைத்துக் கொள்.என்ற போதும் கேட்கமாட்டேன் என பிடிவாதமாய் கிணற்றுக்குள்ளேயே குளித்துக்கொண்டு இருந்தாள்.

வேறுவழியில்லாமல்அவள் குளித்துமுடித்துகிணற்றைவிட்டுமேலேறி வரும் வரை ஓரமாய் இருந்து விட்டு இருட்டிப்போக கண்மாயில் போய் குளித்து விட்டு வந்தார்கள்,
அன்று குளித்த சோப் இல்லா குளியலின்நினைவுகள் இன்று வரை இவனை பின் தொடர்வதாய் இருக்கிறதாகவே/

அதனால் இப்பொழுது எந்த சோப் வேண்டும் எனக்கேட்கும் கடைக்காரரி டம் எதுவும் சொல்லத்தெரியவில்லை.

”என்ன சோப் வேணும் சார் சொல்லுங்க”,,,கடைக்காரர்,

”கடைக்குள்ள இருக்குற சோப்புக வெலையெல்லாம் சொல்லுங்க,எனக்கு எது பிடிச்சிருக்கோ இல்ல எது நல்லாயிருக்குன்னு தோணுதோ அத எடுத்துக்கிறே ன்” ,இவன்.

”எல்லாத்தையும்கையக்காண்பிச்சிசொல்றீங்கசரிதான்.குளிக்கிறசோப்புன் னா அஞ்சி வகை இருக்கு அதுல எது வேணும் சொல்லுங்க”

பச்சைக்கலரில்மஞ்சள் எழுத்துக்கள் பொரித்திருந்த கவர் சுற்றியிருந்த சோப்,,, சிவப்புக்கலர் கவர் போட்டு அதன் மேல் வெள்ளை எழுத்துக்கள் பொரித்திருந்த சோப்,,,ரோஸ் கலர் கவர் போட்டு அதன் மீது அதை ஒட்டிய கலரில் எழுத்துக் கள் இருந்த சோப்,,,,,எனவும் இன்னும் இன்னுமான நிறங்களில் அவர் எடுத்துக் காண்பித்த சோப்புகளில் பச்சைக்கலரில் மஞ்சள் எழுத்துக்கள் பொரித்திருந்த கவர் போர்த்தியிருந்த சோப் இவனுக்கு மிகவும் பிடித்துப் போனதாக/

அதையேதான் வாங்கினான்.

இந்த சோப் என்ன வெலை,,,,?

ஐந்து ரூபாய் ஐம்பது பைசா கடைக்காரர்.

பையிலிருந்துபிதுக்கி எடுத்த காசில் ஒரு ஐந்து ரூபாய் நோட்டையும் ஒரு ஐம்பதுபைசாவையும்கொடுத்துவிட்டுகாசைஎடுத்தபையிலேயே சோப்பை ப் போட்டுக் கொண்டான்.

28 Feb 2017

நூழிலை,,,,,,

இங்கு திலகாவிற்கும் திலகன் என்கிற திலகராஜிற்குமான நூழிலைநெசவைப் பற்றி சொல்லியாகவேண்டும்.

“என்ன சொல்ல பெரிசா சொல்லு,திலகாவும் இந்த ஊருக்கு பொழக்க வந்தவ, திலகராஜும் இங்க பொழப்பு தேடி இந்த ஊருக்கு அண்டி வந்தவந்தான…./ இதுலதிலகராஜீங்குறதம்பியவிட திலகா குடும்பம்தான் பொழப்பு தேடி அண்டி வந்தவுங்க பாத்துக்க,”,என்பார்கள்.

திலகாவோட தாத்தாவுக்கு விருதுநகர் பக்கத்துல பத்தாவது கிலோ மீட்டர்ல இருக்குற கஞ்சம் பட்டிதான் ஊராம்.அங்க மண்ண உசிரா நேசிச்சி விவசாயம் பண்ணுறகுடும்பமாம்இவங்களோடகுடும்பம்,என்னதான்தனக்குன்னுஇல்லை யின்னாக்கூட தண்ணின்னு கேட்டு வந்தவுங்களுக்கு எண்ணெய எடுத்துக் குடுக்குற குடும்பம் அவங்களோடது.ஏதோ மானத்துக்கு அஞ்சி பொழக்கிற குடும்பம்,சொல்லு ஒண்ணு செயல் ஒண்ணுண்ணு இல்லாத குடும்பம்.அவுங்க சொல்லுதா அவுங்க செயலுக்கு பலம்,அவுங்க செயலுதான் அவுங்க சொல்லு க்கு பலம்.ஆனா அவுங்க தாத்தா இதையெல்லாம் தாண்டு னவரு.சொல்லுற சொல்லுக்கும் செய்யிற செயலுக்கும் என்ன பெரிசா வித்தியாசம் வேண்டிக் கெடக்குன்னுரெண்டையும்ஒண்ணாச்சேத்துப் பாத்தவரு, பாத்தது மட்டுமில்ல , அப்பிடியே இருந்தும் காட்டுனவரு.அது தான் அவருக் கும் பேரும் சேத்துச்சி, அதுதான் அவருக்கு பேரும் போக வச்சிச்சி. பொடிக் கடை தாத்தான்னா அந்த ஊர்ல பொறந்த கொழந்தையில இருந்து பள்ளிக் கொட புள்ளைங்கவரைக்கும் அவரப்புடிக்காதவுங்க யாரும் இருக்க முடியாது, ஏன்னா மந்தையில இருக்குற கடையில அவருதான் பள்ளிக்கூட புள்ளைக ளுக்கு தின்பண்டம் விக்கிறவரு,

”அந்த ஊர்ல அவரு கடைக்குப்பேரு ஒத்தைக்கடை..ஊரு மந்தையில அவரு கடை வச்சிருந்த நேரம் வேற யாரும் கடை வைக்கல.அதுனாலதான் அந்தக் கடைக்கு பேரு ஒத்தக்கடையின்னு பேரு வந்துச்சி/

அதுக்கு அப்பிடி பேரு வந்தது தப்பில்ல,அவரு அந்தக்கடைய நடத்துனதும் தப்பில்ல,கடை வருமானம் அவருஒத்தைஆளு சாப்பாட்டுக்கு,கடைக்குசரக்கு வாங்கிப்போட வர, கடைக்காக பேங்குல வாங்குன கடனுக்கு தவணை கட்டன்னு சரியாப்போகும்,அது போக எஞ்சியிருக்குறத குடும்பத்துக்கு குடுத் துருவாரு,பாட்டி கெடையாது பாவம்,தாத்தா மகன் வீட்ல அதான் திலகா வோட அப்பன் வீட்ல இருந்து காலம் தள்ளிருக்காரு,பாட்டி போனதுலயிருந்து என்னதான் மகன் பேரன் பேத்தின்னு கூட மாட ஒறவுகசுத்திஇருந்த போதும் கூட தனியா இருக்குறது போல ஒணந்தாரு,அப்பிடியான மனத்தாக்கம் அவரு கிட்ட வந்ததுலயிருந்து மனுசன் அப்பிடியே உக்கிப்போனாரு உக்கி,,,/,

”என்ன மனுசன் அப்பப்ப கொஞ்சம் தண்ணி சாப்புடுவாரு,பழகுன பழக்கம் விட முடியல,பாவம்,என்னைக்காவது ஒரு நா மாசம் வாரம்ன்னு கெடையா து,எப்ப நோங்குதோ அப்ப போவாரு கடையப் பூட்டீட்டு,,,,,,ராத்திரி எட்டு மணிக்கு மேல அவரு கடை பூட்டிக்கெடந்துச்சின்னா அன்னைக்கி அவரு பக்கதூர்ல தண்ணி சாப்புடப்போயிருக்காருன்னு அர்த்தம்,அங்கதான் கடை இருக்குது, பேரக்கொழந்தையோடசைக்கிள்இருக்குது,எடுத்துக்கிட்டுக்கூடபோகமாட்டாரு, ஒரேநடைதான்,அவருதண்ணிசாப்புட்டுருக்காராஇல்லை,சாப்புடலையான்னு வெளியில யாருக்கும் தெரியாது,கண்டு பிடிக்கவும் முடியாது, எவ்வளவு ஏத்துனாலும் அவ்வளவு ஸ்டெடி,கம்பா நிப்பாரு மனுசன்னு.அவரு வயசு ஆள்களெல்லாம் கேலி பண்ணுவாங்க அவர,

“இங்க பாரு அவன தண்ணியடிச்சிட்டு முட்டி மடங்காம நடந்து வர்றான் பாருன்னு கேலி பேசுவாங்க/.நம்ம வயசுல இருக்குற அவன் அனுபவிக்கிற ஒரே சொகம் அதுதானப்ப அது ஒங்களுக்கு பொறுக்கலையான்னு அந்த கேலிப்பேச்ச யெடை மறிச்சி செல பேரு எதிர் வாதம் செய்யவும் செய்வாங்க, ஆனா குடிச்சிட்டா வீட்டுக்கு போக மாட்டாரு மனுசன், ஒயின் ஷாப்புக்கு பக்கத்திலேயே வாங்கி வந்திருந்த புரோட்டா பார்சல சாப்பிட்டுட்டு பெட்டிக் கடைய தெறந்து அங்கேயே தூங்கிப் போவாரு மனுசன்.அவரு காலம் அப்பிடியே ஓடி போக அவரது குடும்பத்தாரோட பாடு ரொம்பவும் சங்கடம் சொமந்ததாவே ஆகிப்போச்சி அந்த ஊருல/”.

”அந்த சங்கடத்தை கூடுமான வரைக்கும் அவுங்களும் தவிர்க்கவும் கழுவி விடவுமாய்த்தான்பாத்தாங்க,முடியல,.விளைச்சலில்லை,நெலத்துலபோட்டத ற்கும் மேலாககையி நஷ்டமாகிப்போச்சு..கடை வியாபாரம் தாத்தாவிற்கும் கடைக்கு சரக்குவாங்கிப்போடவும்பேங்க்லோன்தவணைகட்டவுமேசரியாய் இருந்துச்சி. அப்படி சரியானதை மீறியும் இழுத்துப்பாத்தாங்க குடும்பத்தை ,ம்ஹூம் முடியலை,இழுத்துக்கட்டிய கயிறு அறுந்து போற நெலை வந்ததும் மதிப்பா கடையை வித்து பேங்க் லோனை கட்டீட்டு வந்த விலைக்கு நிலத்தை வித்துட்டு இந்த ஊருக்கு வந்துட்டாங்க பொழப்பு தேடி./,

”மழையில நனைஞ்ச கோழிக்குஞ்சா வந்தவுங்கள தலை துவட்டி விட்டு பொழப்புக்கு வழிகாட்டி விட்டிச்சி ஊரு,இப்ப பொழச்சிக்கொடக்காங்க, திலகா வோட அப்பா இந்த ஊரு பஜார்ல பெட்டிக்கடை வச்சிருக்காரு,டீயும் வாழைப் பழமுமா சேத்து/ என்பார்கள் திலகாவின் குடும்பத்தைப்பற்றி சொல்கிற போது/

இதில் திலகராஜ் என்கிற திலகன் மாறுதல் ஆகி இங்கிருக்கிற அரசாங்க அலு வலகத்தில் பணிபுரிய வந்திருக்கிறான்.சொந்த ஊரிலிருந்து 350 கிலோமீட்டர் துரம் தாண்டி இங்கு பணி மாறுதலாகி வந்த தினத்திலிருந்து உடன் பணி புரியும் நண்பரை சேர்த்துக் கொண்டு இந்த ரூமில் வந்து தங்கிய பொழுது இவனுக்குசிறிதுநாட்கள் தூக்கம் பிடிக்கவில்லைதான்.

”இவனுக்கு இருக்கிற கொஞ்ச நஞ்ச படிக்கிற பழக்கம்கூட தூக்கம் வரஉதவி ல்லை.ஒருசிலநாட்களில்புத்தகம் படித்துக் கொண்டே தூங்கிப் போவான், அல்லதுஅட்டையில் சொருகிய பேப்பரில் ஏதாவது எழுதிக் கொண்டிருப்பான். எழுதியது எழுதிய படி இருக்க படித்துக் கொண்டிருந்தது படித்த படி இருக்க அப்படியே தூங்கிபோயிருக்கிறான் பல நாட்களில்/

இதில் மிகப்பெரிய சோகம் என்னவென்றால் பலசமயங்களில் பல நாட்களில் இவன் தூங்கிப் போவதற்குஇரவு ஒன்றிலிருந்து மூன்றுமணி வரை கூட ஆகிப் போகும்/அப்படியாய் தூங்கிப்போகிற தினங்களில் மறு நாள் காலை விடியலில் கோலம் போட வருகிற திலகாவைப்பார்க்கிற வாய்ப்பு இவனுக்கு கிடைக்கிற துண்டு.

பாவிட்டு நூல் கோர்த்து விடப்படுகிற நெசவில்கிடைக்கிற முழு உரு பற்றி இவர்கள் இருவருக்கும் தெரியாது. இருவருக்குமிடையே இருந்தது காதலா அல்லது அது அற்றதா தெரியவில்லை. இருவருக்குமிடையே எந்தவித பேச்சோ அல்லது வேறேதுனும் கடித பரிமாறலோ சந்தித்துக்கொள்ளலோ அல்லதுதூதுவிடலோஇல்லை.வேறுவிதமாய்அவளைக்கவர்வதற்காய்அவனும், அவளைக் கவர்வதற்காய் அவனும் பெரியதாய் மெனக்கெட்டதாய் தெரிய வில்லை.

அவள் ஏறிட்டுப்பார்க்கையில் அவன் தலைகுனிவான்,அவன் ஏறிட்டுப்பார்க் கையில் அவள் தலை குனிவான் அவ்வளவே.அவர்கள் இருவருக்கும் இடை யிலான பந்தம்.

குனிந்துநிலம், பார்க்கிறசமயங்களில்அவளிடமிருந்து கழண்டு விழுகிற நாணமோஇல்லை வேறெதாவதுமோ அவள் இடுகிறகோலத்தின் புள்ளிகளில் தவறி விழுந்து விடுவதுண்டு. விழுந்துவிட்டப் புள்ளிகளின் கைகோர்ப்பும் இணைவுமாய் சேர்ந்து உருவாக்குகிற கோலங்கள் பெரும் பாலுமாய் அழகாய் அமைந்து விடுவதுண்டுதான்.

சின்னக்கிண்ணத்தில் எடுத்த கோலமாவு அவளது கைபட்டு கோலமாக மாறுகிற பொழுதுகளில் காணக் கிடைக்கிற மலர்ச்சி இருக்கிறதே அடேயப்பா, என்கிற ரகத்தில் சேர்த்தியாகிப் போகும்தான்,சின்ன வாசலின் முன்பாக/

முதலில் அவளது வீட்டு வாசலைத் தான் அவளது கோலம் அலங்கரிக்கும். கோலமென்றால் நாலு புள்ளி எட்டு புள்ளியெல்லாம் தாண்டி அவள் ஒரு புள்ளிகளில் வரைவாள் .

“ஏய் என்ன இது,புதுசாவுள்ள இருக்கும்மா, எங்கிட்டு புள்ளி வச்சி எப்பிடி கொண்டு வந்து கோலத்த முடிக்கிறாங்குற வித்தையே பிடிபட மாட்டேங்குதே ஆமாம்,இவஒருஸைசாத்தான்திரியிறா,,ஏம்மாகோலத்தையேஇப்பிடி வளைக் கிறையே,வரப்போற வீட்டுக்காரனஎப்பிடியெல்லாம்வளைச்சிப்போடுவாளோ, தெரியலையே,,,,,,,எனஅடிபடுகிறபேச்சுகளெல்லாம்அவளுக்குகவலையில்லை, ஆமாம் நான் வரப்போறவன வளைக்கிறது இருக்கட்டும்,நீங்க ஒங்க வீடுகள்ல வளைக்குற வித்தைய கத்துக்கங்க மொதல்ல,,,,,,,என்பாள் திலகா தன்னை கேலி பண்ணுகிறவர்களிடம்,/

இது போலான பேச்சுக்கள் திலகராஜின் காதுகளில் அவன் குறுக்க மறுக்க நடக்கும் போதாய் விழுவதுண்டு தான்.அந்த விழுதல்களே அவள் மீது இவனுக்கு ஈர்ப்பை ஏற்படுத்தியிருக்கும் எனநினைக்கிறான்,

அவள் வரைகிற கோலங்கள் வாசலுக்கு வரும் முன்பாக அவளது வீட்டில் அதற்கென தனியாக வைத்திருக்கிறகோல நோட்டை நிரப்பியிருக்கும், அதிலி ருந்து ஒன்றை உருவி எடுத்துத்தான் கோலமாக அன்றாடம் அவளது வீட்டு வாசலிலும் திலகராஜ் இருக்கிற ரூம் வாசலிலுமாக.வரைவாள்

முதலில் அவளது வீட்டு வாசலில் கோலம் போட்டு முடித்து விட்டுதான் திலகராஜின் ரூம் வாசலுக்கு வருவாள்.ரூம் என்ன ரூம் வீடுதான் அது,அதை ரூமாக உருமாற்றி பயன்படுத்திக்கொண்டார்கள்.பார்க்க பெரிய அளவில் இல்லா விட்டாலும் கூட ஒருகுடும்பம் ஆண்டு அனுபவித்தற்கான அடை யாளத்தைக்கொண்டிருந்ததுமுழுமையாக/

அந்தவீடுஇரண்டுபுறமுமாய் வாசலைக் கொண்டதாகஇருந்தது எப்படியும் 700 சதுரஅடிகளைகொண்டதாய் இருந்த அது சமையலறை,ஹால், படுக்கையறை மாடி,,,,,,,,எனதனித்தனியாககொண்ட வீட்டில் பாத்ரூம் இருக்கவில்லை. சிரமம் தானே எதற்கு அது தேவையில்லாமல் என விட்டுவிட்டார்கள் போலும்/

கிராமங்களில் இயற்கை கட்டியிருக்கும் மறை விடங்கள் வேறு வேறாயும் நிறைந்து போயுமாய் இருக்கிற போது வீட்டிற்குள் எதற்கு அனாவசியமாய் பாத்ரூம் என எண்ணி கூட கட்டாமல் விட்டிருக்கலாம்.

இரு வாசலில் முன் புற நடைவாசலில்தான் தலை வைத்துப் படித்திருப்பான் திலகராஜ்.

கிழக்குப்பார்த்த நடை,அந்தப்பக்கமாகத்தான் கீழ்வூர் இருக்கிறது.அடர்ந்த கருவேலைமரங்களும் வண்டிப்பாதையுமாய் வாலோடியாய் செல்கிற ஒற்றை யடி வண்டிப்பாதையுமாய் செல்கிற அந்த ஊரின் முகப்பாய்த்தான் அந்த ரோடு இருக்கிறது.அந்த ரோட்டின் முனையில் போய் நின்றால் போதும். பாதையே கைபிடித்துக்கொண்டு போய் ஊரில் விட்டு விடும்.

அப்படியிருந்த ரோட்டில் ஒரு மழை நாளின் மழை ஓய்ந்திருந்த இரவு நேர மாய் ஒண்ணுக்கிருக்கப்போனவன் வலது காலில் சுருக்கென ஏதோ கடித்து விடகொஞ்சம் பயந்துதான் போனான்.அன்று பார்த்து ரூம் மேட் கூட இல்லை. ஊருக்குப்போயிருந்தார்,சரி என்ன செய்வது,,,?யாரைக் கூப்பிட்டுச் சொல்லி எங்கு போய் யாரைப்பார்ப்பது என்கிற எண்ணத்தில் இருட்டான அந்த இடத் திலிருந்து வெளியே வந்து காலைப்பார்த்துக்கொண்டு நின்றிருந்த பொழுது அந்தப் பக்கமாய்வந்த திலகாவின்அண்ணந்தான் ”என்னசார் இங்கநிக்குறீங்க, காலக்கால பாத்துக்கிட்டே”,,,,என்ற போது சொன்னான் நடந்ததை/

“ஏன் சார் இருட்டான யெடத்துல வரும் போது ஒரு டார்ச்,கீர்ச் வச்சிருக்கக் கூடாதா,,?இந்த மழை நேரத்துல அதுவும் இந்த ஈரப்பிசுபிசுப்பான பாதையில என்ன வந்திச்சோ,,,,,?என்ன கடிச்சிச்சோ,,,,?தெரியலையே என்றவர் கொஞ்சம் இருங்க சார் வீட்ல போயி சைக்கிள எடுத்துட்டு வந்துர்றேன்,டாக்டர் வீடு வரைக்கும் போயிட்டு வந்துருவோம்,கையோட,,,” என சைக்கிளுடன் வந்தவர் டாக்டரிடம் கூட்டிக்கொண்டு போனார்.

அங்குபோனால்டாக்டர் இல்லை வீட்டில்,அவரது மனைவிதான் இருந்தாள். அவரிடம் விபரம் சொன்னவுடன் அடக்கமாட்டாமல் சிரித்தவள் ஒண்ணும் கடிச்சி ருக்காது,கிடிச்சிருக்காது,முள்ளுகிள்ளு இழுத்திருக்கும். எங்க காலக் காம்பிங்க பாப்போம். எனச்கூச்சப்பட்டு ஒதுங்கி நின்ற திலகராஜின் கை பிடித்து இழுத்து ”பயபடாதீங்க தம்பி ஏங்கிட்ட வந்துட்டீங்கில்ல,ஒங்கள ஒரு வழி பண்ணி ருவோம் என்றாள்.அதற்குள்ளாக காலை இழுத்துப்பார்த்து விட்டு ஒண்ணுமி ல்ல முள்ளுதான் இழுத்திருக்கு.என முள் கீறிய இடத்தையும் ரத்தம் கசிந்திருந்த இடத்தையும் காட்டி தண்ணீரில் பஞ்சு நனைத்துத் துடை த்து களிம்பைத் தடவினாள்.அதற்குள்ளாக டாக்டர் வந்து விட்டிருந்தார். வந்தவர் திலகாவின் அண்ணனையும் திலகராஜையும் பார்த்துவிட்டு விபரம் கேட்டு விட்டு அவரது மனைவியை சப்தம் போட்டார் செல்லமாக.

அவளும்இடுப்பில்கைவைத்துமுறைத்தவளாகடாக்டரைப்பார்த்துச்சொல்கிறாள். நீங்க வர்றதுக்குள்ள நானும் அரை வைத்தியர் ஆகிறலாம்ன்னு பாத்தேன்.என சிரித்தவராய் அடிக்கக்கை ஓங்கிய டாக்டரின் கையை தட்டி விட்டு விட்டு சமையலறைக்குள் சென்று எல்லோருக்குமாய் டீ எடுத்து வந்தாள்.

அன்று டாக்டரிடம் சென்று வந்ததும் டீ சாப்பிட்டதும் காயத்திற்கு களிம்ப்பு தடவியதும் வாசலில் தலை வைத்து படுத்திருக்கிற போது எப்பொழுதாவது தோன்றி மறைவதுண்டு, கூடவே குடும்பம் என நடத்தினால் திலகா போல் ஒருவளைக் கட்டிக்கொண்டு டாக்டர் தம்பதிகளைப்போல சந்தோஷமாக வாழவேண்டும் என்கிற நினைப்பும் வராமல் இல்லை.