17 Nov 2010

பாரவண்டி,,,,,,

                    
        
     நேற்று மாலை வேலைமுடிந்து நானும் எனது சக ஊழியரும் பஸ்ஸிற்காக நின்றிருந்த நேரம்.
     ரிடையர்ட் வாத்தியார் ஒருவரை பார்த்தோம்.பரஸ்பரம் வணக்கங்கள் முடிந்தவுடன்அவர்சொன்னார்.
  “ மொதெல்லாம்இந்தவழியில மாட்டுவண்டிகநெறைய போயிக்கிட்டுயிருக்கும்,
பருத்தி,வத்தல்,நவதானியமூட்டைகள்ன்னு பத்து பதினஞ்சு கிலோ மீட்டர்
தள்ளியிருக்குற ஊர்கள்ல இருந்தெல்லாம் வண்டிக வரும் சார்.
இந்த இந்த பாதையிலதான் வரும் . இப்பத்தான இது தார் ரோடு,அப்பல்லாம் இது மண்பாதைதான்.
  பாதையோட ரெண்டுபக்கமும் வெள்ளாமை நெறைஞ்சு கிடக்கும் பச்ச பச்சேல்ன்னு.கம்பு.சோளம்இப்படிநெறையா.அதுக்கு யெடையில மாட்டுவண்டிக நெறைபாரத்தோட வர்ரத பாக்கவே அழகாயிருக்கும்.
    இந்த ஊர்லதான் வண்டிகள நிறுத்தி மாடுகள அவுத்துப் போட்டுட்டு கொஞ்சம் தைப்பாறிட்டுப் போவாங்க. இந்த காட்டுப் பாதையில போயி டவுனுக்குப் போனா பக்கந்தான் என மண்ரோட்டை காண்பித்தார்.
      இந்தடீக்கடையிலயேவாரம்னாயேவாரம்அப்படிஒரு யேவாரம்.
இந்தகடையில மட்டும் இல்ல.இங்க இருக்குற எல்லா  டீக்கடைகளிலும் நல்லா யேவாரம் நடக்கும் சார்.
      எங்களமாதிரிவாத்தியார்கதான்வாங்கித் திங்க யோசிப்போம்வண்டிக்காரங்க ஒரு இழுப்புதான்.  அவுங்க அந்த நேரத்துல சாப்டாத்தான் சாப்டபடி.”
        பேச்சு அப்படியே வளர்ந்து, வளர்ந்து எங்கெங்க்கோ சென்று திரும்பியது.
மாட்டுவண்டியில் டவுனுக்குப் போகும் சரக்குகள் அப்படியே அட்டம் சுழிக்காமல் கமிஷன்கடைக்குத்தான் போகும்.(விவசாயிகளின் விளை
பொருட்களை விற்றுத் தருகிற இடம். அதற்கு கடைக்காரர்களுக்கு குறிப்பிட்ட சதவீதம் கமிஷன்) ஏனெனில் விவசாயிகளின் விளைச்சல் செலவுக்கு கமிஷன் கடைக்காரரிடம் கடன் வாங்கியிருப்பார்கள்.
      அதற்கு பிரதிபலனாய்த்தான் அந்த கமிஷன் கடையில் விளைபொருள் தஞ்சம்.கடைக்கு சரக்குகள்வந்து இறங்குற நேரம்,,,,,,,,
   அடேயப்பா,,,,,சந்தோஷமும் உற்சாகமுமாய்,கடையே ஈஸ்ட்மென் கலரில் காட்சியளிக்கும்.கமிஷன் கடைமுதலாளி,கடை சிப்பந்தி,மூடை இறக்கும் லோடுமேன்,வண்டிக்காரர்,சரக்கு மாதிரி எடுப்பவர் இப்படி அந்தக் கடையோடும் வந்து இறங்குகிற பொருளோடும் சம்பந்தப் பட்டவர்களுக்கு “படக்கென”உடம்பின் ரெண்டுபக்கமும் இறக்கைகள் முளைத்துப் போகும்.
      இந்த வித்தைகளையெல்லாம் பார்த்துக் கொண்டு கடை ஓரமாய் உட்கார்ந்திருப்பார் விவசாயி.அவருக்கு அதுதான் சாத்தியப்படும்.அவரது விளைபொருட்களின் விலை நிர்ணயம் பற்றி எல்லாம் கமிஷன் கடை முதலாளி பார்த்துக் கொள்வார்.
      இதில் நிறைய உள்வேலைகள் நடக்கும்.ஆனால் விவசாயி எல்லாம் தெரிந்தும் எதையும் வெளியில் சொல்ல மாட்டார்.வெளியே சொல்ல அவர்களுக்கு ஏது திராணி.?
      இந்த காட்சிகளையெல்லாம் ஒன்றுவிடாமல் பார்த்துக் கொண்டிருக்கிற பக்கத்துடீக்கடைக்காரர்பக்காவாகதலைகளைகணக்கிடுவார்.   சிரிப்பும்,பேச்சுமாக.
கடனுக்குத்தான்போகும்டீ. “வருமில்ல காசு கமிசன் கடையிலிருந்தான்”என்கிற நம்பிக்கைதான்.
     கன்னத்து எலும்புகள் வெளித்தெரிய,ஒட்டிப் போன உடலும்,உள்வாங்கிய கண்களுமாய், உருமாத் தலையுடன் ,,,,,,,கொஞ்சம் பூசினார் போல,,,,,,,வயிறு நீட்டி தலை பின் தள்ளியிருக்க,,,,,,,, முரட்டுமுகமாய்,பிஞ்சு முகமாய்,,,,,,
இப்படி பலவிதங்களில் விவசாயிகளும்,வியாபாரிகளும். கிராமங்களில் விளையும்விளைபொருட்களை வாங்க கிராமத்திலேயேவியாபாரிகள்உண்டு.
பருத்தி,வத்தல்,வரகு,நெல்,நவதானியம் எதையும் விடுவதில்லை  அவர்கள்.
   சைக்கிள் கேரியரில் ஒரு சாக்கு,தராசு,எடை கற்கள் இவைகளை வைத்துக் கொண்டு கிராமத்தையே வலம் வருவார்கள்.வீடுகளில் உள்ள விலை பொருட்கள்அவர்களதுகண்களில்பட்டுத்தப்பிப்பது கடினம்தான்.
   கிராமத்தையே சலித்து எடுத்து ஒருவருக்குப் போட்டியாய் ஒருவர் வியாபாரம் வாக்குவார்கள்.வியாபாரம் செய்வார்கள்.கமிஷன் கடையில்விற்பார்கள்.
   அப்புறம் பழையபடியும்,,,,,,,,,,,,,,,,வியாபாரி, விளைபொருள், கமிஷன் கடை,,,,,,,,
என்கிற சுழல் சுழலும்./
     இந்த சுழலின் வட்டத்தை மையப் படுத்தித்தான் வாத்தியாரின் பேச்சு இருந்தது.ஆனால் மேற்சொன்ன இந்த பேச்சுக்களெல்லாம் தமிழ் சினிமாவின் சுழல்வட்டங்களுக்குமத்தியில் வரும் கனவுக் காட்சிகளாய் அழிந்தும்,மறைந்தும் கொண்டு போகிறதே. சமீப காலக்களாய்.
   நெருக்கடி நிறைந்த இந்த வாழ்வில்  வாத்தியார் பேசிய ,விவரித்த காட்சிகள் திரும்பவும் சாத்தியப் படுமா?மாட்டு வண்டிகளையும்,டிராக்டர்களையும் நிறைபாரத்துடன் பார்க்கமுடியுமா?
  அந்தகிராமத்துடீக்கடைவியாபாரம்திரும்பவும்சூடு பிடிக்குமா?
கடைக்காரர்,சிப்பந்தி,லோடு மேன்,விவசாயி, வியாபாரி, தரகர், வண்டிக்காரர் என அனைவரது வாழ்வும் திரும்பவும் ஒன்றாக பிணைக்கப் படுமா? என வாத்தியார் கேட்கிறார்.
பதில் சொல்லுங்களேன் யாராவது.


8 comments:

 1. vazhththugal nanpare
  polurdhayanithi

  ReplyDelete
 2. தாங்கள் இடுகையிட்டவுடன் தங்கள் இடுகையை இண்டலில் இணைக்கவும்.

  ReplyDelete
 3. சிந்திக்க வைக்கும் கட்டுரை

  ReplyDelete
 4. வணக்கம் ஹரீஸ் சார்.இண்டிலியில் இணைப்பதில் ஏதோ பிரச்சனை.சரிசெய்யத் தெரியவில்லை.முயற்சிசெய்து இணைத்து விடுகிறேன்.

  ReplyDelete
 5. வணக்கம் போலூர் தயாநிதி சார்.உங்களது வருகைக்கும்,கருத்துரைக்கும்.

  ReplyDelete
 6. வணக்கம் பிச்சைக் காரன் சார்.உங்களது வருகைக்கும்,கருத்துரைக்கும் நன்றி.

  ReplyDelete
 7. //இண்டிலியில் இணைப்பதில் ஏதோ பிரச்சனை//

  தகுந்த பிரிவை தேர்ந்தெடுத்து பின் இணைக்கவும்..

  தங்கள் இச்சிப்பூ இடுகையை நான் தான் இணைத்தேன்,,பிரச்சினை இருப்பதாக தெரியவில்லை..

  திரட்டிகளில் இணைப்பதால் உங்கள் பதிவு பலரையும் சென்றடையும்..

  ReplyDelete
 8. ​​நன்றி ஹரீஸ் சார்.

  ReplyDelete