9 Dec 2010

மானமே உயிராக.....

                             

  
     பார்த்து விட்டான்.சாப்பிட வேண்டும் என்ற ஆசையும் வந்து விட்டது.வாய் விட்டு கேட்டும் விட்டான்.பெரிய ஆள் நீங்க,ஒரு பஜ்ஜி வாங்கிக் குடுங்க” என.
    அகண்டுநீண்டுவிரிந்தசாலை.அதன்இடதுபக்கஓரமாகவரிசையாகவும்,
ஒன்று விட்டு,ஒன்று தள்ளியுமாய் அமைந்திருந்த கடைகளில் அந்த டீக் கடை பிரதானமாகத் தெரிந்தது.
காலையும் மாலையுமாக மட்டும் அல்லாமல் நேரம் கிடைக்கிற பொழுது அல்லது டீ சாப்பிடவேண்டும் என தோனுகிற ஆசை எழுகிற பொழுது அங்கு ஆஜராகிவிடுவோம்.
   மிஞ்சிப்போனால்(அதுவும்ரொம்பவும்மிஞ்சினால்தான்)இரண்டு வடை,ஒரு டீ.
பெரும்பாலான நேரங்களில் டீ மட்டும்தான்.
 எண்ணைப் பலகாரம் உடலுக்கு ஏற்றதல்ல என்கிற ஆழம் உள்ளுக்குள் வந்து போக அந்த எண்ணத்தின்படியே செய்துவிடுவேன்.
நமக்கெதற்கு வம்பு என்கிற எண்ணம் மேலோங்க வடையை தியாகம் செய்து விட்டுடீயைமட்டும் குடிப்பவனாக ஆகிப் போவேன் பல சமயங்களில்.
   சரித்தான் இன்றிலிருந்து  விட்டு விடுவோம் என நினைக்கிற நேரங்களில் வந்து விடுகிற வடை மீதான ஆசையை தள்ளிப் போடாமல் வடையை சாப்பிட்டு டீக் குடித்து விடுவதும் உண்டு.
   அப்படித்தான் நானும்,அப்துல்லா பாயுமாக டீ சாப்பிடப் போனோம்.கூடவே விட்டேத்தியான எனது மனோநிலையும்.
    எதிர்பார்த்திருந்த ஒன்று நடக்காமல்,அல்லது நடக்காது போல் தோற்றம் தருகிற போது,நடக்காது உறுதியாக என அடுத்தவர்களால் கூறப் படுகிற போதுஅவிழ்ந்துகொட்டிவிடுகிறமனோநிலையைஅள்ளிமுடிய முடியாமலும்,
அள்ளிமுடியமனம்இல்லாமலுமாய்,அற்றலைந்துதிரிகிறபொழுதுகளிலும்
மனதுக்குமிகவும்பிடித்தமானதாய்அமைந்துபோகிறகணங்களிலும் இப்படித்தான் ஆகிப் போகிறது.
    “என்ன செய்யசொல்றீங்க?”என்கிற மனோநிலையினனாய் அப்படியே பயணித்து விடுவதுண்டு,போய்விடுவதுண்டு.
மத்தியதரவர்க்கத்தைசார்ந்தபலருக்கும்அதுதான்கைவரப் பெற்றிருக்கிறது.
எனக்க்கும் என்னைப் போன்ற பலருக்கும் அப்படித்தான் போலும்.
 “விடுறாகைப்புள்ள”எனகிளம்பிவிடுகிறோம்.
     சாலையைகடந்தபஸ்,லாரி,மாட்டுவண்டி,ஆட்டோ,இருசக்கர வாகனங்கள்,
மனிதர்கள் எல்லாம் கடந்து பயணித்தவர்களாய் போய் சேருகிறோம் டீக் கடைக்கு.
     ஆடுகாலி டீக்கடை என்பான் அருண் அந்தக் கடையைப் பற்றி கூறுகிற போது.
    சேட்டைக் கார அருணுக்கு இன்றெல்லாம் இருந்தால் 26 இருக்கலாம் வயது.கண்களில் கனவையும்,மனதில் லட்சியத்தையும் ஏந்திக் கொண்டு திரிகிற லட்சோப லட்ச இந்திய இளைஞர்களின் அச்சடித்த பிரதிநிதி.
   எங்களதுஅலுவலகத்தில்பணிபுரிகிறான்.கடைநிலை ஊழியராக.
சிரிப்புக்கும்,பேச்சுக்கும் அவனிடம் பஞ்சமில்லை.என்ன அருண் என்றால் போதும். “அட போங்கண்ணே,சும்மா இருங்கண்ணே,,,,,,,,,,,,என்பான்.
ம்ம்,,,,, அதுவும் அப்பிடியா?என்றால் போதும் போங்கண்ணே, எனக்கு வேலை இருக்கு என போய் விடுவான்.
மனிதஉணர்வுகளனைத்தும்பிசையப்பட்டுசரிவிகிதத்தில் கலந்திருப்பதாகத்
தோனும் அவனை பார்க்கிற கணங்களில்.
     அப்படித்தெரிகிற அருண் பட்டப் பெயர் வைத்த கடைக்குத்தான் நாங்கள் சென்றோம்.
இளஞ்ச்சிவப்பாரஞ்சு நிறத்தில் எண்ணை மினுமினுக்க தட்டு நிறைய பரப்பி வைக்கப் பட்டிருந்த பஜ்ஜியும்,பழுப்பு வெள்ளைநிற வடையுமாக பரப்பியிருந்த தட்டுதான் நாங்கள் போன சமயம் கண்ணுக்கு புலப்படுகிறது.
   டீக் கேன்,டீ மாஸ்டர்,வடை போடுகிற அடுப்பு,டீக் கடை பையன், கடையின் அழுக்கு என,,,,,,,நிரைந்து போனவைக(ள்)ர் எல்லாமுமாக அப்புறமாகத்தான் தெரிகிறார்கள்.
   டீக்கு சொல்லிவிட்டு நின்று விட்டோம்.அந்நேரமாகத்தான் அவனது வருகை நிகழ்கிறது.
   மஞ்சள் கலரில் வெள்ளை கோடுகள் போட்ட டீசர்ட்,பழுப்புக் கலர் ஃபேண்ட், புதுநிறமாய்த்தெரிந்தமுகத்தில்முள்ளு,முள்ளாய்குத்திட்ட்டுநீட்டிநின்ற முடிகள்,லேசாக திறந்திருந்த வாயில் பழுப்பும்,வெண்மையுமாகத் தெரிந்த பற்கள்.கலைத்துப் போடப்பட்டிருந்த தலை முடி கற்றைகள் சற்றே எண்ணை வற்றிப் போய்./
     பரிதாபமாகதோற்றம்தந்தஅவன்ஏன்அப்படிக்கேட்டான் எனத்
தெரியவில்லை.அதற்கு அப்துல்லா பாயும் ஏன் அப்படிசொன்னார் எனத் புரியவில்லை.சொல்லிவிட்டார்.
    “டேய்,நீ வேல பாக்குற  கட ஓனர்கிட்ட போயி கேளு,ஏங்கிட்ட வந்து கேட்டயின்னா?என்றார் படக்கென.சுருங்கிப் போனான் பாவம்.
   ஆடிக்காற்றுவேகமாகஅடிக்கிறமாதங்களில் கிராமகளில் தோட்டம்,காடுகளில் வேலை அற்றுப் போன நாட்களில் விவசாயக் கூலிகளின் நிலை வெகு திண்டாட்டமாய் போய் விடுவதுண்டு.
ஒரு டீக்கும்,வடைக்குமாக கடன் சொல்லிக் குடிப்பதற்கு அவர்கள் படும்பாடு சொல்வதற்குவார்த்தைகள்இல்லை.
மனம் கூசி,குறுகி,கூம்பி,தயங்கி,,,தயங்கி,,,,,தயங்கி கடைக்கு வந்து கடைக் காரரிடம் அவர்கள் டீ வாங்கி குடிக்கும் முன்பாக அவர்களுக்கு அரை உயிர் போய் விடும்.(பிறகு கடைக் காரர்மனது வைத்து,பெரிய மனது பண்ணி டீக் கேட்டவரின் தராதரத்தை ஒரு அடிக்குச்சி வைத்து அளந்து பார்த்து பின் டீ கொடுப்பார்.அது தனிக் கதை.)
   அது மாதிரியான தோற்றத்தில் நின்றவனைப் பார்க்க மிகவும் பரிதாபமாக இருந்தது.கையில்டீக்கிளாஸீடன்நின்றிருந்தநான்கடைக்காரரைப் பார்கிறேன்,
கடைக்காரர்அப்துல்லாவைப்பார்க்கிறார்.அப்துல்லாஎன்னைப் பார்க்கிறார்.
எங்கள் மூவரின் பார்வையும் பஜ்ஜி கேட்ட பையனின் மேல் குவிகிறது. “ஒரு இரண்டரை ரூபாய் பஜ்ஜிக்கு இந்தப் பாடா?இவ்வளவு பில்டப்பா”?
   எந்த புள்ளியில் எங்களது பார்வை குவிந்ததோ,அந்தப் புள்ளியை தாங்க மாட்டாதவனாய்கோபத்துடனோஅல்லதுமனத்தாங்கலுடனோஅல்லது அவமானம் இழைக்கப்பட்ட மனதுடனோ அந்த இடத்தை விட்டு அகலும் அவனை நோக்கி விரைகிறோம் நானும்,அப்துல்லாவுமாக.  கையில் இரண்டு பஜ்ஜியை வாங்கிக் கொண்டு,/   

12 comments:

 1. மனித உணர்வுகளை துல்லியமாக பதிவு செய்துள்ளீர்கள்

  ReplyDelete
 2. அந்த வடையை விடுங்க... இந்த வடை எனக்குத்தான்...

  ReplyDelete
 3. ஏன் இன்னமும் இன்ட்லியில் இணைக்கவில்லை...

  ReplyDelete
 4. தமிழ்மணத்தில் மட்டும் ஓட்டளித்து விட்டு கிளம்புகிறேன்...

  ReplyDelete
 5. oru nigalvai romba unarvupoorvamaaga sollivittergal....
  really i like it....

  ReplyDelete
 6. என்ன சார்..கொஞ்சனா நாளா ஆளையே காணும்...பிஸியா?

  ReplyDelete
 7. ஒரு தேசத்துக்கான ரோஷம் தொலைந்துபோனது கூடவே அதன் தாய்த்தன்மையும்.அடித்தட்டு ,மனிதர்கள் இப்படி ஒரு டீ, ஒரு கிலோ அரிசி ஒரு குவார்ட்டர் மது, ஐந்து வருத்தில் ஒருநாள் கிடைக்கும் சில நூறு ர்ரூபாயில் முடங்கிப்போகிறார்கள்.இது கொடூரம் மூர்த்தி. ஒரு தேசத்துக்கான ரோஷம் தொலைந்துபோனது கூடவே அதன் தாய்த்தன்மையும்.

  ReplyDelete
 8. அனைவருக்கும் நன்றிகளும்,வணக்கங்களும்,உங்களது கருத்துரையை தலை வணங்கி ஏற்கிறேன்.

  ReplyDelete
 9. மானமே உயிராக ..ஆம் மனித மன உணர்வுகளை ஆழமாக அலசியுள்ளீர்கள்.

  ReplyDelete
 10. வணக்கம் ராஜராஜேஸ்வரி மேடம்.மனித உணர்வுகள் மதிப்புகள் எங்கோ சென்றுகொண்டிருப்பதாயும்,நாம் எல்லோருமே ஒருவிதமாய் வடிவமைக்கப்பட்டுக் கொண்டிருப்பதாயும் தெரிகிறது.

  ReplyDelete
 11. சில நேரங்களில் வறுமை கொடிது எனத் தோன்றினாலும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தாத மெத்தனமோ நம் மக்களிடையே எனும் ஆதங்கமும் தோன்றுகிறது. என்ன வளம்(வேலை) இல்லை இந்த திரு நாட்டில்... ஆட்கள் தான் இல்லை....

  ReplyDelete
 12. இல்லை எழில் மேடம் என்ன வளம் இல்ல்லை இந்த திரு நாட்டில் எனச் சொல்லப்படுகிற வார்த்தைகளினூடாக சரக்கு இருப்பு கிட்டங்கிளில் யாருக்கும் ப்பயன் படாமல் உளுத்துப்போகிற அரிசியும்,இன்னும் பிற உணவுப் பொருட்களுமாய் நமக்கு படம் பிடித்து கண்பிக்கப்படுகின்றன.நன்றி எழில் மேடம் த்னக்கள் வருகைக்கு/

  ReplyDelete