27 Jul 2011

பக்கவாட்டு வெளிகளில்,,,,,,,,,,,,,,,


                             
  
        வீட்டின்பக்கவாட்டுவெளியைகூட்டிக்கொண்டிருக்கையில் என்னைப்
பார்த்து சிரித்து கண்சிமிட்டிய உதிர்ந்த மரஇலைகள் விளக்குமாரின் அடியிலும் தரையிலும் இழுபட்டவாறு கேட்டது. நலம்தானா,,,,,,,?என/
      ம்...........நலத்திற்கு என்ன குறைச்சல்.வாரம் ஒருமுறை ஞாயிறின் லீவில் விருந்தாளி போலசொந்தவீட்டிற்குவந்துபோகிறநான்செளகரியமாகவும்தான்செளகரியமற்றும்தான்/
            வாரம்முழுவதும்திங்கள்கிழமையிலிருந்துசனிக்கிழமைவரைஇட்லி,தோசை,பொங்கல்,
பூரி என சாப்பிட்டு நாக்கு செத்தும் போய் விடுகிறது,வெறுத்தும் விடுகிறது.சமயத்தில் வாயெல்லாம் உலர்ந்தும் கூட போய் விடுகிறது.வேறென்ன செய்ய?பசிக்கும்,உயிர் வாழ்ந்து ஜீவிக்கவுமாய் இப்படி சாப்பிட வேண்டியிருக்கிறதே,,,,,,,என்கிற நினைப்புடனும்,வெறுப்படனும்,வைராக்கியத்துடனுமாய் சாப்புடுகிற சாப்பாட்டிலிருந்து விடுதலை பெற்று  ஒரு நாளின் லீவில் வீடு வந்து சாப்புடுகிற ருசியான சாப்பாடுதான்அடுத்த ஞாயிறின் அதிகாலைவரை நாவின் சுவை அரும்புகளில் தங்கிக்கிடக்கிறது.
      அப்படியான தங்குதல் இந்த மாதிரியான லீவு நாட்களில் இன்னும் கூடுதலாகும்.அதிகாலையில் கிடைக்கிற இரட்டை டீயிலிருந்து மட்டன் அல்லது சிக்கன் சாப்பாடு வரையான ஒரு நாளின் நகர்வு எல்லாவற்றையும் ஈடு கட்டிவிடும்.
      கடந்த 20 நாட்களாக கேட்டுக்கேட்டுப்பார்த்து கிடைக்காத லீவு நேற்று பின் மாலை சரிகிற நேரத்தில்தான் கிடைக்கிறது.
      நேற்று இரவு 9.30 மணிக்கு நான் வேலை பார்க்கிற ஊரிலிருந்து பஸ் ஏறினேன்.அதிகாலை3.30க்குவிருதுநகர்பஸ்நிலையம்வந்து இறங்கினேன்.
கிட்டத்தட்ட ஆறு மணி நேர பிரயாணம்.அத்தனை நேரமும்  சுமந்து வந்த எண்ணங்கள்,பிரயாண களைப்பு,உடல் வலி என அனைத்தையும் பஸ் நிலையத்தில் இறக்கி வைத்து விட்டு பஸ்நிலையத்தின் ஓரமாக களைத்து நின்ற டீக் கடையில் டீ சாப்பிட்டு விட்டு  ஆட்டோ ஏறுகிறேன்.
    அதிகாலை பொழுதிலும் களைப்பை உதறி விழித்திருந்த பஸ்நிலையம் ,அதன் விஸ்தீரனம்,அரைகுறையான விளக்கு வெளிச்சம்,ஓரமாய் நின்ற ஆஸ்பெஸ்டாஸ் செட்,ஆணுக்கும்,பெண்ணுக்குமென தனித்தனியாய்கழிப்பறைகள்,பஸ்னிலையத்தின் அழுக்கு,அதில் படர்ந்து நின்ற தூசி,ஆங்காங்கே கிழிந்து கிடந்த பேப்பர்கள் எல்லாம் கலந்து கட்டி காட்சியளித்தன.
      மதுரை பஸ் நிலையத்தில் சாப்பிட்ட டீப் போல இல்லை.எனக்குத்தெரிந்து கிட்டத்தட்ட பத்து வருட காலமாக அதே ருசியை தொடர்ச்சியாக தக்க வைத்துக்கொண்டிக்கிறகடைஎன்பேன்.டீ மாஸ்டர்களை தனியாக அழைத்துக்கொண்டு போய் இதற்காக  கை கொடுக்கலாம்.  எந்நேரமும் ஆட்கள் நின்று டீ குடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.ஒரு நாளைக்கு அங்கு டீக்குடிப்பவர்களது எண்ணிக்கை 500 ஐத் தாண்டும் போல/
     அங்கு குடித்த டீயின் ருசியுடன் பஸ் ஏறி விட்டேன்.அந்த பஸ்ஸில் பிரயாணித்த நினைவுடனும்,ஆட்டோவில் பயணிக்கிற ஆவலுடனும் இன்று அதிகாலையில்தான் வீட்டில் வந்து இறங்கினேன்.
     வந்ததும் தூங்கிக்கொண்டிக்கிற பிள்ளைகளை எழுப்பாமல் மனைவியுடன் சிறிது நேரம் பேசிவிட்டு படுத்த எனக்கு பகல் பத்து மணிக்குதான் விழிப்பு வருகிறது.முகம் கழுவி டீ சாப்பிட்ட எனக்கு வீட்டின் பின்பக்கம் கூட்ட வேண்டும் போல இருந்தது.கூட்டிக்கொண்டிருக்கையில்தான் இலையின் பேச்சு என்னுடன்/
     கேட்டிருந்த விடுப்பு தாமதமாக கிடைத்ததிலும் ஒரு நன்மை இருப்பதாகப் படுகிறது.இல்லையெனில் இலைகளுடன் உறையாடும் பாக்கியம் கிடைத்திருக்குமா சொல்லுங்கள்.
    அடிக்கிற காற்றிலும்,வெயிலிலுமாய் அன்றாடம் எங்களது வீட்டை ஒட்டிய வெற்று வெளியில் உதிர்ந்து கிடக்கிற இலைகளில் காய்ந்து சருகானதும்,இளம்பச்சையாய் உள்ளதும் பழுத்துமாய் இருக்கிறவைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கேள்வியை எழுப்பவும் அதற்கு பதில் சொல்லவுமாய் நான் இருந்த நேரம்தான் சருகாய் காய்ந்து உதிர்ந்து போகிற நிலையிலுள்ள இலை சொன்னது அந்த குழந்தையின் வருகையை.
    வீட்டை ஒட்டியிருந்த பக்க வாட்டு வெளியை நாங்கள் தோட்டமாக கருதிய இடத்தில்தான் இரண்டு வேப்பமரங்கள்,இரண்டு பன்னீர் மரங்கள்,ஒரு பூ மரம் என  நின்றது.அதில் நிற்கிற பூமரம் மட்டும் எப்போதும் என்னை நாணத்தோடு  பார்ப்பதாய் எண்ணிக் கொள்கிறேன்.அது ஏன் எனத் தெரியவில்லை.ஒரு வேளை பூவில் கொத்துக்கள் தலை கவிழ்ந்தும் நிமிர்ந்தும் நிற்பதாலோ என்னவோ?,,,,,,
வீட்டினுள்ளிருந்து வேகமாக ஓடிவந்த குழந்தையின் வயது ஒன்றையிலிருந்து இரண்டுக்குள்ளாக இருக்கலாம்.வாயின் இடது ஓர சாப்பிட்ட சாப்பாட்டின் மிச்சம் ஒட்டியிருந்தது.ஒல்லியாய்குச்சிபோலிருந்தஅதன்பிஞ்சுக்கால்கள்பாவிய தரையிலிருந்த மண் அக்குழந்தையின் உடல் மொழியறியுமா என்னவோ தெரியவில்லை.ஆனால் அதற்குதகுந்தாற்போலவும்,ஏற்றாற்போலவும்தான்அக்குழந்தையின்நடையும்,அசைவும்/
    கால்களின் கொலுசுச் சத்தமும் ஆடையசைவும் அசைந்தாடிவரும் ஒரு பூச்செடியின் தோற்றமாய்.ரோஸ்கலரில் பூப்போட்ட டரவுசரும்,வெள்ளை கலரில் பனியனும் அணிந்திருந்த பிஞ்சு தனது சின்னக்கைகளை நீட்டி,நீட்டி ஆச்சி,,,,,ஆச்சி,,,,,,என தனது மழலை மொழி மாறாமல் அங்கு முள் வெட்டிகொண்டிருந்த பாட்டியை நோக்கி வருகிறது.
     வருகிற வழி சின்னதுதான்.ஒற்றையடி பாதையை விட சற்றே அகன்ற அந்த பாதையின் இரண்டுபக்கமும் முள்முளைத்துக்கிடக்க நடுவில் விரிந்த அந்த பாதையின்  பரந்திருந்த தூசியிலும்,பறந்து விழுந்திருந்த  மர இலைகளின் மீதுமாய் எட்டெடுத்து வைத்தவாறு வருகிறாள்.
     ஏ,,,,,,,,மண்ணே,மண்ணே,,,,,ஏ,,,,கல்லே,கல்லே,,,,,மரமே,மரமே,,,,இலைகளே,இலைகளே,
கிளைகளே,கிளைகளே,,,,, சுற்றியுள்ள மற்ற எல்லாமுமேவே,,,,,, என்னிடம் வந்து ஏதாவது பேசுங்களேன் என அவைகளிடம் கேட்டவாறு நடந்து வந்த மாதிரியும் தெரிந்தது அந்த நடை.
     ஆனால் மண்ணில் முளைத்திருந்த மரமும்,மரத்திலிருந்த கிளைகளும்,கிளை தாங்கியிருந்த இலைகளினூடாக ஒட்டித்தொங்கிய காய்களும் பூவும்,பிஞ்சும்,அதன் சுகந்தமும் மணமும் அவை விட்ட சுவாசமும் என்னவெனக்கூட கேட்கவில்லை.மாறாக பாட்டிதான் கேட்டாள்.
     “ஆச்சி,,,,ஆச்சி,,,ஆச்சிதான்,ஆச்சிகிட்ட அப்பிடி என்ன இருக்குன்னு ஓடி வர்ர,,,,,,,,,,,,?”ஒண்ணுக்கு வழியில்லாமத்தான் இங்கன கெடந்து முள்ளு வெட்டிக்கிட்டு கெடக்குறேன்.
     “புள்ள,குட்டி இல்லாத இந்த அனாதையப்பாத்து நீயாவது வாய்நெறைய ஆச்சின்னு கூப்புடுறீயே”,,,,,,என கண்களில் நீர்மல்க அக்குழந்தையை தூக்கிக்கொண்டாள்.
பளிச்சிட்டுஅடித்த வெயில் அந்த இடத்தை இன்னும் வெளிச்சமாகக்காட்டியது.  
   



No comments: