19 Sept 2011

வயர்கூடை,,,,,,



  
ஒன்பதாம் வகுப்பு
L பிரிவு என பெயருடன்
சேர்த்து எழுதப்பட்டிருந்த
துண்டுச்சீட்டு ஒன்று
வயர் கூடையின்
அடியில் ஒட்டிக்கிடக்கிறது.
நேற்று காலை
நேரமாகிப்போனதாக
சொல்லிவிட்டு
சீக்கிரமாய் பள்ளி சென்றுவிட்ட
மகனுக்கு மதிய உணவு
கொடுக்கப்போன தாயின்
கையிலேயே திரும்பவுமாய்
அந்தச் சீட்டு கிடைக்கிறது.
அடையாளதிற்காய் பள்ளியில்
எழுதி போட்டிருந்திருக்கலாம்.
சமையல்கட்டு,பால்காரர்,
பாத்ரூம்,கணவனுக்கு காபி,
பிள்ளகளுக்கு சாப்பாடு,,,
என்கிற அவசரங்கள் சுமந்து
சுழன்ற அவளின் முன்
சாப்பாடு டப்பா,தண்ணீர் பாட்டில்,
அது பொதிந்திருந்த
கலரான வயர் கூடை,
அது சுமந்திருந்த
சீருடை அணிந்திருந்த மகன்,
அவனது அருகில்
நின்றிருந்த சைக்கிள் என
அந்த காலை நேர அவசரத்திலும்,
பரபரப்பிலும் அழகுபட்ட
அந்த சூழலை பார்த்த
தாய் அவனிடமிருந்து
துண்டுச்சீட்டை வாங்குகிறாள்
வாஞ்சையுடன்/ 

10 comments:

வெளங்காதவன்™ said...

அருமையாய் இருக்கிறது...

vimalanperali said...

ரொம்ப நன்றி விளங்காதவன் சார்.உங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக.

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.

காந்தி பனங்கூர் said...

சிறப்பான பதிவு. சொல்லிச் சென்ற விதம் அருமை.

vimalanperali said...

வணக்கம் ரத்தினவேல் சார்.வயர்பின்னலாய் வாழ்க்கை.

ரிஷபன் said...

துண்டு சீட்டில் எத்தனை உணர்வுகள் வயர் கூடை போல பின்னப்பட்டு இருக்கிறது.. அருமை.

vimalanperali said...

வணக்கம் காந்தி பனங்கூர் சார்.நலம்தானே?பின்னல்களின் லயங்கள் பிடிபடும் வாழ்க்கை.

vimalanperali said...

வணக்கம் ரிஷபன் சார்.பின்னலின் சுழிவுகளில் கற்றுத்தெளிகிற வாழ்க்கை.ழ்க்கை.

வெங்கட் நாகராஜ் said...

இன்றைய வலைச்சரத்தில் உங்கள் வலைப்பூவையும் தொடுத்திருக்கிறேன். காண வாரீர்......

http://blogintamil.blogspot.in/2014/11/gdh.html

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

vimalanperali said...

வணக்கம் வெங்கட் நாகராஜன் சார்,
நன்றி வருகைக்குக்ம்,கருத்துரைக்குமாக/