24 Nov 2011

ஒளிவிளக்கு,,,,,,,,


      ஒரு வருடத்தின் முடிவில்காணாமல்
போய்விட்டதாக எனது மகள்
சொன்ன மெழுகுவர்த்தி
பிறிதொருநாளின்
முன் மாலையில்
பரண்மேல் பார்க்கக்கிடைத்தது.
கார்த்திகை திருநாளன்று
கலர்,கலராய்
ஆள்காட்டி விரல் நீளத்திலும்
அதைவிட தடிமன் சிறியதாயும்
வாங்கி வந்த மெழுகுவர்த்திகளை
வாசற்படியில் ஒன்றின் கீழ்
ஒன்றாய் வரிசையாக
பொருத்தி வைத்திருந்தோம்.
அழகாயும்,கண்சிமிட்டியுமாய்
காற்றில் ஆடியுமாய்
எரிந்த மெழுகுவர்த்திகளுடன்
எனது மகள் பேசிச்சிரித்து
உறவாடிக்கொண்டிருந்த நாட்களில்
வந்த கார்த்திகையும்
முடிந்து போனது
எந்த முன்னறிவிப்பும் இல்லாமல்/
முடிந்த திருவிழாவை
வருத்ததுடன் எதிர்கொண்ட
அவள் ஓரங்கட்டிப்போட்டதை
இன்றுதான் பார்க்கிறாள்.
ஒடிந்த நிலையிலும்,திரிகருகிப்போயுமாய்/   

21 comments:

 1. எந்த ஒரு போலி நாகாசுப்பூச்சும் பண்டித பாசங்கும் இல்லாமல்
  உணர்வுகளை படிப்பவரும் உணரும்படியான
  இதுபோன்ற படைப்புகளே என்னை மிகவும் வசீகரிக்கின்றன
  அருமையான படைப்பு
  தொடர வாழ்த்துக்கள்
  த.ம 1

  ReplyDelete
 2. முடிந்த திருவிழாவை
  வருத்ததுடன் எதிர்கொண்ட
  அவள் ஓரங்கட்டிப்போட்டதை
  இன்றுதான் பார்க்கிறாள்//

  அசத்தல்...

  ReplyDelete
 3. வணக்கம் ரெவெரி சார்,நலம்தானே?கருகியதிரியை விடுத்து நல்ல திரியில் பற்றவைக்க ஆசைப்பட்டு ஓடிக்கொண்டிருக்கிற சமூகம் படும்பாடு கொஞ்ச,நஞ்சமல்ல.
  இருந்தாலும் கருகிய திரியை நசுக்கி,நசுக்கியே பற்றவைத்துக்கொண்டிருக்கிறோம் திரும்பத் திரும்ப/

  ReplyDelete
 4. வணக்கம் பாலா சார்.நலம்தானே/ந்நன்றி உங்களது வருகைக்கும் கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 5. எந்தவித பாசாங்கும் அற்ற சமூகம் நம் கண்முன்னே ஓடிக்கொண்டிடும்,
  இழுபட்டுக்கொண்டுமாய்/
  அதிலும் உங்களது மதுரை மண்ணில் நிறைய,நிறையவே இழுபாடுகளைக்காணலாம்.
  முன்னேறியதாய் சொல்லப்பட்ட இந்த சமூகத்தில் ஒட்டிக்கொண்டிருக்கிற மிச்சம்,மீதியாய் மட்டும் அல்ல.முக்கியமானதாகவே கருகிய திரிகலைக் காணலாம்.

  ReplyDelete
 6. வணக்கம் ரமணி சார்,நலம்தானே?கருத்துக்கு பதில் சொல்லும் வேகத்தில் வணக்கம் சொல்ல மறந்து போனேன். நன்றிஉங்களதுவருகைக்கும்,
  கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 7. ஒடிந்த நிலையிலும்,திரிகருகிப்போயுமாய் இருந்தாலும் ஒளிவீசிய நட்களே மனதில் மலரச்செயததே !

  அருமையான கவிதைக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 8. வணக்கம் ராஜராஜேஸ்வரி அவர்களே,நலம்தானா?உங்கலது வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

  ReplyDelete
 9. ஒரு நிதர்சன உண்மையை எடுத்துரைக்கும் கவிதை.. அருமை ஐயா.. படைப்பிற்கு வாழ்த்துக்கள்..!! எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.. !!

  ReplyDelete
 10. முதலில் படித்த பொழுது புரியவில்லை தோழர்... மிகவும் எளிதாக இருந்தாலும் எதோ ஒரு பூடக செய்தி ஒளிந்திருப்பதாகவே பட்டது... அதனால் தான் எந்த கருத்தும் சொல்லாமல் அசை போட்டு கொண்டே இருந்தேன்... இன்று உங்கள் பின்னூட்டங்களை கண்டதும் விளங்கி கொண்டேன்...

  ReplyDelete
 11. தமிழ்மணத்தில் ஓட்டையும் பதிவு செய்தாயிற்று..

  தங்கம்பழனி வலையில்...
  Gmail-ல் இருந்தவாறே பிளாக்கரில் post செய்ய !!

  மேலும் பல பயனுள்ள தகவல்கள்.. !!!

  நேரமிருக்கும்போது வருகைதர வாசர்களையும் அழைக்கிறேன்.

  ReplyDelete
 12. பூடகமெல்லாம் ஒன்றும் இல்லை தோழர்.நடப்பை பதிவு செய்வதுதான்.அதில் முடிந்த அளவு,,,,,

  ReplyDelete
 13. வணக்கம் தங்கம் பழனி சார்.நலம்தானே?தங்களது வருகைக்கும் கருத்துரைக்குமாய் நன்றி.தமிழ்மணத்தில் ஓட்டு பதிவு செய்த்தற்கும் நன்றி.உங்களது வலைதளத்தை பார்த்த்தேன்,நன்றாக உள்ளது ஏராளமான தகவல்கள்.நன்றாக இருந்தது.

  ReplyDelete
 14. அழகு கவிதை.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 15. நல்ல பதிவு ... என் தனிமை கவிதையை படிக்க வருமாறு அழைக்கிறேன் ...http://pesalamblogalam.blogspot.com/2011/11/blog-post_24.html

  ReplyDelete
 16. வணக்கம்.ரத்தினவேல் சார்.நலம்தானே?தங்களது வருகைக்கும் கருத்துரைக்குமாய் மிக்க நன்றி.

  ReplyDelete
 17. வணக்கம் அனந்து சார் நலம்தானே?உங்க்லது வருகைக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 18. hello) who will win the FA Cup?
  [url=http://medsonlinenoprescription.net/category/erectile-dysfunction]buy erectile dysfunction pills[/url]

  ReplyDelete