7 Nov 2011

செங்கமங்கல்,,,,,,,,,


  
பந்தியில் இருந்தவர்களில்
பத்து பேர்வரை நலம் விசாரித்தார்கள்.
இன்னும் நான்கைந்து பேர்
சினேகமாய் சிரித்தார்கள்.
சொந்தக்காரரின் வீட்டுத்திருமணம்/
6.30 to 7.15 முகூர்த்தம்.
நானும் எனது மனைவியும்
பழைய இரு சக்கர வாகனத்தை
துடைத்து சுத்தம் செய்து
கொண்டு சென்றிருந்தோம்.
பட்டுப்புடவை,தங்கச்சங்கிலி,
கைவளையல்,மோதிரம் ,
பிரேஸ்லெட்,மைனர்செயின் என
பெரும்பாலுமாய் காட்சியளித்த
திருமண வீடு
களை கட்டியிருந்தது.
உடல் நலம் விசாரித்தவர்களையும்,
சிரித்தவர்களையும் கடந்து
பந்தியில் அமர்ந்தபோது
அருகில் தயங்கி,விலகி
அமர்ந்தவனைப்பார்க்கிறேன்.
நலம் விசாரித்தபோதும்,
சிரித்துப்பேசியபோதும்
ஒட்டுதலற்ற பேச்சும்,
பதிலுமாய் சொன்னவன்
யாராயிருக்கும் என
இன்று வரை புலப்படவில்லை.
ஆனால் என் வாழ்நாளின்
அனேக தருணங்களில்
அவனை பார்த்ததாகவோ
அவன் உடன் இருந்ததாகவோ
ஞாபகம் எனக்கு/ 

6 comments:

Anonymous said...

2மச்..கவிதை கலக்கல்...

vimalanperali said...

வணக்கம் ரெவெரி சார்.நலம்தானே?உங்களதுவருகைக்கும்,கருத்துரைக்குமாய் நன்றி/

Anonymous said...

11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்... வாழ்வு செழிக்கட்டும்... மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்... வெற்றிகள் குவியட்டும்... மனம் கனிந்த வாழ்த்துக்கள்...

vimalanperali said...

வணக்கம் மாய உலகம் சார்.உங்களது வாழ்த்திற்கு நன்றி.உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

முனைவர் இரா.குணசீலன் said...

கவிதைக்குச் சரியான நிழற்படங்களைத் தெரிவு செய்தல் ஒரு கலை..

அதில் தேர்ந்தவர் நீங்கள்.!!

vimalanperali said...

வணக்கம் குணசீலன் சார்.நன்றி தங்களது வருகைக்கும் கருத்துரைக்குமாக/