25 Jan 2012

மண்பூத்தசாலை,,,,,,,


                                 

      நெற்றியில் பூசியிருந்த திருநீறு பட்டையின் நீட்சி அவர் அணிந்திருந்த மூக்குக்கண்ணாடியின் மேல்பிரேமிலும், பக்கவாட்டு கைபிடியிலுமாய் பற்றிப்படர்ந்திருக்கநடந்து வருகிறார் நெஞ்சு நிமிர்த்தி/
    அடர்த்தியானகலரில்மெலிதானவேஷ்டிஉடுத்தியிருந்தார்.இருக்கிக்கட்டியிருந்ததால்
இடுப்புஎலும்பைஒட்டியசதைவெளிபிதுங்கி/
    நாலு முழ வேஷ்டிதான் போலும்.எனக்குத்தெரிந்து இந்தக்கலரில் எட்டு முழ வேஷ்டியை நான் பார்த்ததில்லை.
    சட்டையணியாத வெற்றுடம்பில் தவழ்ந்து மிதந்த வெள்ளைத்துண்டு.அதில் பெயர் எதுவும் எழுதப்படாமல் வெறுமனே “துண்டுவாக” மட்டுமே தளர்ந்து தொங்கியது/
     கலைந்துதெரிந்தஅடர்த்தியானதலைமுடியும்தாடியும்வெள்ளை காண்பித்து/
     டீக்கடையிலிருந்து வந்து கொண்டிருந்தேன்.எனக்கு எதிராக அவரும் வந்து கொண்டிருக்கிறார்.
    நடையில் தெரிந்த மிளிர்வு,உடையில் தெரிந்த தூய்மை,முகத்தில் படர்ந்திருந்த சாந்தம்,கண்களில் தெரிந்த கூர்மை,தேகம் பூண்டிருந்த உருக்குத்தன்மைஎன பன்முகமாய்/
    பாதசாரிகள்,இருசக்கர வாகனங்கள், மிதிவண்டிகள், விரைந்து கடந்த ஆட்டோ என எல்லாமுமாகபூத்துத்தெரிந்ததார்ச்சாலையில்அவர்என்எதிராக.நான்அவர் எதிராக/
    சிலுசிலுக்கிறகாற்றில்அவரதுவேஷ்டியின்வலதுமுனைலேசாகதூக்கித்தெரிகிறது.எனதுசட்டையின் இடதுமேல் முனை லேசாக புடைத்து ஆடுகிறது.ஆடட்டும், ஆடட்டும்
எத்தனைநாளைக்குஇந்த ஆட்டம்,கிளிகிறவரைதானே,அடுத்து,அடுத்தது ஆடும்.
    இருமருங்கிலுமாய் தெருக்கள் அடுக்கப்பட்டிருந்த பிரதான சாலையில் இடது ஓரம் நானும்,வலது ஓரம் அவருமாக/
   அத்தனை சந்தடியிலும் அவரும்,நானும் தனித்து விடப்பட்டவர்களாகவும், எதிர் எதிராக காட்சியளிப்பவர்களாயும்.குடித்த டீயின் ருசி இன்னமும் நாவின் சுவை அரும்புகளில் ஒட்டிக்கொண்டு நிற்க அதை நினைத்தவாறும் அதன் சுவையில் மனம் பறிகொடுத்தவனாயும் அவரை கடந்த போது ஐயா வணக்கம்,என அழகாக கைகூப்புகிறார்.
   கூப்பிய கைகளின் ஒட்டலும்,விரல்களின் வழிதெரிந்த சீரான இடைவெளியும் அவரின் வணக்கத்திற்கானகைகூப்பல்முறையானதுஎனத்தெரிகிறது.
    எடுத்து வைக்கிற சின்னச்சின்ன தப்படிகள் பெரியதான தூரங்களின் இடைவெளியை குறைத்து விடுவது போல அவரின்  நிலையான கைகூப்பல் மெளனமாக இருந்த என்னை அர்த்தமாய் பாதித்து விட வணக்கம் என்கிறேன் பதிலுக்கு/
   கூப்பிய கைகளை விலக்காமலேயே பதிலுக்கு வணக்கம் சொன்ன அவர்,,,,,,நான் உங்களைஅடிக்கடிபார்த்திருக்கிறேன்.இதேசாலையில்,இதேநடை தூரத்தில்.
   “உங்களைப்பற்றி அறிந்தும் உள்ளேன் கொஞ்சம்.வெகு நாடகளாகவே உங்களிடம் பேசவேண்டும் என்கிற ஆவல் எனக்கு இருந்ததுண்டு. இந்த அறிமுகத்தின் மூலம் அதற்கு பிள்ளையார் சுழியிடலாம் என நினைக்கிறேன், எனது மனஎண்ணங்கள் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பிலை.அது போலவே உங்களது மன எண்ணங்களும் எனக்கும் என நினக்கிறேன்.பட்டையிட்டு கலர் வேஷ்டிகட்டித்திரிபவனது உலகம் எண்ணெயில் ஒட்டாத தண்ணீராய் என நினைப்பார்கள் பலரும்.ஆனால் அப்படியில்லை  நான் நிதர்சனத்தில்,/
   எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கறி,புளி சாப்பிட்டு தூங்கி எழுந்த மதிய வேலையின் நீட்டித்த பகுதியான மாலை நாலு மணிக்கு ஒரு கூட்டம் இருக்கிறது.உங்களது நேரம் அனுமதிக்குமாயின் நீங்கள் வரலாம்.வரலாம் என்ன,,,,?கண்டிப்பாக வர வேண்டும் என்பதுவே எனது அவா” என கூப்பிய கையிலிருந்து பிரசவித்தெடுத்ததாய் துண்டுக்காகிதம் ஒன்றை கொடுத்து விட்டு என்னை கடக்கிறார்.
    கடந்த வேகத்தில் எனகையில் படபடத்த துண்டு பேப்பர் விரிய கூர்ந்து பார்த்தால் காதைலைப்பற்றியஒருகருத்தரங்கம்அதுஅறிவிப்பு செய்கிறது.
    பரவாயில்லையே,,,,,?அறுபதை எட்டித்தொடப்போகிற தோற்றமுடைய இவர் காதலைப்பற்றிஅறிவிப்புசெய்கிறஅச்சடித்தநோட்டீஸை கொடுத்துவிட்டுப்போவது,,,,,,,,,
   அவரின் நல்லதும், கெட்டதுமான சகலத்தையும் விலக்கி இதை மட்டுமே மையமாக வைத்து பேசப்போகும் அவரது பேச்சை அல்லது,அவரது பங்கெடுப்பின் முனைப்பை பார்க்கவாவது கண்டிப்பாக போக வேண்டும் என முடிவெடுத்தவனாகவும்,ஆச்சர்யம் மேலிட்டவனாகவும் அவரைபார்க்கிறேன்.
   சிறிது தூரத்தில் நடந்து போய்க்கொண்டிருந்த அவரை பின் தொடர்ந்து அவரின் முன்னால் போய் நிற்கிறேன்.
   “ஐயாதவறாகநினைக்காதீர்கள்.இந்தகேள்வியின்நோக்கம்உங்களைபுண்படுத்துவதோ
உங்களின் செயலை எள்ளி நகையாடுவதோ அல்ல”. என நிறுத்திய என்னை உம்,கேளுங்கள் தம்பி,வரம்பு மீறாத எந்த பேச்சுக்கும்,எந்த கேள்விக்கும்  எந்த கணமும் பதிலளிக்கவும்,விளக்கிபேசவும் கடமைப்பட்டவனாக/
   “இல்லை ஐயா இருபது துள்ளி விளையாடும் இளம் வயதுள் காதல் ஓடுவது இயல்பு.அது ஏற்புடையது.ஆனால் அறுபதை நெருங்கி நிலை கொண்டுள்ள தாங்கள் இப்படி ஒரு கூட்டத்திக்கு அழைப்பு விடுப்பது,,,,,,,,,?//”என்றவாறே அவரை ஏறிட்ட என்னை கையமர்த்தியவாறே ஏன் விந்தைகொள்கிறீர்கள்.எதற்காக அப்படி ஒரு எண்ணம் உங்களுள் விதை விடுகிறது?காதல் என்பது என்ன வேற்று கிரக சமாச்சாரமா?நாம்வாழ்கிறசமூகத்தில்அதுவும்ஒருஅங்கம்தானே?காதல்,காதல்,காதல்,
காதல் போயினும் காதல்,காதல்,காதல்தான் என வாழப் பழகிக்கொண்டசமூகத்தின் வழிவந்தவர்கள் நாம்.யாரிடம் இல்லை காதல்,எதனிடம் இல்லைநமக்கு  காதல் ஒரு யுவனுக்குள்ளும்,யவதிக்குள்ளுமாக  பூத்திருப்பது மட்டுமே இல்லையே காதல்/உங்களிடமும்,என்னிடமும்,அதோ அவர்களிடமும் நம் எல்லோரிடமும் நிலைந்து மலர்ந்து பூவும்,பிஞ்சும்,காயும்,கனியுமாக கிளைத்து நிற்கிறதுதானே காதல்/நம்மை,வாழ்வை இப்புவியை,இப்புவியில் மையம் கொண்டிருக்கிற அனைத்தையும்நேசிப்போம்,நேசிப்புடன் சுவாசிப்போம்.அதுவே காதல் என அறியப்பட முடிகிறது.அதுபோக நேற்றைய இருபதுதானே இன்றைய அறுபது/அதன் மிஞ்சியதனம் என்னுள் இன்னுமும் இருக்குமல்லவா கொஞ்சமாகவேனும்/?அப்படி எஞ்சி இருப்பது என்னுள் மட்டும்தானா?”என சொல்லி முடிக்கிறேன்.
   பிற கூட்டத்தில் வைத்தோ அல்லது மறுமுறை நேரில் பார்க்கும் போதோ,சென்று வாருங்கள் தம்பி,நானும் சென்று வருகிறேன்.        

9 comments:

ஹேமா said...

காதல்தான் எந்த வயதிலும் மனிதனை உற்சாகத்தோடு வாழவைக்கிறது.வீட்டில் வளர்க்கும் நாயிடம்கூட அன்பு செலுத்திவிட்டால் அதைப் பிரியமுடியாது.அழகாகச் சொல்லி முடித்திருக்கிறீர்கள்.அருமை.
காதல் வாழ்க !

vimalanperali said...

வணக்கம் ஹேமா அவர்களே,நன்றி உங்களது வருகைக்கும் கருத்துரைக்குமாக?

Thooral said...

காதல் என்று சொல்வதானால்
எதுவும் அழகாகும்
அருமை ..

vimalanperali said...

வணக்கம் ஜெயராம் தினகரப்பாண்டியன் சார்.நலம்தானே?நன்றி உங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

Admin said...

காதலை சுவாசிக்காத உயிர்கள் உலகத்தில் இல்லை..காதலைக் கற்றுக் கொடுக்கவோ..இல்லை கற்றுக்கொள்ளவோ வயது தடையில்லை..நல்ல அனுபவப் பதிவு வாழ்த்துகள்.

Admin said...

இப்பதிவை வலைச்சரத்தில் குறிப்பிட்டு இருக்கிறேன்.நேரமிருந்தால் பார்வையிடவும் நன்றி..
http://blogintamil.blogspot.com/2012/02/blog-post_11.html

Anonymous said...

காதல் காதல் காதல் போயின் காதல் காதல்..மிக்க நல்ல இடுகை .வாழ்த்துகள்.(மதுமதி மூலமாக வந்தேன்.) வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.

vimalanperali said...

வணக்கம்,மதுமதி தோழர்,நலம்தானே?நன்றி தங்களதுவருகைக்கும்,
கருத்துரைக்குமாக.
வலைசரத்தில் என்னுடைய படைப்பை இணைத்தற்கு நன்றி.

vimalanperali said...

வணக்கம் கோவை காவை அவர்களே,நலம்தானே?நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/