17 Jan 2012

கண்ணாமூச்சி,,,,,




 தரையை கூட்டும் போது
முன்னால் வந்து நின்று
கொண்டிருந்த
நாயைவிரட்டுகிறேன்.
போக மறுத்து என்னையே
உற்றுப் பார்த்தவாறு சுற்றி வருகிறது.
வலப்பக்கம் திரும்பினால்
இடப்பக்கம் போகிறது.
இடப்பக்கம் திரும்பினால்
வலப்பக்கம் வந்து நிற்கிறது.
முன்னங்கால்கள் இரண்டையும்
நீட்டிப்படுத்து விறைப்பாய்
உடல் நெளிக்கிறது.
கல் எடுத்தால் போக்குக்காட்டுகிறது.
கைதட்டி விரட்டினால் பம்முகிறது.
சப்தமிட்டு அதட்டினால்
அருகில் வந்து குழைகிறது.
இடுப்பில் கைவைத்து முறைத்தால்
அப்பாவியாய் விழிமூடி
அண்ணாந்து பார்க்கிறது.
கோபமாக்க இருப்பவரின்
முன்னால் மலர்ந்து சிரிக்கிற
குழந்தையின் வெள்ளைச்சிரிப்பாய்
அதன் செய்கைகள்.
திரண்டு நின்ற தூசியையும்,
இதுவரை கூட்டிய மரத்திலைகளையும்,
கையில் வைத்திருந்த விளக்குமாறையும்
கீழே போட்டு விட்டு
தலையில் தட்டி அதனுடன்
விளையாட ஆரம்பிக்கிறேன். 

14 comments:

Unknown said...

அழகு. பணியில் தெரிந்தே தவற விடுகிற அழகியல் வாழ்வில் ஏராளம்...

சசிகலா said...

கோபமாக்க இருப்பவரின்
முன்னால் மலர்ந்து சிரிக்கிற
குழந்தையின் வெள்ளைச்சிரிப்பாய்
அதன் செய்கைகள்.
மிகவும் அழகு சொன்ன விதம் அருமை பகிர்வுக்கு நன்றி

Anonymous said...

இதுவரை கூட்டிய மரத்திலைகளையும்,கையில் வைத்திருந்த விளக்குமாறையும்கீழே போட்டு விட்டு தலையில் தட்டி அதனுடன் விளையாட ஆரம்பிக்கிறேன். //

நல்லாயிருக்கு...இந்த படம் பற்றி பலத்த சர்ச்சை உள்ளது தானே நண்பரே...

கீதமஞ்சரி said...

கோபமாயிருப்பவரைக் குதூகலமாக்கும் முயற்சியிலிருக்கும் ஒரு குழந்தையின் செய்கையாய் வாலைக்குலைக்கும் நாயின் செய்கைகளை விவரித்த விதம் அழகு. அதை நேரிலே பார்த்தவர்களுக்கே அதன் தாக்கம் அதிகமாய் இருக்கும். நல்ல கரு. பாராட்டுகள்.

புதுவை செல்வம் said...

ஆகா.. அருமை, தோழர் நினைவிருக்கிறதா?... நான் செல்வம்.. தற்போது புதுவையில் வாசம்... ‘சூப்பர் ஒவிய குழு’மத்துடன் இணைத்து யோசியுங்கள்.

மனோ சாமிநாதன் said...

மிக வித்தியாசமான கவிதை!!

ஹேமா said...

எந்த உயிரையும் அன்போடு நேசித்தால் கோபம் வராது.அழகான கவிதை !

vimalanperali said...

வணக்கம் மரு.சுந்தரபாண்டியன் சார்.நலம்தானே?நன்றி உங்களது வருகைக்கும் கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் சசிகலா அவர்களே,நன்றி உங்களது வருகைக்கும் கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் ரெவெரி சார்,நலம்தானே?நன்றி உங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/சர்ச்சைகள் படத்தில மட்டும்தானா?,,,

vimalanperali said...

வணக்கம்,கீதா அவர்களே,நன்றி உங்களது வருக்கைக்கும் கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் புதுகை செல்வம் தோழர்.நலம்தானே,சூப்பர் ஓவிய குழுமத்துடன் இணைந்து பணியாற்றுமாறு நீங்கள் தெரிவித்திருந்த விருப்பத்தை தோழரிடம் தெரிவித்தேன்,மகிழ்ச்சியடைந்தார்.நன்றி உங்களது வருகைக்கும் கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் மணோ சாமிநாதன் அவர்களே/நன்றி உங்களது வருகைக்கும் கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் ஹேமா அவர்களே,நலம்தானா/
நன்றி உங்களது வருகைக்கும் கருத்துரைக்குமாக/