22 Feb 2012

No:6 பிச்சைத்தெரு


    
    அவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டிருந்தது.
அவர்களில் எல்லோருக்கும் ஆண் ஒன்றும் பெண் ஒன்றுமாய் இரண்டு அல்லது மூன்று பிள்ளைகள்.   பிள்ளைகள்அனைவரும்படிக்கிறார்கள்,பள்ளிகளிலோ,அல்லது கல்லூரிகளிலோ.
      அவர்கள் அனைவர் வீடுகளிலும் டீ.வி இருந்தது. அவர்கள் வசிப்பிடங்களின்
அருகிலோ, சற்றுத் தள்ளியோ சினிமா தியேட்டர் இருந்தது. அவர்கள் வசித்த ஊர்கள்
அனைத்திலும் கேளிக்கை ;பொழுது போக்கு நிகழ்வுகளும், அதற்கான இடங்களும்
நிறையவே இருக்கிறதுதான்.
     ஆனால் அதையெல்லாம் விடுத்து அவர்கள் ஏன் அப்படிஇருக்கிறார்கள்? அலுவலகம்,
 அலுவகம் விட்டால் வீடு, பிள்ளைகள், படிப்பு, சினிமா, இதர கேளிக்கைகளை விடுத்து
அவர்கள் ஏன் அப்படி இருக்கிறார்கள்?
     அவர்கள் ஒன்றாய்க் கூடி சந்திக்கும் இடத்தில் அப்படி  என்னதான் பேசிக்கொள்கிறார்கள்?பகிர்ந்துகொள்கிறார்கள்?திட்டமிடுகிறார்கள்? .
       பஸ்டாண்ட் அருகே உள்ள நெரிசலான பகுதியில் சரிந்து இறங்கும் அந்தத் தெருவின்
இரண்டு பக்கமும் பெரியதும்,சிறியதுமாய் நிறுத்தி அடுக்கி வைக்கப்பட்ட வீடுகள்.
      தெருவின் வாசலில் இடது பக்கமாய் சிறியதான மாரியம்மன் கோவில்.தெருக் கோவில் அது.
         அந்த கோவிலுக்கு தினசரி பூசை உண்டு. கோவிலின் எதிர் வீட்டுக் காரர்களே
தண்ணீர்தெளித்து,கோலமிட்டு,சாமியைக் குளிப்பாட்டி சுத்தம் செய்து,எனமுறை வைத்து செய்வார்கள்
       இதுதவிரஅந்த கோவிலுக்கு வருடம் ஒரு முறை பொங்கல்உண்டு.(புரட்டாசிப்பொங்கல்)
அடேயப்பா,பந்தல்அலங்காரம்,சீரியல்செட்,தெருவடைத்த ட்யூப் லைட்வெளிச்சம் ...........,,
என தூள் பறக்கும்.
       கோவிலின் அருகே பெரிய அளவில் இல்லாவிட்டாலும் சிறிய அளவிலான
மருத்துவமனை .கைராசிக்கார டாக்டர் என பெயர் எடுத்தவர்.
மருத்துவமனையும் கோவிலும் அருகருகே அமைந்து போனது தற்செயல்அதிசயமே. இது
போலவே அந்த தெருவின் இருபக்கமும் மாறி,மாறி அமர்ந்திருந்த வீடுகள் பால்பண்ணை,
பிரிண்டிங்க் பிரஸ்,பெட்டிக்கடை, டெலிபோன் பூத், டீக் கடை , வீடுகள்,வீடுகள்,வீடுகள்..... என கலக்கலாய் காட்சி தந்தவைகளுக்கு மத்தியில்தான் No;6 பிச்சை தெரு
என்கிற அடையாளத்துடன் அந்தக் கட்டிடம் நின்றது.
       வாழ்ந்து கெட்ட ஜமீன்தாரரின் வீடாய் அங்கங்கே பெயர்ந்து,உதிர்ந்த சிமெண்ட்
பூச்சுடனும் ,சுவற்றிலிருந்து விழி பிதுங்கித் தெரியும் செங்கல்களுமாய் காலத்தின்
சாட்சியாய் நின்ற அந்த கட்டிடம்தான் அவர்களது சங்க அலுவலகம்.
      வாசலைக் கடந்ததும்பெரியதாய் 30 க்கு 15 என விரிந்த அந்த  இடத்தில்தான்
வரிசையாகசேர்களும்,டேபிள்களும்,நிறுத்திவைக்கப்பட்ட பீரோக்களும் முளைத்திருந்தன.
 அந்த உயிர்ற்றவைகளுக்கு மத்தியில்தான், சங்கத் தலைவர்களும்,
சங்கஉறுப்பினர்களுமாய்/
      நின்றுகொண்டும்,அமர்ந்துகொண்டும்,பேசிக்கொண்டும்,எழுதிக்கொண்டுமாய் இருந்த
அவர்கள் பல உணர்வுகளோடும், பல முகத்தோற்றத்தோடும்,பல பாவனைகளோடும்.
அங்கிருந்தஇருக்கைகளில்இருந்த செய்தித்தாள்கள்,சர்க்குலர்கள்.நோட்டீஸ்கள்
வால்போஸ்ட்டர்கள்இத்தியாதி,இத்தியாதிகள்.
    ஆமாம் யார் அவர்கள் ?ஏன் இங்கு வர வேண்டும்?தினந்தோறும் கூடி கலையும்
வேடந்தாங்கலாய் ஏன் அந்த கட்டிடத்தை பாவிக்க வேண்டும்?
      அண்மையில் நடைபெற்ற
 "அரசு ஊழியர்ஆசிரியர்வேலைநிறுத்தத்தில்சிறைவாசம்
சென்று" பணிக்குத் திரும்பியவர்கள் போக அரசால் நயவஞ்சகமாக டிஸ்மிஸ்செய்யப்பட்ட
சங்கப் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கென "
குடும்ப பாதுகாப்புநிதி"ஒன்றை
உருவாக்கி  அவர்களின் குடும்பத்திற்குத் தந்து அவர்களின் குடும்பம் அனாதரவாக
தெருவில் நிற்காமல் பாதுகாக்கும் உன்னதமான லட்சியப் பணிகளையும்,,,,,,,,,,,,,,,,,,,,,,
        சபை நடுவே உரியப் பட்ட பாஞ்சாலியின் சேலையாய் இரவோடு,இரவாக பணிபறிக்கப்
பட்ட"
பத்தாயிரம்சாலைப்பணியாளர்களுக்காய்""ஒருமாதச்சம்பளத்தை" மூன்றுவாரங்களுக்குள் வழங்கவேண்டும், காலியாக உள்ள அரசுப்பணிகளில் (தற்காலிகம்) அவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். என்கிற தீர்ப்பைப் பெற்று தந்ததுமான
பணியையினையும்,இதரப் பணியினையும் வருடம் முன்னூற்றி அறுபத்தைந்து நாட்களும்
அவர்கள் செய்து கொண்டும் திட்டமிட்டுக் கொண்டும் இருக்கத்தான் செய்தார்கள்.
      சங்கப் பணிகளுக்காய் தனது சொந்த ஊரை விட்டுபல கிலோமீட்டர்கள் தள்ளி வந்து, சங்க அலுவகத்திலேயே தங்கி தன் சுகம்,துக்கம்,உடல் சுகம்,சுகவீனம்இன்னமும்,
இன்னமுமான பிறவற்றை அங்குள்ள சங்கத் தோழர்களோடும் சங்கத்தோடும் பகிர்ந்து
கொண்டு அங்கேயே ஐக்கியமாகிப் போனசோலைமாணிக்கம்,கணேசன், சுந்தர்ஜீ,
இவர்களைவிடுத்து ,,,,,,,,,,,,,
    சங்கப்பணிகளுக்காக அன்றாடம் சங்க அலுவலகம் வந்து போகும் மாதவராஜ்,காமராஜ்,
மூர்த்தி, கண்ணன், பாலு,உலகநாதன்,கணேசமூர்த்தி,மாயமலைமுத்துராஜ்,செல்வின்,
பாலகுரு ராமர்,டெய்சி,மாரிமுத்து,கோட்டை,பிச்சை,அதிர்ஷ்டம்,குமரேசன்........,,,,,,,
இன்னமும் பெயர் மறந்து போன,எழுதவிடுபட்டுப்போன
(தயவு செய்து யாரும் கோவித்துக் கொள்ளக் கூடாது)
மிகவும் அருமையான தோழர்களை சுமந்து "No;6 பிச்சைத் தெரு" என்கிற
அடையாளத்துடன் நிற்கும் அந்த சங்கக் கட்டிடத்தையும்,,,,,,,,,,,,,,,,,,,, ,,,,,
அவர்களுக்கான சங்கப் பணிகளையும்,அவர்களுக்கென இருக்கிறகுடும்பம்,
உறவுகள்,
பிள்ளைகளின் படிப்பு, அவர்களின் எதிர்காலம், டீ.வி,சினிமா,பொழுது போக்குகள் ,
கல்யாணம் ,காதுகுத்து, கோவில்நிகழ்வு இன்னும்,இன்னுமான விசேசங்களை அவர்கள் எப்படிஎதிர்கொள்கிறார்கள்? குடும்பத்தோடும்,பிள்ளைகளோடும் அவர்கள் சந்தோஷித்து
இருப்பது எப்போது?
       தெரு முனையில்இருக்கிற அந்த சின்ன மாரியம்மன் கோவில் பொங்கல் சந்தோஷத்தில்
அவர்கள் பங்கு கொள்ள முடிகிறதா?அந்த கோவிலில் ஒலிக்கும் பாடல்களை ரசிக்க
அவர்களுக்கு நேரமிருக்கிறதா?அல்லது ரசிக்கும் மனோநிலையில் அவர்கள்
இருக்கிறார்களா? ட்யூப் லைட் வெளிச்சம்,சீரியல்செட் அலங்காரங்களை அவர்கள்
கண்டு கழித்திருக்கிறார்களா?அதற்காகஅவர்கள்நேரம் ஒதுக்கமுடிந்திருக்கிறதா?
     இது தவிர சங்கப் பணிகளுக்காக அவர்கள் எடுக்கும் சம்பளமில்லா விடுப்பு, நிர்வாகத்தைஎதிர் கொள்ளும் போது நிர்வாகத் தரப்பிலிருந்து வரும்மிரட்டல்,ஷோகாஸ், சார்ஜ்சீட்,
சஷ்பென்சன்,டிஸ்மிஸ்இவைகளால் அவர்களுக்கும்,அவர்களது குடும்பத்திற்க்கும்
ஏற்படும் மன உளைச்சல்.......,,,,,,,,,இன்னமும்,இன்னமுமான நிறைந்துபோனபிரச்சினைகளைஅவர்கள்எப்படியெல்லாம் எதிர்கொள்கிறார்கள்?என்பது போன்ற பல கேள்விகளை
மனதில்இருத்தி,,,,,,,,,,,,,,,,இவர்களைப்போன்ற"தியாகிகளை" கொண்டாடுவோம்,
      அவர்களுடன் 
நல்லுறவை வளர்த்து வளப் படுத்தி மனங்களில் மனிதச் சங்கிலிகளை
படரவிடுவோம்.
(பி,கு தற்பொழுது மேற்கண்ட முகவரியில் அந்த சங்க அலுவலகம் இயங்கவில்லை.
வேறு இடத்திற்கு மாறிப் போய் விட்டார்கள்.முன்பிருந்த தலைவர்களும் பொறுப்பாளர்களும் இப்போது, எந்தெந்த ஊர்களில் பணிபுரிகிறார்கள் எனத் தெரியவில்லை.எந்தெந்தபொறுப்புகள்வகிக்கிறார்கள்எனவும்தெரியவில்லை. அவர்களுக்கெல்லாம் எனது ராயல் சல்யூட்) 

   மிகச்சரியாக சொல்வதானால் இந்தப்பதிவை எழுதி14 மாதங்களுக்கு மேலாக ஆகிறது10.2.2010 அன்று வெளியிடப்பட்டது.)
  இந்தநேரத்தில் இந்தப் பதிவின் கதாநாயக மனிதர்களில் ஒருவரான விருதுநகர் அரசு ஊழியர் சங்க மாவட்டச்செயலாளர் திரு பால சுப்பரமணியன் அவர்களது இல்ல திருமண விழாஎதிர் வருகிற 26.2.12 அன்று நடைபெற உள்ளது.
   இந்த இனிய நேரத்தில் இப்பதிவை அவர்களுக்கு சமர்ப்பணம் செய்வதுடன் அவரது இல்ல திருமண விழாவிற்கு மனம் திறந்த நல் வாழ்த்துக்களை கூறிக் கொள்கிறேன் உளப்பூர்வமாக/

        

2 comments:

நிலாமகள் said...

அவர்களுக்கெல்லாம் எனது ராயல் சல்யூட்!

vimalanperali said...

வணக்கம் நிலாமகள் அவர்களே,தங்களது ராயல் சல்யூட்டை ஏற்கிற அதே நேரத்தில் இதுமாதிரியான தியாகிகளை மதிக்கத்தோன்றிய தங்களது மதிப்பான செயலுக்கு தலை வணங்குகிறேன்,
தங்களது வருக்கைக்கும் கருத்துரைக்குமாய் நன்றி.