4 Mar 2012

பூநாத்து,,,,,,


                               
   ஒருவட்டம்,ஒருசதுரம்,ஒருசெவ்வகம்,ஒரு முக்கோணம்,ஒரு அருங்கோணம் எனநீண்டுவிரிந்து காட்சிப்படுகிற எல்லாமும்தனித்தனியாகவும்,ஒன்றுக்குள் ஒன்றாகவும்   சேர்ந்தும்,  விலகியும்,  வைத்துப்  பார்க்கும்போது  நன்றாகவும்
ஆசையாகவும்தான் இருக்கிறது.
    அதன் உருவமும்,அதன் சுற்று வெளியும்,அதன் உள்ளீடாக விரிந்து தெரிகிற வெளியும்பார்க்கவும்,அதைவைத்துபணிசெய்யவும்நன்றாகத்தான் இருக்கிறது.
    கணக்கில் மட்டுமல்லாமல் வாழ்க்கையிலும் வந்து  பதியணிட்டு சென்று விடுகிற இவைகள்என்று,எப்பொழுதும்நம்முடன்நகர்பவையாகவே/
    வாழக்கற்றுத்தந்தவாழ்க்கையின்கோணங்கள் வட்டமாயும்,சதுரமாயும்,செவ்வகமாயும்,
முக்கோணமாயும்,அருங்கோணமாயும் காட்சிப்படஅவற்றின் மாறுபட்ட வெளிகள் நம்மிடம் ஏதாவது சொல்லிக்கொண்டும் நம்முடன் கைகோர்த்துக்ண்டுமாய்/
    வீடேறி தவழ்ந்து வருகிற குழந்தையின் உடல் மொழி என்னவாக இருந்த போதிலும் எதை பிரதிபிம்பம் செய்தபோதிலும் அதுபார்க்க அழகாகவே இருக்கிறது.
    நான்,நீ,அவன்,அவள்,இவன்,இவள்,இவர்கள்,அவர்கள்,,,,,,,என யார் பார்த்தபோதும் வெற்று மேனியாக தவழ்ந்து வருகிற அதைத்தூக்கி கொஞ்சஆவல் பொங்காமல் இல்லை.
    எதெதற்கோ சட்டமிடுகிற,வரையறை வகுத்துக்கொள்கிற நாம் ஒரு குழந்தை தவழ்ந்து வருகிற போது அதன் குறுக்காக யாரும் போய்விடக்கூடாது எனவும் அது வருகிற பாதையில் யாரும் நடமிட்டு விடக்கூடாது எனவும் முடிந்தால் அதை மலர் தூவி வரவேற்கவும்,மலர் செண்டு கொடுத்து உபசரிக்கவும் செய்யவேண்டும்.
   அதன் பூமேனி தரை தொட அதை நாம் தொட ஏங்கி கை நீட்டுகிற பொழுதுகளில் நேசமிட்டு விரிகிற உறவு இழைகள் நமது மனதிலும்,அதன் குட்டி மனதிலுமாய் குடிகொண்டு கூடுகட்டிக்கொண்டுவிடுமாஎன்ன?
    “ஏ,,குழந்தை,குட்டிக்குழந்தை,,,,,,அருகே வா,வா,,,,அன்பாய் வா,வா”,,,,,,என இன்னும் இன்னுமாய் நிறையவும்,அள்ளியுமாய் கொஞ்சத்தோணுகிற பொழுதுகளின் நகர்வுகளில் வானம் பொழிய,இயற்கை பூச்செரிய,விண்மீன்கள் வட்டமிட,நிலா மிக நெருக்கமாய் அருகில்வந்துதன்முகம்காட்டிகன்னம்தட்டிவிளையாடதேவதைகளின்,தேவதூதர்களின்
வாழ்த்துக்கள் அசரீரீயாக ஒலிக்க அதன் பிண்ணனியில் வெற்று மேனியாய் தவழ்ந்து வருகிற குழந்தையை அள்ளிக்கொஞ்ச யாருக்குத்தான் ஆசை இல்லை.
   தள்ளிப் போங்கள்எல்லோரும்,நான் குழந்தையை கொஞ்சவேண்டும்.தேவைப்பட்டால் அலுவலகத்திற்கு விடுப்பு சொல்லிவிட்டு கூட குழந்தையுடன் பொழுதை கழிக்க தயார் என்கிற மனோநிலையில் இருக்கிற போது வீடேறி தவழ்ந்து வருகிற குழந்தையின் உடல் மொழி என்னாவாய் இருக்கும் என யோசிக்க நேரமற்றுப்போகிறது.
      இரண்டு    பேரின்   பயணமும்   எதிரெதிர்  திசையில்   பயணிக்கிற   சம்பவமாக.
     அவள் யாருக்கு தாய் என சரியாகத் தெரியவில்லை.அவள் யாருக்கு மனைவி என்பதுவும் தெரியாமலேயே.அவள் இன்னாரின் மகள் என யாரும் இதுவரை சொல்லவில்லை.அவள் யாருக்கு என்ன உறவாக இருந்த போதிலும் அவள் எந்த ஊரைச்சேர்ந்தவள்,,,,,,  என்கிற   விடைகள்  யாவும்  அவளிலிருந்து  பறை  சாற்றித்
தெரியவில்லை
    புதுநிறம்,  அழுத்தமான  முகம்,  அடர்  கலரில்  சேலை  மற்றும் சட்டை.
    அள்ளிச் சொருகியிருந்த  தலைமுடி  எண்ணை காணாது வறண்டு கலைந்திருந்தது.
அலுப்புஅப்பியிருந்தமுகமும்கண்களும்,உயர்ந்துவளர்ந்தஉடலும்அவள் கிராமத்துக்காரி என்பதை அடையாளம் சொல்லியது.
    அள்ளி சொருகியிருந்த சேலையின் பூக்கள் வெளுத்தும்,சாயம் இறங்கியுமாய் இதழ்விரித்துசிரித்தது.
   சேலையின்அடிப்புறமாய் வெளித்தெரிந்த பாவடையின் அடிப்புறம் நைந்தும்,நூல் பிரிந்து தொங்கியுமாய்/
    வாங்கியசரக்கைஅள்ளிக்கட்டிக்கொண்டுபலசரக்குகடைவாயிலிலிருந்து எனது
இருசக்கர வாகனத்தை பின்னோக்கி உருட்டி திருப்பிய போதுஎன்னை கடந்த அவள் 30லிருந்து 35ற்குள்ளாக தனது வயதை அறிவித்தாள்.
    என்னை ஏறிட்ட அவளது பார்வையும்,அவளை ஏறிட்ட எனது பார்வையும் ஒரே நேர்கோட்டில் சட்டென நிகழ்ந்து போன அதிசய சம்பவமாக/
   கடையிலிருந்து நானும் கிளம்பி விட்டேன்.அவளும் போய் விட்டாள்.இரண்டு பேரின் பயணமும் எதிர்,எதிர் திசையில் சம்பவித்த  நிகழ்வாக /
   வீட்டிலிருந்து கிளம்பி இங்கு கடைக்கு சரக்கு வாங்க வருகிறவரை சந்தித்த,பேசிய மனிதர்களின் முகங்கள்,நடவடிக்கைகள் இன்னும் இன்னுமான எல்லாவற்றிலுமாய் தெரித்துத்தெரிந்தநாகரீகம்,படோடோபம்,மிகைநடிப்புஇன்னும்,இன்னுமான எதுவும்
அவளிடம்இல்லை.அல்லதுகாணக்கிடைக்கவில்லை.
     அவள் அணிந்திருந்த உடையிலிருந்து நடைவரை வளர்ந்து தெரிந்த இந்தநகர நாகரீகத்திலிருந்து சற்று கூட அல்ல ரொம்ப தூரமாகவே விலகி/
    அவளது நடையில் தெரிந்த அவசரமும்,அவளிலிருந்த படபடப்பும் அவள்தனது ஊருக்கு  செல்வதற்கான  கடைசிநேர  இரவுப்பேருந்தை  பிடிக்க   எட்டிப்போய்க்
கொண்டிருக்கிறாள் என்பது மட்டும் உறுதுயாகத்தெரிந்தது.
    அவளினது வருகை எதற்காக இங்கு நிகழ்ந்தது,அல்லது அவசியப்பட்டது என சரியாகதெரியாத பொழுதிலும் கூட,,,,,,,,,,,,,
     பள்ளியிலபடிக்கிறதனதுமகள்,மகனுக்குஏதேனுமாய்பொருள்வாங்க வந்திருக்கலாம்.
அல்லது தனது தோட்டங்காடுகளில் விளைகிற பயிர்களுக்கு மருந்து,உரம் வாங்க வந்திருக்கலாம்.
    அவளது வருகை எதுகுறித்து என்பதாக இருந்த போது அவளது புறப்பாட்டில் கூட்டை நோக்கி புறப்படுகிற பறவையின் வேகம்  தெரிந்தது.
    அவள் யாருக்கு தாய் எனத்தெரியவில்ல.அவள் யாருக்கு மனைவி என்பதுவும் புரியாமலேயே/அவள் யாருக்கு மகள் எனபதுவும் இதுவரை தெரியாமலே/
    அவள் யாருக்கு என்ன உறவாக இருந்த போதிலும் அரிதாரம் பூசிக்கொண்ட இந்தஊரில்இப்படிஒருயதார்த்தப்பெண்ணைபார்த்தது மிகவும் சந்தோசமாகவே/   

16 comments:

 1. இயல்பாக இருக்கிறது. உங்கள் தள வடிவமைப்பை மாற்றி விட்டீர்கள் போலிருக்கிறதே. நன்றாக இருக்கிறது சார்.

  ReplyDelete
 2. வணக்கம் பாலா சார்.நன்றி. தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 3. வணக்கம் சென்னை பித்தன் சார்,நலம்தானே?நன்றி தங்களது வருகைக்கும் கருத்துரைக்குமாக/அட்டகாசங்கள் பூத்து நிக்கிற பூமியாய் இது இருக்கையில் நன்னென்ன மனக்கவலை எழுதுவதற்கு/

  ReplyDelete
 4. வீடேறி தவழ்ந்து வருகிற குழந்தையின் உடல் மொழி என்னவாக இருந்த போதிலும் எதை பிரதிபிம்பம் செய்தபோதிலும் அதுபார்க்க அழகாகவே இருக்கிறது.

  அழகான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 5. இணைப்பு வழங்கி பதிவை இணைத்தமைக்கு நன்றி சகோதரா.

  ReplyDelete
 6. வணக்கம் ராஜராஜேஸ்வரி அவர்களே.நலம்தானே?ஒருபடைப்பின் தூளியிலிருந்து இரகெடுத்து விமர்சித்த முறை மிகவும் பிடித்ததாய்/
  நன்றி தங்களது வருகைக்கும்,
  கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 7. வணக்கம் கூகுள்சிறி.காம் அவர்களே தங்களது நன்றியை ஏற்று மன்முவந்து ஏற்றுக்கொள்கிற இத்தருணத்தில் இன்னும்சிலபடைப்புகளை இணைக்கிறேன்.

  ReplyDelete
 8. நண்பரே தங்கள் பதிவுகளை தனித்தனி பதிவாக மின்னஞ்சல் செய்யுங்கள். அத்துடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

  நன்றி
  யாழ் மஞ்சு

  ReplyDelete
 9. சரி அப்படியே செய்கிறேன்,கூகுள் சிறி.காம் அவர்களே/

  ReplyDelete
 10. சரி அப்படியே செய்கிறேன்,கூகுள் சிறி.காம் அவர்களே/

  ReplyDelete
 11. உங்கள் கதைகள் எப்போதும் யதார்த்தம்.இயலபாய் ரசித்து வாசிக்க முடிகிறது விமலன் !

  ReplyDelete
 12. This comment has been removed by the author.

  ReplyDelete
 13. வணக்கம் ஹேமா மேடம்.தங்களது வருகைக்கும்,கருத்துரைக்கும் நன்றி/

  ReplyDelete
 14. வணக்கம் அனந்து சார்,நலம்தானே?தங்களது வருகைக்கும்,
  கருத்துரைக்குமாய் நன்றி.

  ReplyDelete