25 Mar 2012

உயிர்வாதை,,,,,,,,


இன்னமும் துடித்துக் கொண்டுதான்
இருக்கிறது.
கீழிறங்கி படியில் உட்காரப்போனபோது
காலடியில்
தட்டுப்பட்டகட்டெறும்பை
வலது கால்பெரு விரலால்
நசுக்கி விட்டுவிரலினடியையும்,
அதில் ஒட்டிருந்தகட்டெரும்பையும்
ஒரு சேரகால் மிதியடியில்
துடைத்து விட்டு
படியில் அமர்ந்த நான்
யதேச்சையாய் திரும்பி பார்த்தபோது
கால் மிதியடியில் இன்னும்
துடித்துக்கொண்டுதான் இருந்தது.
அது நசுக்கப்பட்ட பொழுதை விட
துடிப்பதை பார்க்கிற மனோநிலையே
என்னை கழிவிரக்கம் கொள்ளச்செய்வதாக/

6 comments:

arasan said...

மிக நுணுக்கமான சிந்தனை .. வியந்தேன் சார் .. என் நன்றிகள்

சசிகலா said...

எனக்கும் இந்த அனுபவம் இருக்குங்க . அறியாமல் செய்த தவறென்றாலும் மனது மண்டியிட்டு அழும் .

ஹேமா said...

சிலசமயம் உணர விடாமல் மறுக்கப்படுகிறது உயிர்வதை !

vimalanperali said...

வணக்கம் அரசன் சார் நலம்தானே?நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாய் நன்றி.

vimalanperali said...

வணக்கம் சசிகலா மேடம் நலம்தானே?நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் ஹேமா மேடம் நலம்தானே?உணர முடியாத உயிர்வாதையை உணர்த்துவதே எழுத்து என்கிறார்கள்.