29 Mar 2012

துவர்ப்பு,,,,,,,,,,,,


          
 தேநீர் நன்றாக  இருக்கும் என்பதினாலெல்லாம் அந்தக் கடைக்கு செல்வதில்லை.
  வீட்டுக்குப் பக்கத்திலிருந்து கூப்பிட்டு தொலைவில் இருப்பதனாலும் கடை உரிமையாளரின் தட்ட முடியாத பழக்கத்தினாலும் அங்கு அடி எடுத்து வைக்க வேண்டியதாகிப்போகிறது.
 வைத்து விட்ட அடியின் அழுத்தம் ஆழமாய் பதிந்து வேர்விட்டு போக தினசரி 5.30மணியிலிருந்து 6.00 மணிக்குள்ளாக எனது பிரவேசம்.
   டீயை குடித்து விட்டு அப்படியே பாலை வாங்கி வந்து விடுங்களேன் என்கிற மனைவியின் சொல்லுக்கும் தலையாட்டி விட்டு செல்கிறவனாய் நான் ஆகிப்போகிறேன்.
  சிவப்புச் சட்டையில் வெள்ளை கோடுகள் ஓட தொந்த் சரிந்து தேநீர் ஆற்றுகிற அவர் எனக்கு மூன்று ஆண்மக்கள் உண்டு என்கிறார்.இருந்தாலும் “நம்ம பொழப்ப நம்மளே பாத்துக்கிறனும்ன்னே,யார் கையையும் எதிர் பாக்கக்கூடாதுன்னு நெனைக்கிறேன்” என்கிறார்.
  அன்று ஞாயிற்று கிழமை என்பதால் வழக்கம் போல இரண்டாவது டீக்குடிக்க சென்றபோது வடையெல்லாம் வச்சிருக்க மாட்டிங்களா?என்கிற கேள்விக்கு தான் மேற்கண்டவாறு பதில் விரிக்கிறார்.
 "எனக்கும் வயசு 60பதுக்கு மேல ஆச்சு.இதுவரைக்கும் யார் கையையும் எதிர்பாக்காம  ஏங்கைய நம்பியே கர்ணம் பாஞ்சாச்சு.இனிமேலும் தலை சாய்க்கிறவரைக்கும் அப்பிடியே இருந்து காலத்த ஓட்டீருவோம்ன்னு ஒரு ஆசை.எப்பிடி வாய்க்குதுன்னு தெரியல.முடியலதான்,ஒடம்பு பாடா படுத்துதான்.இன்னைகி காலையில தண்ணி எடுக்கப்போறம்ன்னு இந்தா இந்த யெடத்துலதான் வுழுந்துட்டேன்.ஆனாலும் என்ன செய்ய?பொழப்ப ஓட்டனுமே.தூசி தட்டி எந்திரிச்சி வந்து நிக்குறேன் பாத்துக்கங்க.”என்கிற அந்த ஈர்ப்பு மிகுந்த ஈடுபாட்டுடனான பேச்சுக்காவே அந்த டீக்கடைக்கு செல்கிறேன்.
     மற்றபடி தேநீர் நன்றாக இருக்கும் என்கிறதானெல்லாம் அந்தக் கடைக்கு செல்வதில்லை. 

14 comments:

 1. தேநீரின் சுவையினைவிட அவரின் மனது சுவையாகவும் சுகமாகவும் உள்ளது.

  ReplyDelete
 2. அடி ஆத்தி நாமலும் உங்க பேர்லதான் ப்ளாக் வச்சிருக்குறோமே....என்ன பண்ண இப்போ...அவ்வ்வ்வ்

  ReplyDelete
 3. தன்னம்பிக்கையும், மன உறுதியும் இருந்தால் எந்த சரிவும் நமக்கு சோர்வை தராது, யாரை நம்பியும் இருக்க வேண்டியதில்லை

  ReplyDelete
 4. ஏதேனும் ஒரு ஈர்ப்பு . ஒவ்வொரு செயலோடும் ஒத்துப்போகிறது .

  ReplyDelete
 5. வணக்கம் விச்சு சார்,நலம்தானே?தங்களது வருகைக்கும்,
  கருத்துரைக்குமாய் நன்றி.

  ReplyDelete
 6. வணக்கம் சிட்டுக்குருவிசார்,நலம்தானே?நன்றி தங்களது வருகைக்கு நன்றி.ஒரே பெயரில் பிளாக் இருந்தால் இப்பொழுது என்ன இப்பொழுது? இருந்துவிட்டுதான் போகட்டுமே?

  ReplyDelete
 7. வணக்கம் பாலா சார்,நலம்தானே?சோர்வு தராத தன்னம்பிக்கையும்,மனஉறுதியும் மட்டுமாய் இதில் கோலாச்சவில்லை.
  நமது முதுமையும்,வயதும்தான்/

  ReplyDelete
 8. வணக்கம் சசிகலா மேடம்.செயல்களோடு ஒத்துப்ப்போகிற மனித ஈர்ப்புகள் நிறையவே மனிதவாழ்வில்.நன்றி தங்களது வருகைக்கும்,
  கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 9. சிலரைப் பிடிக்கிறது.இப்படித்தான் !

  ReplyDelete
 10. வணக்கம் ஹேமா மேடம்.மனம் பிடித்த சிலரது செய்கைகள் இப்படி இருப்பதை இந்த சமூகம் தொடர்ந்து பதிவு செய்கிறது.

  ReplyDelete
 11. ஒருவரை நம் மனம் ஏற்றுக் கொண்டுவிட்டால்
  அவரை சந்திக்கப் எப்படி வேண்டுமானாலும்
  பிரயத்தனப் படுவோம்.. என்பதை
  அழகாய் விளக்கும் பதிவு..

  ReplyDelete
 12. துவங்கியதும் முடித்ததும் மிக மிக அருமை
  மனம் தொட்ட கவித்துவமான பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 13. வணக்கம் ரமணி சார்,நலம்தானே?தங்களது வருகைக்கும்,
  கருத்துரைக்குமாகமிக்க நன்றி.

  ReplyDelete
 14. வணக்கம் மகேந்திரன் சார்,நலம்தானே?தங்களது வருகைக்கும்,கருத்துரைக்கும் நன்றி.

  ReplyDelete