15 Mar 2012

இருப்பு,,,,,,,



சாலையோரப் புழுதியில்கிடந்த

கற்றைப்பூவின்இருப்பு

தொடுத்தவளின் எண்ணங்களையும்,

உதிர்த்தவளின்மனதையும்

ஒரு சேரசொல்லிவிட்டுச்

செல்கிறது காற்றின் திசையில்/ 

12 comments:

SURYAJEEVA said...

இப்படியும் யோசிக்கலாமோ தோழர் ?

vimalanperali said...

வணக்கம் சூர்ய ஜீவாதோழர்.இப்படியும் என்ன .இன்னும் கூட
யோசிக்கலாம்தானே/

arasan said...

மாறுபட்ட சிந்தனை சார் ...
சில வரிகளில் பல எண்ணங்கள் ..
வியந்தேன் .. வாழ்த்துக்கள் சார்

சசிகலா said...

குப்பையோடு குப்பையாய் போகும் பூவுக்கும் மரியாதை .

பாலா said...

இப்படியெல்லாம் என்னால் சத்தியமாக சிந்திக்க முடியாது சார்.

vimalanperali said...

வணக்கம் பாலா சார்,இப்படியெல்லாமாக அல்ல,இன்னும் கூட நல்லதாக தங்களால் யோசிக்க முடியும்/தங்களது வருகைகும் கருத்துரைக்குமாக ந்ன்றி/

vimalanperali said...

வணக்கம் சசிகலா மேடம்.குப்பையோடு போகிறதுதானே என ஏன் ஒதுக்க வேண்டும்?குப்பைக்குப்போகிற பொருளும் ஒரு அர்த்தம் சுமந்துதானே செல்கிறது.
நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் அரச்சன் சார்,நல்ம்தானே பேசி ரொம்பவும் நாளாகிப்போனது.தூங்குகிற குழந்தையை லேசாக தட்டிச்செல்கிற செயலைஒத்ததாய் நம் சமூகம் நிறைந்த செல்லச்செயலகள் நிறந்து க்ண் முன் வலம் வந்து கொண்டுமாய்/
நன்றி தங்களது வருகைக்கும் கருத்துரைக்குமாக/

ஹேமா said...

கசங்கிய மலர்ச்சரம்கூடக் கவிதையாகிறது
அதன் இருப்பில் இருவர் !

vimalanperali said...

வணக்கம் ஹேமா மேடம். கசங்கியவையையும்,கசந்தவையையும் பார்க்க கற்றுக்கொள்கிற எழுத்து நீண்ட காலம் வாழும் என சொல்கிறார்கள்.
நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

கீதமஞ்சரி said...

தங்கள் பதிவை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_18.html

vimalanperali said...

வணக்கம் கீத மஞ்சரி அவர்களே/வலைச்சரத்தில் எனது படிப்பை அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி.