6 Apr 2012

சூன்யப்பெருவெளி,,,,,,,


      
    கேஸ் சிலிண்டர் வந்ததும் நிமிர்வு மனம் கொள்கிறது. நிம்மதியும் ஆகிறது.
   பதிந்து 75ந்து நாட்கள் கழித்து வந்த சிலிண்டர் இது. நடையாய் நடந்து கேட்பாய்
கேட்டு  நேரிலும்  போனிலுமாக  மாறி,  மாறி  நச்சரித்து  சலிப்படைந்து  கேஸ்
ஏஜென்ஸிக்காரர்கள் சொன்னபதிலில்திருப்தியடையாமல்ஆளாய்ப்பறந்து அங்கு,இங்கு விசாரித்து அதிக விலை கொடுஹ்து வாங்கிய மண்னெண்ணெயில்அடுப்புப்பாடு ஓடிக்கொண்டிந்த சமயத்தில் காடு மேடெல்லாம் தேடியவாறு மனதிலும்,நினைவிலும் எட்டி உதைத்தவாறு இருந்த சிலிண்டர் இன்று வீடு வந்ததும் ஏயப்பா,,,,காணாததை கண்டது போலவும்,வராது வந்த மாமணி போலவும்,கும்பிடப்போன சிலிண்டர் குறுக்கே வந்த கதையாகவும்,,,,,,,,,எதுகைகள் சேர்த்து சொல்லத் தோணுகிற 15.9என அச்சிடப்பட்டிருந்த சிவப்புக்கலர் சிலிண்டரை நடு வீட்டில் வைத்து குளிப்பாட்டி மாலையிட்டு கும்பிடலாம் போலத்தோணியது.
  யப்பா,,,,,,,,,  நிம்மதியாய்  விட்ட  பெரு  மூச்சு  நாசி  துவாரங்களை கடந்து  புயலாயும்,
சூறாவளியாயும் உருக்கொண்டு வீட்டிலுள்ள பொருட்கள் அனைத்தையும் தலைகீழாக மாற்றிப்போட்டு விட்டுச்சென்றது சில அடி உயரத்திற்கு கொண்டு போய்/
  போன ஜனவரி10 ஆம் தேதி பதிந்தது.புதிதாக சிலிண்டர் வந்த நாளிலிருந்து 30 தினங்கள் கழித்து பதிய வேண்டும் என்றார்கள்.சரி ஐயா என அந்த சொல்லை அடி பிறழாமல் ஏற்றுக்கோண்டு அப்படியே செய்தாயிற்று.
 பதிந்து 45 தினங்கள் கழித்து வந்த சிலிண்டர் தங்களது வீடு வந்து சேரும் என்றார்கள் பதிந்துமுடித்ததும்.
 சரி என அதற்கும் மனதில்லா மனதுடனும்,முக்கலுடனும்,முனகலுடனுமாய் அந்த  சொல்லையும் ஏற்றுக்கொண்டு வந்தாயிற்று.
 என்ன செய்ய,ஏது செய்ய 30+45=75 நாட்கள் என்றால் கணவன்,மனைவி,இரண்டு பிள்ளைகள் +பெற்றோர் உள்ள வீட்டிற்கு தாங்குமா என்கிற யோசனையுடனும்,மன ஆற்றாமையுடனும் கேஸ் ஏஜென்ஸிக்காரர்களின் கண்ணாடிக்கதவு போட்ட அலுவலகத்தில் போய் நின்ற போது சார்,,,,,,,என நீளமாக ஆரம்பித்த இப்போதைக்கு இவ்வளவுதான் முடியும் என்கிறார்கள்.
 இல்லை இதில் நிறைய முறைகேடு நடக்கிறது,முன் பதிந்தவர்களில் சிலர் பிந்தியும்,பின் பதிந்தவர்களில் சிலர் முந்தியுமாய் தள்ளப்பட்டு  விடுகிறார்கள்.அது எப்படி சரியாகும்?எனவும் சிலிண்டர்கள் காசுக்குத்தகுந்தாற்ப்போல் கைமாறுகிறது வினியோகிப்பவர்களால் எனவும் புகார் சொல்லப்பட்டபோதும்,நாங்கள் தகுந்த இடத்தில் புகார்செய்வோம்  எனவும் நிறைந்து வந்த வாடிக்கையாளர்களால் சொல்லப்பட்டபோதும் “நீங்கள் எங்கு வேண்டுமானாலும் போய்  புகார்செய்துகொள்ளுங்கள்,யாரை வேண்டுமானாலும்போய்பார்த்துக்கொள்ளுங்கள்,
உங்களுக்குதெரிந்ததைசெய்துகொள்ளுங்கள்எனபதில்வருகிறது.அவர்களிடமிருந்து கோபமாகவும் அலட்சியமாகவும்.
  நெருங்கிப்போய் கேட்கையில் அவர்களின் ஆதங்கம்  அவர்களிடமிருந்து/
 “அளவுக்கு மீறி கனெக்ஷங்களை கொடுத்து விட்டு இப்போது ஸ்டாக் இல்லாத நேரங்களிலும் லோட் வராத பொழுதுகளிலும் நெருக்கினால் நாங்கள் என்ன செய்வோம்.எங்கு போவோம்?இப்படித்தான் பேச வேண்டியிருக்கிறது.
  தவிரபொதுவாய்ஒருநிறுவனம்வைத்துநடத்துகையில் நாலு பேரை அனுசரித்துத்தான் போக வேண்டியுள்ளது. அப்படியான அனுசரிப்பு நேரத்தில் கொஞ்சம் முன் பின் இருக்கத்தான் செய்யும்.
 நாங்கள் என்ன வீட்டிலிருந்து வரும் போது தினசரி இத்தனை பேரிடம் கோபப்பட வேண்டும்என்கிறமுடிவுடனாவருகிறோம்?
 அதோ கம்பூட்டர் முன் அமர்ந்திருக்கிறதே,அந்த பெண்ணுக்கு நன்றாகயிருந்தால் 20பதைதாண்டாதவயதிருக்கலாம்,உங்களதுமகள்வயதுஎனவைத்துக்கொள்ளுங்களேன்
அந்தப்பெண்ணிடம்வந்துஅவ்வளவுபேச்சும்,அவ்வளவுசண்டையும் போடுகிறார்கள்,
பின் கோபப்படாமல் என்னசெய்ய?” என பதில் வருகிறது.
 மேற்கண்ட அவர்களது பேச்சில் கொஞ்சம் கூடுதல் சேர்மானமும் இட்டுக்கட்டலும் இருந்திருக்கலாம்.ஆனால் நிதர்சனம் உறைக்கிற மிளகாயாக/
  போன வாரம் அம்மா போன் பண்ணியிருந்தார்கள்.கேஸ் சிலிண்டர் ஏதாவது இருக்குமா?இப்போதுஇருப்பதுஇன்னும்இரண்டொருநாட்களில்தீர்ந்து போகும் என/
 அவர்கள் பேசிய பொழுது வெயில் நன்றாக அடித்துக் கொண்டிருந்தது.அவர்களது கேட்டலுக்கு இல்லை என்பதே பதிலாகவும், மண்ணெண்ணெய் கிடைத்தால் வாங்கித்
தருகிறேன்என்பதே பேசிமுடிக்கப்பட்ட பேச்சாகவும் முடிந்து போகிறது.
  இது  மாதிரியான  கேஸ்சிலிண்டரை  தாங்கிய  பேச்சின்  பொழுதுகளில்  மற்றநல
விசாரிப்புகளெல்லாம்பின்தள்ளிப்போகிறது.அல்லதுகேட்கப்படாமலேயேவிடுபட்டுப்
போகிறது.
  ஒருபொருளைதட்டுப்பாட்க்குள்ளாக்கிவிட்டும்,கிடைக்கச்செய்யாமலும்ஆக்கிவிட்டும்
செய்து விடுகிறபோது சிலிண்டர் கேட்டு போன் பண்ணுகிற தாயிடமும் நீண்டநாட்கள் சிலிண்டரை பயன்பட்டுத்துகிற அக்கம்,பக்கத்தார்களிடமும் அவசரத்துக்குசிலிண்டர் கடன் கொடுக்காதவர்களிடமும் கோபமாகி அவர்களை சட்டென எதிரியாய் வரைந்து கொள்கிற கேடு நடந்து போகதான் செய்கிறது.
 அப்படியான சமூக நடப்புகளை இந்த வெளியில் உலாவவிட்டு ஜெயிக்கிறவர்களின் கையில் இருக்கிற நூலிழை பொம்மைகளாக நாம் ஆட்டுவிக்கப்படுகிறோமோ  என்கிற நினைப்புடனும்,நொந்து போதலுடனுமாய் வீடு வந்து சேர்ந்த நேரத்தில் மின்சாரம் போயிருந்தது.
 மூன்று மணிக்குப்போயிருக்கும்,இனி ஆறு மணிக்குத்தான் வரும்.பின் ஏழு மணிக்கு போகும்.அதன் பின் ஒரு முக்கால் மணி கழித்து திரும்பவும் ஒன்பது மணிக்கு போகும்.திரும்பவும் ஒரு முக்கால் மணி கழித்து அதே கதைதான்.இப்படி கட் பண்ணப்பட்ட நேரத்திலிருந்து எந்த நேரமும் வந்து போகிற கரண்ட்டை கணக்கில் வைத்து நிம்மதியாக தூங்கக்கூட முடியவில்லை.நன்கு தூக்கம் வந்து கண் அயர்கிற நேரத்தில் கரண்ட் போய் விடுகிறது.திரும்பவுமாய் கரண்ட் வந்து கண்னை தூக்கம் கவ்வுகிற வேளையில் கரண்ட் போய் விடுகிறது.
 உடலெல்லாம் பிசுபிசுக்கிற வியர்வையுடனும்,எரிச்சலுடனும் எழுந்து வாசலுக்குவந்து வெற்றுவெளியையும்,வானத்தையும்பார்த்துசபித்தபடிஇருக்க வேண்டியுள்ளது.
  பிள்ளைகள்சொல்கிறார்கள்“இன்வெட்டர்வாங்கிவைங்க.தூக்கம் வரமாட்டேங்குது.
மறுநா ஸ்கூல்ல போயி கண்முழிச்சி படிக்க முடியல,தூக்கம்,தூக்கமா வருது,மிஸ் வையிறாங்க”என்கிறார்கள்.
 அவர்கள்சொல்லில்இருக்கும்நிறைந்துபோனவாஸ்தவத்தைஎடுத்து உரசிப்பார்க்கையில்“இங்கு எத்தனை பேரிடம் இன்வெர்ட்டர் வாங்கும் வசதி இருக்கிறது என்கிற கேள்வியே மேலோங்குகிறது.
 அப்படியான கேள்வியடன் தலை குனிந்து நிற்கும் போது,,,,,, “என்ன ஆச்சரியம் அன்றே சாலமன் சொன்னான்,எதிர்காலத்தில் தலைகீழாக தொங்கும் தீபங்கள் வரும் என”என்கிற பழைய தமிழ் சினிமாவின் வசனம் ஞாபகத்திற்கு வருகிறது.
 தலைகீழாகமட்டுமில்லை,ஒட்டவைக்கப்பட்ட,தரையை துளைத்துத் தெரிகிற   
இன்னும்இன்னுமானஎத்தனையோவிதமானகுழல்,அது அல்லாதவிளக்குகள்
வந்து விட்டபோதும் அது எரிய மின்சாரமும்,அந்தமின் வெளிச்சத்தில் சமைத்து சாப்பிடகேஸ் சிலிண்டர்களும் அற்ற வெற்று  வெளிகளாய்   காட்சியளிக்கிறது நம் வீடுகள்/       

15 comments:

Anonymous said...

யதார்த்தமே தான் வாழ்க்கை!

vimalanperali said...

வணக்கம் அட்சயா அவர்களே/நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

விச்சு said...

இருந்தும் இல்லாமல் வாழ்கிறோம். என்னே! நம் தமிழனின் பொழப்பு. தங்கள் ஆதங்கத்தை அழகாகப் பதிவு செய்துள்ளீர்கள். சிலிண்டரினால் இப்போது பகையும் வருகிறது. தெரிந்தவர்கள் கேட்கும்போது இல்லையென்று பொய் சொல்ல வேண்டியுள்ளது.

மகேந்திரன் said...

இன்றைக்கு நம்மவர்கள் படும் அவஸ்தை நிலையை
அப்படியே சொல்லி இருக்கிறீர்கள் நண்பரே...
இருக்க இடமும் இல்லை
படுக்க பாயும் இல்லை
என்பதுபோல..
திரும்பவும் நம்மை காட்டுமிராண்டிகள் ஆக்கிவிடுவார்கள் போல..

சசிகலா said...

சுகமாய் வாழ தேடியதெல்லாம் இப்போது துன்பங்கலாய்.

vimalanperali said...
This comment has been removed by the author.
vimalanperali said...

வணக்கம் மகேந்திரன் சார்,நலம்தானே?திரும்பவும் காட்டு மிராண்டி வாழ்க்கைக்கு செல்லவா இந்த அமைப்பை சிரப்பட்டு ஏற்படுத்தினோம்?தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக நன்றி/

vimalanperali said...

வணக்கம் விச்சு சார்,நலம்தானே?நன்றிதங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் சசிகலா மேடம் நலம்தானே?நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

இராஜராஜேஸ்வரி said...

எரிய மின்சாரமும்,அந்தமின் வெளிச்சத்தில் சமைத்து சாப்பிடகேஸ் சிலிண்டர்களும் அற்ற வெற்று வெளிகளாய் காட்சியளிக்கிறது நம் வீடுகள்/

தண்டனை @!!!

vimalanperali said...

வனக்கம் ராஜ ராஜேஸ்வரி அவர்களே,நலம்தானே?தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக நன்றி/

ஹேமா said...

இன்றைய நாட்டு நடப்பையும் மறக்காமல் எழுத்தில் பதிந்துவிட்டீர்கள் விமலன் !

vimalanperali said...

வணக்கம் ஹேமா மேடம்.இன்றைய நாடு நடப்பு மட்டுமில்லை, வேதைனையும் சேர்த்தே
பதிவாகி இருக்கிறது.

சிவகுமாரன் said...

இருந்தும் இல்லாமல் இருப்பதற்கு இல்லாமலே இருந்து விடலாம் போலிருக்கிறது.
நல்ல பகிர்வு

vimalanperali said...

வணக்கம்சிவக்குமாரன் சார்.நலம்தானே?இருபதற்கும்.இல்லாமல் இருப்பதற்குமான வித்தியாசததை உணர்த்தி விடுகிறத்ன்ம் என்பது வேறு.அப்படியான நிலையை உருவக்குவது வேறு.நன்றி தங்களது வருகைக்கும் கருத்துரைக்குமாக/