13 Apr 2012

ஜரிகைப்பேப்பர்,,,,,,



கனவுகள் யதார்த்தமாயும் ,
மிகையதார்த்தமாயும்
ஏதாவது சொல்லிச்செல்வதாக/
எப்போதும் பார்த்தறியாதவீட்டில்
குடியிருந்த ஒரு நாள் மாலையில்
பால் ஊற்ற வந்தவர்
நான் வீட்டிற்குள் இருந்த போது
ஒருவராகவும்,வாசற்படியை மிதித்ததும்
வேறு ஒருவராகவும் காட்சி தருபவராய்/
பால் வாங்க பாத்திரங்கள்
ஏதுமற்று கொண்டு போன நான்
மிக்ஸி ஜாரில்பால்  வாங்கி வருகிறேன்.
மாறி  காட்சியளித்த அவரிடம்/

15 comments:

மகேந்திரன் said...

முகம் தெரியா மாற்றங்களை
அழகாய் சொல்லியிருக்கிறீர்கள் நண்பரே..

vimalanperali said...

வணக்கம் மகேந்திரன் சார்.முகம் தெரியாத மாற்றங்கள் நிகழ்கிற காலங்கள் எப்போதும் இனிமையானது ரசிக்க முடிகிறதாகவும் இருக்கிறதுதானே?தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக நன்றி/

பாலா said...

சார் தளத்தின் வடிவமைப்பை அருமையாக செய்திருக்கிறீர்கள்.

vimalanperali said...

வணக்கம் பாலா சார் நலம்தானே?தங்களின் யோசனைப்படியே செய்ததுதான் எனது வலைதளத்தின் வடிவமைப்பு.தங்களது உயரவான யோசனைக்கும்,வருகைக்குமாய் நன்றி.

சத்ரியன் said...

மனம் தனக்குள் தரித்துக்கொள்ளும் காட்சிகள் புறக்கண் கொண்டு காண்கையில் பைத்தியக்காரத்தனமாய் தெரியும்.

சத்ரியன் said...

கவிதைகளுக்கான படங்களை நடுத்தர அளவில் பதிவேற்றினால் இன்னும் அழகாக இருக்கும், என்பது எனது இச்சிறியவனின் கருத்து விமலன் சார்.

Learn said...

பாராட்டுக்கள்

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

ஹேமா said...

இதைத்தான் மனப்பிறழ்வுகள் என்கிறோமோ !

Unknown said...

ஒரு கனவே கண்டது போல இருக்கிறது.. அருமை..

சசிகலா said...

புதிய கோணத்தில் வரிகள் அருமை ரசிக்கும் படி .

vimalanperali said...

வணக்கம் சசிகலா மேடம் நலம்தானே?தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாய் மிக்க நன்றி/

vimalanperali said...

வணக்கம் யோவ் அவர்களே/கண்ட கனவின் புகை மூட்டம் நம்முள் நிலை கொண்டு இருக்கிறதுதானே?நன்றி தங்களது வருகைகும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் ஹேமா மேடம்.நன்றி தங்களது வருகைக்கும் கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் தமிழ் தோட்டம் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் சத்திரியன் சார் நலம்தானே?தங்களின் கருத்தை ஏற்று படங்களை நடுத்தர அளவில் வைக்கிறேன்.தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக நன்றி.