23 May 2012

எனக்கு 74,அவருக்கு 76,,,,,,,


   வீட்டின் பக்கவாட்டு வெளியின் வலது முனை ஓரத்தை காண்பித்து அங்கு அமர்ந்து தாத்தாவுக்கு சவரம் பண்ணிக்கொள்ள அனுமதி கேட்கிறாள் பாட்டி.
 சமீபகாலமாய் அவர்களுக்கு அது ஒரு பெரும் பிரச்சனையாகவே ஆகிப்போனது.3 மாதங்களுக்கு ஒரு முறையோ அல்லது இரண்டரை மாதங்களுக்கு ஒருமுறையோ ஏற்படுகிற சங்கட நிகழ்வாகவே பதிவாகியும் போகிறது அது.
“இந்த 79வயதில் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாவிட்டால் என்ன?அப்படியேதான் இருந்துவிட்டுப் போகட்டுமே,/
 “இப்பொழுது என்ன திரிந்து தொங்குகிற  ஜடாமுடியுடனோ அல்லது தாடியுடனோகாட்சிஅளிக்கிறஅசிங்கத்துடனாஅலைந்துகொண்டிருக்கிறார்.
 “குறைந்த அளவே இருக்கிற முடி,முகம் மூடியிருக்கிற தாடி,சரிந்து தொங்குகிற மீசை என இருக்கிற எதுவும் அவ்வளவு   மிகையாக தெரியாத போது ஏன் அனாவசியமாக கவலைகொள்ள வேண்டும்?”
 “இருந்து விட்டுதான் போகட்டுமே அப்படியே,இதற்காக கடை தேடி,ஆள் தேடி,அவரை பேசி,இவரை பேசி இவ்வளவு காசு தருகிறேன் என கெஞ்சி கூத்தாடி வீட்டுக்கு வருவதற்கு 60 ரூபாய் கேட்கிறார்கள்.கடையில் என்றால் 30 ரூபாயாம்/”
  “எந்தக்கடையிலும் ஏறி இறங்க  முடியவில்லை இவரால்.படி அவ்வளவு உயரமாகிப்போனதா அல்லது இவர்தான் படியில் இவரது பலம் குறைந்து  தெரியவில்ல்லை.”
 “பிராயத்தில் ஒரு குண்டால் மூட்டையை தலையில் வைத்து 14 படிகள் கொண்ட  மர ஏணியில் ஏறி மாடியில் அறையில் அடுக்குவார்.அப்படி ஏறியவரின் காலில் இருந்த வேகம் இன்று சலூன் கடை வாசலில் ஏற மறுக்கிறது.”
 “என்ன செய்ய தம்பி இப்பிடிபண்ணுனா?கம்பு ஊணி நடக்கவும் கூச்சப்படுறாரு.இதுல என்ன இருக்கு தம்பி சொல்லு.நமக்கு எப்பிடி சௌரியமோ,நம்ம ஒடம்புக்கு எது தோதோ அதப்பாத்துக்கிட்டு போக வேண்டியதான,முன்ன பிராயத்துல இருந்த மாதிரி இருக்கணும்னு நெனைச்சா எப்பிடி?அதான் நான் அவர முன்ன நடக்க விட்டு பின்னாடி போயிக்கிட்டுஇருந்தேன்.ஒருகடை கூட இன்னும் தெறக்கல,நடந்து வந்த களைப்புக்கு ஆத்தமாட்டாம அந்த வீட்டு வாசல்லதான் உக்காந்துருக்காரு தாத்தா.என சொன்ன பாட்டியின் பெயர் வெங்கிட்டம்மாள் எனவும் தாத்தாவின் பெயர் ராமசாமி எனவும் குடும்ப அட்டையிலும்,வாக்காளர் அடையாள அட்டையிலுமாய் அடையாளப்படுத்தப்பட்டிருந்த அந்த தம்பதிகள் இந்த தெருவிலிருக்கிற யார் வீட்டு வாசலிலும் அமரவும்,பேசவும், சிரிக்கவும்,பகிர்ந்து கொள்ளவும் இங்கே முழு உரிமை பெற்றவர்களாய்/
 வீட்டு வாசலில் பேச்சரவம் கேட்டு வெளியில் வந்த போது இடுப்பில் கைவைத்துகொண்டு பாட்டியும்,அவளுக்கு துணையாக அவள் சுமந்து நின்ற  சொற்களுமாய் நெசவிட்டுக்கொண்டு/
  சொற்களின் கூட்டாக ,வாக்கியங்களின் கூட்டமைப்பாக அவளிடமிருந்து வெளிப்படுகிற சொல் தெளிவாக்கம் என்னை அவள் பக்கமும்,அவளது பேச்சின் பக்கமும்,அவள் தாங்கி நின்ற முதுமையின் பக்கமுமாய் ஈர்த்து பதியனிட வைத்து விடுகிறது.
 “இப்பத்தான் ஒரு கடைக்காரன பாத்து பேசீட்டு வந்தேன்.அவனும் வர்ரேன்னு சொல்லீட்டான்,அப்பிடி அவன் வந்தா இந்தா இந்த ஓரத்துல உக்காந்து சவரம் பண்ணீட்டு முடிய கூட்டி அள்ளிப்போட்டுர்ரேன்”என வீட்டின் பக்கவாட்டு வெளியின் ஓரத்தை காட்டினாள்.
  நானும் சரி என தலையாட்டியவாறு தாத்தாவுக்கு வயசு என்ன இருக்கும் என்கிறேன்.
 “அதஏன் கேக்குற?அவருக்கு 76.எனக்கு 74. ரெண்டு வயசுதான் வித்தியாசம்.அதான் பெரிய சங்கடமா இருக்கு இப்ப.ஒரு அஞ்சு வயசு,பத்து வயசு முன்ன,பின்ன இருந்துட்டாக் கூட தெரியாது.”,
 “கொஞ்சம் ஒழப்பா ஒழச்சிருக்கேன் இவருக்காக?புள்ள மாதிரியில்ல வச்சி பாத்துக்கிட்டு இருக்கேன்.ரெண்டு பேர்ல யாரு முந்தீர்ரம்ன்னு தெரியல.அவரு முந்தீட்டா நல்லாயிருக்கும்,சரிதம்பி ரொம்ப நேரம் பேசீட்டேன் நீ வேலைக்கு  கெளம்பு.”
  “நாங்களும் போயி ஏதாவது சாப்புட்டு வந்துர்ரோம்,கடைக்காரன் வர்றதுக்கு முன்னால என தாத்தாவின் கரம் பற்றி நடக்கிறாள்.உங்களுக்கு நான் பிள்ளை,எனக்கு நீங்கள் பிள்ளை என”/

18 comments:

 1. பரஸ்பர அன்பின் வெளிப்பாடும்..

  துணையின் ஆசையை தீர்க்கத் துடிக்கும்

  இணையின் எண்ணங்களும் கதையில் எமை

  பின்னிப் போட்டுவிட்டது நண்பரே...

  ReplyDelete
 2. தளர்ந்திடும் முதுமை வரினும்
  தளர்வுராக் காதல் கவிதை
  இதை வெளிப்படுத்தியது கதை.நன்று.

  ReplyDelete
 3. அன்பு தேடியும் ஆதரவு தேடியுமாய் தவிக்கிற பரஸ்பரங்கள் நிறந்து பரவியுள்ள இப்புவியில் முதுமைக்கு மரியாதையும்,கவனித்தலும் சற்றே குறைவாக உள்ளதுதான்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 4. வணக்கம் tn முரளித்ரன் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,
  கருத்துரைக்குமாக/முதுமை இப்படித்தான் பரஸ்பரம் தங்களுக்குள் நட்பு பாராட்டுக்கொண்டு வாழ்நாளை கடத்துவதாக/

  ReplyDelete
 5. “பிராயத்தில் ஒரு குண்டால் மூட்டையை தலையில் வைத்து 14 படிகள் கொண்ட மர ஏணியில் ஏறி மாடியில் அறையில் அடுக்குவார்.அப்படி ஏறியவரின் காலில் இருந்த வேகம் இன்று சலூன் கடை வாசலில் ஏற மறுக்கிறது.”//

  முதுமையின் ஒரு சிறு செயல் கூட
  எத்த்னை பெரிய பிரச்சனையாய் மாறிப்போகிறது
  இதை கூர்ந்து பார்க்கும் மனித நேயம்
  இங்கு எத்தனை பேருக்கு உள்ளது
  ம்னம் கவர்ந்த அருமையான பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. நன்றி ரமணி சார்.முதுமை நம் நாட்டின் தேசிய அடையாளமாக/அந்தஅடையாளத்தை பொத்திபாதுகாப்பது நம் கடைமையாகிறது.

  ReplyDelete
 7. எனக்கு மிகவும் பிடித்த பருவமும் அதுதான்..கதை நன்று நண்பரே...

  ReplyDelete
 8. வணக்கம் ரெவெரி சார்,நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 9. நெகிழ்ச்சியான பதிவு. நானும் பார்த்த வரையில் கணவன்தான் தனக்குமுன் இறக்க வேண்டும் என நினைக்கிறார்கள். இவர்கள் எப்படியும் சமாளிப்பார்கள். ஆனால் ஒரு ஆண் பெண்துணையில்லாமல் வாழ்வது கஷ்டம் என்ற எண்ணம். இதுதான் தாய்மை.

  ReplyDelete
 10. //கம்பு ஊணி நடக்கவும் கூச்சப்படுறாரு.//

  நல்ல நடையும் கருத்துமாய் கதை பயணிக்கிறது..

  ReplyDelete
 11. இளமையில் அன்பை உணராத பலர் முதுமையில் தனிமையில் வாழும் போதுதான் கணவன் மணைவியின் அன்பையும், மணைவி கணவனின் அன்பையும் உணருவார்கள். அதை சிறப்பாக பதிவு செய்துள்ளீர்கள்.

  ReplyDelete
 12. வணக்கம் விச்சு சார்,நலம்தானே?நன்றி தங்களது வருகைக்கும்,
  கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 13. வணக்கம் சதீஸ் பிரபு சார்,.நலம்தானே?நன்றி தங்களது வருகைக்கும்,
  கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 14. வணக்கம் வேல் முருகன் சார்,
  நன்றி தங்களது வருகைக்கும்,
  கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 15. இன்று மனித நேயம் மரித்துப் போகிக் கொண்டு இருக்கும் காலம் சிறந்த படைப்பு ....

  ReplyDelete
 16. வணக்கம் மாலதி மேடம்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 17. என் அப்பா அம்மாவின் ஞாபகம்தான் வருது விமலன் !

  ReplyDelete
 18. வணக்கம் ஹேமா மேடம்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete