17 May 2012

அரிசிமாவும்,உளுந்த மாவும்,,,,1


இரண்டுவடைகளைசேர்ந்தடியாகசாப்பிட்டதில்வயிறுஒத்துக்கொள்ளவில்லை.ஊதிக்கொண்டது காற்றாடித்த பலூனாக/ விட்டால் உடம்பிலிருந்து பிய்த்துக் கொண்டு தனியாக காற்று வெளியில் பறந்து திரிய ஆரம்பித்து விடும் போலிருக்கிறது. பலூனும் உருண்டை ,வயிறும் உருண்டை.அப்பா உங்களுக்கு தொந்தி வைத்து விட்டது.தொப்பை,தொப்பை,தொப்பை ,,,,,,,,என கேலிபண்ணுவாள்.சமயத்தில் அவனை சுற்றி வந்து கும்மியடிப்பாள்.பூ ஒன்று கை விரித்து நடமிடுவது போலிருக்கும் பார்ப்பதற்கு/ அவள்காற்றுவெளியில் பறந்து போய் வயிறை மீட்டுக்கொண்டு வருவாளா?கேட்கலாம் அவளிடம். இப்படி ஒன்று நிகழ்ந்து போனது எனக்கு இந்த நேரத்தில் இன்ன இடத்தில் என்று சொன்னால் தன் ஓட்டைப்பல் தெரிய சிரிப்பாள்.கன்னத்தில் விழுகிற குழியில் அரைப்படிஎண்ணெய்ஊற்றலாம்போலிருக்கிறது. சொன்னால் அதற்கும் சிரிப்பாள். மறுபடியும் குழி.மறுபடியும் எண்ணெய்,,,,,,,சொல்லல்,குழி எண்ணெய்,,,,,யப்பா போதும் சிரிப்பை நிறுத்து நீ.ஒவ்வொருதடவைக்குமாய் விழுகிற குழிக்கு அரைப்படி என்றால் எங்கே போவது? இந்த மாதபட்ஜெட் அவ்வளவுதான்,தாக்கல்செய்துமுடிந்து போனது,பலசரக்குக்கடை, பாத்திரச்
சீட்டு,தேனம்மாள் ஸ்டோர்,ஜவுளிக்கடை,LIC கேபிள் டீ,வி எல்லாம் முடிந்து 
தேதி20ஐஎட்டுப்பிடிக்ககைநீட்டிக்கொண்டிருக்கிறது.இந்த நேரத்தில் இப்படி,,,,? “அப்பநாங்கபடுறஆசைக்கும்,நடந்துக்குறநடப்புக்கும்அளவு வச்சிக்கிரனுமா
ப்பாமகள்ஆமாப்பா, கண்டிப்பா அப்பிடித்தான். இல்லாதவுங்க வீட்ல மட்டுமில்லநம்மளமாதிரி நடுத்தரவர்க்ககுடும்பத்துலபொறந்துட்டாலும்
இதுதான்கதி,இருக்குறதையும்,ஆசையையும்சுருக்கி வாழப்பழகிக்கிரணும், ஆமாம்எனசொல்பவனைஏறிடும் மகளை அவன் பார்ப்பதும்அவள் திரும்பவும் கன்னம் குழி விழ சிரிப்பதும்வாடிக்கையாகிப்போனது.வாழ்க வளமுடன்/ ஒல்லியாய்வெடவெடப்பாகஇருக்கிற மகளை”நல்லாசாப்புடு,தெம்பா இரு,ஒடம்பப்பாரு காத்தடிச்சா பறந்துருவ போலயிருக்க”என்பான் அவன். ஊம் நீங்க மட்டும் எப்படி இருந்தீங்களாம் முன்னாடி?போன வருசம் வரைக்கும் ஒடம்புல இருக்குற எலும்பு வெளியில் தெரியிற மாதிரி இருந்தீங்க.இப்ப ஒரு வருசமா ஒக்காந்து பாக்குற வேல கெடைச்ச ஒடனே இப்பிடி ஆகிப்போட்டீங்க/-மகள். “ஆமா நானு ஆயிட்டேன்.நான் என்ன செய்யட்டும்?ஒங்க அம்மா கொணாந்து சாப்புடு,சாப்புடுன்னு திணிக்கிறா.அப்புறம் தொந்தி வைக்காம என்ன செய்யும்?நீயும் நல்லாசாப்புடு,ஒனக்கு தொந்திவைக்காட்டி கூட ஒடம்பாவது தேறுமா,இல்லையா?ஒங்க அம்மா ஒனக்கு வைக்க வேண்டிய சாப்பாட்டையும் சேர்த்து ஒங்க அக்காவுக்கு வச்சிர்றா போலயிருக்கு.என மனைவியை ஏறிடுவான். “என்னைய எதுக்கு ஒங்க பேச்சுக்கு ஊடால இழுக்குறீங்க?என்னைய வம்புக்கு இழுகாட்டி ஒங்களுக்கு ஒரக்கம் வராதே என்பாள்பதிலுக்குமனைவியும். “ஆமாம்ஒன்னையவம்புக்கு இழுக்குறாங்க,
இழுக்க மாட்டாம. பத்துபவுன் நகையையும்,ஒட்டுச்சடையையும் வச்சி ஒன்னய ஏந்தலையில கட்டீட்டாங்க”-அவன். “ஏன் ரெண்டு பவுந்தான் போட்டாங்கன்னு கூட சொல்லுங்க,என்ன கொறஞ்சி போச்சாம்இப்ப”?மனைவி. “அப்பிடித்தான் சொல்லுவேன், மைக் போட்டு சொல்லுவேன், தெரு முக்குல போயிசொல்லுவேன்,ஊரு மத்தியில நின்னு ஓன்னு கத்தி சொல்லுவேன்.எங்கசொந்தக்காரங்ககிட்டசொல்லுவேன்,ஒங்கசொந்தக்காரங்ககிட்ட சொல்லுவேன்,”அவன்.“சொல்லுங்க,சொல்லுங்க,,,,அப்பிடியேசொல்லிக்கிட்டேபோயிகௌவர்மெண்ட் ஆஸ்பத்திரியில பைத்தியக்கார வார்ட்ல சேந்துருங்க. இத்தன வயசுக்கப்புறம்இப்பிடிஎல்லாம் யோசிக்கிற ஆளு என்னைய ஏன் கட்டுனீங்க, வேற ஒருத்திய கட்டீர்க்க வேண்டியதுதான”?அவள். என்ன செய்யச் சொல்ற.ஒன்னய பொண்ணு பாக்க வந்த நாள்ல கொஞ்சம் புத்திய கடன் குடுத்துட்டேன்.இப்ப கெடந்து அனுபவிக்கிறேன்.”-அவன். “அப்பிடி என்ன அனுபவிக்கிறாராம் ஐயா பெருசா”?அவள். “ஆரம்பிச்சுட்டீங்களாஒங்கதிருவிளையாடலஎனஇரண்டுமகள்களும்சிரித்துக்கொண்டு விளையாடப் போய் விடுவார்கள் அல்லது தொலைகாட்சியில் ஆழ்ந்து போவார்கள். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவர்களுக்கு மிகவும் பிடித்தது,,,,,,,,,,,,,,,,,,,,,என்கிற ராகத்துடன்வருகிறவிளம்பரமும்,மற்றும்சிறுவர் சிறுமிகள் வருகிற நாடகமும்,சினிமாவும் மட்டுமே/ பெரியவள் பேருக்குத்தான் பெரியவள்,ஆனால் இன்னும் சிறியவளாகவே/பேச்சு செய்கை, நடவடிக்கை,எல்லாவற்றிலுமாய்.அவளது அம்மா கூட தினசரி திட்டுகிறாள். “என்ன இன்னும் சின்ன நொட்டச்சி மாதிரி.நாளைக்கு வேற வீட்டுக்கு போகப்போற.போற யெடத்துல எங்களத்தான் சொல்லுவாங்க புள்ளய வளத்து வச்சிருக்குற லட்சணத்தப்பாருன்னு”.என்பாள். அட விடும்மா, தினசரி அக்காவ இப்பிடி சொல்லிச்சொல்லியே அமுக்கி வச்சிட்டீங்க.ஸ்கூல்ல ஹாக்கி டீம்ல வெளையாடபோறேங்குறா,இப்பிடி என்னத்தையாவது சொல்லி தலையிலதட்டிஅவள உக்காரவச்சிர்றீங்க.கல்யாணம்,போற யெடம்,பேச்சுன்னு,,என்பாள் சின்ன மகள். அவளது பாட்டி கொடுத்திருந்த காசில் வாங்கிய சுடிதாரைத்தான் அணிந்திருந்தாள்.அது அப்படித்தான், அவர்களுக்குள்/ இப்படி பாட்டி கொடுப்பதும், பேத்திகள் வாங்கிக்கொள்வதும் வாடிக்கையாகிப் போனது. இப்படியாக ஓடுகிற பேச்சுகளுக்கு மத்தியில்தான் தொலைக்காட்சியும்ஓடிக்கொண்டிருக்கும். பேச்சுப்பாதி,தொலைக்காட்சி
பாதிஇன்னபிறபாதிஎன மாறி,மாறி ஓடிக்கொண்டிருக்கிற நிகழ்வுகளுக்கு மத்தியில் நகர்கிற பொழுதாக இருக்கிற வீட்டின் அன்றாடங்கள் பார்க்க மிகவும் நன்றாகவும் சற்றே கலவரம் கலந்துமாய்/என மிதந்த நினைவுகளுடன் வீடுவந்துகொண்டிருக்கிறேன்.இரண்டுவடைகளைசேர்ந்தடியாக சாப்பிட்ட
தில் வயிறு ஒத்துக் கொள்ளவில்லை

15 comments:

விச்சு said...

குடும்பம்னாலே இப்படித்தான் சார். சந்தோஷமும், சின்ன சின்ன சண்டைகளும் இயல்புதான். அது இல்லையென்றால் வாழ்க்கையில் சுவராஸ்யம் இருக்காது. நீங்களும் என்னைப்போல ஒல்லியாகத்தான் இருந்தீர்களா? நான் இன்னமும் அப்படியே..

vimalanperali said...

வணக்கம் விச்சு சார்,நலம்தானே?சந்தோசங்களையும்,சண்டைகலையும் ஒரு சேர அடைகாத்து வைத்துக் கொண்டிருக்கிற அடைக்கூடாக குடும்பங்கள்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

வறுமையும் இல்லாத வளமையும் இல்லாத குடும்பங்களின் யதார்த்த நிலையை படம் பிடித்துக் காட்டுகிறது. சிறுகதை

vimalanperali said...

வணக்கம் tn முரளிதரன் சார் நலம்தானே?நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

துளசி கோபால் said...

கொஞ்சம் பத்தி பிரிச்சு இடைவெளி விட்டுப் போட்டுருந்தால் வாசிக்கும் கண்களுக்கு சோர்வு இருக்காது!

முத்தரசு said...

நல்லா இருக்கு எதார்த்தமாக,அரிசி மாவும் உளுந்தமாவும்.

வேல்முருகன் said...

குடும்பத்தில் நிகழும் ஒரு சிறு நிகழ்வும் சிட்டுகுருவி பார்வையில் தந்த விமலன் சார் கடையில் அடிக்கடி வடை சாப்பிடாதீங்க.

vimalanperali said...
This comment has been removed by the author.
vimalanperali said...

கண்டிப்பாக முயற்சிக்கிறேன் துளசி கோபால் சார்,
தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாய் நன்றி/

vimalanperali said...

தனது தள்ளாத வயதில் ஒற்றையாய் இருந்து வடை சுட்டு விற்றுப்பிழைக்கிற சனாதனவிதவைத்தாய் யரும் அடிக்கடி வடை வாங்கவில்லையானால் எங்கு போவாள் பிழைப்பிற்கு?,,,, என்கிற கேள்வியையம் உள்ளடக்கியே இருக்கிறது வடைசாப்பிடுகிற நிகழ்வு என்பதாய் படுகிறது வேல் முருகன் சார்,நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/

vimalanperali said...

அரிசிமாவும் உளுந்த மாவும் கலந்து சுட்ட தோசைகள் இப்பொழுது,எங்கும் ,எப்பொழுது காட்சி தருபவையாகவே மனசாட்சி சார்,நன்றி வணக்கம்.மாவின் கலவையும் இங்கு பேசுபொருளாகிப்போகிறது.

ராஜி said...

துளசி கோபால் said...

கொஞ்சம் பத்தி பிரிச்சு இடைவெளி விட்டுப் போட்டுருந்தால் வாசிக்கும் கண்களுக்கு சோர்வு இருக்காது!
>>
என் கருத்தும் இதேதான் சகோ

vimalanperali said...

கண்டிப்பாக இடைவெளி பிரித்து போடுகிறேன்.ராஜி அவர்களே/நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

ஹேமா said...

வடையும் வாழ்வும் வாசனை !

vimalanperali said...

வணக்கம் ஹேமா மேடம்,நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/