10 Jun 2012

ஜூன்-8,,,,,


  காலை பத்து மணிக்கு அங்கு இருந்திருக்க வேண்டும்.ஆனால் 9.15  அல்லது 9.00 மணி இருக்கும் நான் பஸ் ஏறும் போது.
  கடந்த 8.6.12 அன்று அகில இந்திய கிராமவங்கி ஊழியர்கள் சங்கம் நடத்திய ஒரு நாள் வேலைநிறுத்ததின் போது எங்களது பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் சங்கமும்,அலுவலர் யூனியனும் இணைந்து மதுரையில் நடத்திய கருத்தரங்கத்தில் கலந்து கொள்ள சென்று கொண்டிருந்தேன்.
  சிவப்பு பார்டரினூடாக வெள்ளை எழுத்துக்களும்,வெள்ளை பரப்பினூடாக சிவப்பு எழுத்துக்களுமாய் உள்ளடங்கி ஓடிப் பொதிந்திருந்த அழைப்பிதழாய் இருந்தது  அது.
  ஜீன் 8 கருத்தரங்கம்.காலை 10 மணி.AIRRBEA TN &PUDUVAI invites (AIRRBEA) இடம் சொக்கநாதர் திருமண மண்டபம்,வடக்கு மாசி வீதி மதுரை.
  “துவக்கவுரை,தோழர் சோலைமாணிக்கம்,(secy,AIRRBEA.TNand puduvai)”
  “தலைமையுரைதோழர்பிச்சைமுத்து(president,AIRRBEA.tnand puduvai)”
  “துவக்கவுரை.தோழர்விக்கிரன்மாநிலச்செயலாளர்CITU“வங்கித்துறையும்,
   பணிச்சூழலும்”
  “தோழர்CPகிருஷ்ணன்(secy,befitn.)மாறிவரும் சூழலும்,கிராமவங்கிளும்”
  “தோழர் கிரிஜா (joint secy,south jone,AIIEA)”
  “நன்றியுரை(organisingsecy,AIRRBEAand puduvai )”
  “சமீபத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தோழர்களை பாராட்டுயும்,வாழ்த்தியும்    
   தோழர் சங்கரலிங்கம்(G S-PGBOU)தோழர் மாதவராஜ் (president.pgbea) எனமுரசறிவித்தஅழகானஅழைப்பிதழின் எழுத்துக்களை கைபிடித்துக்கொண்டு பஸ்ஸில் ஏறி அமர்கிறேன்.
  மதுரைரோட்டிலிருக்கிற வாகனக் காப்பகத்தில் எனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு P R C க்கு எதிராக போய் நின்றேன்.
  விருதுநகர் டூ திருமங்கலம் செல்லும் பேருந்து அது.பார்க்க ஒரு கலராய் இருந்தது.எப்படியிருந்தாலும் திருமங்கலம் சென்று பஸ்மாறத்தானே வேண்டும் மதுரைக்கு.
  ஏறி உட்கார்ந்து விட்டேன். அன்பின் மனிதர்நாசர் புகைவண்டியில் வருகிறேன்,
நீங்களும் வாருங்கள்,சேர்ந்து போகலாம் என்றிருந்தார் நேற்றே.
  சில,பல சமுதாய சிக்கல்களின் காரணமாக அவருடன் சேர்ந்து செல்ல முடியவில்லை. நான் பரவாயில்லை,அவர் தென்காசியிலிருந்து வருகிறார்.
  வலது புறமும்,இடது புறமும் வாசலுக்கு வழிவிட்டு வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாக நடப்பட்டிருந்த சீட்டுகளில் வலது புறமாய் கடைசி சீட்டில் அமர்ந்திருந்தேன்.
  காலடியில் பஸ்சின் மேல்கூரைக்கும்,அடித்தளத்திற்குமாய் நடப்பட்டிருந்த கம்பியில் உருளையான சில்வர் கம்பியின்  அடிப்புறத்தில் போல்டு ஒன்று கழன்று ஆடிக்கொண்டிருந்தது பஸ்ஸின் அதிர்விக்கேற்றவாறு.உடவே சிதறிக்கிடந்த மண்ணும்,தூசித்துகள்களும்/
  திருமங்கலம் பஸ்டாண்டில் இறங்கி நாசருக்கு போன் செய்தபோது புகை வண்டியில் சென்று கொண்டிருக்கிறேன்,கருத்தரங்கில் சந்திப்போம் என்றார்.சரி என பஸ் ஏறி சேதுபதி ஸ்கூல் பஸ் ஸ்டாப்பில் இறங்கி விட்டேன்.
  வழி விசாரித்தவரிடம் கேட்டபோது சொன்னார்.இது மாசி வீதி,நீங்கள் கேட்டது வெளி வீதி என்றார் இரண்டுக்குமான வித்தியாசத்தை விளக்கும் விதமாக/
 அவரது கை அம்புக்குறியிட்ட சாலையை நோக்கி நடந்த போது சாலையோர டீக்கடையோரமாக்க இன்னுமொரு அன்பின் மனிதர் ராமு சார்(T.ராம்நாட் கிளை)நின்றிருந்தார்.
  “வாங்க டீ சாப்புடுறீங்களா என எனது பதிலை எதிர்பாராமலேயே இரண்டு கட்டிங் டீ என்றார்(“நாசமாப்போச்சு டீயிலயும் கட்டிங்கா”?)
  டீக்கடைக்காரர் கொடுத்த திக்கான டீ எனக்கு கிக்காகத்தெரிந்தது.நல்ல வேளையாக ராமு சார் மேல் சாயவில்லை.
  மண்டபம் பக்கம்தான் என்றார்.முதல் நாள் மற்றுமொரு அன்பர் சுரேஸிடம் விசாரித்த போது அவர் சொன்ன அங்க அடையாளங்களை பூசிக்கொண்டு பரபரப்பாய் இய்யங்கிக்கொண்டிருந்தது அந்த  வீதி.
  கல்யாணமண்டத்தின் முன்னால் கட்டப்பட்டிருந்த AIRRBEA எழுத்துக்கள் பொரித்த துணிக்கொடிகள், மண்டபட்தின் உள்வாயிலை  அலங்கரித்த தோரணங்கள் வரவேற்க உள்ளே போய் அமர்ந்த போது துவங்கி விட்டிருந்தது கருத்தரங்கம்.
  “அடடா,நாந்தான் லேட்”.தலையில் ஓங்கி ஒரு கொட்டு கொட்டிகொண்டு மேடையைப்பார்த்தால் தோழர் சோலை மாணிக்கம்(G.S,PGBEA) அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்.
  பின்தோழர்விக்கிரமன்CITUமாநிலச்செயலாளர்அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது 100 தோழர்களுடன் இருந்த கருத்தரங்கக்கூட்டம் நேரம் ஆக,ஆக 200 ஐ தொட்டுக்கொண்டிருந்தது.பல்லவன் கிராம வங்கி ஊழியர் சங்கத் தோழர்களும்,புதுவை பாரதியார் கிராம வங்கி சங்கத்தோழர்களுமாய்/
  பின் தோழர் CP கிருஷ்ணன் அவர்கள்,கிரிஜா அவர்கள் ,T.கிருஷ்ணன் அவர்கள் என கருத்தரங்கம் முடிவை நெருங்கிக்கொண்டிருந்த தருணத்தில் சமீபத்தில் பணி ஓய்வு பெற்ற தோழர்கள் மூவருக்கான  பாராட்டு விழா.அதில் தோழர்  ஜெயக்குமார்  மிகவும்  நெகிழ்ந்து காணப்பட்டார்.
  சிரிப்பும்,பேச்சும்,விசாரிப்பும்,கருத்துப்பரிமாற்றமுமாகமண்டபதைநிறைத்திருந்த
தோழர்கள் 300 பேர் முகத்திலும் 600 விதமான சந்தோச ரேகைகளை காண முடிந்தது.என்னுடன் சேர்ந்து கொடிகளையும் தோரணங்களையும் கழட்டிய தோழர் முருகேசன்(கல்குறிச்சி கிளை) உட்பட/
  கருத்தரங்கம் முடிந்த பின் தோழர் மாதவராஜ்(தலைவர் pgbea)பல்லவன் கிராம வங்கி தோழர் ஒருவரை அறிமுகப்படுத்தினார்.
 அவர் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள”அஞ்சட்டி என்கிற மலை கிராமத்தில் பணிபுரிவதாக கைக்குலுக்கிகொண்டும்,சிரித்துக் கொண்டுமாய் கூறுகிறார்.”இந்தஅனுபவமெல்லாம்எங்களுக்குஇன்னும்காணக்கிடைக்கவில்லை
போகப்போககிடைக்கும்” என்றார்.
  “இதுவும் ஒரு அனுபவம்தானே” என பேசிவிட்டு மண்டபத்தின் மேல் மாடியில் ஏற்பாடாகியிருந்தஉணவை (உதவி சாமுவேல் சார்,பாலு அண்ணன்,சுரேஷ் மற்றும் கிருஷ்ணன் சார்)  சாப்பிட்டு விட்டு கிளம்புகையில் முகம் பார்த்து பழகிய 300 பேரின் சிரிப்பாலும்,பேச்சாலும்,கருத்தாலும்,பாசப்பிணப்பாலும்,மண்டபம் நிரம்பித் தெரிந்தது.
   கருத்தரங்கம் முடிந்து விட்டதா?இல்லை இனிமேலதான் ஆரம்பமா?

4 comments:

 1. வாழ்த்துக்கள். உங்களின் பார்வையில் எல்லாமே புதுசுதான்.பஸ்சின் கம்பியிலுள்ள நட்டினைக்கூட நீங்கள் அழகாக வர்ணித்துள்ளீர்கள்.

  ReplyDelete
 2. வணக்கம் விச்சு சார்.நன்றி தங்களது வருகைக்கும் கருத்துரைக்குமாக/ சமூகத்தின் பாடு பொருள்களில் பஸ் நட்டும் ஒன்றாய்/

  ReplyDelete
 3. பயணமும் கருத்தரங்க நிகழ்வுகளின் பதிவு அருமை

  ReplyDelete
 4. வணக்கம் வேல்முருகன் சார்.நலம்தானே?நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete