6 Jun 2012

தோழர் போஸ்டர் ப்ளீஸ்,,,,,,,,,,,

                  
    ரொம்பவும்தான்நாளாகிப்போனதுபோஸ்டர்களின்தாளை தொட்டுத்தடவி.
 ரொம்பவும்தான்நாளாகிப்போனதுஅதன்வாசனைநுகர்ந்து.   ரொம்பவும்தான்
 நாளாகிப்போனது அதன் வண்ணத்தையும்,அதில்  பொதிந்துள்ள
 எழுத்துக்களையும்,அதன் அளவையும், அழகையும் பார்த்து   ரசித்து/
ரொம்பவும்தான் நாளாகிப்போனது அதை தோள்மீதும்,மார் மீதுமாய் தூக்கி   
சுமந்து அதை சுவரில் விரித்து பசை தடவி ஒட்டி/
   ஒரு சிறு குழந்தையின் மென்ஸ்பரிசத்தைப்போலவும்,விரிந்து மலந்திருந்த பூவை தொட்டது போலவுமாய்  உணர முடிகிறது அப்படி ஒரு போஸ்டரை தொடுகிற கணங்களில்/போராட்ட காலங்களை அறிவுறுத்துகிற போஸ்டர்களைஅப்படிதான் பார்க்கச்சொல்லி கற்றுத்தந்திருக்கிறது எங்களது பாண்டியன் கிராம வங்கி ஊழியர் சங்கமும், அலுவலர் யூனியனும்/
  இன்று எனக்கு அப்படி ஒரு பாக்கியம் வாய்த்தது.அது இருக்கும் அங்கு போய் அரையாண்டுகளுக்கும் மேலாக/
  வருகிற ஜீன் 8 ஆம் தேதி நடக்க இருக்கிற எங்களது அகில இந்திய  கிராம வங்கி ஊழியர்கள் சங்க வேலைநிறுத்ததிற்கான முன் தயாரிப்பு வேலைகளை செய்வதற்காக எங்களது தொழிற்சங்க நிர்வாகிகள் அழைப்பினாலும், மனந்தொட்ட கூப்பிடலாலும் எங்களது சங்க அலுவலகத்திற்கு சென்றிருந்தேன்.
எங்களது தொழிற்சங்க அலுவலகம் இருக்கிற இடம் உங்களுக்குத்தெரியுமா? சொல்லி விடுகிறேன் முதலில்.இல்லையெனில் நீங்கள் என்னை ஏதாவது சொல்லிவிடக்கூடும்.
  விருதுநகரில்  கலெக்டர் அலுவகத்திற்கு முன்பாக அமைந்துள்ள R T O ஆபீஸ் பின்புறமாகஇருந்தகட்டிடம்தான்எங்களதுதொழிற்சங்க அலுவலகம்.
பொதுவாகச்சொல்கிறார்கள்கட்டிடம்என்றாலேவெறும் செங்கலும்,
சிமெண்டும் மட்டும் கலந்து சுமந்து நிற்பது என.
அப்படியில்லைநூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் வியர்வையும்,ரத்தமும்  உணர்வும் கலந்து எழுப்பப்பட்டதே அது என்பேன் நான்.
 அவ்வளவாக வீடுகள் முளைத்திராத புது ஏரியா அது.இப்போது பரவாயில்லை,நாங்கள் எங்களது சங்க அலுவலத்தை அங்கு பதியனிட்டிருந்த காலங்களில்வீடுகள்அங்கொன்றும்,இங்கொன்றுமாய் சிதறிப்போய்தான்
காணக்கிடைத்தது.
 கிளையிலிருந்து வரும் பொழுதே அன்பின் மனிதர் எங்களது சங்கப்பொதுச்செயலாளர்அவர்களிடமிருந்து போன். “இதோ வந்துர்ரேன்னா”/
  ஆம் அவரை நான் மற்றும் எனது வயதை ஒத்த அனைவரும் அப்படித்தான் கூப்புடுகிறோம்.
  ஆமாம் எங்களுக்குள் மலர்ந்து சிரித்துக்கிடந்த அன்பும்,நெசவிட்டிருந்த பிரியமும் எங்களை அப்படி அழைக்க வைத்தது.
  அவரும் அதை மனமார ஏற்றுக்கொள்கிறார்.எங்களுக்குள் அப்படி ஒரு உறவு பூத்து மலர்ந்திருந்தது.
  மனம் தொட்ட மனிதராக இந்த கணம் வரை திகழ்கிற அவருக்கு ஒரு ராயல் சல்யூட்,,,,,இந்த நேரத்தில்.வீர வணக்கம் அண்ணா/
 போய் விட்டேன் சங்க அலுவலகம் இருக்கிற இடத்தை நெருங்கி. அந்தப்பக்கம் போய் விட்டாலே மாரிப்பன் டீக்கடையில் ஒரு டீ சாப்பிட்டு விட்டு செல்வதுதான் எனது வழக்கம்.இன்றும் அப்படியே/
 பின்னே அவர் கோபித்துக்கொண்டால்? அப்படி ஏதும் வேண்டாம் என்றுதான் இப்படியெல்லாம் செய்ய வேண்டியதாகிப்போகிறது.
  நெருங்கிப்போய்ப் பார்த்தால் கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் இப்படி ஒரு காம்ரமைஸ் மெலிதாக ஒட்டிக்கிடப்பது உரக்கத்தெரியும்.
 தொழிற்சங்க  அலுவகத்திற்குள்  காலடி  எடுத்து  வைத்த  நேரம்  பஞ்சாங்கத்திலும், காலண்டர்களிலும் எப்படி குறிக்கபட்டிருந்ததெனத்
தெரியவில்லை.
தோழமை  மனதுடன் அன்பின்  மனிதர்கள்  திரு.சோலை  மாணிக்கம்
(பொதுச்செயலாளர்) அவர்கள்.  திரு.மாதவராஜ்(தலைவர்) அவர்கள் பழைய
பேட்டை மணி அண்ணா,முதலாளி சங்கர சீனி,கோவில்பட்டி பாலு சார்,கிருஷ்ணன்  சார்  சங்கர்  பரதன் சார், ஆண்டோ அண்ணன்,அருண்
அண்ணன்,சுந்தர் சார்  வெகு முக்கியமாக  எங்களது   ரெங்கண்ணா,,,,,
மற்றும் பலர் என பம்பரமாக சுழன்று வேலை செய்து கொண்டிருந்தார்கள்.
  இரண்டு ரூம்,ஒரு ஹால் என காட்சிப்பட்ட எங்களது சங்க அலுவலகத்தின் மைய ஹாலில் அமர்ந்து எல்லோரும் ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டிருந்தார்கள்,ஆனால் அவர்கள் அனைவரின் கையும் பிணைந்திருந்த வேலை ஒரு நாள் அகில இந்திய வேலை நிறுத்திற்கான ஆயத்தங்களை செய்து கொண்டிருந்தது,
 மனம்,உடல்,கை எல்லாம் வேகமெடுக்க,அவசர,அவசரமாக போஸ்டர்களை மடிக்கிறார்கள்,கவருக்குள் போடுகிறார்கள்,அட்ரஸ் எழுதுகிறார்கள்,கவரின் வாயை பசை தடவி ஒட்டுகிறார்கள்.இதற்கு இடையே அவரவருக்கு வருகிற போனை அட்டென் பண்ணிக்கொள்கிறார்கள். இரவு வீடு வர தாமதமாகும்,சங்கப் பணியாக விருதுநகரில் இருக்கிறேன் என்கிறார்கள்.
 நான்மட்டும்,,,,,,,,,,,,,,,அந்தபோஸ்டர்களையேஉற்றுப்பார்த்தவாறு அமர்ந்திருக்கிறேன் நினைவுகள் சூழ/
 நான் பணி புரிகிற அலுவலகத்திலிருந்து கிளம்பியது முதல் சங்க அலுவலகம்வருகிறவரைநான்பார்த்த இடங்கள்,காட்சிகள்,மனிதர்கள்,,,,,,,,,
இன்னபிறவென எல்லாம் மறந்து போக நான் பார்த்த  காட்சி மட்டுமேஇப்போது கண்முன்னாக கை விரித்து நிற்கிறது.
   ரொம்பவும்தான் நாளாகிப்போனது போஸ்டர்களைத்தொட்டுத்தடவி,அதன்     
  வாசனை நுகர்ந்து,அதன் வண்ணத்தை ரசித்து,அதை தோள் மீதும்,மார்
  மீதுமாய் தூக்கி சுமந்து பசைதடவி ஒட்டி/  

2 comments:

  1. போஸ்டர்களைக்கூட ரசித்து எழுதும் உங்கள் எழுத்துக்கள் ரசிக்கவைக்கின்றன.

    ReplyDelete
  2. வணக்கம் விச்சு சார்,நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

    ReplyDelete