Jun 19, 2012

தண்ணீர் குடுவை,,,,,,


   
பின்னாலிருந்த பாட்டிலின்
கவனத்திலேயே
எனது இரு சக்கர வாகனப்பயணம்.
ஐம்பத்தைந்து ரூபாய் பாட்டிலது.
வெயில் நேரத்திற்கும், வீட்டில்
குளிர்பான பாட்டில் ஒன்றிருந்தால்
தேவலாம் என்கிற  நினைப்பிலுமாய்
வாங்கி வைத்தது.
வலது கையில் வாழைப்பழமும்,
இடது கையில் குளிர்பானமுமாய்
வைத்து குடிக்க பழகிவிட்ட கலாச்சாரம்
வீட்டில் தலை எடுத்து விட்ட பின்பு
தவிர்க்க இயலாமல்
மாதம் இரண்டோ அல்லது
மூன்றோ வாங்கி வைக்க வேண்டியிருக்கிறது.
வெயில் நேரம்,,,தாக சாந்திக்கு ,,,
உறவினர் மற்றும் நண்பர்களின் வருகையின் போது
என்கிற மனச்சமாதானத்துடன்
நிரந்தரமாய் ஒரு குட்டிக் குழந்தையின்
உயரத்தில் வீட்டின் குளிர்பதனப் பெட்டியில்
நிரந்தரமாய் தங்கிப்போன குளிர்பானபாட்டிலை
காலியானதும் தூக்கியெறிய மனமின்றி
அலுவலகத்திற்கு தண்ணீர் கொண்டு
செல்கிறேன் அன்றாடம்.
இன்று மாலை பையில் மாதந்திர சாமான்கள்
தங்கிப் போனதால்
இரு சக்கர வாகனத்தின் பின்னால் இருக்கிற
கம்பிக்கும்,இருக்கைக்கும் இடைப்பட்ட
வெளியில் பாட்டிலை வைத்துக் கொண்டு  
வந்த நான் பாட்டிலின் கவனத்திலேயே வாகனத்தை
ஓட்டி கொண்டிருக்கிறவனாக/

3 comments:

  1. குளிர்பான பாட்டிலை தூக்கிப்போட மனமின்றி அலுவலகத்திற்கு தண்ணீர் கொண்டு போகிறேன். எல்லோரது வீட்டிலிம் இதே நிலைமைதான். அதற்கென்று தனியாக இருபது ரூபாய் செலவிடமுடியாது என்கிற நடுத்தர குடும்பத்தின் யதார்த்தம்.

    ReplyDelete
  2. வணக்கம் விச்சு சார்,நலம்தானே?யாதார்த்தங்களின் இடங்களில் இதுமாதிரியான குளிர்பான பாட்டில்கள் விடாப்பிடியாக அமர்ந்து கொண்டு தனதுஇருப்பை அறிவித்துச் செல்கிற நிலைமையில் நம் கலாச்சாரத்தின் முகம் மாறிப்போனது.

    ReplyDelete
  3. நன்றி விச்சு சார்,தங்களின் மேலான வருகைக்கும்,உடனடியாக கருத்து தெரிவிக்கிற தங்களின் உயர்ந்த பாங்குக்குமாய்/

    ReplyDelete