23 Jun 2012

கிடுகு,,,,,,,,,


              
    அந்த பத்து ரூபாயெல்லாம் எந்த மூலைக்கு/ஒரு டீ ஆறு ரூபா,ஒரு வடை இரண்டரை ரூபாய்,நாவுக்கு கொஞ்சம் ஆசை வந்து இன்னமும் ஒரு வடை சேர்த்து சாப்பிட்டு விட்டால் 5+6=11 ஆகிப்போகிறது.
அந்தப்பத்துடன்அதிகமாகஒருரூபாய்நாம்தான் கொடுக்க வேண்டியிருக்கும்.
எங்களதுஅலுவலகத்தின்உள்ளூர்கிளைக்குஒருவேலையாகசென்றிருந்தேன். 
நான் மற்றும் எனது இரு சக்கர வாகனத்துடன்/
 காலை பத்து மணிக்கு செல்ல வேண்டிய நான் எட்டு மணிக்கெல்லாம் சென்று விட்டேன்.
  வாசலை ஒட்டி ஒன்று ,இரண்டு என எண்ணினால் வருகிற முப்பத்திரண்டு படிக்கட்டுகளை கடந்து மேலேறி சென்றால் காட்சிப்படுகிற அலுவகத்தை அன்றாடம் சுத்தம் செய்பவள், நல்ல மனுசி/
  அம்மா பெண் இரண்டு பேருமாய் சேர்ந்தே வருவார்கள் வேலைக்கு.இன்று அவளைக்காணோம்.
 “என்னம்மா,ஒங்கம்மா வேலைக்கு வரலையா”?என்ற கேள்விக்கு “இல்ல சார்,கெளவி மூணுமாசமா சாதனையா முடியலைன்னு படுத்துருச்சி,நாந்தான் கெடந்து இப்பிடி அல்லாடுறேன்.எனக்கும் ஒடம்பு அப்பிடிக்கப்பிடித்தான் சார் இருக்கு.என்னசெய்ய,ஏதோகஞ்சிகுடிக்கனுமில்ல,பொழப்ப ஓட்டனுமில்ல”
என்கிறாள்.
அவள்  குடியிருக்கிற பகுதி இங்கிருந்து இரண்டு  கிலோமீட்டர் தொலைவில்
இருக்கிறது.
  சின்னதாக ஒரு குடிசை.கோவில் இடத்திலிருந்த தீப்பெட்டி அளவிலுள்ள வீட்டில் அவள்,அவளது அம்மா இரண்டு தம்பிகள் என நால்வரும் அந்த வீட்டுக்கே உரிய பண்ட பாத்திரங்களும் மற்றும் பாய் தலையணைகளுடன்/    
“சின்னவன் எங்கனையும்,உருப்படியா வேலைக்கு எதுவும் போகல சார்,சும்மா ஊரச்சுத்தீட்டு பெறக்கித்தின்னுட்டு திரியுது. பெரியன்தான் ஏதோ ஒத்தாசையா இருக்கான்.ஒடம்பு சரியில்லாததால கல்யாணம் ஏதும் பண்ணி வைக்க முடியல.என்னையப்பத்திதான் ஒங்களுக்கு தெரியுமே சார்,ஒடம்பு சரியில்லாதவன்னு”என சொன்னவளுக்கு இன்றைக்கெல்லாம் இருந்தால் முப்பது வயதிற்குள்ளாக இருக்கலாம்.
 பூஞ்சை உடல்,சிவந்த மேனி, முகம் ஊதி, தலை பெருத்து உதடுகள் காய்ந்து வெடிப்புற்று கண்களில் ஈரமற்றுப்போய் ஒல்லியாய் கைகாலெல்லாம் சூம்பிப்போய் நின்றாள்.மழைக்கு நனைந்த கோழியைபோல/
அவளுள்குடிகொண்டுஅவளைமெல்ல,மெல்லஅரித்துதின்றுகொண்டிருந்ததுஎதுவெனதெரியவில்லை.ஆனாலும் அவள் நோய்வுற்றிருந்தாள் பாவம் என அவளது தோற்றமே முன்னறிவித்து சென்று விடும்.
காலையில்எட்டுமணிக்கெல்லாம்அலுவலகவாசலுக்குவந்து விடுவாள்.
 அவளால் அலுவலக கதவை திறந்து  சட்டரை தூக்க முடியாது. யாராவது  சாலையில் செல்கிற பாதசாரிகள் அல்லது பக்கத்து ஆஸ்பத்திரியின் வாட்ச்மேன் என இவள் மேல் இறக்கம் கொண்டு கதவை திறந்து விட்டால் மட்டுமே உண்டு.
இரும்புசட்டர்ரோலிங்க்கதவுஅதுதிறந்துமேலே தூக்கி விடவேண்டும்.பூட்டும் போது யாராவது பூட்டிக்கொள்ளக்கூடும்.
  மற்றபடி இப்படித்தான் உள்ளூரில் இருக்கிற அலுவலக ஊழியரிடம் உள்ள சாவியை வாங்கிக்கொண்டு வந்து அமர்ந்து விடுவாள்.
  ஐந்து வருடங்களுக்கு முன் அவன் அங்குபணியாற்றிய போது  தெரிந்து
கொண்டதுதான்,அவளைப்பற்றியும்,அவளதுகுடும்பத்தைப்பற்றியுமாய்/
 அவர்கள் பரிதாபம் கண்டு அவ்வப்போது கையில் பத்து,இருபது  என கொடுப்பதுண்டு.
  அந்தக் கொடுத்தலில் அவளது கஷ்டம் தீர்ந்து விடப்போவதில்லை.அல்லது அவளது பிரச்சனைகள் சரியாகிவிடப்போவதில்லை.
  ஆனாலும் அவனுக்கு ஒரு உந்துதல் அல்லது அவர்களின் பால் ஏற்பட்ட களிவிரக்கம்.கொடுத்து விடுவான், “போகும் போது டீசாப்பிட்டுக்கங்க” என/
 "சார்  சம்பளத்த  கொஞ்சம்  கூட்டித்  தரச்  சொல்லுங்க  சார்.  கட்டுபடியாகல,மாசத்துக்கு வெறும் 450 ரூபாய வச்சிக்கிட்டு  என்னதான் பண்ணமுடியும் சார்" என்பாள்.
“யம்மாஎன்னாலமுடிஞ்சதுஇதுதாம்மா,அப்பப்பஅஞ்சுபத்துகுடுத்துக்கிடலாம்,
ஏதாவது ஆத்திர அவசரம்ன்னா நீங்களும் கேட்டுக்கிறலாம். நானும்  குடுத்துக்கிரலாம்.
  இதத்தவுரஇதுலஒண்ணும்செய்யமுடியாதஆளாய்ருக்கேம்மா”என்பான்.
 இத்தனைக்கும் வாரா,வாரம் வெள்ளிக்கிழமையானால் அலுவலக பரப்பு முழுவதையும் தண்ணீர் விட்டு அலசி விடுவாள். மேஜை நாற்காலிகளை சுத்தமாக துடைத்து வைப்பாள்.
  அவனும் சக ஊழியர்கள் எல்லோரும் வருவதற்குள்ளாக  அலுவலகம்
பளிச்சென இருக்கும்.
 அப்படியெல்லாம் வைத்திருந்த உழைப்பிற்கு சொந்தக்காரி அதே வேலையிலும், அதே சம்பளத்திலுமாய் இருந்த நாட்களில் அவன் அந்த அலுவலகத்திலிருந்து மாற்றாலாகி வேறுஅலுவலகத்திற்குசென்று விட்டான்.
  அதன் பின் இன்று காலை ஒரு வேலையாக இந்த பக்கம் வந்திருந்த அவன் உள்ளூர் அலுவலகத்தின் பூட்டப்பட்டிருந்தகதவின்அருகில்அமர்ந்து “யாராவது வருவார்களா,கதவை திறந்து தருவார்களா”?என்கிற எதிர்பார்ப்புடன் இருந்த போதுதான் அவன் சென்றான்.
  கதவை திறந்து கொடுத்து  விட்டு  அவளது கையில் டீ செலவுகென பத்து ரூபாய் கொடுத்து விட்டு நகரும் போதுதான் கவனிக்கிறான்.
  பாதாளச் சாக்கடைக்காய் தோண்டப்பட்டு இன்னமும் சரிபண்ணப்படாமல் இருக்கும் சாலையை/    

11 comments:

 1. வணக்கம் உறவுகளே

  உங்களுக்கு பிடித்த வலைப்பதிவுகளையும், உங்களின் அருமையான இடுகைகளையும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்துகொள்ள எமது வலையகம் உங்களுக்கு உதவுகிறது. எவ்வித லாபநோக்கமில்லாமல் தமிழர்களுக்காக தமிழில் ஆரம்பிக்க திரட்டி நம் "வலையகம்" ( http://valaiyakam.com/ ) ஆகும்.

  வலையகம் ஆனது வலைப்பதிவுகளுக்கான சமூக உறவு தமிழ் தளமாகும். உங்கள் முகநூல் கணக்கின் மூலம் நீங்கள் எளிதில் வலையகத்தில் பதிவு செய்யலாம். உங்களுக்கான நண்பர்கள் வட்டாரத்தை உருவாக்கிக்கொள்ளலாம்.

  உடனே இணையுங்கள் பகிருங்கள் உங்கள் நண்பர்கள் வட்டாரத்தை உருவாக்குங்கள்..

  முகநூல் கணக்கின் மூலம் உள்நுழைய: http://www.valaiyakam.com/register/

  தோழமையுடன்

  உங்களின்

  வலையகம் இணையம்

  http://valaiyakam.com/

  ReplyDelete
 2. அருமையான படைப்பு

  ReplyDelete
 3. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நலம்தானே?நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 4. வணக்கம் கவி அழகன் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,
  கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 5. வணக்கம் வலையகம் சார்.கண்டிப்பாக பதிவுகளை இணைக்கிறேன்.

  ReplyDelete
 6. ஏன் நேத்து பெருக்க வரல.இந்த மாதம் ஒரு நாள் சம்பளம் கட் பண்ணிடுவேன். என்று மிரட்டுபவர்களைப் பார்த்திருக்கிறேன். அவர்களுக்காக இரக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள்.சாமான்ய மக்களைப் பற்றி நினைக்கத் தூண்டும் கதை.

  ReplyDelete
 7. விளிம்பு நிலை மனிதர்கள் என இவர்களைத்தான் நம் சமூகம் அடையாளம் காட்டுகிறது.அவர்களின் நிலையை எழுத்திலும் இப்படி படம் பிடிப்பது நமது கடைமையும்,
  முதன்மைப்பணியும் ஆகிப்போகிறது.

  ReplyDelete
 8. நன்றிமுரளிதரன் சார்.தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 9. உழைப்புக்கேற்ற‌ ஊதிய‌ம் ?
  அலுவ‌ல‌க‌த்தின் குப்பை கூட்டுப‌வ‌ருக்கு கூலி 450/
  அலுவ‌ல‌க‌த்தைல் குப்பை கொட்டுப‌வ‌னுக்கு கூலி 30000/
  பாராளும‌ன்ற‌த்தில் குப்பையாய் கிட‌ப்ப‌வ‌ருக்கு கூலி 80000/
  வாழ்க‌ நேருவின் இந்திய‌ ஜ‌னநாய‌க‌ சோஷலிச‌ம்.

  ReplyDelete
 10. வணக்கம் வாசன் சார்.நீங்கள் சொன்னதுவே சாமான்யனின் நிலை.நன்றி தங்களது வருகைக்கும்,
  கருத்துரைக்குமாக/

  ReplyDelete