15 Jun 2012

டிக்காக்சன்,,,,,,,,,,,

  ரு சிங்கிள் டீக்கு நாக்கை இப்படியா அடகு வைப்பது? “வயிறு நெறைய அல்சர வச்சிக்கிட்டு இப்பிடியா டீ,டீன்னு உசுர விடுவீங்க” என்கிறாள் மனைவி.
  செய்யக்கூடாது என நினைத்து செய்து விடுகிற காரியங்களில் டீக்குடிப்பது முதன்மையாகிப் போகிறது.
  நாலு இஞ்ச் உயரமும்,மூன்று இஞ்ச் அகலமுமாய் தன் வாய் அளவு கொண்ட கண்ணாடி கிளாஸில் இருக்கிற கலங்கலான ப்ரவுன் கலர் திரவத்தை குடிக்க இவ்வளவு ஆரவமா?
  இரு சக்கரவாகனத்தில் ஏர் செக்ப் பண்ணி ரொம்பவும்தான்  நாளாகிப்போகிறதென அலுவலகத்திலிருந்து திரும்பி வந்து  கொண்டிருந்த இன்று  பின் மாலைப்பொழுதில் காற்று அடித்துக்கொண்டிருந்த சைக்கிள் கடைக்குப்பக்கத்தில் அதே வரிசையில் அழகாக ஒரு டீக்கடை.
  அதென்ன அழகாக? நாவின் சுவையரும்புகள் மீது டீயின் மிடறு பட்டு உள்ளே இறங்குகையில் இருக்குற சுவைக்கு மயங்கியப்போகிற அல்லது மனம் பறிகொடுத்து விடுகிறதருணங்களிலெல்லாம்இப்படித்தான் சொல்லத் தோணிவிடுகிறது. டீக்கடைகள்
அழகென.
  அதுவும் என்னை மாதிரி டீப் பைத்தியங்களுக்கு,,,,,,,காலை,மதியம் மாலை இரவு எந்த வேளை என கணக்கில்லை.
  டீயின்எண்ணிகையும்,அதற்காகஆகும்செலவும் மிகவும் கூடுதலாகிப்போனது.அதை தவிர்க்க நினைக்கிற நேரத்தில்தான் இன்னும் கொஞ்சம் கூடுதலாகிப்போகிற கொடுமை.
  அதுஅப்படித்தான்எதுஒன்றைதவிர்க்கநினைக்கிறோமோஅதைமனம்சதா நினைத்து,,,,,
இப்படி ஆகி விடுகிற ஆபத்துக்கள் நிகழ்ந்து போகும் என்கிறார் ஹோமியோபதி மருத்துவர் ஒருவர்.நல்ல மருத்துவர்.
  டீக்காக ஆகும் செவைக் குறைத்தால் வீட்டில் மாதாந்திர செலவினங்களில் ஒன்றை சரிக்கட்டி விடலாம்.
  40பின்னாலும்,25 முன்னாலும் காற்று அடித்து விட்டேன் எனக்கூறிய சைக்கிள் கடைக்காரிடம் மீதி சில்லறை வாங்கிக்கொண்டு அவரிடம் சொல்லி விட்டு டீக்கடை நோக்கி நகர்கிறேன்.
  டீ  சொல்லிவிட்டு  கடையை  ஏறிட்டால்  கடையில்  பல சரக்கும்,அழகு  சாதனப்
பொருட்களும் தவிர்த்து மற்றதெல்லாம் காணப்பட்டதாக/
  ஒரு ரூபாய் ஊறுகாய் பாக்கெட்டிலிருந்து 25 ரூபாய்க்கு விற்கிற பாதாம் மில்க்வரை இருந்தது.
  வடையில்ஒருநான்கைந்துவகைகள்,பஜ்ஜியில்இரண்டுவகை,சோமாஸ்,பால்பன்,
பேல்பூரி,கடலைமிட்டாய்,முறுக்கு,சேவு,மிக்சர்,நெய்க்கடலை,பீடி,சிகரெட்,பான்பராக்,,,
(அதுஇல்லையென்றால்கடையேஇல்லை.)  கூல்ட்ரிங்க்ஸ் எல்லாம் வைத்திருந்தார்கள்.
  கடையில் முன்னாலிருந்த டீப்பட்டறையில் ஹார்லிக்ஸ்,பூஸ்ட்,காபித்தூள் பாக்கெட் என வரிசையாக தொங்கியது.
  அலுவலகத்திலிருந்து கிளம்பும் போதே நல்ல அலுப்பு.பணிரெண்டு கிலோ மீட்டர் தூரத்திலிருக்கிற அலுவலகத்திற்கு இன்று இரண்டு முறை போய் திரும்பி வந்ததில் உடல் அலுப்பை அப்பிக்கொண்டு/
  அது தவிர இன்று  காலை நான்கு மணிக்கே முழிப்புதட்டிவிட்டது.தூக்கம் கப்பிய கண்களும், அலுப்பு அப்பிய உடலுடனுமாக வந்து எனக்கு ஒரு டீ சாப்பிட்டால் ஆயாச போய் விடும் எனத் தோன்றிய   எண்ணம்  கூட இங்கு கைகாட்டி இருக்கலாம்.
  “வாங்க நல்லாயிருக்கீங்களா?”என முதுகுக்குப்பின்னால் கேட்ட சப்தத்தை இழுத்துப்பிடித்து திரும்பிப்பார்த்தால் அட நம்ம ஸ்டேட் பேங்க் நண்பர்.
  நீண்ட கால பழக்கம்,மனம் தொட்ட அளவில் இல்லையென்றாலும்  கூட பார்த்துக்கொள்கிறபேசிக்கொள்கிறஇடங்களிலெல்லாம்மனதையும்,நட்பையும் பரிமாறிக்
கொள்கிற  அளவு என்கிற  வரையறையில்  இருப்பவர்.பரஸ்பரம்  பேசி சிரித்துக்
கொண்டிருக்கிற  வேளையில்  டீக்கடை  பரபரப்பாக  இயங்கிக் கொண்டிருந்தது.
  டோக்கன்களைக்கொடுத்துடீயையும்,காபியையும்வாங்கிக்கொண்டிருந்தார்கள்.
மாஸ்டரால் டீ ஆற்றி முடியவில்லை.கல்லாவில் இருப்பவரால் காசு வாங்கிப்போட்டு மாளவில்லை.
  “சாய்ங்காலம் ஒரு மணிநேரத்திற்கு இப்படித்தான் இருக்கும். தவிர இந்த ஏரியாவில் எங்கும் டீக்கடை கிடையாது,இங்கிட்டு பாண்டிய காலனி போக வேண்டும்.அங்கிட்டு கௌவர்மெண்ட் ஆஸ்பத்திரி போகவேண்டும்,ருசியும் ஒரு காரணம்.”
  டீ சாப்பிட்டுக்கொண்டும் பெஞ்சில் அமர்ந்து பேசிக்கொண்டுமாய் இருந்தவர்களில் பெரும்பாலோனோர்மனம் விட்டுபேசுபவர்களாகவும்,பரிமாறிக்கொள்பவர்களாகவும்/
  பள்ளிக்கல்லூரி சேர்க்கை, கட்டணம், வீட்டுப்பாடு, அலுவலகம்,வெளிஉலகம்,  நட்பு,
தோழமை   என இழுபட்டது அவர்களது பேச்சு
  அந்நேரம் அவசரமாக வந்து டீசொல்லிய ஒருவர் “சீக்கிரம் போடுங்க,ப்ரெண்ட் ஒருத்தன்காத்துக்கிட்டுஇருக்கான்,அவனப்பாக்கபோகணும் என்கிறார்.
  டீக்கடைகள் எப்போதும் ,மனிதக்கூட்டங்களை தன் மாரிலும்,தோளிலுமாய் சுமந்து கொண்டும்,அவர்களுக்குள் உள்ளான நெசவை நெய்து கொண்டும்,தக்கவைத்துக் கொண்டுமாய்/

26 comments:

 1. அதென்ன அழகாக? நாவின் சுவையரும்புகள் மீது டீயின் மிடறு பட்டு உள்ளே இறங்குகையில் இருக்குற சுவைக்கு மயங்கியப்போகிற அல்லது மனம் பறிகொடுத்து விடுகிறதருணங்களிலெல்லாம்இப்படித்தான் சொல்லத் தோணிவிடுகிறது. டீக்கடைகள்
  அழகென//

  .சொல்லிய விதமும் மிக அழகு
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. டீக்கான தீப் பதிவு அருமை .

  ReplyDelete
 3. டீக்கடையில்தான் பல நண்பர்களும் கிடைக்கிறார்கள். பல தகராறுகளும் உருவாகின்றன.டீக்கடையைப் பற்றி நீங்கள் படைத்தவிதம் அழகு.

  ReplyDelete
 4. சார் எனக்கொரு டீ சொல்லுங்க...அப்படியே கடிக்கிறத்துக்கு ஏதாவது கொடுங்க...:)

  ReplyDelete
 5. வணக்கம் ரமணி சார்,நன்றி தங்களது வருகைக்கும் கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 6. வணக்கம் சசிகலா மேடம்.நன்றி தங்களது வருகைக்கும் கருத்துரைக்குமாக.

  ReplyDelete
 7. வணக்கம் விச்சு சார்,என்னதான் தகராறுகள் எங்குதான் உருவாகவில்லை.பைவ் ஸ்டார் ஹோட்டல்களில் கூட உருவாகிறதென சொல்கிறார்கள்தான்.என்ன இருந்தாலும் டீக் கடைகளில் பூத்து இருக்கிற ஈரம் வேறு சில இடங்களில் காணக் கிடைக்காதுதான்.

  ReplyDelete
 8. வணக்கம் சிட்டுக்குருவி சார்.டீ சொல்லி விடலாம்.கூடவே வடையும் சேர்த்து. நண்பரே,தங்களது வருகைக்கும் கருத்துரைக்குமாக நன்றி.

  ReplyDelete
 9. வணக்கம் திண்டுக்கல் தனபால் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,
  கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 10. கேரளாவில் சொல்வது போல்”ஒரு கடியும்,குடியும்” சுகம்தான்
  நன்று.

  ReplyDelete
 11. ஒரு கடியிலும்,ஒரு குடியிலுமாய் பொதிந்திருக்கிற சுவைகள் பலவாய்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 12. டீக்கடைகள் சிலவற்றில் இங்கு அரசியல் பேசாதீர்கள் - என்று எழுதி வைத்திருப்பார்கள். எனக்குத் தெரிந்த டீக்கடை ஒன்றில் இப்படி ஒரு போர்டு வைத்து இரண்டொரு நாட்களில் அகற்றி விட்டார்கள் . கேட்டதற்கு போர்டு போட்ட பிறகு கூட்டம் குறைந்ததாக சொன்னார்கள்.

  கோவைப்பக்கம் டீக்கடை என்றால் பேக்கரி தான். டீயும் தேங்காய்ப் பன்னும் ஒரு வித்தியாசமான காம்பினேசன்.

  பந்த் நடக்கும் போது - டீக்கடையைத் தேடி அலையும் பலரைப் பார்த்திருக்கிறேன்

  ReplyDelete
 13. டீக்கடைகள் சிலவற்றில் இங்கு அரசியல் பேசாதீர்கள் - என்று எழுதி வைத்திருப்பார்கள். எனக்குத் தெரிந்த டீக்கடை ஒன்றில் இப்படி ஒரு போர்டு வைத்து இரண்டொரு நாட்களில் அகற்றி விட்டார்கள் . கேட்டதற்கு போர்டு போட்ட பிறகு கூட்டம் குறைந்ததாக சொன்னார்கள்.

  கோவைப்பக்கம் டீக்கடை என்றால் பேக்கரி தான். டீயும் தேங்காய்ப் பன்னும் ஒரு வித்தியாசமான காம்பினேசன்.

  பந்த் நடக்கும் போது - டீக்கடையைத் தேடி அலையும் பலரைப் பார்த்திருக்கிறேன்

  ReplyDelete
 14. மிக மிக அருமையான
  யதார்த்தம் உணர்வுகள்
  பதிவாய்.
  டீக்கடை வைத்து
  கவர்ந்து விட்டீங்கள்
  நன்றி

  ReplyDelete
 15. வணக்கம் சிவ சங்கரன் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,
  கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 16. வணக்கம் சிவக்குமாரன் சார்,நன்றி தங்களது வருகைக்கும்,
  கருத்துரைக்குமாக/அரசியல் என்பது நம் வாழ்விலிருந்துஅன்னியப்பட்ட்டதல்லவே/என்ன நடப்பில் பார்க்கிற கசப்புகள் நம்மை இப்படி வெறுக்க வைத்து விடுகின்றன,அல்லது அரசியல் என்றாலே சாக்கடை என ஒதுங்கிப்போகச்சொல்லி சொல்கிறது.

  ReplyDelete
 17. டிக்காக்‌ஷன் மணம் கமழ்கிறது.

  மிக அருமையான பகிர்வு.

  / டீக்கடைகள் எப்போதும் ,மனிதக்கூட்டங்களை தன் மாரிலும்,தோளிலுமாய் சுமந்து கொண்டும்,அவர்களுக்குள் உள்ளான நெசவை நெய்து கொண்டும்,தக்கவைத்துக் கொண்டுமாய்/

  கவித்துவமான முடித்திருப்பதும் அழகு.

  ReplyDelete
 18. வணக்கம் ராமலஷ்மி மேடம்.நலம்தானே?தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக நன்றி.

  ReplyDelete
 19. எனக்கு தெரிந்து டீக்கடையில் டாப் அடிக்காமல் யாரும் இருந்திருக்க மாட்டார்கள் ... எனக்கு பிடித்தது பில்டர் காபி ... உங்களை டிக்காசன் சுவையாக இருக்கிறது ...

  ReplyDelete
 20. வணக்கம் அனந்து சார்,அதென்ன டீக்கடைகளில் டாப் அடிப்பது?
  நன்றி தங்களது வருகைக்கும்,
  கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 21. மிக அருமையான பகிர்வு.

  ReplyDelete
 22. டீ பல நேரங்களில் பலருக்கு உணவாகவே இருக்கிறது.
  எத்தனை முறை டீ குடித்தாலும் வேண்டாம் என்று சொல்ல மனம் வராது.

  ReplyDelete
 23. This comment has been removed by the author.

  ReplyDelete
 24. வணக்கம் மாலதி மேடம்,நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 25. வணக்கம் முரளிதரன் சார்.பலநேரகளில் பலருக்கு உணவாக இருக்கிற டீ பல விதங்களில் பலவற்றை சொல்லி விட்டுப்போகிறது.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete