8 Jun 2012

புகை,,,,,,,,,


பாட்டிகளின் கைப் பக்குவம்
பேரன்களுக்குப் பிடிப்பதில்லை.
பேரன் களின் நாருசி
பாட்டிகளுக்கு கைவரப்பெறவில்லை.
மண்பானையில் சோறும்,
ஈயச்சட்டியில் குழம்புமாய்
வைத்து வெட்டவெளியில்
விறகடுப்பெரிய
பத்து இருபது பேருக்கு குறையாமல்
பந்தி பரிமாறிய தலைமுறை
இன்றைய குக்கர் விசிலின் சப்தத்திற்கும்
கடாய் மற்றும் நான் ஸ்டிக்
உருப்படிகளிலுமாய்
சமைக்க அஞ்சி ஒதுங்கி நிற்கிறார்கள்.
ஏதோ குற்றம் செய்து விட்டவர்களைப்போலவும்
தாழ்வுமனப்பான்மையில் குறுகியுமாய்/ 

12 comments:

விச்சு said...

விமலன் சார் உண்மையான வரிகள். பழையன கிட்டத்தட்ட அழிந்தேவிட்டது.மண்பானைச்சோறின் வாசம் இப்போது மாறிவிட்டது. அதை ஸ்டார் ஹோட்டல்களில் பல ஆயிரங்கள் செலவழித்து சாப்பிடுவோரும் இன்று அதிகம்.

கோவி said...

கம்பும் தினையும் தரும் ஆரோக்கியம் pizza வில் கிடைத்துவிடுமா?

சசிகலா said...

மாறவே மாட்டேன் என்று இன்னும் அம்மியும் , உரலிலும் அரைத்து அடுப்பில் சமைக்கும் முதியோர்களை எங்கள் ஊரில் பார்க்கிறேன் .

முத்தரசு said...

யதார்த்தமான உண்மை

vimalanperali said...

வணக்கம் மனசாட்சி சார்.தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாய் நன்றி/

vimalanperali said...

வணக்கம் சசிகலா மேடம்.நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் கோவி சார் நலம்தானே?கம்பும்,தினையும் தருகிற ஆரோக்கியத்தை யார் ஏற்கிறார்கள்?நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் விச்சு சார்.நலம்தானே?ஸ்டார் ஹோட்டல்கள் உள்வாங்கிக்கொண்ட மண்பானை சமையல்களை இன்றைய தலைமுறை மறந்து போனது அவர்களது இஷ்டமா,காலத்தின் கட்டாயமா?

vimalanperali said...

நன்றி விச்சு சார்.தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/உள்வாங்கி படித்து கருத்துரையிடும் தங்களது பாங்கு எனது பதிவுகளுக்கு சிறப்பு சேர்க்கிறது.

vimalanperali said...

கம்பும், திணையும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட அந்நேரத்திலேயே நமது உணவு கலாச்சாரமும் மாறிப்போனதாக புள்ளி விவரங்கள் சொல்லிப்போகின்றன கோவி சார்.அரிசி எப்பொழுது பாக்கெட்டுகளில் குடிகொள்ளபோகிறது எனத்தெரியவில்லை.குறிப்பிட்ட சில வருடங்களுக்குள் சடனாக ஏற்ப்பட்ட மாற்றமாகவே இது உள்ளது.
நன்றி,வணக்கம்/

vimalanperali said...

அம்மியிலும்,உரலிலும் அரைபடுகிற தனியங்களும்,அடுப்பில் வெந்தனலாக கனன்ற விறகுகளும் அது மேலேம்பி வட்டமிட செய்த புகையும் இப்பொழுது எங்காவதுதான் காணக்கிடைக்கிறதைப்
போலவே நம் கலாச்சாரத்தின் முகம் மாறிப்போனது.வெகு சில வருடங்களில்/
நன்றி சசிகலா மேடம்.

vimalanperali said...

வணக்கம் ராமலட்சுமி மேடம்.
நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/