8 Jul 2012

விரிசல்


   எல்பெண்டுகள் நான்கு, மூன்று  வழி  கொண்ட   ஜ்ங்சன்  பாக்ஸ்   நான்கு.
P.V.Cபைப்ஒருமீட்டர்.மிச்சத்தைகடையில்வந்துசொல்கிறேன். எனச்சொன்ன எனது சின்ன மகளை அழைத்துக் கொண்டு கடைக்குக் கிளம்புகிறேன்.
 வீடு,வீடுவிட்டுதெரு,தெருகடந்து மெயின் ரோடைந்து போஸ்டாபீஸ் கௌவர்மெண்ட் ஆஸ்பத்திரி, ராமசாமிரோடு என கறுத்து  நீண்ட சாலையில்
தான் எங்களது பயணம்.
   இதில்  ராமசாமி  ரோடு  மட்டும்  சிமிண்ட் பூசிக்கொண்டு.
 கறுப்பு,வெள்ளையான எங்களது பயணத்தில் சாலையோரம் நின்ற வேப்ப மரங்களும்,புங்க மரங்களும் சில இடங்களில் புளிய மரங்களுமாக இன்னும் வேறுசிலவாய்நின்றிருந்த ஒன்றிரண்டு மரங்களும் இலை உதிர்க்கவும்,இலை துளிர்க்கவுமாய்/
  பூக்காதிருந்த மொட்டொன்று தன் இதழ் விரித்த சப்தம் மெலிதாய் காற்றில் கரைந்து கலக்கிறது.
 பூவும்,பிஞ்சும்,மொட்டும்,காய்களுமாய் தன் ஆகுருதி காட்டி நின்ற மரங்களையும்,எதிர்ப்பட்ட  மனிதர்களையும் பார்த்து பேச்சுக் கொடுத்தவனாய் 
கடக்கிறேன்.
   பேச்சு+சிரிப்பு+பழக்கம்=சாயாக்கடைஎனமுடிகிற அல்லது அந்த புள்ளியில் வந்துநிலை கொண்டு  விடுகிற என்  பழக்கத்தை என்  மகள்  பெரும்பாலான
நேரங்களில் கேலிசெய்தும், கடிந்தும்  கொண்டுள்ளாள்.
  “நீங்க தனியாப்போகும் போது வேணும்னா இப்பிடி முக்குக்கு முக்கு டீக்கடையிலநில்லுங்கவேணாங்கல,என்னையகூட்டீட்டுப்போகும் போது
மட்டும்இப்பிடியெல்லாம்பண்ணாதீங்கஎனக்குரொம்ப சங்கோஜமாயிருது 
எனச் சொன்ன மகளின் வேண்டு கோளை ஏற்றவனாய் இப்போதெல்லாம் அவளை அழைத்துச் செல்கிற  நேரங்களில்  டீக்கடையை    கண் கொண்டும்
பார்ப்பதில்லை.
   நாங்கள்போய் நின்றது எங்களுடைய நண்பரது மகனின் கடை,,,,,,,,,,,,
எலெக்ட்ரிக்கல் ஸ்டோர் என பெயர் சொல்லிய கடையில் ஏறி எனது மகள் கேட்டதையும்,அவள் கடையில் வந்து சொல்கிறேன் என சொன்னதையும் சேர்த்து வாங்கிக் கொண்டு கிளம்பும் போது நண்பனின் மகன் கேட்கிறார் என்ன படிக்கிறா என/
 “பத்தாம்வகுப்பு படிக்கிற புள்ளைக்கு இதெல்லாம் எதுக்கு?என்கிறார் வேகமாக/
அதற்குநான்பத்தாம்வகுப்புபடிக்கிறஅவள்தனது பள்ளியில் நடக்க  இருக்கிற
“சைன்ஸ்  புராஜக்ட்டில்”  கலந்து  கொள்ள  இருக்கிறாள்.அதில்  இவளது 
எக்ஸ்பிரிமெண்ட்டும்  பங்கேற்க இருக்கிறது  என்கிறேன்.
  என்னையும் எனது மகளையும் முழுவதுமாக  ஸ்கேன் பண்ணுவது போல ஏறஇறங்கப்பார்த்தவர்("அடபைத்தியக்காரபசங்களாஎன்கிறதொனி ஒலிக்க”)
"இதுஸ்கூல்லசொல்லிசெய்யிறாளாஇல்லஇவளாசெய்யிறாளா”எனக்கேட்டவர்
  "இல்லஸ்கூல்ல சொன்னதுதான்என சொன்னவுடன் முகத்தை இறுக்கமாக
வைத்துக்கொண்டுஅமைதியாகிறார்.
  “இதுமாதிரிஏதாவதுசெஞ்சிக்கிட்டேஇருப்பா,போன வருசம் நடந்த சைன்ஸ் எக்ஸ்பிசன்ல ஒரு எக்ஸ்பிரிமெண்ட் பண்ணி பிரைஸ் வாங்குனா, அது இந்த வருசமும் தொடருது” என முடித்த என்னை ஏற இறங்கப் பார்த்த அவர் முகத்தை கறாராக வைத்துக் கொண்டு அமைதியாய்போயிட்டுவாங்கஎன தலையசைத்தார்.
  அவரைப் பொறுத்தவரை இதெல்லாம்“வேஸ்ட்” என்பதும் கதைக்கு உதவாத
வெற்றுத்தனம் என்பது அவரது வாதம்.
  என்னுடன் பேச நேர்கிற எதிர்படுகிற பலசமயங்களில் என்னிடம் இதை சொல்லவும் செய்திருக்கிறார் அவர்.
  அவரைப்பொறுத்தவரைபடிப்புஎன்பதுவேலைவாய்ப்பைஉருவாக்குகிற
ஒருஇயந்திரம்எனவும்பள்ளிகளும்,கல்லூரிகளும்அதை உருவாக்குவத
ற்கு உண்டாக்குகிற ஒரு இடம் எனவுமே பார்க்கிறார்.
 இது தவிர்த்து அதிகமாகவும், உபரியாகவும் எதையும்  தெரிந்து  கொள்வதும், கற்றுக்கொள்வதும் தேவையற்றது அதை பள்ளிகள் சொல்லித்தருவது அனாவசியம்  என்கிறார் அவர்.
   அது மட்டுமல்ல படிப்பு,வேலை,வெளிநாடு,சம்பாத்தியம் என்பதை மட்டுமே  மனதில்  இருத்தி  வாழ்கிறவர்களின்  நிலையைத்தான்சமூகத்தின் பெரும்பான்மையினர் பிரதிபலிக்கின்றனர் இன்று/
  அவர்களது  கனவும்,நனவும் இதுவாகத்தான் உள்ளது.  அது சரியா என்கிறகேள்வியைமனதில்தாங்கியவனாக கடைவிட்டு வெளியே வருகிறேன்.

12 comments:

 1. /போன வருசம் நடந்த சைன்ஸ் எக்ஸ்பிசன்ல ஒரு எக்ஸ்பிரிமெண்ட் பண்ணி பிரைஸ் வாங்குனா, அது இந்த வருசமும் தொடருது/

  வாழ்த்துகள். கற்றலை கற்றலின் இன்பத்துக்காக அறிவின் வளர்ச்சிக்காக செய்ய வேண்டுமென்பதையும் பலர் மறந்து விடுகிறார்கள். ஊக்கம் தரும் பள்ளிக்கும் பெற்றோர் உங்களுக்கும் பாராட்டுகள்.

  ReplyDelete
 2. பாராட்டுக்கள்.

  கிருஷ்ணாலையா என பெயர் மாற்றத்துடன் முகவரி http://krishnalaya-atchaya.blogspot.com ல்
  அன்புடன் அட்சயா!

  ReplyDelete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. This comment has been removed by the author.

  ReplyDelete
 5. வணக்கம் ராமலஷ்மி மேடம்.
  நன்றி தங்களது வருகைக்கும்,
  கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 6. வணக்கம் அட்சயா அவர்களே.நன்றி தங்களது தெரிவித்தலுக்கு.பின் தொடர்கிறேன்.

  ReplyDelete
 7. இது போன்ற செயல்பாடுகள்தான் உண்மையான கல்வி என்பதை பெரும்பாலானவர்கள் உணர்வதில்லை. பெண்ணின் ஆர்வத்தை உணர்ந்து தேவையானதை வாங்கித்தர உங்களைப்போல எல்லா பெற்றோரும் முயல வேண்டும்.

  ReplyDelete
 8. // பூக்காதிருந்த மொட்டொன்று தன் இதழ் விரித்த சப்தம் மெலிதாய் காற்றில் கரைந்து கலக்கிறது.//
  எப்படி சார் இயற்கையை இவ்வளவு அழகாக வர்ணிக்கிறீர்கள். இன்றைய படிப்பு என்பது வேலையை உருவாக்கும் மிசின் போன்றுதான் எல்லோர் மனதிலும் இடம்பெற்றுவிட்டது. அது அறிவை வளர்க்கவும், மனிதம் வளர்க்கவும் தேவ்வை என்பது யாருக்கும் புரியவில்லை. புரியவும் விரும்பவில்லை.

  ReplyDelete
 9. கல்வியும் வியாபாரமாகிவிட்ட நிலையில் உங்கள் சிந்தனை வரவேற்க்கத்தக்கது.

  ReplyDelete
 10. வணக்கம் விச்சு சார்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 11. வணக்கம் சசிகலா மேடம்.நன்றி தங்களது வருகைக்கும்கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 12. வணக்கம் tn முரளிதரன் சார்.நன்றி தங்களது வருக்கைக்கும்,
  கருத்துரைக்குமாக/

  ReplyDelete