24 Jul 2012

நுரைத்தண்ணி,,


   அவர் போய்க் கொண்டிருந்தார் நெடித்துமெலிந்ததன்கைகளையும்,கால்களை
யும்வீசியபடி/

 வீட்டின் படியிறங்கி தெருவில் நடந்து ரோட்டைக் கடந்து சென்று கொண்டிருந்தார்.
   
   மண்ணின்துகள்களும், கல்லும், தூசியும்  கலந்திருந்த  தெருவில்  நடமாடித்
தெரிந்தகோழிகளும்ஊடாடித்திரிந்தநாய்களும்அவரதுஉடல்உரசிசென்றமென்காற்றும்அந்த இளம் காலையின் அடையாளங்களாக அவருடன் கைகோர்த்துக் கொண்டு/

 இந்தா வந்துவிட்டது. ஒன்று,இரண்டு,மூன்று நான்காவது கடையாக அமர்ந்திருக்கிற நாகர் கோவிலார் கடையில் தான் அவர் அன்றாடம் காய்கறிகளும்,பலசரக்குகளும் வாங்கிகொள்கிறார்.

 ஒற்றை ஆளுக்கு எத்தனை தேவையாய் இருந்து விட முடியும்? அதுவும்60தைஎட்டி தொடப்போகிற இந்த வயதில்?என்ற போது கூட பிடிவாதமாய்அன்றாடத்தேவைக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவுமட்டுமே
வாங்கிக்கொள்கிறார்.

    ஒன்றுகூடாது.ஒன்று குறையாது.அது எப்படி இவ்வளவு துல்லியமாக வாங்க முடிகிறது அவரால் எனத்தெரியவில்லை.

   அரிசி,பருப்பு,அரசலவு எண்ணெய் மற்றும்  காய்கறி   எல்லாம்  அங்குதான்.
இப்போதுதான் ரெண்டு ரூபாய் காய்கறி வந்து விட்டதே,ஒரு கை காய்கறி ரெண்டு ரூபாய்.ஆரம்ப விலை அப்படி என இருந்தது இப்போது ஐந்து ரூபாய் வரை ஆகிபோனது.

கத்திரிக்காய்வெண்டைக்காய்தக்காளி, கேரட் எல்லாவற்றிற்கும்அப்படித்தான்.
ஐந்துரூபாய்க்குஒருகை அள்ளிப்போடுவார்கள்.ஆனால்அவர்அதையெல்லாம்
வாங்கமாட்டார்.ஐந்து ரூபாய் காய்கறிகளிலிருந்து விடுபட்டுதனியாக தட்டில் உள்ள காய்கறிகளை மட்டுமே வாங்குவார்.

  “பெரியக்காதான்சொல்லுவாள்.அடிக்கடி. நாக்குக்கு  ருசியா சாப்புடாட்டி கூட 
ஒடம்புல ஒட்டுற மாதிரி சாப்புடணும்” என்பாள்.

     "தனியாளஇருக்கஒடம்பப்பாத்துக்க. ஏதாவது ஒண்ணுன்னா சொல்லிவுடு.
”நாங்க என்ன படக்குன்னு வர முடியாத தூரத்துலயா இருக்கம்.மினி பஸ் ஏறுனா அடுத்த  காமணி   நேரத்துல  வந்து  விழுந்துர்ர  தூரம்  என   சொல்லி
வார்த்தைகளால்மனதுக்குமருந்திட்டுஆறுதல் சொன்னவளும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக இறந்து போனாள்.

  இவரை விட கால் அடி உயரம் கூடத்தான் இருப்பாள்.பூஞ்சையான உடலில் குடிகொண்டிருக்கிற அந்த தைரியம் அவர்களது குடும்பத்தில் யாருக்கும் இருந்ததில்லை. இத்தனைக்கும் பள்ளியில் படித்த காலத்தில் பரம சாதுவாயும் ,அதிகம் வாய் பேசாதவளாகவும்/
   18முடிந்து19தைஎட்டித்தொடுகிறவேளையில்அவளுக்குகல்யாணம் முடிந்து
விட்டது.

    உள்ளூர்   மாப்பிள்ளைதான். கடலைமிட்டாய்,பொட்டுக்கடலை,மிக்சர்,சேவு
என்கிறசில்லறைஅயிட்டங்களைவாங்கிபாக்கெட்போட்டுசின்னக்கடைகளுக்குப்போடுபவர்.

 ஐந்துபவுன்நகை,துணிமணிகளுக்குப் போக சாப்பாட்டிற்குஇவ்வளவு என கொடுத்து விடுவதென பேசி முடித்தார்கள்.

  இரண்டு பிள்ளைகள் ஆண் ஒன்றும் பெண் ஒன்றுமாக/ பையன்மூன்றாவதும்,
பெண்ஐந்தாவதுமாகப் படித்தார்கள்.

 பரஸ்பரம்இருவரதுமார்க்குகளும்பாடங்களும்,இருவரிடமும் நெசவிட்டுமாறி,
மாறிவித்தைகாண்பிக்கிறவிளையாட்டுநடக்கும்.

  இருவருக்கும் இடையில்சுவரெழும்பி நிற்கும் வித்தியாசவிகிதங்களை கம்புகொண்டுதாண்டிசரிசெய்யவேநேரம்சரியாகிப்போகிறது. 

 முன்னது, பின்னதிலும், பின்னது முன்னதிலுமாய்மாறி,மாறி பின்னிக்கிடக்கிற
 சமயங்களில் இருவரது பள்ளித் தேர்ச்சியிலும் ஒரு வித்தியாசம் தெரியும்.
.
 அந்த வித்தியாசங்களில் ஏற்படுகிற உரசல்களும் சண்டைகளும் மின்மினிகள் ஒன்றோடோடுஒன்றுமுட்டி மோதுவது போல   அழகாகயிருக்கும், இவர்  கை
நிறைந்துஏதாவதுவாங்கிப்போய்அவர்களுடன்பேசிச் ரித்துக் கொண்டிருக்கிற நாட்களில்/

 “வந்துட்டயாப்பா,புள்ளைகளுக்கு ரெண்டு தீன்பண்டம் வாங்கிக் குடுத்துட்டு மச்சானும்,மாப்புளையுமா ராத்திரி கடைப்பக்கம் சுத்தீட்டு திரியிறதுக்கா?,
 
 "அட என்னக்க நீ,வீட்டுக்கு வந்தவன வான்னு கூப்புடாம இப்பிடிப்போடு தாளிக்கிற?”

   “வையாம   பின்ன  என்ன  கொஞ்சவா  சொல்ற?ஒரு பொம்பளப் புள்ளைய
வச்சிருக்கம்,செய்யிறம்ன்னு ஒரு ஒசன இருக்கா மனுசனுக்கு?நீயும் ஒண்ணுக்கு ரெண்டா பெத்து வச்சிருக்க,நாம என்ன வஸ்தாவி பரம்பரையா என்னத்தையோ இத்துப்போன ஒடம்ப வச்சிக்கிட்டு ஒட்டுப்போட்டு ஓட்டிக்கிட்டு திரியிறம். இந்த லட்சணத்துல அந்த நாத்தமெடுத்த கண்றாவிய ஊத்தாட்டி என்ன?”

   “விடுக்கா நாங்க  என்ன  எந்நேரமும்   பாட்லும்,   கையுமாவா  அலையிறம்.?
ரெண்டு,மூணுமாத்திக்குஒருதடவதான/

  ருசிகண்டநாக்கு விடமுடியல,போக எங்களுக்கு இருக்குற ஒடம்பு அலுப்புக்கு இப்பிடி ஏதாவது தேவப்படத்தான் செய்யுது,நாங்க என்ன குடிச்சிப்புட்டு கடைக்குபக்கத்துலயோ,இல்லைன்னா எங்கனையாவது வம்பு இழுத்துக்கிட்டா திரியிறம்?நாங்க குடிக்கிறது மூணாம் பேருக்கு தெரியாது.இங்க ஒனக்கும் அங்க ஏங் வீட்டுக்காரிக்கும் தவுர/

 “எதுனா சொன்னா இப்பிடி மனச்சமாதானம் பண்ணி பேசிருப்பா,சரி சரி மச்சான் எங்க தெருமுக்குல நிப்பாரே,சரி கடைக்குப்போயிட்டு போகும் போது வீட்டுக்கு வந்து ஏதாவது சாப்புட்டுப் போடா வயித்தக்கெடுத்துக்காத” என்பாள்.

 “அதெல்லாம் இருக்கட்டும்,மச்சான நீ வாட்டுக்கு இப்பிடி ஏதாவது ஏட்டிக்கி போட்டியா பேசிப்புடாத,பாவம் அவர் சின்னப் புள்ள மாதிரி,

 “அட போடாபோடா கிறுக்கா, ஓங்கிட்ட இது சம்பந்தமா பேசுற பேச்சக் கூட ஒங்க மச்சான்கிட்டபேச மாட்டேன்டா. எனக்குத் தெரியாதாடாஏதோ கூடப் பொறந்த பொறப்புங்குறதால இதையெல்லாம் ஓங்கிட்ட சொல்றேன்.எனக்கு வாழ்க்ககுடுத்தசாமிடாஅவரு,அவருஎன்னயவச்சிருக்குறஇருப்புக்குஅவருக்குகோயில்கட்டிகும்புடணும்.அவர்ட்டப் போயி,,,,,,,,, எப்பிடிடா, நல்லா சொன்னபோ/

    அவள் கல்யாணமாகிப் போகும்முன்அவளதுசமையலில்வைத்தஉடம்புதான்
இது.இன்றுவரைதாக்குபிடித்து ஓடிக்கொண்டிருக்கிறது.

  வீட்டிலிருக்கிற சமையல் சாமான்களில் எதையாவது தோண்டி துருவி எடுத்து கையில் போட்டு தெள்ளி ஒட்டித் தட்டி அரைத்து அதற்கு ருசியூட்டி விடுவாள்.

 அப்படிஒருபக்குவம் இருந்தது அவளது கையில்."ஏலே என்ன அவசர முன்னாலும் சாப்பாட்டபொறந்தள்ளாத ஆமாம்.இந்த வயசுல வாய்கிற ஒடம்புதான் கடைசி வரைக்கும் பாத்துக்க” என்றவளின் வாஞ்சை அவளது கல்யாண தினத்தன்றோடு போய்விட்டதும் இன்று அவள் இல்லாத போதும் கண்காணாத பேச்சாக ஆகிவிட்டது.

  அவர் கைலியை முழங்காலுக்கு மேலாக மடித்துக் கட்டி பார்த்ததில்லை. பூப்
போட்டகையிலின் மடிப்பு வழியாய் வெளித்தெரிந்த வெள்ளை முடிகள் அவரது காலில் வெள்ளை வர்ணம் பூசியதாக/

மெலிந்ததிரேகம்வத்திப்போனமுகம்ஏற்றிசீவியதலைமுடிஇன்னும் உதிராமல்/அவர் அணிந்திருந்த முழுக்கை சட்டை உடல் ஒட்டாமல்/

 சமயத்தில் சட்டை போடாமல் வெற்றுடம்பில் துண்டு போர்த்தியவராய் கைலியுடன்வருவார்.திரேகமெல்லாம் வெள்ளை காட்டி கண்ணடிக்கும் முடிகளுக்குள் ஏதும் காக்கைக் குருவிகள் வந்து அடைந்தாலும் தெரியாது போலிருக்கிறது.

  சின்னக்காள்தான் சொல்வாள் அடிக்கடி.ஏன் இப்பிடி மொகம் நெறைய முள்ளு,முள்ளாமுடியநட்டுக்குவச்சிக்கிட்டுதிரியிற ?ரெண்டு நாளைக்கு ஒரு தடவசேவிங்கபண்ணுஇப்படிதிரிஞ்சையின்னாஒன்னையப்பாகுறசின்னப்புள்ளைகளுக்குமேலுக்குசௌக்கியமில்லாமபோயிரும் போலயிருக்கு கிறுக்கா” என தலையில் தட்டி ரேசரை எடுத்து கையில் தருவாள்.

  “அப்பாவப்பாத்துருக்கயில்ல நீயி? என்னவேல எப்பிடிக்கெடந்தாலும் ரெண்டு
நாளைக்கொருக்க சேவிங் பண்ணாம வெளியில  வரமாட்டாரு.

  அவரு சேவிங் பண்ண மறந்த நாள்ன்னா நம்ம  அம்மா  ஆஸ்பத்திரியிலயும்,
வீட்லயுமா மாறி,மாறி படுக்கையில கெடந்த ஒரு மாசந்தான்.
 
 இந்தா கண்ணாடி,சீப்பு அப்பிடி வெளியில வச்சி ஜன்னல் குறுக்குக்கம்பில கண்ணாடிய தொங்கவிட்டுட்டு சேவிங் பண்ணு.வீட்டுக்குள்ள வேணாம்” என்பாள்.

அவள்சொன்னசொல்மனம்தங்கி   நிற்க  இன்றுவரை  இரண்டு  நாளைக்கு  ஒரு
முறை   என   ஷேவிங்   தொடர்கிறது.   அவளும்   இப்போது  ஆஸ்பத்திரிக்கும்,
வீட்டுக்குமாக/

  இரண்டு அக்காக்கள்,ஒரு தங்கை என நிறைசூழ்ந்த குடும்பத்தில் பிறந்த அவர் அக்காக்களின் கவனிப்பிலும்,தங்கை அள்ளி வைத்த சாப்பாட்டின் ருசியிலுமாய் வளர்ந்திருக்கிறார். 

    தங்கையை    பக்கத்து  ஊரில்தான் கட்டிகொடுத்தார்கள் அவள்  இப்போது
சென்னையில் இருக்கிறாள்.

   கணவனுக்குஏதோஒருஇங்கிலீஸ்கம்பெனில் வேலை என்றாள்.கை நிறைந்த 
சம்பளம். கம்பெனி கொடுத்த வீடு, கார், இத்தியாதி,இத்தியாதிஎனவசதியாக இருக்கிறார்கள்.

   கைவரப்  பெற்ற    வசதியை   காரணம்   காட்டி   பிறந்த   வீட்டிலிருந்து பிடுங்க
ஆரம்பித்தாள்ஏற்கனவேஎரிகிறகொள்ளிஇதில்எந்தக்கொள்ளியை எடுத்துத்தர?

   அதுவும்   பற்றாக் குறையின்   உறைவிடமாய்   வீடு  ஆகி  போன  பின்   அவள்
கேட்பதைஎங்கிருந்து தர?முடியவில்லை அவர்களால்.

   கோபித்துக் கொண்டு தாயின் இறப்புக்குக்கூடவரவில்லை. “கடைசிப்புள்ளை,
கடைசிப்புள்ளன்னுதூக்கித்தூக்கிவளத்தாதலையிலதூக்கி வச்சிட்டுஆடுனா,
அவஇப்பபொறத்தால காட்டீட்டுப்போயிட்டா,

  “அப்பிடி என்ன கோவமுன்னு தெரியல ,மானம் கெட்ட கோவம் அவ என்ன வச்சிக்கிட்டாவஞ்சகம்பண்ணுனா,

  "இருந்த வரைக்கும் மகராசி மூணு புள்ளைகளுக்கும் ஒடி ஓடித்தான் செஞ்சா .முடியாத பட்சத்துல அவளும் என்னதான் செய்வா பாவம்.
   
   பூச்செடி மாதிரி ஒத்த ஆம்பளப்புள்ளைய வச்சிக்கிட்டு அதக்கூட கவனிக்காம பொம்பளப் புள்ளைங்க, பொம்பளப் புள்ளைங்கன்னுதிரிஞ்சதுக்கு நல்லா விசுவாசம் காட்டிட்டா,என்றார்கள் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள்.

     அப்படி   அன்று  காற்றில்  கரைந்த  பேச்சையும்  இன்னும்  மனதில்   முடிந்து
வைத்திருக்கிற   மிச்சமிருக்கிற   நினைவுகளையும்  வெளியூரில்  இருக்கிற
தனது  பிள்ளைகளையும்,தனது அக்காக்களின்வாரிசுகளையும்அவ்வப்பொழுது 
பார்த்தும் நினைவலைகளில் நீந்த வைத்துக்கொண்டுமாய்அன்றாடங்களின்
காலையில்இப்படிகடைக்கும்வீட்டுக்குமாய் நடந்து கொண்டிருக்கிறார். 













2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வேறு என்ன தான் சார் பண்ண முடியும்.....
அவன் கூப்பிடும் வரை இப்படி நாட்களை கடத்த வேண்டியது தான்.....
பகிர்வுக்கு நன்றி.

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.அவன் கூப்பிடுவது என்பது வேறு அமைந்துவிட்ட வாழ்க்கையின் வட்டங்கள் இப்படித்தான் சுழல்கின்றன.