வீடு என்பது அகமா?புறமா? இரண்டும் சந்தித்துக் கொள்கிற களம் என்றே சொல்ல வேண்டியதிருக்கிறது.
வீட்டிலிருந்து வெளிக் கிளம்புகிற சரியான மனிதனும் அவன் புரிதலுமேபுற உலகம் குறித்து தெளிவாக முடிவெக்க முடிகிறது.
கணவர்களின் உடனடி ஆலோசகர்கள் மனைவிகள்.குழந்தைகளின் உடனடி உதாரண மனிதர்கள் பெற்றோர்கள்.
அவர்களுக்குள் உரையாடல் தீர்ந்து போனபின் பின்னர் முகட்டு வளையை பார்த்த படிதான் எல்லோரும் காலம் தள்ள நேரிடும்.
நமதுசமூகஏற்பாட்டில்உறவுகளுக்குள்உறையாடல்குறைந்தேகாணப்படுகிறதுகாரணம் இங்கு எல்லா உறவுகளுமே ஆண்டான், அடிமைகோட்பாட்டில்தான் தீர்மானிக்கப்படுகிறது,செயல்படுகிறது.ஆதலால்தான் அந்த இடத்தை பாட்டிகளும்,நண்பர்களும் பிடித்துக்கொள்கிறார்கள்.
தோழர் விமலன் உறவுகள் குறித்து ஒரு மிகப்பெரிய ஆராய்ச்சியே நடத்தியிருக்கிறார்.
“இடரக்கல்” வனராஜன் வீட்டை விட்டு கிளம்பும் போது துணிப்பை நிறைய்ய கோரிக்கைகளோடு கிளம்புகிறார்.
நிராதரவான நிலையில் கிடந்து அல்லாடுகிற மனது மண்குழியில் கிடக்கிறதான கற்பனையும் வர்ணணையும் வாசகனிடம்மனசைப்பிசைகிற கிரக்கத்தை உண்டு பண்ணும்,
இறுதியில் தூக்கு வாளி டீயுடன் இசக்கியின் இடத்தில் அவருக்கு ஒரு மாயக்கம்பளம் காத்திருக்கிறது,அது இசக்கியின் முதுகு.அதில் ஏறித்தான்வாழ்க்கையின்வெறுமைகளைத்தாண்டிப் போகிறார்கள்.
குழந்தைகள் உலகம் ரொம்ப அலாதியானது.அதில் நீங்கள் எதையும் எதிர்பார்க்க முடியாது.எதிர்கொள்ளவும் இயலாது.உங்களிடம் இருக்கும் அச்சடிக்கப்பட்ட பதில்களுக்குள் இல்லாத கேள்விகள் உற்பத்தியாகும் வாழ்க்கைக்கானஆராய்ச்சிசாலைஅது.அதைதான் “வண்ணத்துப்பூச்சி” பேசுகிறது.
வண்ணத்துப்பூச்சிகளுக்கு காங்க்ரீட் தளங்களில் தேனெடுக்கிற வல்லமை கூடிப்போகிறது.
கதையின் ஓட்டத்தில் படைப்பாளி எல்லாவற்றையும் கூடுதலாக உற்றுப்
பார்க்கிறான்.அதனால்தான்காகங்கள்அவனிடம்சொல்லாதசேதியெல்லாம்சொல்கிறது.
காக்கைகள் எப்போதுமே ஒதுக்கப்பட்டவைதான்.எனவே அவை விடுபட்ட பறவைகளில் ஒன்றாகி போகிறது.
அதனால்தான் அந்தக் காக்கைகள் ஒன்று திரண்டு ஆண்டனா கம்பிகளையும்,
காங்க்ரீட்சுவர்களையும்கொத்திக்குதறுகிறது.இதுபோலபடிமமானபலஇடங்கள் வாசிப்பினூடாக வந்து நம்மை யோசிக்க வைக்கிறது.
தேனீர்கடையில்அமர்ந்துஅல்லதுநின்று பொழுது கடத்துகிறவர்களை கூர்ந்து
கவனித்தால் அவர்கள் கைக்கும், உதட்டுக்கும் இடையில் பயணமாகும் சுடு
திரவத்தின்இனிப்பில்உலகத்தின் கசப்பை துடைக்கிற முயற்சி நடப்பதை அவதானிக்க முடியும்/
அதனால்தான் கூலித் தொழிலாளர்கள் நிறைந்த பகுதியில் தேனீர் கடைகள்
அதிகம்வியாபித்திருக்கிறது.கசப்பைக்கடக்கவருகிறமனிதர்களைஎதிர்பார்ததபடி.
அங்கே24மணிநேரமும்தேனீர்கொதிகலன்கள்கொதித்துக்கொண்டேஇருக்கிறது.விமலனின்எழுத்துக்கள்அதிலிருந்துகிளம்பும்ஆவியைப்போல அலையலை
யாய் வாழ்க்கையின் அடித்தளத்தை அர்த்ததோடு விவரிக்கிறது.
பெண்ணின்மனம்ஆழம்என்பதெல்லாம்மாய்மாலம்,எட்டிப்பார்க்கவேதயங்குகிற ஆணின் மனதுதான் குரூரமான ஆழம்.
விமலனின்கண்களில் படுகிற பெண்கள் சோகக் கவிதையாய் பிணவறையில்
கிடக்கிறவள் அவள்மீது போர்த்தப்பட்ட சந்தேகங்கள்,வார்த்தை கொண்டு விரட்டுகிறகனத்தசரீரத்துக்கிழவிஅழுத்தமானநினைவுகளைவெள்ளை ஆடைகொண்டு போர்த்திய படி உலவும் அம்மா,காய்ந்து கிடக்கும் கரிசலை செருப்பில்லாதகாலோடுகடந்துபோகிறவள் ,சிறைக்குப்போனகணவணோடு
சிதைந்துபோன நம்பிக்கை.அதைஎதிர் கொள்கிற கந்தனின் மனைவி, அடுப்பங்கரையிலும்,குளியலறையிலும் ஈர்க்க்கிற மனைவியின் பிம்பம்,அதன் பின்னால் நிழலாடுகிற காதல் இப்படி ரக ரகமான பெண்களின் அருகில் போய் உறையாடுகிறது விமலனின் படைப்புகள்.
ஒருஆண்பெண்ணின்மனதோடுபேசுவதுகடினம்.ஆனால்அதற்கான முயற்சி
நடந்துகொண்டேஇருக்கிறது விமலனின் கதைப் பரப்பெங்கும்/
யாரும் பொறாமை படுகிற மொழி விமலனுடையது. அன்றாடம் நம்மோடு
பயணிக்கிற,நமக்குபிடிக்காமல்ப்போனாலும்,நமதுமூக்கைச்சுற்றிவட்டமிடுகிறகொசுக்களின்ரீங்காரத்தைப்போலஉரத்துக்கேட்கிறவிளம்பர வரிகளை
வம்புக்குஇழுக்கிறவரிகள்நம்மையும்சேர்த்துஉரையாடலுக்குள் இழுத்துக்
கொள்கிறது.
எழுத்துக்கு பிரச்சாரம் தேவையா என்னும் கலாச்சாரச்சண்டையில் விமலனின் எழுத்துக்கள் மிகத்துல்லியமாக பிரச்சாரத்தின் பக்கமே நிற்கிறது.
அது அடித்தட்டு மக்களின், அதாவது நடுத்தர வர்க்கத்துக் கீழே,ஒதுக்கப்பட்டவர்
களும் மேலே இருக்கிறவர்களைப் பற்றிய பிரச்சாரம்.
எல்லோரும்கஷ்டப்படுகிறதொழிலாளிபற்றிபேசிக்கொண்டிருக்கையில் ஒரு வயோதிக சுமைத்தொழிலாளியின் அந்திம காலம் பற்றி பேசுகிறான்.
இப்படிசிலகதைகள்நம்மைஅதிரவைக்கிறது.சிலகதைகள்வாசகனோடுஉறவாடிக்கொண்டே கூட வருகிறது.சில கதைகள் படிமம் கலந்து கண்ணாமூச்சி காட்டுகிறது.
காமம்,குரோதம்நிறைந்தகுடிகாரர்கள்அஞ்சுதலை நாகமாக,சந்தேகக்கணவன் சாக்கடையாக வந்து அடை வாங்குகிறார்கள்.
இப்படிஇந்தபுவிப்பரப்பில்தன்கண்ணுக்குள்படுகிறஅவலங்கள் அனைத்தையும்
மொத்தமாகபடம்பிடிக்கிறஆர்வத்தோடுகிளம்பியிருக்கிறஎழுத்து,அவனதுமனசைப்போலவே மென்மையானதும்,விசாலமானதுமாகிறது.
தொண்ணூறுகளின் தொடக்கத்தில் அறிவொளிநாடகக் கலைஞனாக, பின்னர்
தொழிற்சங்கபிரதிநிதியாகஎல்லாவற்றிலும்தனதுசெய்நேர்த்தியைஉறுதி செய்கிறவிமலன்தன்கதைகள்மூலமாக அகம்புறம் இரண்டையும் இன்னொரு
தளத்திற்குஎடுத்துகொண்டு போகிறான்.
வாழ்த்துக்கள்.
எஸ்.காமராஜ்,
4/140 குயில் தோப்பு
என்.ஜி.ஓ காலனி
சாத்தூர்-626203.
(எனது ஆருயிர் நண்பர் தோழர் திரு காமராஜ் அவர்கள் என் முதல் சிறுகதைத்தொகுப்பான"காக்கா சோறு"க்கு எழுதிய முன்னுரை.காமராஜ் அவர்கள் இதுவரை மூன்று சிறுகதை தொகுப்புகள் எழுதியிருக்கிறார்.அவரது வலைத்தள முகவரி www.skaamaraj.blogspot.com.)
20 comments:
ஏற்க்குறைய அனைத்து கதைகளையும்
பதிவில் படித்திருந்ததால் விமர்சனத்தை
ரசித்து படிக்க முடிந்தது
அருமையாக விமர்சனம் செய்துள்ளர்ர்
பகிர்வுக்கு நன்றி
.வாழ்த்துக்கள்
வணக்கம் ரமணி சார்.நன்றி தங்களது வருகைக்கும் கருத்துரைக்குமாக/
Arumsiyana mukavurai adithaddi makkalin valkai murai
அருமையான விமர்சனம்.
நன்றி திரு காமராஜ்.
வாழ்த்துகள் திரு விமலன்.
சமீப காலமாக உங்கள் சிறுகதைகளை படித்து வருகிறேன். அவை யாவும் மிக நல படைப்புகளாக உள்ளன என்பதில் ஐயமில்லை . காமராஜ் அவர்களின் முன்னுரை தங்கள் மதிப்பை இன்னும் உயர்த்தி உள்ளது.
நல்ல விமர்சனம். பகிர்வுக்கு வாழ்த்துக்கள். நன்றி.
வாழ்த்துக்கள்...
வாழ்த்துகள்
அருமையான விமர்சனம்.வாழ்த்துகள்
வணக்கம் சொந்தமே!சிறப்பான முன்னுரையுடன் அழகான விமர்சனம்.வாழ்த்துக்கள் அன்பரே,சந்திப்போம்.!
மயங்காதிரு என் மனமே..!!!!
வணக்கம் கவி அழகன் சார்,நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/
வணக்கம் மாலதி மேடம்.நன்றி தங்களது வருகைக்கும்
கருத்துரைக்குமாக/
வணக்கம் ரத்தினவேல் நடராஜன் சார்,நலம்தானே?நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் tn முரளிதரன் சார்,நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/
வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நலம்தானே?நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் கோவி சார்,நன்றி தங்களது வருகைக்கும்,கருதுரைக்குமாக/
வணக்கம் ஹைதர் அலி சார்,நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/
உங்களுக்கான அங்கீகாரம் கிடைத்துவிட்டது.வாழ்த்துகள் விமலன் !
வணக்கம் ஹேமா அவர்களே,அங்கீகாரம் கிடைத்ததாய் நான் நினைக்கவில்லை,நன்றி தங்களதுவருகைக்கும்,கருத்துரைக்கும்/
Post a Comment