11 Jul 2012

மாக்கோலம்,,,,,


  
தோசை சுட்ட வளைக்கரங்களுக்கு
என்ன செய்து போட்டால் தகும்?
மெலிந்து சிவந்த,தடித்த கறுத்த,
மாநிறத்தில் இவை இரண்டுமற்று
தெரிந்த கரங்கள்
அன்றாடம் சுடுகிற தோசைகளின்
எண்ணிக்கை கணக்கிலடங்காமல்/
அரிசி மாவும்,உளுந்த மாவும்
அரைத்து சுட்ட தோசையில்
அப்பாவுக்கும்,அம்மாவுக்கும்,
அண்ணனுக்கும்,தங்கைக்குமாய்
பிரித்து கொடுத்து விடுகிற பாங்கும்,
மனமும்,பிரியமும்,வாஞ்சனையும்
அந்த மென் கரங்களில் தென்பட
வெந்தணலிலும்,வேக்காட்டிலுமாய்
தோசையோடு தோசையாய்
வெந்து தணிகிற  சமையறையில்
தோசைகள் அடுக்கப்பட்டிருகிற
தோசைகளை சுட்ட வளைக்கரங்களுக்கும்
அது அல்லாத வெற்றுக் கரங்களுக்கும்
என்ன செய்து போட்டால் தகும்?

10 comments:

Yaathoramani.blogspot.com said...

வெந்தணலிலும்,வேக்காட்டிலுமாய்
தோசையோடு தோசையாய்
வெந்து தணிகிற சமையறையில்//

கூர்மையான கத்திபோன்ற வார்த்தைகள்
மனம் கவர்ந்த பதிவு.
வாழ்த்துக்கள்

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

என்ன செய்து போட்டால் தகும்?// தோசையே போடுங்கள், நீங்களே சுட்டு.

சசிகலா said...

தோசை ச◌ாப்டதோட இல்ல◌ாம கவி சொன்ன விதம் அருமை.

விச்சு said...

விஜி சொன்ன மாதிரி நாமலும் தோசையே சுட்டுப்போடலாம். ஒருநாளாவது அவர்களை உட்காரவைத்து நாம் சமைத்து போடலாம்தான். அவர்கள் கஷ்டப்பட்டு சாப்பிடத் தயாராக இருந்தால்.

vimalanperali said...

வணக்கம் ரமணி சார்.நலம்தானே?நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் விஜீ விஜயலட்சுமி மேடம்.
நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் விச்சு சார்.தோசை என்ன எல்லாம் செய்து போடலாம் என்கிற ஆசைதான் ஆண்களுக்கு.
ஆனால் தான் ஆண் என்கிற தனம் இருக்கிற்தே?அது லேசில் அகலாது.அது அகலும் நாள் வரை இப்படித்தான்/
நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் சசிகலா மேடம்.நன்றி தங்களது,வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

Subramanian said...

அன்பை விட வேறு என்ன பெரியதாக இருக்கப்போகிறது. அன்பை அரவணைப்பாக போட்டுவிட்டால்... அதுவே மகிழ்ச்சி வளையல்.

vimalanperali said...

வணக்கம் சுப்ரமணியன் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/