3 Jul 2012

ஒற்றைவரி


   ஒற்றை ஆளுக்கு எத்தனை தேவையாய் இருந்து விட முடியும்?அதிகாலை 5 மணிக்கெல்லாம் அலாரமில்லாமல் எழுந்திரிக்கிற அவர் செய்கிற முதல் வேலை வீட்டின்பின் புற வெளியில் இருக்கிற  அடுப்பை பற்ற வைப்பதுதான்.
   கரி படிந்த அலுமினியச் சட்டியில்  தண்ணீரை ஊற்றி அடுப்பில் ஏற்றிய கையோடு பிரஷ்சை எடுத்துகொண்டு பல் விலக்கப் போய் விடுவார்.
   புகழ் பெற்ற கம்பெனியின் டூத்பேஸ்ட்,அதே கம்பெனியின் பிரஷ்,இடுப்பில் கட்டிய கைலி.
   வெற்றுடம்பில் போர்த்திய   வெள்ளைத்   துண்டுடன் அவர்   பல்   தேய்த்து முடிக்கவும் அடுப்பில் இருந்த  தண்ணீர்  சுடவும்  நேரம்  சரியாய்  இருக்கும்.
   அதை வைத்துதான் வாய் கொப்பளிப்பார்.பின்அதே
அடுப்பில் எரிந்து கொண்டிருக்கிற தனலையும்,தீயையும் சரிபார்த்தவாறே டீப் போடுவார்.
   அது கொதித்து கொண்டிருக்கிற இடைவெளியில்  பாத்ரூம் போய் குளித்து முடித்து விட்டு வந்து விடுவார்.
  கட்டியியிருந்த கைலியையும்,துண்டையும் துவைத்ததண்ணீர்வழிய பிழிந்து 
கொண்டே வருகிற அவர் அதைகொடியில் போட்டுவிட்டு மாற்றாக வேறு கைலியையும்,வேறு ஒரு துண்டையும் மேலில் போர்த்திவாறு  டீயை ஆற்றிக்
கொண்டேகால் மேல்கால் போட்டவாறு அங்கிருக்கிற கல்லில் அமர்ந்து டீக்
குடித்தவாறே விடிகிற பொழுதை வரவேற்க ஆரம்பித்து விடுகிறார்.
  டீக்  குடித்து  முடிந்தவுடன்  அவருக்கென்றே  வைத்திருக்கிற  சின்ன
சைக்கிளில் ஏறி  கடைக்குப் போக,தேவையானதைவாங்கி வர,அவரைப்போல் உள்ள அவரது நண்பர்களைப் பார்க்க என கிளம்பி விடுகிறார்.
  வாழ்நாட்களின் நகர்தலில் சிறிதும் பிசகின்றி நடக்கிற இந்தசெயல்களுடன்
தான் அவரது காலை விடிகிறதுஅன்றாடம்,
  அவரும்   நகர்த்திக்   கொண்டிருக்கிறார்   தனது   நாட்களை   மாதாந்திர பென்சனின்  துணையுடன்/
மனைவியை  இழந்த  அவருடன்  கணிணியில் பேசிக்கொள்கிறார்கள்.வெளி
நாட்டில் இருக்கிற பிள்ளைகளும்,பேரன்களும் மாதமொருமுறை/   

22 comments:

கவி அழகன் said...

Kalakkal

சென்னை பித்தன் said...

யதார்த்தம்!அருமை

முத்தரசு said...

அன்றையவர்களின் இன்றைய நிலை

வலையுகம் said...

பதிவு ரொம்ப எதார்த்தமாக இருக்கு சகோதரரே

சசிகலா said...

இன்றைய சூழலை சொல்லும் பதிவு.

கோவி said...

நம்ப தலைல எல்லாம் என்ன எழுதிருக்கோ?

vimalanperali said...

வணக்கம் கவி அழகன் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் சென்னைபித்தன் சார்,நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் வலைஞன் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வ்ணக்கம் மனசாட்சி சார்.அன்றையவர்களின் இன்றைய நிலை என்பதைய் தவிர்த்து இன்றைய வயதானவர்களின் நிலை நம்மை கவலை கொள்ளசெய்வதாக/

vimalanperali said...

வணக்கம் ஹைதர் அலி சார்.
யாதார்த்டங்களை மீறாத கவிதையாக தடம் பதிக்கிற மனித வாழ்க்கையில் இது மாதிரியான மீள் நிகழ்வுகள் நிறையவே இருக்கிறதுதான்,அதை சொல்லி
செல்வதே நம்வேலையாயும்,
கடமையாயும் தெரிகிறது.
நன்றி தங்களது வருகைகும்,
கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் சசிகலா மேடம்,இன்றாய்ய சூழல்கள் சூழல்கள் சுட்டிக்காட்டுகிற நிகழ்வுகாளாய் பதிவாகிறவையே நிறையவே/

vimalanperali said...

நன்றி சசிகலா மேடம் தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் கோவி சார்.தலை எழுத்து என்பதெல்லாம் ஒரு பக்கம் இருப்பினும் கூட நமது கலாச்சாரம் விட்டுச்செல்கிற மிச்ச சொச்சங்களாய் இது மாதிரியானவைகள் நிறையவே/
நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

வை.கோபாலகிருஷ்ணன் said...

இன்றைய சூழலை மிகவும் நன்றாக எதார்த்தமாகச் சொல்லியுள்ளீர்கள்.

பாராட்டுக்கள்.

vimalanperali said...

வணக்கம் கோபாலகிருஷ்ணன் சார்,
நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

விச்சு said...

வழக்கம்போலவே உங்களின் பதிவு யதார்த்தாமாய் உள்ளது. இன்றைய குழந்தைகளுக்கு பெற்றோரை விடவும் பணம் முக்கியமாகப்படுகிறது. தனிமையில் தவிக்கும் தாய் தந்தையர் அதிகம்.

திண்டுக்கல் தனபாலன் said...

அப்பட்டமான உண்மை சார் !

vimalanperali said...

வணக்கம் விச்சு சார்.தாங்கள் கூறியது போல பணம் பற்றிய அதீத மதிப்பீடு மிக சமீப ஆண்டுகளில்தான் கூடியிருக்கிறது.
அதுவும் இந்தஉலகமயம்
வந்ததற்கப்புறமாய் பணத்தின் மீதான பிரேமை மிகவும் கூடித்தான் இருக்கிறது.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/,

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

ராமலக்ஷ்மி said...

நிதர்சனைத்தை சொல்கிறது ஒற்றைவரி.

vimalanperali said...

வணக்கம் ராமலஷ்மி மேடம்.நன்றி தங்களது வருகைக்கும்கருத்துரைக்குமாக/