26 Jul 2012

உடைபடும் நேரம் (பிம்பங்கள்),,


  என்னம்மா  வேப்பம்பழம்   பெறக்க வந்தீங்களா? பெறக்கியாச்சா? இன்னும் பெறக்கனுமா?எனக்கேட்டவனாய்நகர்கிறேன்அந்தஇடத்தை விட்டு.

  சின்ன பழங்கள் அவை. மரத்திலிருந்து உதிர்ந்து உருண்டை,உருண்டையாய் முகத்தில் மஞ்சள் பூசிக் கொண்டு உருண்டுஓடி காட்சிப் படுகிறது.

 தலையில்பின்னலிட்டுபூவிட்டு,நெற்றியில் பொட்டிட்டு,கண்ணுக்கு மையிட்டு அழகு பூத்திருந்த பெண்ணாய் உலாவருகிற நிலாவாய் அந்த பழங்கள் கண்ணுக்கு காட்சியளிக்கக் கண்டேன்.

  மைதானமாய் பூத்து மலர்ந்திருந்த சின்ன இடம்,வீட்டை அமர வைத்தது போக மிச்சமிருக்கிற இடத்தில் எதற்கும் இருக்கட்டும் என வேப்பமரங்கள் இரண்டு நட்டிருந்தோம்,

  இப்பொழுது அதற்கு  சீசன்  போலும்,மழைக்கு தன் காலம் மாதிரி/மனம் பிடித்த பொழுதுகளில்,மனம் பிடித்த நாட்களில் ,மனம் பிடித்த வேளைகளில் மனம் பிடித்துபோகிற அளவிற்கு இப்படி பெய்துவிடும் போல/

 மொட்டுவிரிந்து பூவாகி,பூ மலர்ந்து பிஞ்சாகி,பிஞ்சு காயாய் உருவெடுத்து,காய் கனியாகி தருகிற கலர் மஞ்சளாய் கண்ணுக்கு புலப்படுகிற நேரங்களில் லேசாக அடிக்கிற காற்றுக்கும்,நமது பார்வையின் தலையசைவிற்குமாய் உதிர்ந்து விழுகிற பழங்களை பெறக்க தினசரி காலை ஏழு மணிக்கெல்லாம் மிகச்  சரியாக ஆஜராகி  விடுகிறாள்  அந்த  மூதாட்டி,  அவள்   யாரென  எனக்கு
இதுவரை தெரியாது,

  அவளை   இதுநாள் வரை  என் குடியிருப்புப்   பகுதியில்   கண்   கொண்டு
பார்த்ததில்லை.

  யாராக இருக்கக்கூடும் அவள்,ஏன் இங்கு குறிவைத்து வருகிறாள் என்கிற மாதிரியான குதர்க்கங்களையெல்லாம் விட்டு விட்டு “அவள் பெறக்கிவிட்டுப் போகட்டுமேஅந்தபழங்களை,பெறக்கிசேர்த்து,நனைத்து,காயப்போட்டு,முத்தெடுத்துஅதை கிலோ இவ்வளவு என போட்டு பணம் பண்ணுகிற அவளது உழைப்பு பிடித்துப்போகிறது அவள் பழம் சேகரிக்க வருகிற அந்த காலை பொழுதுகளில்/

  எனது இளம் வயதிலும்,பள்ளி பிராயங்களிலுமாய் எனது முக்கிய வேலை இதுவாகவே இருந்திருக்கிறது வேப்பம் பழ சீசன்களில்/

  அது காய்த்து உதிர்கிற நேரங்கள் மிகவு  ரம்யமானவை.முதலில்  காய்க்கிற
காய்கள்,அவற்றிலிருந்து உருமாருகிற பழங்கள் பெரியதாகவும் காண புஷ்டியாகவும்/

  தற்கப்புறமாய் காய்க்கிற காய்களிலிருந்து உருமாருகிற பழங்கள்கொஞ்சமாக 
உடல் சுருங்கி தோலில் சுருக்கம் காணப்பட்டு.

 அதற்கப்புறமாய்,அதற்கப்புறமாயும்,,,,என காய்க்கிற,உதிர்கிற பழங்கள் சின்னதாகி,சின்னதாகி உறுமாறி ஊதிர்வது நின்று போகிற கணம் வரை அந்த மூதாட்டி வந்து பழம் பெறக்கிப்போகிறாள்.

  ஒரு நாள் என்னையும்,என் மனைவியையும் கேட்காமல் மொட்டை மாடியில் ஏறி பழங்களை பெறக்கி விட்டாள்,அதை என் மனைவி என்னிடம் ஒரு செய்தியாக சொன்னபோது “விடு நம் இருவரின் அம்மா வயது இருக்கும் அவர்களுக்கு,அவர்களை சொல்லும் ஏதேனும்ஒரு கடும் சொல் அல்லது சுடு சொல் என்பது சங்கடமே,தவிர நம்மிலிருந்து தூரத்து ஊரில் குடியிருக்கிற நம் இருவரதுதாயின்முகத்தைஇவரதுமுகத்தில்தரிசிக்கமுடிகிறதுஅதற்காகவாவதுஅவர்கள்வரட்டும்,பழம்பெறக்கட்டும்,பழம்சேர்க்கட்டும்என்ன குறைந்து விடப்போகிறது இப்போது?”,,,,,,,
என்கிற  கேள்வியுடன்  சமீப  காலமாக  தினசரி   பழம்  பெறக்க   வருகிறவளை“
என்னாம்மாபழம்பெறக்க வந்தீங்களா?  ஒங்களுக்காகத்தான்   தரையக்  கூட 
கூட்டாமவச்சிருக்கோம்கூட்டுனாபழமெல்லாம் மண்ணேறிப் போகும்,அப்பறம் பழமும் நசுங்கிப் போகும்,கால் மிதிபட்டு வெட்டியாப் போகும் என்கிற முகமன் 
பேச்சுடன் வரவேற்கிறேன்/











14 comments:

பாலா said...

மிக எளிமையான, எதார்த்தமான வரிகள். நன்றி நண்பரே

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையா எழுதி இருக்கீங்க... நன்றி..

ராஜி said...

வேப்பம்பழத்தை பொறுக்கி வீட்டுக்கு கொண்டு வந்து காய வச்சு அம்மாக்கிட்ட குடுத்தால், அதை எடைக்கு போட்டு, அதோட எடைக்கு ஈடா அம்மா உப்பு வாங்குவாங்க. பழைய நினைவுகளை மேட்டெடுத்தது உங்க பதிவு.

vimalanperali said...

வணக்கம் கவி அழகன் சார்,பெயரே அழகாய் உள்ள போது உங்களது கருத்துக்களும் மிக,மிக அழகாகவே இருக்கிறது.நன்றி தங்களது வருகைக்கும் கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் பாலா சார்.நலம்தானே?நன்றி தங்களது வருகைக்கும் கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் திண்ணுக்கள் தனபாலன் சார்,நன்றி தங்களது அவருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் ராஜி சார்,இதுவே படைப்பின் பலம் என்பார்கள்,பழைய நினைவுகளை தூண்டவும்,புது சிந்தனைகளை விதைக்கவுமான வேலைகளை படைப்புகள் எப்பொழுது செய்து கொண்டேயிருக்கின்றன,நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

வலையுகம் said...

மிக எளிமையான அன்றாட காலில் மிதிபடுகிற விஷயங்களை கூட அழகியல் பார்வையில் பார்க்க முடியும் என்பதை இப்பதிவு நீருபிக்கிறது வாழ்த்துகள்

கலாகுமரன் said...

சிந்தனையை தூண்டும் நல்ல படைப்பு.
" நாம் என்ன கொண்டு வந்தோம் நாம் என்ன கொண்டு போகப் போகிறேம் "

vimalanperali said...

வணக்கம் ஹைதர் அலி சார்.நன்றி தங்களது வருகைக்கும் கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் கலா குமரன் சார்.நன்றி தங்களது,வருகைகும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

அன்றாடம் காலில் மதிபடுவது விஷயங்களின் இயல்பாய் இருக்கிறது.அதை மீட்டெடுத்து வெளிப்படுத்துவது நம் இயல்பாய் இருக்கிறது ஹைதர் அலி சார்.

ஹேமா said...

உங்கள் கதையில் வேம்பம்பழ வாசனையை உணர்ந்தேன் !

vimalanperali said...

வணக்கம் ஹேமா மேடம்,நன்றி