17 Aug 2012

குளிர்ச்சி,,,,,,


வானத்திற்கும் பூமிக்கும்

நட்டு வைத்த வெள்ளிக்கம்பிகளாய்

பெய்து கொண்டிருக்கிறது மழை.

மென்கோபம் காட்டி

வீசிக்கொண்டிருக்கிறது காற்று.

மேடு பள்ளம் தெரியாமல்

கட்டிக்கிடக்கிறது தண்ணீர்.

சுழன்று அடித்த காற்றுக்கு

முகம் காட்டி பறந்து

பறக்கிறது தண்ணீர்.

இவைகளை பிளந்து செல்கிறது கார்.

பின்னாலேயே இரு சக்கர வாகனம் ஒன்றும்.

எதிர் சாரி கடையில்

டீ சாப்பிட்டுக்கொண்டிருக்கிற ஒருவர்.

கோவில் நடை முன்

அன்னதானத்திற்காய் நிற்கிற கூட்டம்.

கடைகளின் கூரையினுள்

மழைக்கு ஒதுங்கி நிற்கிற மனிதர்கள்.

அதில் காய் கறிக்கூடை

நனைந்து விட்டதாய்

கவலை கொள்கிற ஒருத்தி.

சற்றே தள்ளியிருந்து வரும்

சிகரெட் புகைக்கு முகம்

சுளிக்கிற மற்றொருத்தி/

ஆள் நடமாட்டமற்ற சாலை.

மழையை பார்க்க வேண்டும்

என வீட்டினுள்ளிருந்து

அடம் பிடித்தழுகிற சிறுமி.

இப்போது வெளியிலும்

வீட்டினுள்ளுமாய் மாறி,மாறி

வெள்ளிக்கம்பிகள் நடப்படுகின்றன.

12 comments:

Yaathoramani.blogspot.com said...
This comment has been removed by the author.
Yaathoramani.blogspot.com said...

மழையை பயன்படும் பொருளாக
துயர் தரும் ஒன்றாக அல்லாது
மழையை மழையாக மட்டுமே ரசிப்பது
குழந்தைகள் மட்டும் தானே
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

vimalanperali said...

வணக்கம் ரமணி சார்,நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

ராமலக்ஷ்மி said...

அருமை.

சசிகலா said...

தரையில் விழுந்து சேராகும் மழை நீரை விட சிறுமி கையில் ஏந்தும் மழைத்துளி அழகு.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான வரிகள்... நன்றி...

vimalanperali said...

வணக்கம் ராமலட்சுமி மேடம்,நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் சசிகலா மேடம்.நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

வேல்முருகன் said...

அருமை

vimalanperali said...

வணக்கம் வேல் முருகன் சார்,நலம்தானே?நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

ஹேமா said...

மழைக்கம்பிகள்...அருமையாக சொன்னீர்கள்.மழையை ரசிக்கிறோம்.நனைய ஆசைப்பட்டாலும் பயப்படுக்கிறோமே !

vimalanperali said...

வணக்கம் ஹேமா மேடம்,நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/