“படித்ததில்பிடித்தது”நண்பர்கள்சேர்ந்துபேசிகொண்டிருக்கலாம்அல்லதுகலந்துரையாடிகொண்டிருக்கலாம்அல்லதுஅவரவர் எண்ணங்களைபகிர்ந்து கொள்
லாம்சும்மா” எனஅவர்சொன்ன கணங்களில் என்னில் சட்டென பட்டது ஏன் படிக்க வேண்டும்?ஏன் பிடிக்க வேண்டும்? என்பதே/
அப்படி வருகிற சமயங்களில் ஏன் படிக்கக்கூடாது?ஏன் பிடிக்கக்கூடாது என்கிற கேள்வியும் துணையாக சேர்ந்தே முளை விடுகிறது.படித்தவர்களெல்லாம் எல்லாம் தெரிந்தவர்கள்.படிக்காதவர்கள் ஒன்றும் விஷயமற்றவர்கள் என்பது போலல்லவா தோற்றப்பட்டுத்தெரிகிறது.
அன்றாடம்மூட்டைதூக்கிபிழைப்பவர்,வண்டியிழுப்பவர்,கட்டிடத்தொழிலாளி இன்னும்இன்னுமான உடல் உழைப்புத் தொழிலாளி என இருக்கிற பலபேருக்கு படிப்பதற்குஎப்படிநேரமிருக்கமுடியும்?உழைப்பு,பிழைப்புவாழ்வாதாற்கான சம்
பாத்தியம் பிள்ளைகளின் படிப்பு இதரத்தேவைகள் என்பதை மட்டுமே மனதில் இருத்தி ஓடுகிற அவர்களது வியர்வை நிறைந்த ஓட்டத்திலும் அவர்களது பிழைப்பு நெருக்கடியிலும் அவர்கள் எங்கு போய் படிக்க?எது அவர்களுக்கு பிடிக்க?
அப்படியானால்அவர்கள்ஒன்றும்தெரியாதவர்களா?எனகேட்கநேர்கிறகணத்தி
ல்இன்னொன்றும் சொல்லத்தோணுகிறது.
எதற்கெடுத்தாலும் மிக மோசமான உதாரணமாக சுட்டிக்காட்டப்படுகிற “ஆடு மாடுமேய்க்கிறவன்போல”என்கிறபேச்சுபொய்யாக்கப்பட்டு சாம்பலாகிபோய்
விடுகிறதுண்டு/
அவர்களுக்கு இருக்கிற அறிவும்,அனுபவமும் கூட ,,,,,,,,,,,,,,,,க்கு இல்லாமல் போய் விடக்கூடும் சமயத்தில்.அவ்வளவு அறிவு சார் உலகத்தை சேர்ந்தவர்க
ளாக அவர்களை ஆக்கி விட்டுப்போய் விடுகிறது.அவர்களது அனுபவமும்,அனுபவம் சார்ந்த அறிவும்/
அப்படியெல்லாம் பேசிச்செல்கிற பொழுதுகளில் 1 லிருந்து 3 வரைக்கும்,3லிரு ந்து8வரைக்கும்,பத்துவரைக்கும்கல்லூரிமுடிக்கிறவரைக்கும்படிக்கிறவர்களில்கல்லூரியையும்அதுசார்ந்தபடிப்பையும்தாண்டிபெரும்பாலும்சமூகம்,வரலாறு,அறிவியல்,அரசியல்,இலக்கியம்மக்கள்அவர்களதுவாழ்க்கைஎனயோசிக்
கையில் அவர்களுக்கு ஒரு புது உலகம் ,புது வாழ்க்கை,வாழ்பனுபவத்தின் தடயங்கள் அறிமுகமாகிறது.
அதில்தான்மூட்டைதூக்குபவர்,வண்டிஇழுப்பவர்,கட்டிடத்தொழிலாளி என்கிற
வர்களின்வாழ்க்கையையும்அவர்களதுவாழ்க்கைப்பாடுகளையுமாய்சொல்லிச்
செல்கிறது.அப்படியானமனிதர்களையும்அவர்களதுவாழ்வையும்பேசிச்செல்கிறநாவல்கள் சிறுகதை தொகுப்புகள், கவிதைத்தொகுப்புகள், கட்டுரைகள் என
நிறைய இருக்கின்றன.
அவைகளில்பலநம் உறக்கத்தை எட்டி உதைத்திருக்கின்றன.அப்படியெல்லாம் படித்து உள்வாங்கி,சிலாகித்து,மனம் நெகிழ்ந்து நம் உறக்கத்தை எட்டி உதைத்த புத்தகங்களை மனதில் வைத்துக் கொண்டும் இன்னும் இன்னுமான பிறவற்றை சேர்த்துக்கொண்டுமாய்படிக்கிற போது அவை ஒரு புது உலகத்தை அறிமுகம் செய்கிறது.புதுமையானவாழ்பனுபவத்தை சொல்லிச் செல்கிறது. அப்படி செய்
கையில்நமக்குக்கிடைக்கிறஅனுபவம்இந்தசமூகத்தைஅளக்கஇந்த சமூகத்தில் உலவஇந்தசமூகத்தில்ஊசலாட்டமின்றிநம்மைஇறுத்திக்கொள்ள நிறைய,
நிறையவே உதவுகிறது.
ஒருமனிதன்ஜனிப்பதிலிருந்துஅவன்மரணிக்கிறவரைஅவனின்சாதனைகளையும்சொல்லத்தவறுவதில்லை.எனபறைசாற்றிச்சென்ற”படித்ததில்பிடித்தது”என்கிறகலந்துரையாடலைநிகழ்த்திய”இலக்கியா”என்கிறஅமைப்புசக்தி முத்துக்
கிருஷ்ணன் கவிஞர்சரனிதா, பேராசிரியர் கிருஷ்ணன், திரு,நரசிம்மன்,
திருபாலசுப்பிரமணியன். திருRSRசசிக்குமார், திரு,ஆதிநாரயணன்,திரு,ரகுபதி,
திரு,நடராஜன்,திரு,வேல் முருகன்,விமலன்ஆகியோர்களை அறிமுகம் செய்து விட்டுச்சென்றது.
அப்படிஅறிமுகமானஅவர்கள்அனைவரும்பறிமாறிக்கொண்டவிஷயங்களைப்
பார்க்கிறபோது கண்டிப்பாக படிக்க வேண்டும், படிக்கிற விஷயங்கள் நம் ஆழ் மனதுக்கு கண்டிப்பாகபிடிக்கவேண்டும்.அல்லதுஅதனுடன்நாம்நெசவுகொண்
டிருக்க வேண்டுமென்கிறவனாய்அனைவருக்கும்கைகொடுத்துவிடைபெற்று
கிளம்புகிறேன்,
நன்றி வணக்கம்/
6 comments:
மிகமிக நல்லபதிவு, படித்தவர்கள் ஓய்வு நேரத்தில் நூல்களை படிக்கவேண்டும் என அறிவுரைகள் வழங்கிவரும் நேரத்தில், உழைப்பாளர்கள் ஒய்வு இல்லாமல் உழைத்து கொண்டு இருக்கும் நேரத்தில் அவர்கள் எங்கேபடிப்பது என அவர்களின் நிலையை கவலையோடு சுட்டிகாட்டுவது அருமை, அவர்களின் வேர்வைகள் பல எழுத்தில்வராத பாடங்கள். எழுத்தில் உள்ளவை மட்டும் பாடங்கள் அல்ல என்பதை அழகாக சுட்டிகாட்டியுள்ளீர்கள்.
புரிகிறது.. அருமையான பதிவு..
விளக்கம் அருமை சார்... நன்றி...
அதற்குள் மூன்று பதிவுகள் எழுதி விட்டீர்கள்... வாழ்த்துக்கள்...
(தமிழ் பதிவர்கள் திருவிழாவிற்கு சென்றதால் கருத்திட தாமதம்)
வணக்கம் வேல் முருகன் சார்.நலம்தானே?நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் கோவி சார்.சென்னை சென்றீர்களா?எப்படியிருந்தது பதிவர்களின் திருவிழா?நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,நலம்தானே?எப்பயிருந்தது சென்னை பதிவர்கள் திருவிழா?தங்களது வருகைக்கும் கருத்துரைக்குமாய் நன்றி.
Post a Comment