அது எதுவாக இருக்கும்
என அவதானிக்கமுடியவில்லை.
எந்நேரம் இறந்திருக்கக்கூடும்
என்பதும் தெரியவில்லை.
உடல் நசுங்கி இறந்து போனது
ஒரு உயிர் என்பதற்கான
எந்த அடையாளமுமற்றுக்கிடந்தது.
அது யாருக்கு சொந்தமான உயிர்
எனத்தெரியவில்லை.
எந்நேரம் ஏன் அங்கு வந்தது
எனவும் புரியவில்லை.
எந்நேரமும் பரபரப்பாய் இருக்கும்
சாலையில் எந்த இடைவெளியில்
அது நுழைந்தது எனத்தெரியவில்லை.
அதன் நுழைவு எந்நேரம்
இங்கு நிகழ்ந்திருக்கக்கூடும்
எனவும் புரியவில்லை.
வீடு,வீதி குப்பைக்கிடங்குகள்,மரம்
என எதிலும் தேடிய உணவின்
அவசியம் கருதியும்,தேவை வேண்டியும்
இங்கு வந்திருக்கலாமோ?
கோழியா,சேவலா,
அல்லது மயிலா தெரியவில்லை.
சாலையில் தரையோடு தரையாய்
சிதறி அதன் நசுங்கிய உடலின் மீதும்,
இன்னும் ரத்தச்சுவடு காணப்பட்ட
சதைகள் மீதுமாய் ஒட்டிக்கிடந்த
இறகுகளே சாட்சியாய்/
அது எதுவாக இருக்கும் என
அவதானிக்க முடியவில்லை.
எதுவாக இருந்த போதிலும்
அது ஒரு உயிர்தானே?
12 comments:
உங்களின் கண்ணோட்டமே வேறே...
/// எதுவாக இருந்த போதிலும்
அது ஒரு உயிர்தானே? ///
அருமை சார்... நன்றி...
வணக்கம் வேல் முருகன் சார்.நன்றி தங்களதுவருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் திண்டுக்கள் நடராஜன் சார்.நலம்தானே?வேறான கண்ணோட்டம் வரக்காரணம் தங்களைப்போன்றவார்களின் மேலான ஆதரவும்,செழுமை வாய்ந்த கருத்துக்களுமே என நினைக்கிறேன்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
அழகான வரிகளில் அருமையான உயிர் பாடல்.
nice
வணக்கம் மங்குனி அமைச்சர் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/
ஆமாங்க! அதுவும் ஒரு உயிர் தான்! அதை பார்த்து கடந்து போகும் நம்மைப் பற்றி தான் சந்தேகமா இருக்கு.
வணக்கம் ஹேமா (hvl)அவர்களே.நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/
வேதனை தான்.
நன்றி ரத்தின வேல் நடராஜன் சார்,தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்கும்/
மனம் பதைக்க ஒரு கவிதை !
வணக்கம் ஹேமா மேடம்.நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/
Post a Comment