4 Aug 2012

நூல்க்கண்டு,,,,



அவர்களுக்குஅந்தபனியன்ரொம்பவும்நன்றாகவேஇருந்ததுஉடலோடு பொருந்
தியும் ஒட்டியுமாய் பார்க்க அழகாகவும் கண்ணுக்கு உறுத்தாமலும்/ 

குச்சிக்குச்சியாய் முளைத்து நீண்டிருந்த சின்னக் கைகள் ,சின்ன உடல், அதில் குடிகொண்டிருந்த மனதும்,சூழ்கொண்டிருந்த  நினைவுகளும்   எவ்வளவு  எனத்
தெரியாத போதும்கூட அணிந்திருந்தார்கள். 

பிஸ்கட்க்கலரில்நெறுநெறுவெனநூல்ஓடியபனியனில்இரண்டுபக்கவாட்டிலும் ஓடிய கலர் கறுப்பாய் கண்ணில் தைத்தது. கண்ணில் தைத்தாலும் புண்ணெல்லாம் ஆகி விடவில்லை. 

அதுஒருடீக்கடை பரமன்கடை எனபெயர்அதற்கு. டீஇருக்கும், வடை இருக்கும். 
இட்லி,தோசை,மொச்சை,இதெல்லாம் ஒரு இணைப்பாக சேர்ந்து/ 

ஒருடீஒருவடைபெரும்பாலுமாகஎனதுமாலைநேரம்இப்படித்தான் இருக்கிறது, 

டீ சாப்பிடவென நான் இறங்கிய நேரத்தில் எனது கண்ணில் பட்ட காட்சி அது. 
வடைநிரம்பியிருந்ததட்டு.டீவெந்து கொண்டிருந்த பாய்லர், சுடுதண்ணியிருந்த 
வட்டச்சட்டி.அதன்அருகில்நின்றுகொண்டிருந்தடீமாஸ்டர்,அவர்போட்டுக்கொண்டிருந்த டீ. 

கொடுத்த டீயை குடித்துக் கொண்டிருந்த நேரம்தான் கடைக்குள் அமர்ந்து வடை சாப்பிட்டிக்கொண்டிருந்த அவர்களைப்பார்க்கிறேன். 

நன்றாகயிருந்தால்12,அல்லது13வயதுஇருக்கலாம் அவர்களுக்கு.ஒருவன்8, 
ஒருவன்7படித்துக்கொண்டிருக்கலாம்.நான்பக்கவாட்டிலிருந்துபார்த்துக்கொண்டிருந்தேன்அவர்களதுமுதுகும்வடைதின்றுகொண்டிருந்தஅழகும்தெரிந்தது. 

ஒருவன்இடதுகையில்வடையைவைத்துக்கொண்டுவலதுகையால்பிய்த்துசாப்பிட்டுக்கொண்டிருந்தான்ஒருவன்அப்படியேவாயில்வைத்துகடித்துச்சாப்பிட்டான். ஒருவன் சிவப்பாகஇருந்தான்,இன்னொருவன்மாநிறத்தில் தெரிந்தான். 
பக்கவாட்டாக எனக்குத்தெரிந்த அவர்களை உற்று கவனித்த போது அவர்கள் அணிந்திருந்த பனியனின் பின் பக்கம் அவர்களது பெயரும், முன் பக்கம் ஒரு சாதி சங்கத்தின் முத்திரையும்/ 

பார்த்துக் கொண்டே டீ சாப்பிட்டேன்,டீ சாப்பிட்டுக்கொண்டே பார்த்தேன்.அந்த பனியனைநெய்வதற்கான நூல் எவர் தோட்டத்தில் விளைந்த பருத்தியில் இருந்துஎடுத்தது எனத்தெரியவில்லை.நூலுக்குபாவிட்டதும்,சாயம்தோய்த்தது
ம்யாருடையஉழைப்புஎன்பதும்தெரியாமலே/அந்தபனியனைநெய்ததுயாருடையகைகள்என்பதும்புரியவில்லை.இத்தனையையும் கூட்டி அந்த பனியன் விற்பனைக்கு  வரும்  போது அதை விற்கிற 
கடைகள் யாருடயது என்பதும் தெரியாமலேயே/ 

அவர்களது உடம்பில் ஒட்டி உறவாடிய ஒரு நூற்றியைம்பது ரூபாய் பனியனில்இருந்தஇத்தனைபேருடைய கைகளையும்,உழைப்பையும்வியர்வை 
வாசத்தையும் மீறி அந்த பனியன் மீது வீற்றிருந்த அடையாளத்துடன் அந்த சிறுவர்கள் கடையிலிருந்து கிளம்புகிறார்கள்.
அவர்கள் கிளம்புகிற சமயத்தில் இன்னும் இரண்டு சிறுவர்கள் சிரித்தவாறு வந்து அவர்களது தோள்களில் கைபோட்டுக்கொள்கிறார்கள்.  கழட்டப்படாத பள்ளிகூட சீருடையுடன்/ 

அவர்கள்நடந்துசென்ற சாலையில் பஸ்ஸும், லாரியும், இருசக்கர வாகனங்களும், பாதசாரிகளுமாய் போய்க்கொண்டிருந்தவாறு/

10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பதிவும் படமும் அருமை...

அனைவருக்கும் அன்பான இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...

சென்னை பித்தன் said...

சாதிச் சங்கங்கள் உள்ளாடை வரை சென்று விட்டன!

ஹேமா said...

சாதரணமாக எந்தப்பொருளையும் விலைகொடுத்து வாங்கிவிடுகிறோம்.அதில் எத்தனைபேரில் உழைப்பு.யோசிக்க வைக்கிறீர்கள் விமலன் !

ம.தி.சுதா said...

ஒரு பனியனில் அத்தனை உணர்வையும் உள்ளடக்கி விட்டீர்கள்... சகோ

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நன்றி தங்களது வருகைகும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் சென்னைப்பித்தன் சார்.நன்றி தங்களது வௌகைக்கும்,
கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் ஹேமா மேடம்.நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் மதி சுதா அவர்களே,நன்றி
தங்களது வருகைக்கும்,
கருத்டுரைக்குமாக/

Athisaya said...

ஒரு பனியனின் பின்னான இத்தனை விடயங்களை அழகாகப்பதிந்துள்ளீர்கள்.வாழ்த்துக்கள் சொந்தமே!சந்திப்போம்.


சரியான சாட்டையடி நண்பா.அருமை.தெிலும் இந்த முடிவு மிக அற்புதம்.வாழ்த்துக்கள் சொந்தமே!சந்திப்போம்.



http://எனக்கொரு பதில்..!!!!

vimalanperali said...

வணக்கம் அதிசய அவர்களே,நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/