அன்பு மகனுக்கு வணக்கம், நலமா நீ? என கேட்க மாட்டேன் உன்னிடம்.
நீ நலமாகத்தான் இருப்பாய் என்கிற நம்பிக்கை எனக்கு நிறையவே இருக்கிறது. விளையாட்டுக்காரனான நீ உடலையும் மனதையும் தற்சமயமாக திடம்கொண்
டு வரச்செய்திருப்பாய் என்பதே எனது நம்பிக்கை.
8ஆம் வகுப்புபடிக்கையில்லாங்ஜம்ப் தாவுகிறேன் என தரை விரிப்பில் கால்
வழுக்கி கீழே விழுந்து உனது இடது கை எலும்பு உடைந்து அதற்கு ஆபரேஷன் செய்து பிளேட் வைத்து தைத்தப் பிறகும் கூடஅடுத்த வகுப்பில் போய் சேர்ந்த ஆண்டே பள்ளியில் பிடிவாதமாய் ஹாக்கி டீமில் சேர்ந்து அசைக்க முடியாத இடத்தை பிடித்து விட்டாய் நீ/
ஆகவே உன் உடல் உறுதிப்பட்டுதான் இருக்கும் என்கிற நம்பிக்கையில்தான் நலம் விசாரித்தலை தவிர்க்கிறேன்.தவிர பரஸ்பரம் “நலம் நலமறிய ஆவல்” என கேட்டு விட்டு நலம் கேட்டவரே விசாரித்தவரை நலமில்லாமல் செய்து விடுகிற உலகில் இது ஒரு வெற்று வார்த்தை பிரயோகம் என்பது என் கருத்து.
இப்படியாய் சூழ்க்கொண்ட கருத்தை மனம் முழுக்க சுமந்து திரிந்தநேரங்களிலு
ம் இதுவரை யாரைப்பார்த்தாலும் நல்லாயிருக்கீங்களா என கேட்பதே எனது முதல் வார்த்தையாகவும்,பிள்ளையார் சுழியிடுகிற நிகழ்வாயும் இருக்கிறது.
ஏன் இந்த முரண் என தெரியவில்லை.வாழ்க்கை முழுவதும் இப்படியாய்விரவி க்கிடக்கிறமுரண்கள்என்னைஎங்கெங்கோசெல்ல வைத்திருக்கிறது.என்னென்
னமோயோசிக்கவைத்திருக்கிறது.ஆகவேஉன்னிடம்இப்போதைக்குஇப்படிகேட்பதை நிறுத்திக் கொள்கிறேன்.
நேற்று மாலை 6 மணிக்கெல்லாம்உனக்கு வாட்ச் வாங்கி வரலாம் என கடை வீதிக்குச் செல்கிறோம்.அதன் இலவச இணைப்பாக இரண்டொருவேலைகளை
சேர்த்துக்கொண்டு/
முதலில் ஹோமியோபதி டாக்டரிடம் சென்று விட்டு அப்படியே அந்த சந்தை ஒட்டியே இருக்கிற கடையில் வாங்கலாம் என்பது எனது மற்றும் உனது எண்ணமாக/
ஒரு வாரமாகவே தொந்தரவு பண்ணிக் கொண்டிருந்த அலசர் கொஞ்சம் கூடிப்போனது.அப்படியாகிற சமயத்திலும்,உடம்புக்கு ஏதேம் சின்னதாய் என்றாலும் அவரிடம்தான் செல்வது வழக்கம்.
டாக்டரிடமிருந்து வெளியில் வந்த பின்பும் அவர் அணிந்திருந்த அடர் வண்ண சட்டை என் நினைவில் நின்றதாய்/
குறிப்பிட்ட கம்பெனியின் வாட்சுகள் விற்ற கடையில் போய் நீயும்,நானுமாய் நின்றபொழுதுஒருகுண்டுப்பெண்தான்வாட்சுகளை எடுத்துக்காண்பித்தாள்.
நாமும் பார்த்தோம்.
600ரூபாய்க்குள் அல்லது ஒரு பத்து ஐம்பது கூடப்போனாலும் பரவாயில்லை என்பது நம் இருவரின் கணக்கு.
மாடல்கள் நிறையக்காட்டினாள்,நாமும் பார்த்தோம்.ஆனால் அவைகளில் திருப்தியில்லைஉனக்கு/கடைக்குள்சுற்றிச்சுற்றிவந்தோம்.எதுவும் பிடிக்கவில்
லை உனக்கு அல்லது எதுவும் பிடிபடவில்லை.
நம்மின் திருப்தியின்மை அவளுக்கு பிடிபட்டிருக்கும் போலும்,இன்னொறு இடத்தில் இருக்கிற அவர்களது கடையின் கிளையைச்சொன்னாள்.
சரி வந்த வேலையை முடிப்போம் முதலில்.அப்புறமாக பார்த்துக்கொள்ளலாம் மற்றவைகளை என்கிற எண்ணம் எண்ணுள் தலை தூக்க முதலில் வாட்ச் வாங்கும் வேலையை முடிப்போம் என கிளம்புகிறோம்.
எங்களது காலங்களில் இப்படியெல்லாம் வாட்ச் தேடியும்,பேண்ட் சட்டை வாங்கவும்கடைதேடிஏறிஇறங்கியஅனுபவமில்லை.அப்பாவின் கைபிடித்தோ,
அம்மாவுடன் எந்தக்கடைக்கும் சென்ற அனுபவமும் இல்லை எங்களுக்கு/.
அவர்களாகஎடுத்துக்கொண்டு வந்து போடுவார்கள்.அல்லது தைத்துக்கொண்டு வந்து கொடுப்பார்கள்.நாங்களும் போட்டுக்கொண்டு அலைவோம்.
இப்போது மாதிரி அப்போதெல்லாம் சார்ட் சட்டையெல்லாம் கிடையாது.வார் அறுந்தமஞ்சள்ப்பை,அதனுள்வம்பாகதிணிக்கப்பட்டிருக்கிறகிழிந்தபுத்தகங்கள்
கையின் தோள்ப் பட்டை ஓரமாய் ரகசியமாய் கிழிந்து தொங்கும் சட்டை,பின் பக்கம் கிழிசலில் ஒட்டுப்போட்ட டவுசர் அல்லது ஓட்டை விழுந்த டவுசர்(அதை போஸ்ட் பாக்ஸ் என கேலி செய்வார்கள்.சக மாணவர்கள்)
எண்ணைவழிந்தமுகம்செருப்பில்லாதகால்கள்என்கிற தோற்றத்துடனும்,
அடையாளத்துடனுமாய் பள்ளிநாட்களிலும்,மற்றநாட்களின்நகர்வுகளிலுமாய்
தெரிந்தநாங்கள் இப்படியெல்லாம் நன்றாகயிருக்கிறது,நன்றாகயில்லை என தேடி அலைந்ததில்லை.
இப்போது மாதிரி யூஸ் அண்ட்த்ரோ என்கிற மனோ நிலையை விதைக்கிற மாதிரி தயாரிப்புகள் வந்ததில்லை.
இப்போதுதானே பிறந்த குழந்தைக்கு வாட்ச் கட்டுகிற கலாச்சாரமும் சைக்கிள் வரை வந்து விட்டது.
அப்போதெல்லாம்நாங்கள்படித்தகாலங்களில்சின்னசைக்கிள் வேண்டுமென்
றால்சைக்கிள்கடைமுன்போய்மணிக்கணக்காககாத்திருக்கவேண்டியிருக்கும்
சமயத்தில்அதற்காகசண்டை கூட வந்துவிடுவதுண்டு.கடைக்காரருக்கும்,
கடைக்கு வாடகைக்கு சைக்கிள் எடுக்க சிறுவனின் வீட்டாருக்கும்/
சின்ன சைக்கிள் கிடைக்காத எங்களைபோல சிறுவர்கள் குரங்குப் பெடல் போட்டு டக்கடித்து,டக்கடித்துபெரிய சைக்கிளை ஓட்டிப்பழகிக்கொள்வார்கள். அப்படிப்பழகியவர்கள் பலர் இப்போது நல்ல சைக்கிள் ஓட்டியாக/
அது போலத்தான் எல்லாமும்.இப்போது போல எதிலும் திருப்தி கொள்ளாத மனப்பான்மை அப்போதெல்லாம் எங்களுக்கு வாய்த்ததில்லை.
சாலையில் செல்லும் போது நல்ல பாடல் ஒலிக்கும்,வித்தியாசமான சினிமா போஸ்டர்கள்கண்ணில்படும்.கடைகளின்முன்காணக்கிடக்கிற பெயர்ப்பலகை
களும்,சுவரில் பதிந்திருக்கிற எழுத்துக்களும் கடைகளின் முன் தொங்கும் வாழ்த்து அட்டைகளும் வித்தியாசம் காட்டி சிரிக்கும்.
பெல்பாட்டம் பேண்டும் பாபிக் காலர் சட்டையும் ரகரகமான சட்டைத் துணிகளும்சேலைகளும்கடையின்தையல்முறைகளும்ஒருஅடையாளத்துடன் நன்றாகயிருந்தது.
இப்போது அப்படியிருக்கிறதா இல்லையா எனத்தெரியவில்லை.என் அன்பு மகனே என பேசியவாறே நாமிருவருமாய் அவள் சொன்ன கடையை நோக்கி செல்கிறோம் உடன் தெரு விளக்கு வெளிச்சத்தையும் துணைக் கழைத்துக்
கொண்டு/
9 comments:
தொடக்கம் மிக அருமை.தந்தையை மகன் புரிந்து கொள்ள மாட்டானா என்ற ஏக்கம் இந்தக் கதையில் தெரிகிறது. நன்று.
அந்தக்கால நினைவுகளுடன் இந்தக்காலத்து உண்மைகளையும் அருமையாக சொல்லி உள்ளீர்கள்...
/// “நலம் நலமறிய ஆவல்” என கேட்டு விட்டு நலம் கேட்டவரே விசாரித்தவரை நலமில்லாமல் செய்து விடுகிற உலகில் இது ஒரு வெற்று வார்த்தை பிரயோகம் என்பது என் கருத்து. /// - உண்மை...
நன்றி…
என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?
“நலம் நலமறிய ஆவல்” என கேட்டு விட்டு நலம் கேட்டவரே விசாரித்தவரை நலமில்லாமல் செய்து விடுகிற உலகில் இது ஒரு வெற்று வார்த்தை பிரயோகம் என்பது உண்மை
“நலம் நலமறிய ஆவல்” என கேட்டு விட்டு நலம் கேட்டவரே விசாரித்தவரை நலமில்லாமல் செய்து விடுகிற உலகில் இது ஒரு வெற்று வார்த்தை பிரயோகம் என்பது உண்மை
வணக்கம் tn முரளிதரன் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/
வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நலம்தானே?நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் முத்துக்குமார் சார்,நல்ம்தானே?நன்றி தங்களது வருகைக்கும்கருத்துரைக்குமாக/
**வாழ்க்கை முழுவதும் இப்படியாய் விரவிக்கிடக்கிற முரண்கள் என்னை எங்கெங்கோ செல்ல வைத்திருக்கிறது.என்னென்
னமோ யோசிக்க வைத்திருக்கிறது.**
உங்கள் கதைகளின் ஆழம்...நலம் நலமறிய ஆவல் !
வணக்கம் ஹேமா மேடம் நலம்தானே?முரணுள்ள வாழ்க்கையே இப்படி யோசிக்க வைக்கிறது.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
Post a Comment