9 Aug 2012

பூக்கொல்லை,,,,



விடுமுறை தினமென்றாலே

தனி அடையாளத்தை

பூசிக்கொள்கிறது சாலை.

டீக்கடைகளிலிருந்து பள்ளிக்கல்லூரி வரை

எங்கும் கூட்டமில்லாததும்

சாலையில் இல்லாமலிருக்கிற

நடமாட்டமும் காற்றில்லாத பலூனைப்போலவே/

சாலை,சைக்கிள்கள்,அதன் மீது

சீருடை அணிந்த பூங்கொத்துகளாய்

நகர்கிற மாணவ,மாணவிகள்

அவர்களை சுமந்து நகர்கிற பேருந்துகள்

இவை ஏதுமற்று இருக்கிற

சாலையின் இயக்கம்

விடுமுறை தினமென்றாலே

தனி அடையாளத்தை பூசிக்கொள்கிறது.

பட்டாம் பூச்சிகள் பறக்காத ,பூக்களற்ற
          வெற்றுத் தோட்டதைப் போல/

10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ரசிக்க வைக்கும் கவிதை...

வாழ்த்துக்கள்... நன்றி…

Athisaya said...

பார்த்தேன் ரசித்தேன்.அருமை நண்பா!!

ஹேமா said...

வெள்ளிக்கிழமைகளிலேயே வார விடுமுறையின் சந்தோஷம் ஏறிவிடுகிறதே !

vimalanperali said...

வணக்கம் அதிசயா அவர்களே,நன்றி தங்களது,வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...
This comment has been removed by the author.
கவி அழகன் said...

Rasithen kavithaiyai

vimalanperali said...

நன்றி கவியழகன் சார்/தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

மாதேவி said...

பட்டாம் பூச்சிகள் எல்லாம் மகிழ்ச்சியில் பறந்து சென்றுவிட்டனவே :))

நல்ல கவிதை.

vimalanperali said...

நன்றி மாதேவி அவர்களே தங்களது வருகைகும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் ராமலட்சுமி மேடம்,நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/