இல்லாத சிகரெட்டை
சட்டைப்பையிலும்,கால்சராய் பையிலுமாய்
தேடி அலுத்துப்போன அவர்
அருகிலிருந்தவரிடம் பீடி வாங்குகிறார்.
அவர் லுங்கி தூக்கி அண்டர்வேர்பையிலிருந்து
எடுத்துக்கொடுத்த பீடி
கொஞ்சமாய் நனைந்திருக்கிறது.
முயற்சி செய்து,முயற்சி செய்து
பற்றவைக்க முடியாமல்
மென்சோகத்துடன்
பீடியை தூக்கி எறிய ஓங்கியகையை
பீடி கொடுத்தவர் பிடித்துக்கொண்டு
தூக்கி எறியாதீர்கள் தயவு செய்து,
அடுத்த மழைநாளொன்றில்
யாருக்காவது கொடுக்கவோ
எனக்கோ உதவக்கூடும்.
13 comments:
இப்படி நெறைய பேரு இருக்காங்க.அருமை..
சிலருக்கு அது தான் உணவு என்பது வேதனை தரும் விஷயம்... நன்றி...
Kudipavanum kodaiyaali akiran
வணக்கம் கோவி சார்.நலம்தானே?
நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/
வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.
அதுதான் உணவு என்பதை விட அதை பகிர்ந்து கொள்கிற மனதுதான் இங்கே பதிவாகிறதாய்/
நாமெல்லாம் சிறு பிராயமாய் இருந்த காலங்களில் கிராமங்களில் ஒருபழக்கம்
இருந்தது.கைக்குழந்தை வைத்திருப்பவ
ர்களுக்கு அருகாமை வீட்டுக்காரர்கள் ஒரு கிண்ணத்தில் சாதம்கொண்டுவந்து தருவார்கள்.அதைபிள்ளைச்சோறுஎனச்
சொல்வார்கள்.
இப்போது அந்தப்பழக்கம் கிட்டத்தட்ட இப்போது அருகிப்போய் விட்டது,
அல்லது காணாமல்போய்விட்டது எனலாம்.
வணக்கம் கவி அழகன் சார்.கொடுப்பவன் கொடையாளி ஆகிப்போகிறான்.
நல்லாயிருக்கு சார்,நன்றி.
அருகிலிருப்பவர்களுக்கு எதுவும் கொடுப்பது என்பது இப்போது ஒழிந்தேவிட்டது. பீடி குடிப்பவர்கள் மட்டும் திட்டிக்கொண்டாவது கேட்டவர்களுக்கு கொடுக்கத்தான் செய்கிறார்கள்.
வாழ்வில் எதிர்படும் சிறு சிறு நிகழ்வுகளை
அருமையான காவியமாக்கி விடுகிறீர்கள்
மனம் தொட்ட பதிவு
தொடர வாழ்த்துக்கள்
வணக்கம் ரமணி சார்,நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
புகை பிடிப்பது என்று யாரைப்பற்றிக் கதைத்தாலும் என் அப்பாதான் ஞாபகத்துக்கு வருவார்.எத்தனையோ சண்டைகள் வரும் இந்தப் புகையால்.ஆனால் இன்றுவரை விடவில்லை !
வணக்கம் ஹேமா மேடம் நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/
Post a Comment