தீர்ந்து போன வாழ்க்கையை
தன் வாழ்வின் ஏதாவது
ஒரு புள்ளியிலிருந்த ஆரம்பித்து
வாழ்ந்தே தீரவேண்டும் என்கிற
முனைப்புடனும்,வெறிடனுமாய்
இருக்கிற வேசி அன்றாடங்களில்
தன்னை புதிதாய் இருத்திக்
கொள்ள போராடுகிறாள்.
கருப்புக்கு மத்தியில்,வெள்ளையும்,
வெள்ளைக்கு மத்தியில் கருப்புமாக
முள் போல் நீட்டிக்கொண்டிருக்கிற
சவரம் பண்ணப்படாத முடிகள்
எள் முனியளவேனும் கிடைக்கிற
இடைவெளில் தன்னை
வெளிப்படுத்தி அழகு காண்பிக்கிறது.
விரட்ட,விரட்ட ஓடிய நாய்
ஒரு எல்லைக்கு மேல்
தன்னை வளர்த்த எஜமானன்
என்றும் பார்க்காமல் திரும்பி
ஓடி வருகிறது கடிப்பதற்கு/
பூக்கள் தெளிக்கப்பட்ட வெளியில்
மரங்கள் செய்கிற நர்த்தனம்
பார்ப்பவர் கண்களை கவர்கிறது.
தூரத்தே தவழ்ந்து வருகிற குழந்தை
யார் முகம் பார்த்தாலும் சிரிக்கிறது.
நிரப்பிப்போன வெற்று வெளிகளை
எவ்வளவு துடைத்தும்
நிரம்பியே காட்சி தருபவையாக/
யார் அழைத்தும் வர மறுக்கிற
பட்டாம் பூச்சி தன் முனைப்பில் தீவிரமாய்/
எது ஒன்றை எடுத்தும்,
எது ஒன்றை விடுத்தும்
தன்னை இம்மாதிரி கலவையாய்
காண்பித்துகொள்கிற வாழ்வின்
அன்றாடங்கள் மிகவும்
சுவாரஸ்யம் மிக்க புள்ளியில்
சுழியிடுவதாகவே/
4 comments:
பொருத்தமான தலைப்பு.கவிதை நன்று.
உங்களின் பதிவுகள் தான் வித்தியாசமாக இருக்கிறது என்றால்... கவிதையும் அப்படித்தான் வித்தியாசமான சிந்தனையாக இருக்கிறது... வாழ்த்துக்கள் சார்...
வணக்கம் டீ,என் முரளிதரன் சார்,நலம்தானே?நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/
Post a Comment